கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 30

  1. குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சிட் பண்டுல பணம் சேர்க்கறதா சொன்னியே என்ன ஆச்சு?
    மொத்தமா கொத்திக்கிட்டு போயிட்டான்!

  1. தலைவர் ஏன் இடைத்தேர்தல்ல நிக்க மாட்டேன்னு சொல்றாரு?
இத்தனை வயசுக்கு மேல ‘இடை”த் தேர்தல்ல போட்டியிடறது அசிங்கம்னு சொல்றாரு!

  1. ஏ.டி. எம். ல நுழைஞ்ச தலைவர் எதுக்கு பின்னால திரும்பி பார்த்து நம்பரை சொல்ல சொல்றார்?
மிசின் பின் நம்பர் கேட்டுச்சாம்!

  1. யோவ்! எதுக்குயா ஸ்பேனர் கொண்டுவந்து பஸ் சீட்டை கழட்டுற?
நீங்கதானே சீட்டு வாங்கிக்கன்னு சொன்னீங்க! வாங்கின சீட்டை எடுத்துட்டு போக வேண்டாமா?

  1. டாக்டர் எனக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு! தூக்கத்திலேயே நடந்து வெளியே வந்துடறேன்!
அது ஒண்ணும் பிரச்சனை இல்லை! உங்க கட்டில்ல காலை கட்டிட்டு தூங்குங்க!
 ஆபிஸ்ல கட்டில் எல்லாம் கொண்டுபோக அனுமதிக்கமாட்டாங்க டாக்டர்!

  1. கடையில என்ன கலாட்டா?
சுகர் பிரி பிஸ்கெட்ட வாங்கிட்டு ஃபிரியா சுகர் வேணும்னு இவர் அடம்பிடிக்கிறாரு சார்!

  1. உன் மனைவிக்கு கோவம் வந்தா உன்னோட பர்ஸ் லேசா போயிருமா? எப்படி சொல்றே?
கோவம் வந்தா எல்லா பொருளையும் போட்டு உடைச்சிருவா! புதுசா வாங்கணும் இல்லே!

  1. நான் விக் வைத்திருப்பது எதிரிக்கு தெரிந்துவிட்டதா அமைச்சரே?
    ஏன் மன்னா?
   முடிசூடா மன்னர் என்று நக்கல் அடிக்கிறானாமே!

  1. இந்த வரன் ஏன் உங்களுக்கு ஒத்து வராதுன்னு சொல்றீங்க!
நீங்கதானே சொன்னீங்க பொண்ணு செப்பு சிலையாட்டம் இருக்கும்னு! பீதாம்பரி பவுடர் எவ்வளவு வாங்கிறதுன்னுதான் வேணாம்னு சொல்றோம்!

  1. நம் மன்னருக்கு இதுதான் கன்னிப் போர்!
ஓ!  அதனால்தான் உடலெல்லாம் கண்ணிப்போய் விட்டிருக்கிறதா?

  1. வேண்டாம் வேண்டாம்னு தடுத்தும் என் பொண்டாட்டி கேக்கவே இல்லை!
    அப்புறம்?
    அப்புறம் என்ன? பொங்கலுக்கு வாங்கின ஒரே சர்ட்டும் அவ அடிச்ச அடியில கிழிஞ்ச போயிருச்சு!

  1. தலைவருக்கு குடும்பத்தை விட கட்சிதான் பெரிசு!
     அதனாலதான் கட்சிக்குள்ளேயே குடும்பத்தை வைச்சிருக்காரு!

  1. அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி கம்பவுண்டரா இருந்திருப்பாருன்னு எப்படி சொல்றே?
ரெண்டு மருந்துகளை எழுதி கலக்கி கலக்கி குடிக்கச் சொல்றாரே அதை வைச்சுதான்!

14. புத்தக சந்தைக்கு எதுக்குய்யா நீ மாட்டை கூட்டிக்கிட்டு வர்றே?
   நீங்கதானே சொன்னீங்க! புத்தகத்தை எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சிடலாம்னு!

15. ஆ.. ஊண்ணா என் பொண்டாட்டி அவங்க அப்பா- அம்மாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லிடறா...
    அப்புறம்?
   வேற விதி...! அவங்களுக்கும் சேர்த்து நானே சமைக்க வேண்டியதா போயிடிது!

16. மன்னர் அவர் வெட்டிய குழியில் அவரே விழுந்துவிட்டாரா? எப்படி?
    அவர் வெட்டிய பதுங்குக் குழியில் கால் தவறி அவரே விழுந்துவிட்டார் என்று சொல்கிறேன்!

17. உங்களுக்கு சுகர் இருக்கிறதனாலே கூட்டத்திலே கலந்துக்க மாட்டீங்களா ஏன்?
   நீங்கதானே சொன்னீங்க அந்த பேச்சாளர் இனிக்க இனிக்க பேசுவாருன்னு!

18. நான் பண்ண புண்ணியம்தான் நீங்க என் கணவரா வாய்ச்சி இருக்கிறது!
    ஆனா நான் என்ன பாவம் பண்ணிணேன்னு தெரியவே இல்லையே!

 19. மன்னா! மன்னா! யாரோ நம் ஆராய்ச்சி மணியின் நாவை அறுத்துவிட்டார்கள்!
   பதறாதீர்கள் மந்திரியாரே! எல்லோரும் பொசுக்கென்று அந்த மணியை அடித்து விடுவதால் நான் அதை டிஸேபிள் செய்ய சொன்னேன்!

20. இவ்வளவு வேகமா எங்க போறீங்க?
    ஃபாஸ்ட் புட் கடைக்குத்தான்!

டிஸ்கி} வீடு, மற்றும் கோயிலில் நிறைய வேலைப்பளு! வீட்டில் தங்கைக்கு ஐந்தாம்மாத பூச்சூட்டுவிழா, கோயில் கும்பாபிஷேக ஆண்டுவிழா என்று பிஸியாக இருப்பதால் பதிவுகள் எழுதுவதிலும் படிப்பதிலும் கொஞ்சம் சிரமம். பொறுத்தருள்க!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. கொஞ்சம் அல்ல நிறையவே சிரித்தேன் நண்பரே.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. (கொஞ்சம் சிரியுங்க பாஸ்!)
    சிரிச்சா போச்சு!
    நல்ல நகைச் சுவை அமுதம்.

    போச்சோ போச்சு
    என்ன நண்பரே புரியலையா?

    கவலை/வியாதி இரண்டையும்தான் சொன்னேன்.

    சிரிப்புக்கு சிறப்பு சேர்ப்பது கார்ட்டூன்ஸ்
    அதுமட்டும் இருந்தால்? ஆஹா! அலாதி இன்பம்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  4. பிரிச்சு மேய்ஞ்சி விட்டீர்கள்... ஹா... ஹா...

    ReplyDelete
  5. சிரித்தேன் நண்பரே.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அனைத்தும் ரசித்தேன். அதிலும் 15,18 ரொம்பவே சூப்பர்.

    ReplyDelete
  7. அனைத்தையும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  8. அனைத்தும் ரசித்தேன் பாராட்டுக்கள் ...!

    ReplyDelete
  9. ஹ்ஹஹஹஹ் செம கலக்கிட்டீங்க நண்பரே! அனைத்தும்!

    ReplyDelete
  10. தங்கையின் பூச்சூட்டு விழா நன்றாக நடக்க வாழ்த்துக்கள்! பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  11. அனைத்தும் ரசித்தேன். தங்கையின் பூச்சூடல் விழா சிறப்பாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துகள், ஆசிகள். வேலையை எல்லாம் முடித்துக் கொண்டு நிதானமாக வாருங்கள்.

    ReplyDelete
  12. சிரிப்பு எல்லாம் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. :)

    ReplyDelete
  13. அருமையான நகைச்சுவை, அனைத்தும் சிரிப்பை வரவழைத்தன, சிலவற்றுக்கு விழுந்து புரண்டு சிரிக்க வைத்தன. இவை இதுவரை வேறெங்கும் படித்திராத வகையில் அனைத்தும் புதிதாக உள்ளன. நீங்கள் பத்திரிகைகளுக்கு இவற்றை எழுதிப் போடலாம். பலருக்கும் இவை சென்றடையும். பதிவை தமிழ் மனத்தில் இணைத்தால் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!