பேசாமல் சாமியார் ஆகி விடலாமா?

பேசாமல் சாமியார் ஆகி விடலாமா?


  நான்கு நாட்களாகவே வலைப்பக்கம் வரமுடியவில்லை! சதா கம்ப்யூட்டர் இண்டர்நெட், ப்ளாக் என்றே இருக்கிறாயே! இதைவிட இன்னொரு உலகம் இருக்கிறது தெரியுமா? என்று சொன்னது மனசாட்சி!
      ஒரு பதினைந்து வருடங்கள் முன்னோக்கி சென்றால் நினைத்தால் சென்னைக்கு சென்று வருவேன். சொந்தங்களின் ஊர்களுக்கு படையெடுப்பேன். இப்போது ஊரை விட்டு நகரமுடிவதில்லை! செய்யும் வேலை அப்படி ஆகிவிட்டது. நாம் படிக்கும் விஷயத்திலும் அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். இப்போதுள்ள மாணவர்கள் அதில் ஓரளவு கெட்டிக் காரர்களாகவே இருக்கிறார்கள். பத்தாவது படிக்கும் போதே அடுத்து என்ன படித்து எந்த மாதிரி வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிடுகிறார்கள்.
     நானெல்லாம் பத்தாம் வகுப்பு பாஸானதே உலக அதிசயம்! நான் படித்த பள்ளியில் எங்கள் வகுப்பில் ஐம்பத்தைந்து பேர் தேர்வெழுதினோம் அதில் பாஸான பத்து பேரில் நானும் ஒருவன். இதிலிருந்தே தெரியும் எங்கள் பள்ளியின் அப்போதைய லட்சணம். இதில் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை! நான் எடுத்த மதிப்பெண்ணிற்கு காமர்ஸ் குருப் கிடைத்தது. அதில் சேர்ந்தும் ப்ளஸ் டூவிலும் உருப்படியாக மதிப்பெண் எடுக்கவில்லை அஞ்சல்வழியில் தட்டுத்தடுமாறி பி.காம் முடிப்பதற்குள் எனக்கான வாய்ப்புக்கள் ஏறக்குறைய முடிந்தே போய்விட்டன.
       பரம்பரை பூஜையை விட முடியாத நிர்பந்தம் வேறு! பூஜையும் செய்து வேலைக்கும் போக அருகிலேயே வேலை தேடி கிடைக்காமல் போக எஸ்.டீ.டீ பூத் வைத்து டியுசன் எடுத்து கடைசியில் எதிலும் லயிக்காமல் கோயில் குருக்களாகவே  இருக்க முடிவு செய்துவிட்டேன்.
     எங்கள் கோயில் கிராமத்து கோயில் பெரிய வருமானம் கிடையாது. இதனால் அருகில் உள்ள ஊர்களின் கோயில்களிலும் பூஜை செய்தால்தான் குடும்பம் தள்ள முடியும். அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை! இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? சொல்லுகிறேன். எந்த தொழிலாக இருந்தாலும் விடுமுறை உண்டு. விடுமுறையை எடுத்தும் கொள்ளலாம். கோவில் பூஜைக்கு விடுமுறை கிடையாது. நான்கைந்து குருக்கள் உள்ள கோவிலாக இருந்தால் ஒருவர் மாற்றி ஒருவர் எடுத்துக் கொள்ள முடியும். ஒரே குருக்கள் ஒன்பது கோயிலுக்கு பூஜை செய்தால் விடுமுறை என்பது எப்படி கிடைக்கும்? மழை, வெயில், உடல்நலமின்மை எப்படி இருந்தாலும் பூஜை தடைபடக்கூடாது. எனவே லீவ் கிடையாது. லீவ் வேண்டுமானால் மாற்று குருக்களை தேட வேண்டும். அவர் ஒருநாள் பூஜை செய்யவே நம் ஒருமாத சம்பளம் கேட்பார். எனவே அந்த முறை சரிபட்டுவராது. யாராவது பரிதாபப்பட்டு உதவினால் உண்டு.
    பலமுறை அப்படி என் உறவினர் உதவியதுண்டு. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை இருமுறை இப்படி உதவி கேட்கலாம். மாதாமாதம் கேட்க முடியுமா? இதனால் வெளியூர் பிரயாணங்களே தடைபட்டுவிட்டது. சென்னை வருவது என்றால் கூட காலையில் எல்லா கோயில் பூஜை முடித்து மீண்டும் மாலை பூஜை நேரத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டும். இதனால் சென்னைவருவதும் தடைபட்டுவிட்டது.
     அத்தை மகளின் திருமணம் கடந்த திங்களன்று வேலூரில்! ஞாயிறன்று புறப்படுவதாக ஏற்பாடு! அன்று பிரதோஷம்! மாலையில் பிரதோசம் முடித்து ரிசப்ஷனுக்கு எப்படி செல்வது! முன்பே ஊரில் சொல்லி காலையிலேயே பூஜைகள் முடித்தேன். அன்று பார்த்து வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை தர கிளம்ப தாமதம் ஆகிவிட்டது. சென்றவாரம் அன்னப்பாவாடை நிகழ்ச்சி நடத்தி வேண்டி வேண்டி அழைத்தோம்! எதிர்பார்த்த கூட்டம் இல்லை! சென்ற ஞாயிறன்றும் ஒருவரும் வரவில்லை! ஆனால் இன்று கிளம்ப வேண்டும் என்றால் ஒருவர் பின்னால் ஒருவராக கோயிலுக்கு வந்து கொண்டிருக்க கிளம்ப தாமதம் ஆவதால் எரிச்சல்! ஆனால் அதை வெளிக்காட்டாமல் தரிசனம் செய்து வைத்து அனுப்பிவிட்டு ஒரு மூன்று மணி நேர தாமதமாக வேலூர் புறப்பட்டோம்.
      முன்னதாகவே தந்தையும் தாயும் என் மூத்த மகளும் சென்றுவிட்டிருந்தனர். இளையமகள், குட்டிக்குழந்தை, மனைவி, நான், என் தங்கை என்று காரில் சென்று மாலையில் மண்டபத்தை அடைந்தோம். நீண்ட நாட்களுக்கு பின்னர் உறவினர்களை சந்தித்து அளவளாவி  மகிழ்ந்ததில் மகிழ்ச்சி! மாப்பிள்ளை அழைப்பு கார் கொஞ்சம் மேடான பகுதியில் ஏற சிரமப்பட கிண்டல் செய்தோம். பின்னர் தள்ளி ஏற்றி விட்டோம். வானவேடிக்கைகளுடன் அந்த ஊர்வலம் சிறப்பாகவே இருந்தது
மறுநாள் திருமணமும் சிறப்பாகவே நடந்தது.
    திருமணம் நடத்தி வைத்த சாஸ்திரிகள் இருவர் பஞ்ச கச்சத்தில் அழகாக இருந்தனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் உடை கலைந்து முக்கால் ஜீன்ஸ் அணிந்து காதில் இயர்போனுடன் ரேஸ் பைக்கில் புறப்பட்ட போது ஆச்சர்யப்பட்டு போனோம்.
    முகூர்த்தம் முடிந்ததும் ஸ்ரீபுரம் போகலாம் என்றான் தம்பி செந்தில். சரி என்றேன். எங்கள் குடும்பமும் அவன் குடும்பமும் இணைந்து ஸ்ரீபுரத்திற்கு காரில் புறப்பட்டோம். வழியில் ஒரு குட்டி யானை குப்புற படுத்து அதில் கிடந்த தர்பூசணிகள் சிதறிக் கிடந்தன. போலீஸ் வந்து போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தது. ஒருவழியாக பத்தரை மணிக்கு ஸ்ரீபுரத்தை அடைந்து உள்ளே சென்றால் சிறப்பு தரிசனம் ஒருவருக்கு 250 ரூபாய் என்றார்கள். அட இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே! என்று வேண்டாம் என்று இலவச தரிசனத்திற்கு சென்றோம்.
     நுழையும் போதே செக் செய்கிறார்கள். செல்போன் காமிரா,  லுங்கி, முக்கால் பேண்ட், நைட்டி போன்றவை ஸ்ரீ புரத்தில் அனுமதி இல்லையாம்.
    கியுவில் அடைத்து ஒரு அறையில் பூட்டி வைத்து பத்துநிமிடம் கழித்து திறந்துவிட்டார்கள். அந்த அறையில் டீ, காபி, ஐஸ்கீரிம், குளிர்பானம் எல்லாமேவிற்கிறார்கள். நல்லவியாபாரம் ஆகிறது. திறந்துவிடும் வழியின் இருபுறமும் கழிவறைகள். வாசனைபிடித்துக்கொண்டேதான் க்யுவில் நகரவேண்டியுள்ளது. என் மகள் கர்சீப்பால் மூக்கை பொத்திக் கொண்டு ஏம்பா டாய்லெட் வழியா கோயிலுக்கு போகவிடறாங்க? என்று கேட்டாள். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை!

       இந்த கியுவை கடந்ததும் மீண்டும் ஒரு செக்கப், போன், கேமிரா, லுங்கி, போன்றவை அனுமதி இல்லையாம்!  ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரவடிவில் கியு. அதன் இருபுறமும் பார்க் மாதிரி செடிகொடிகள். ஆங்காங்கே கழிவறைகள், குடிநீர் வசதி உண்டு. நடைபாதை நிழல்குடையுடன் இருபுறமும் அமர்வதற்கு பெஞ்ச் வசதியுடன் உள்ளது. வழியெங்கும் பிரம்மாண்டமான சிலைகள். சக்தி அம்மாவின் பொன்மொழிகள்! பொன்மொழிகள் சிறப்பாகவும் உள்ளது. தமிழ் மக்கள் நாவன்மைக்கு மயங்குவார்கள் அன்று அண்ணாவின் நாவண்மைக்கு மயங்கி ஆட்சியில் அமர்த்தினார்கள். இன்று சக்திஅம்மாவின் நாவண்மைக்கு இந்த கோயில் சாட்சியாக உள்ளது.   பத்தாவது நடைபாதையில் கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் அகழி அமைத்து நடுவில் கோயில் பொன் வேய்ந்துள்ளார்கள். எப்படி இவ்வளவு தங்கம் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை! சுத்தமாக பராமரிக்கிறார்கள். துளி குப்பை இல்லை!
   அழகான வேலைப்பாடு! ஆனால் ஆலயத்திற்குள் ஆன்மீக லயம் சிறிதும் இல்லை! ஏதொ டூரிஸ்ட் ஸ்பாட் போன்றுதான் இருந்தது. அம்மனை வணங்கி வெளியில் வந்தோம்! அகழியிலும் ஆலயத்தை சுற்றிலும் சில்லறைக்காசுகளும் நோட்டுக்களும் இறைந்து கிடந்தன. பலர் இறைத்துக் கொண்டும் இருந்தனர். வழியில் காமதேனு சிலை ஒன்றை வைத்து அதில் காசு போட்டு வணங்கி கொண்டிருந்தனர். என் மகள் சில்லறை கேட்டு வாங்கி அதை வணங்கி வந்தாள். திரும்பவும் கியு.
    இந்த கியுவில் பூஜை பொருட்கள் தொடங்கி, பட்டுவஸ்திரம், மூலிகை மருந்துகள் கேசட், சிடி, காலண்டர், டைரி என பலதும் விற்கிறார்கள். மூலிகை மருந்துகள் விற்கும் கடையில் செவ்வாடைப் பெண்மணி ஒருவர் மூட்டுவலி, கால்வலி, கால்வீக்கம் போன்றவற்றிற்கு இந்த தைலம் என்று சொல்லிக் கொண்டிருக்க  அவசியம் தேவைப்படும்தான்! இவ்ளோ தூரம் நடக்க வைச்சு கால்வலிக்க வைக்கிறீங்களே! என்றபடி வெளியே வர என் தம்பி, உள்ளே கூப்பிட்டு போய் சுளுக்கெடுத்துடுற போறாங்க கம்னு வாப்பா! என்றான். ஸ்ரீமது என்று பதினைந்து ரூபாய் விலையில் மைசூர் பாக் பதினைந்து ரூபாயில் ரவை லட்டும் தருகிறார்கள். ஆனால் அம்மனின் குங்கும பிரசாதம் எதுவும் தரவில்லை!
      முதன் முதலில் கியுவில் நுழைந்து செல்லும்போதே என் தம்பி மகள் அம்ருத வர்ஷிணி அவனிடம், அப்பா இது கோயிலா இல்லை சினிமா தியேட்டரா? என்று கேட்டாள். நாலரைவயதில் அவள் அடித்த கமெண்ட் இந்த கோயிலுக்கு பொருத்தமாகவே உள்ளது.
      நூறு ஏக்கருக்கும் அதிகமான விஸ்தீரணம் இருக்கும் போல! கோயில் இருக்கும் இடமே எப்படியும் இருபத்தைந்து ஏக்கருக்கும் மேல் இருக்கும். இத்தனையும் ஒரு சாமியார் இருபது வருடங்களுக்குள் சாதித்து காட்டி இருக்கிறார். இன்னும் எத்தனையோ கல்வி நிறுவனம், மருத்துவமனைகள் இங்கே இன்னும் பத்து வருடத்தில் வருமோ தெரியவில்லை!
    துட்டு சம்பாதிக்க அம்பானிகளாகவோ பிர்லாக்களாகவோ பிறக்க வேண்டாம்! இது போல கொஞ்சம் புத்திசாலியான சாமியார்களாக இருந்தால் போதும் போல!
    பேசாமல் சாமியார் ஆகிவிடலாமா சொல்லுங்கள்!

டிஸ்கி} போனவாரம் எழுதிய செய்யறவேலையில் ஈடுபாடு இருக்கா கட்டுரையை படித்த தம்பி தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லாம எழுதியிருக்கியே என்றான். இப்ப அதுதான் ட்ரெண்ட் என்று நகைச்சுவைக்கு சொன்னாலும் அந்த பதிவில் எனக்கும் திருப்தி இல்லைதான்! சொல்லவந்ததை விட்டு எங்கோ சென்றுவிட்டேன்! இதுமாதிரி குறைகள் இருந்தால் தாரளமாய் சுட்டுங்கள்! பாராட்டுக்கள் ஊக்கம் அளிக்கும்! குறைகள் என்னை திருத்திக் கொள்ள உதவும். நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஸ்ரீபுரம் எந்த மாவட்டத்தில் இருக்கிறது நண்பரே...
    சாமியாருக்கு இப்பொழுது மரியாதை இல்லை நண்பரே...
    தாங்கள் தளிர் சுரேஷ் ஆகவே வாழுங்கள் அதுதான் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீபுரம் வேலூர் மாவட்டத்தில் இருக்கிறது நண்பரே! சாமியார் எல்லாம் ஆக மாட்டேன்! சும்மா விளையாட்டுக்கு அப்படி எழுதினேன்!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. என்ன விடியக் கத்தால இப்படி பதற வைத்து விட்டீர்கள். ம்.ம்.. சரி சரி கிலர்ஜி சொல்வதைக் கேட்டு பிழைத்து க் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. ok வா ஹா ஹா ...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊரில் இப்போதுதான் விடியற்காலையா? எங்களுக்கு மாலை நேரம்! நன்றி சகோதரி!

      Delete
  3. திங்கள் அன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்து இருந்தேன் காண வாருங்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. சென்று கருத்தும் இட்டாகிவிட்டது! நன்றி சகோதரி!

      Delete
    2. நண்பரே!
      நான்கு நாட்களாக நம்மாள முடியல சாமி!
      தளீர் பதிவை தேடித் தேடி கண்கள் பூத்து விட்டது!
      வருகை வசந்தம்! அது தங்களது வாழ்விலும் வீசட்டும்!
      உமது படைப்புக்கள் நற்பெருமை பேசட்டும்.
      ஸ்ரீபுரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் நானும் வந்து போக வேண்ட
      நமது வலைப் பூவை மறந்து விட்டீர்கள்போல் உள்ளதே?நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  4. சாமியார் என்றாலே இப்பொழுது மக்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாறியுள்ளது நண்பரே

    ReplyDelete
  5. மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்கள். பிள்ளைகளின் கேள்விகளும் பிரமாதம்.

    ReplyDelete
  6. சரி தங்களின் இதற்கு முந்தைய பதிவு என்ன ஆனது?

    ReplyDelete
  7. எங்கள் இயக்குனரின் நண்பர் பட ரிலீஸ் அது இது என்று வேலை. படிக்க மட்டும் முடிந்தது. அதனால் உங்கள் பல நாள் பதிவுகளுக்கு ஒரே பின்னூ இது.(பிழை திருத்தம் உதவி பீட்டர் நம்பிராஜ், இப்போ படிக்க எவ்வளோ நல்லா இருக்கிறது) எங்கள் இயக்குனர் மற்றும் நண்பர்களுக்கு எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அவர் சொல்வார் மத விமர்சனம்னு வந்தா வெறும் இந்து மதத்தை மட்டும் தான் திட்டனும். தீவிரவாதம் என்ற வார்த்தை வந்தாலே அது இந்துக்களின் மோசமான மதவெறி எனலாம், வேண்டுமளவுக்கு இந்துக்களை திட்டி வைக்கலாம். அங்க தான் ரிஸ்க் இல்லை, உதை விழாது மேலும் பின்னூவில் நிறைய பேர் பாராட்டுவாங்க என்பார். போலி சாமியார்களையும் மற்ற தீவிர வாதங்களையும் ஒரே தட்டில் வைத்து போலி சாமியார்களை பிராடு என்று பார்க்கமால் அவர்களை இந்து மதத்தின் குனக்கேட்டாக பார்க்கனும். அதனால் நாம இந்துக்களை திட்டலாம் .வேறுமதங்களில் தீவிரவாதம் இருந்தால் தானே நம்மை போன்றவர்கள் கண்டிப்பதற்கு , ஒரு முறை சொன்னார் நாம எல்லாம் போலி மத எதிர்பாளார்கள் , ஆனா உண்மையான எதிர்பாளார் என்றால் அது தளிர் தான் என்றார். உங்களிடம் நிசமாகவே இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பை பார்க்கலாம் என்பார்.
    சாமியாரா ஆனாலும் இந்துக்களை கிண்டல் பண்ணறதை நிறுத்திடாதீங்க அது படிக்கிறதுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த வாசகனின் விருப்பத்தை கவனத்தில் கொள்ளுங்கள்..

    பரமுசிவசாமி

    ReplyDelete
  8. எங்கள் இயக்குனரின் நண்பர் பட ரிலீஸ் அது இது என்று வேலை. படிக்க மட்டும் முடிந்தது. அதனால் உங்கள் பல நாள் பதிவுகளுக்கு ஒரே பின்னூ இது.(பிழை திருத்தம் உதவி பீட்டர் நம்பிராஜ், இப்போ படிக்க எவ்வளோ நல்லா இருக்கிறது) எங்கள் இயக்குனர் மற்றும் நண்பர்களுக்கு எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அவர் சொல்வார் மத விமர்சனம்னு வந்தா வெறும் இந்து மதத்தை மட்டும் தான் திட்டனும். தீவிரவாதம் என்ற வார்த்தை வந்தாலே அது இந்துக்களின் மோசமான மதவெறி எனலாம், வேண்டுமளவுக்கு இந்துக்களை திட்டி வைக்கலாம். அங்க தான் ரிஸ்க் இல்லை, உதை விழாது மேலும் பின்னூவில் நிறைய பேர் பாராட்டுவாங்க என்பார். போலி சாமியார்களையும் மற்ற தீவிர வாதங்களையும் ஒரே தட்டில் வைத்து போலி சாமியார்களை பிராடு என்று பார்க்கமால் அவர்களை இந்து மதத்தின் குனக்கேட்டாக பார்க்கனும். அதனால் நாம இந்துக்களை திட்டலாம் .வேறுமதங்களில் தீவிரவாதம் இருந்தால் தானே நம்மை போன்றவர்கள் கண்டிப்பதற்கு , ஒரு முறை சொன்னார் நாம எல்லாம் போலி மத எதிர்பாளார்கள் , ஆனா உண்மையான எதிர்பாளார் என்றால் அது தளிர் தான் என்றார். உங்களிடம் நிசமாகவே இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பை பார்க்கலாம் என்பார்.
    சாமியாரா ஆனாலும் இந்துக்களை கிண்டல் பண்ணறதை நிறுத்திடாதீங்க அது படிக்கிறதுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த வாசகனின் விருப்பத்தை கவனத்தில் கொள்ளுங்கள்..

    பரமுசிவசாமி

    ReplyDelete
  9. ஹஹஹஹஹ் சாமியாரா!!!!? சுரேஷ்! நண்பரே! ஹஹஹ வாங்க ஜஸ்ட் ஒரு காவி உடை/அங்கி அணிந்து நாலு தத்துவங்கள் உதிருங்கள். அமைதியாக !! ஒரு கல்லைக் காட்டி ஒரு கப்ஸா விடுங்கள். அடுத்த நிமிடம் உங்க பின்னாடி மக்கள் அலை மோதும். ஹஹஹஹ் சும்ம தமாஷ்! நண்பரே வேண்டாம் சாமியார்!!!!

    ஸ்ரீபுரம் கோயில் என்று சொல்ல முடியாது. அது பணத்தின் பிரதிபலிப்பு! இப்போது மால் என்று கொடி கட்டி பறப்பது போல ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ். இந்தப் பணத்தை எத்தனையோ ஏழை எளியவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கப் பயன் படுத்தியிருக்கலாம். கல்வி கற்க முடியாமல் எத்தனை பேர் அவதியுறுகின்றார்கள்? மருத்துவ சிகிச்சை இல்லாமல் எத்தனை பேர் இன்னலுறுகின்றார்கள்? ஆன்மீகமற்ற கோயில்கள் கோயில்களே இல்லை. இது போன்ற கோயில்களுக்கு நாங்கள் செல்வதே இல்லை. பணம் பிடுங்காதக் கோயில்கள், அமைதியான கூட்டம் இல்லாத கோயில்கள் தான் எங்கள் சாய்ஸ்....

    உங்கள் வீட்டுக் குழந்தைகள் புத்திசாலிகள். தெளிவாக இருக்கின்றார்கள். கேள்விகள் அதை உணர்த்துகின்றன.....

    ReplyDelete
  10. நண்பரே!
    நான்கு நாட்களாக நம்மாள முடியல சாமி!
    தளீர் பதிவை தேடித் தேடி கண்கள் பூத்து விட்டது!
    வருகை வசந்தம்! அது தங்களது வாழ்விலும் வீசட்டும்!
    உமது படைப்புக்கள் நற்பெருமை பேசட்டும்.
    ஸ்ரீபுரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் நானும் வந்து போக வேண்ட
    நமது வலைப் பூவை மறந்து விட்டீர்கள்போல் உள்ளதே?நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மறக்க வில்லை நண்பரே! தொடர் வேலைகள்! வெளியூர் பயணம்! மின் தடை! குழந்தைக்கு உடல் நல குறைவு என தொடர் சிக்கல்கள்! நேரம் கிடைக்கவில்லை! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்! விரைவில் அனைவர் பதிவுகளுக்கும் வந்துவிடுகின்றேன்!

      Delete
  11. நான் சென்றதில்லை இந்த இடம் இதுவரை.

    ReplyDelete
  12. இத்தனை அழகான குழந்தைகளை விட்டு நீங்க சாமியார போகமாட்டீங்கன்னு தெரியும். அதனால் இந்த தலைப்பை ஒரு ஜோக் என்று தான் எடுத்துக் கொண்டேன்.
    நான்கூட இந்தக் கோவிலைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதோ இணைப்பு
    https://ranjaninarayanan.wordpress.com/2012/03/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    ReplyDelete
  13. ஸ்ரீபுரம் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. கோவில் பூஜையை ஏற்றுக் கொண்டவர்களின் நிலையை நானும் அறிவேன்.
    சாமியாராப் போறது நல்ல ஐடியாதான் அதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும்.
    அப்புறம்
    // நான்கு நாட்களாகவே வலைப்பக்கம் வரமுடியவில்லை! சதா கம்ப்யூட்டர் இண்டர்நெட், ப்ளாக் என்றே இருக்கிறாயே! இதைவிட இன்னொரு உலகம் இருக்கிறது தெரியுமா? என்று சொன்னது மனசாட்சி!//
    மனசாட்சியா மனைவி சாட்சியா? ஹிஹி

    ReplyDelete
  14. கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சென்றதில்லை. எங்கும் எதிலும் வியாபாரம் தான் இப்போது.

    ReplyDelete
  15. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
    நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!