தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்!


அயனங்களில் பயணிக்கும் அருணன் தன்
நயனங்களை வடக்கில் பதிக்கும் நாள்!
தென்னகச்சுற்றுலா முடித்து
தங்கிய தனுசை விட்டு
வடதிசைபயணிக்கும் பகலோன்
திடமாய் மகரத்தில் குடிபுகும்
மகர சங்கிராந்தி!

சேற்றிலே நாற்றிட்டு
செந்நெல்லை விளைவித்து
சோற்றினை தரும் சோணாடும்!
ஆழ்கடலில் முத்தெடுத்து
அழிவிலா தமிழ் சங்கமெடுத்து
தமிழ்வளர்த்த பாணாடும்!
கல்லிலே கலைகண்டு
கல்லுக்கு உயிர்கொடுத்து
சிற்பகலைவளர்த்த பல்லவநாடும்!
பன்னாளாய் கொண்டாடும்
பொன்னான திருநாள் பொங்கல்!

தைப்பொங்கல் நன்னாளில்
விதைப்போம் நல்லெண்ணங்கள்!
எண்ணம்போலவாழ்வமையும்!
வண்ணமயமான உலகமைய
எண்ணங்களை நல்வழிப்படுத்துவோம்!
நற்கதிரோன் ஒளியினில்
நசுங்கட்டும் இருள்!
ஒளிமயமான பாதையில்
ஒன்றாய் நடந்திட்டு
உருவாக்கிடுவோம் புதிய தலைமுறையினை!
 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


Comments

  1. பொங்கல் வாழ்த்துப்பா அருமை நண்பரே
    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கு எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...
    பாவாடை சட்டையில் படத்திலிருப்பது உங்க மகள்களா .. அழகோ அழகு

    ReplyDelete
  7. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தளிர், ராசாதிக்களின் படங்கள் பிரமாதம்.

    ReplyDelete
  8. வணக்கம்
    அழகிய கவியுடன் பொங்கல் வாழ்த்து சொல்லிய விதம் கண்டு மகிழ்ந்தேன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  10. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. பொங்கல் திருநாளில் அருமையான ஒரு வாழ்த்துப்பா.
    தங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஆஹா! ஆதவனின் பயணத்தை அழகாய் உரைத்திட்டீர்! நண்பரே! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!