கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 18

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 18

  1. சிறையில கூட தலைவர் கலாட்டா பண்ணிட்டாராமே?
ஆமா தனக்கு ஒதுக்கிற கைதி எண் நியுமராலஜிப் படித்தான் வேணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டார்!

  1. நம்ம  அமைச்சர் திடீர்னு பரதனா பணியாற்றத் தயார்னு அறிக்கை விடறாரே ஏன்?
தலைவர் மேல போட்டிருக்கிற கேஸ்ல நாளைக்கு தீர்ப்பாம்!

  1. நம்ம தலைவருக்கு முதல்வர் ஆசை வந்திருச்சின்னு எப்படி சொல்றே?
பொலிடிக்கல் பார்ட்டி நடத்தறதுக்கு பதிலா பேசாம ஒரு டீக்கடை நடத்தி இருக்கலாம்னு சொல்றாரே!

  1. தலைவருக்கு ஜாமீன் கேட்டும் கொடுக்கமாட்டேங்கிறாங்களா? ஏன்?
பண்டிகை நாள்ல அசைவம் எல்லாம் தரமாட்டேன்னு சொல்றாங்க!


  1. போட்டின்னு வந்துட்டா பையன் ரவுண்டு கட்டி அடிப்பான்னு சொன்னாங்க!
அப்புறம்?
      சரக்கைத் தான் ரவுண்டு கட்டி அடிப்பான்னு கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் புரிஞ்சுது!

  1. கொடுத்து சிவந்த கைகள் என் மனைவியோடதுன்னு சொல்றியே நீ ஏதும் தரமாட்டியா?
வாங்கியே சிவந்த கன்னங்கள் என்னுதாச்சே!

  1. மன்னர் தான் வெட்டிய குழியில் தானே சிக்கிக் கொண்டார்!
       எப்படி?
அவர் வெட்டிய பதுங்குக் குழியில் அவரே மாட்டிக்கொண்டார்!

  1. பேப்பர் பையன் எதுக்கு நியுஸ் பேப்பரை தூக்கி போட்டுட்டு போறான்?
சுடச்சுட நியுஸ் வருது இல்லே! தாங்க முடியலையாம்!

  1. கேடி கபாலியை ஏன் இன்ஸ்பெக்டர் அப்படி முறைக்கிறார்?
    ஆயுத பூஜை செய்யனும்! போலீஸ் ஸ்டேஷன்ல சும்மா வச்சிருக்கிற ஆயுதங்களை கொடுத்து உதவ முடியுமான்னு கேட்டானாம்!


  1. மன்னரே எதிரிகள் உங்களை எள்ளி நகையாடுகிறார்களாம்!
    அதோடு விட்டுவிட்டு பந்தாடாமல் இருந்தால் சரிதான்!

  1. நம் மன்னர் ஒவ்வொரு அடியையும் கவனமாகத்தான் எடுத்துவைப்பார்!
அவ்வளவு எச்சரிக்கையா?
இல்லையா பின்னே! இல்லாவிட்டால் அவர் வெட்டிய பதுங்குகுழியில் அவரே விழுந்துவிட்டால் எப்படி?

  1. சுயம்வரத்துக்குச் சென்ற மன்னர் ஏன் சோகமாகிவிட்டார்?
வில்லை வளைக்கவேண்டும் என்பதை தவறாக புரிந்துகொண்டு வில்லாய் வளைந்து நின்றாராம்! எல்லோரும் எள்ளிநகையாட சோகமாகிவிட்டார்!

  1. ஆனாலும் அநியாயத்துக்கு இந்த மெகா சீரியல இழுக்கக் கூடாது!
எப்படி சொல்றீங்க!
நான் சின்னப் பையனா இருக்கறப்ப ஆரம்பிச்சி இப்ப எனக்கு கல்யாணமாகி என் பையனுக்கு கல்யாணமாகப் போவுது. ஆனா சீரியல் கதாநாயகிக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே!

  1. அந்த டாக்டர்  பன்ற ஆபரேஷனுக்கு ‘வாரண்டி’ கிடைக்கும்னு எப்படி சொல்றீங்க?
ஆபரேசன் பண்ணத் தையல் பிரிஞ்சுப்போச்சுன்னா இலவசமா திரும்பவும் தையல் போட்டுவிடுவாராம்!


  1. அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி லேகியம் வித்துண்டு இருந்தவர்னு எப்படி சொல்றீங்க?
    மருந்தை உருண்டையா பிடிச்சு மூணு வேளை சாப்பிடனும்னு சொல்றாரே!

  1. சிறைக்கைதிகளின் வசதிக்காக அமைச்சர் ஏதோ அறிவிச்சு இருக்காராமே?
புதுசா “அம்மா ஜெயில்’ ஓப்பன் பண்ணப்போறாராம்!

17. தலைவரை மஞ்சள் நீராட்டு விழாவுக்கு கூப்பிட்டது தப்பா போச்சு?
   ஏன்?
  நான் தான்  நீராட்டி விடுவேன்னு அடம்பிடிக்கிறார்!

18. அந்த ஏரியாவிலே திருட்டு பயமே இல்லை!
   அப்ப அந்த பக்கம் போலீஸ் ஸ்டேஷனே இல்லைன்னு சொல்லு!


19. ஒரு சேஞ்சுக்கு இன்னிக்கு நீ சமையேன்!
     இந்த கதையே வேணாம்! நிறைய சேஞ்ச் கொடுத்துதான் உங்களை கட்டிக்கிட்டு வந்திருக்கேன்!

20. இந்த பில்டிங்கை அவர் ஓடி ஓடியே சம்பாதிச்சு கட்டினார்னு சொல்றீங்களே! என்ன வேலை செய்யறார்?
  கிரிக்கெட் பிளேயரா இருக்கார்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமையான நகைச்சுவை பதிவு. தொடர்ந்து சிரிக்க வையுங்கள்.

    ReplyDelete
  2. அந்த டாக்டர் இதுக்கு முன்னாடி லேகியம் வித்துண்டு இருந்தவர்னு எப்படி சொல்றீங்க?
    மருந்தை உருண்டையா பிடிச்சு மூணு வேளை சாப்பிடனும்னு சொல்றாரே!

    சிறைக்கைதிகளின் வசதிக்காக அமைச்சர் ஏதோ அறிவிச்சு இருக்காராமே?
    புதுசா “அம்மா ஜெயில்’ ஓப்பன் பண்ணப்போறாராம்!
    //
    மிகவும் ரசித்தோம். சிரித்தோம்!

    ReplyDelete
  3. அனைத்தும் ரசித்தேன் அருமை நண்பரே...

    ReplyDelete
  4. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. நல்ல பணி தொடரட்டும்...

    ReplyDelete
  6. அனைத்தும் சிரிக்க வைத்தன
    வில்லாய் வளைந்தது சூப்பர்

    ReplyDelete
  7. ரசித்தேன்
    சிரித்தேன்
    நண்பரே நன்றி

    ReplyDelete
  8. வழமை போல அனைத்தையும் ரசிதேன் . பேஷ் பேஷ் பையா.ரொம்ப நன்னாருக்கு. வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  9. அய்யா,
    வணக்கம்.
    பகவான்ஜிதான் வலையுலகத்தில் நகைச்சுவைப்பதிவுகளின் ஏகபோக உரிமையாளர் என்றல்லவா நினைத்திருந்தேன்.
    நீங்களும் இருக்கிறீர்களா?
    சபாஷ்!
    சரியான போட்டி!
    தொடருங்கள்.தங்களைத் தொடர்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  10. //ஆனாலும் அநியாயத்துக்கு இந்த மெகா சீரியல இழுக்கக் கூடாது!
    எப்படி சொல்றீங்க!
    நான் சின்னப் பையனா இருக்கறப்ப ஆரம்பிச்சி இப்ப எனக்கு கல்யாணமாகி என் பையனுக்கு கல்யாணமாகப் போவுது. ஆனா சீரியல் கதாநாயகிக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே!//

    இது ஜூப்பரு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!