கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 28

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 28


1.      தலைவர் எதுக்கு கையில ஸ்கேலோட வந்திருக்கிறாரு?
    எதையும் அளந்துதான் அவரு பேசுவாராம்!

2.      நீதிபதி: அடிக்கடி இந்த குற்றவாளிக்கூண்டில் நிற்கிறாயே இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?
குற்றவாளி: கூண்டு ரொம்ப உளுத்துப்போய் மாவு கொட்டுது எசமான்! புதுசா மாத்தி பெயிண்ட் அடிச்சா நல்லா இருக்கும்!

3.      எந்த ஸ்டேஷனிலும் இல்லாத ஒரு சலுகை இந்த போலீஸ் ஸ்டேஷன்ல உண்டா என்ன அது?
பொங்கலுக்கு கொடுக்கிற மாமுல் ல பத்து சதவீதம் கடனா வாங்கிக்கலாமாம்! 

4.      நான் என் மனைவி பேசற பேச்சை தட்டிக் கேப்பேன்!
    வெரிகுட்! அப்படித்தான் இருக்கணும்!
   நீ வேற மனைவி பேசறப்ப பெஞ்சை தட்டிக் கேட்டுக்கிட்டு இருப்பேன்னு சொல்ல வந்தேன்!

5.      தலைவர் நூதனமா ஊழல் பண்ணியிருக்காரா எப்படி?
மக்கள் வெள்ளம் கரைபுரண்டதுக்கு வெள்ள நிவாரணநிதி கொடுத்ததா கணக்கு காட்டி இருக்காரே!

6.      தலைவர் எதுக்கு திடீர்னு டாட்டா கட்டணம் குறைக்கணும்னு சொல்றாரு!
நீ வேற இண்டர்நெட் இப்பத்தான் பழக ஆரம்பிச்சி இருக்காரு! டேட்டா கட்டணம் குறைக்கணும்ங்கிறதைத்தான் இப்படி சொல்றாரு!


7.      வாரத்துல ஒருநாள் மட்டும் எங்க வீட்டுல எல்லோரும் விரதம் இருப்போம்!
    நல்ல பழக்கம் ஆச்சே!
  நீ வேற அன்னிக்கு ஒருநாள்மட்டும்தான் என் மனைவி சமைப்பா!

8.      விலைகொடுத்து வாங்கின எதையும் சும்மா போட்டு வைக்கக் கூடாதுங்கிறது என் மனைவியோட கொள்கை!
பேஷ்! பேஷ்! ரொம்ப நல்ல கொள்கையா இருக்கே!
 நீ வேற என்னை ஒரு நிமிஷம் கூட ஓய்வெடுக்க விட மாட்டேங்கிறா!

9.      மன்னா! நாட்டிற்குள் ஒரே குழப்பம்! பனிப்போர் ஏற்படும் சூழலில் இருக்கிறது!
    மந்திரியாரே! விறகுகளை தீ மூட்டி பனிப்போரை விரட்டி விட வேண்டியதுதானே!


10.  மன்னருக்கு எத்தனை கணைகளில் பயிற்சி இருக்கிறது  தளபதியாரே!
நல்லா வக்கணையாக சாப்பிடுவதில் மட்டும்தான் பயிற்சி இருக்கிறது மந்திரியாரே!

11.  அவுட் ஆனப்பிறகும் பேட்ஸ்மேன் ஏன் களத்தைவிட்டு வெளியே போகமாட்டேன்னு அடம்பிடிக்கிறாரு?
    அவரு அவுட் ஸ்டேண்டிங் பேட்ஸ் மேனாம்!

12.  தலைவர் எதுக்கு இப்போ செவ்வாயில் குடியேற முடியுமான்னு கேக்கறாரு?
    அவரோட கிரக நிலை சரியில்லைன்னு ஜோஸ்யர் சொல்லிட்டாராம்!

13.  தலைவரை பார்க்க வந்த நீ எதுக்கு வேட்டி ஒண்ணும் துண்டு ரெண்டும் வாங்கி வந்திருக்க?
    நீங்கதானே சொன்னீங்க தலைவர் எப்பவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசுவாருன்னு!

14.   வாழ்க்கையில அவருக்கு படிப்படியா முன்னேற்றம் வரும்னு ஜோஸ்யக்காரன் சொன்னது உண்மையா போயிருச்சு!
    எப்படிச் சொல்றே?
   முன்ன கோயில்ல கடைசி படியிலே உக்காந்து பிச்சை எடுத்துட்டு இருந்தார். இப்போ முதல் படியிலே உட்கார்ந்து பிச்சை எடுக்கிறாரே!

15.  நடிகையோட சம்பளம் அதிகம்னு சொன்னதும் குறைச்சிக்க சம்மதிச்சிட்டாங்களா பரவாயில்லையே?
அவங்க குறைச்சிக்கிறேன்னு சொன்னது சம்பளத்தை இல்லை! உடையை!

16.  இப்ப எதுக்கு பாம்பாட்டியை மகுடி எடுத்திட்டு வரச்சொல்லி இருக்கீங்க?
நீங்கதானே சொன்னீங்க பலகோடி செலவுபண்ணி எடுத்த படம் பெட்டிக்குள்ளேயே முடங்கி இருக்குதுன்னு!

17.  அந்த கடைக்காரர் கிட்ட என்ன கேட்டீங்க இப்படி கோபிச்சிக்கிறார்?
டோர் டெலிவரி இலவசம்னு போட்டிருக்கீங்களே இதுவரைக்கும் எத்தனை கதவுங்களுக்கு பிரசவம் பார்த்திருக்கீங்கன்னு கேட்டேன்!


18.  என்னை நினைச்சு பார்த்தீங்கன்னா குடிக்கணும்னு உங்களுக்கு தோணுமா?
உன் நினைச்சவுடனேதான் துக்கம் தாங்கமா தினமும் குடிக்க தோணுது!

19.  மன்னரின் வீரம் இன்று ஏலம் போய்விட்டதா எப்படி?
அடகு கடையில் வைத்திருந்த மன்னரின் வாளை இன்று ஏலம் விட்டு விட்டார்கள்!

20.  தலைவர் கட்சிதான் என்னோட சொத்துன்னு சொன்னது தப்பா போயிருச்சு!
     ஏன்?
  அவரோட மகன்ங்க சொத்தை பாகம் பிரிச்சுக் கொடுங்கன்னு போர்க்கொடி தூக்கிட்டாங்க!

21.  மந்திரியாரே! மன்னர் கலக்கமாக இருக்க காரணம் என்ன?
வைத்தியர் கொடுத்த சூரணம் வயிற்றை கலக்குவதுதான் காரணம்.

22.  அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
பேஷண்டுக்கு பல்ஸ் குறைந்துவிட்டதுன்னு சொன்னா கவலைப்படாதீங்க கட்டிக்கலாம்னு சொல்றாரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் அருமை சுரேஷ் உங்களுக்கு மன்னர்கால நகைச்சுவைகள் நன்றாக வருகிறது....

    ReplyDelete
  2. எல்லாமே ரொம்ப அருமை. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. படித்தேன் ,ரசித்தேன் 😁😆😌

    ReplyDelete
  4. ரசித்தேன்.

    8 ம், 17 ம் சூப்பர் சுரேஷ்.

    ReplyDelete
  5. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  6. ஹஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம்....அதுவும் மன்னர்..ஹஹஹஹ

    11, 17 டாப்......

    ReplyDelete
  7. படிப்படியா முன்னேற்றம்... ஹா.... ஹா...

    ReplyDelete
  8. சிரித்தேன் மகிழ்ந்தேன்

    ReplyDelete
  9. அனைத்தும் அருமை.அதுவும் அந்த 8 ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  10. மிகவும் ரசித்தேன். அதிகம் சிரித்தேன்.

    ReplyDelete
  11. நகைப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  12. அடடா! எத்தனை ஜோக்குகள்! அத்தனையும் மனம் விட்டுச் சிரிக்க வைப்பவை.

    சுரேஷ்,

    பத்திரிகைளில் வெளியாகுமே. அனுப்பியதுண்டா? உடனே அனுப்புங்கள்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை வருகைக்கு நன்றி சார்! பாக்யா, வாரமலர் போன்றவற்றில் ஒன்றிரண்டு பிரசுரம் ஆகின. இந்த வருடம் மீண்டும் முயற்சிக்க வேண்டும். பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  13. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  14. ஹா..ஹா.. கலக்கல் ஜோக்ஸ் பாஸ்.. செம ஹியூமர் சென்ஸ் இருக்கு உங்களுக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!