கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 19

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 19


1.      இவ்ளோ சொத்து வாங்கிப் போட்ட தலைவர் இதைவாங்கி போடாததாலே எவ்ளோ பிரச்சனை பார்த்தியா?
     எதைச்சொல்றே?
     ஜாமீனைத்தான்!

2.      என் மனைவி குத்திக்காட்டி பேசுனா வலிதாங்க முடியாது!
    அவ்வளவு குத்திக்காட்டுவாங்களா?
  ரத்தமே வந்துடும்னா பார்த்துக்கோயேன்!

3.      யூ.பி. எஸ்ஸுக்கும் ஓ.பி. எஸ்ஸுக்கும் என்ன ஒத்துமை?
கரண்ட் இல்லேன்னா யு.பி.எஸ். அம்மா ஆட்சியிலே இல்லேன்னா ஓ.பி.எஸ்.

4.      மன்னா! மன்னா! நாட்டில் கொள்ளைக்காரர்கள் புகுந்துவிட்டார்களாம்!
    யாரடா அவன் என்னைவிட பெரிய கொள்ளைக் காரன்?!

5.      டாக்டர் இவ்ளோ மருந்து எழுதறீங்களே! கொஞ்சமா எழுதக்கூடாதா?
    அப்புறம் மெடிக்கல்ல விக்காம இருக்கற மருந்துகளை எப்படி காலி பண்றதாம்?

6.      அந்த டாக்டர் அவுட் பேஷண்ட்களை பார்க்கவே மாட்டாராம்!
      ஏன்?
அவரோட இன்கம் கொறைஞ்சிடுமாம்!

7.      தலைவர் எதுக்கு பிரபுதேவாவை கூப்பிடச் சொல்றார்?
வழக்கு ஆடனுங்கிறதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கார் போல!


8.      தலைவர்கிட்ட கரண்ட் அப்டேட்டடா இருங்கன்னு சொன்னது தப்பா போச்சு!
இடையிடையிலே மூணுமணி நேரம் காணாம போயிடறார்!

9.      ஒரு வக்கீலை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னா எதுக்கு நீங்க  ஆட்டோ டிரைவரை கூட்டிட்டு வந்து இருக்கீங்க?
     நீங்கதானே சொன்னீங்க சட்டத்தோட சந்து பொந்து எல்லாத்திலேயும் நுழைஞ்சு வரணும்னு!

10.  20 அடியிலே தண்ணீர்னு சொல்லி மனையை ஏமாத்தி வித்துட்டாங்களா எப்படி?
     மனையில இருந்து 20 அடி தூரத்துல ஒரு தெருக்குழாய் இருக்குது!

11.  மனித சங்கிலி போராட்டம் நடத்தனும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
     எவ்ளோ பவுன்ல சங்கிலிபோடுவாங்கன்னு கேக்கறார்!

12.  உண்ணாவிரதத்துல இருந்து தலைவர் ஏன் பாதியிலேயே திரும்பி வந்துட்டார்!
    பிரியாணி சீக்கிரமே தீர்ந்து போயிருச்சாம்!

13.  புலவர் பாடப்பாட மன்னர் அப்படியே சொக்கிப்போய்விட்டார்!
ம்.. அப்புறம்?
அப்புறம் என்ன? கொஞ்சம் தட்டி எழுப்ப வேண்டியதாய் போய்விட்டது!

14.  திருடப் போன நீ கொஞ்சம் அசந்துதாலே மாட்டிக்கிட்டியா எப்படி?
கண் அசந்துதாலதான் !


15.  மனைவிக்காக நிறைய கடன் பட்டு இருக்கேன்றியே அவ்வளவு நல்லா கவனிச்சுப்பாங்களா?
நீ வேற அவளுக்கு நகை, துணிமணி வாங்கிப்போட்டு நிறைய கடன் பட்டு இருக்கேன்னு சொன்னேன்!

16.  தலைவர் அரசியல்ல கரை கண்டவர்னு எப்படி சொல்றே?
    அரசியலுக்கு வந்து பத்துவருஷத்துல பல கரைவேட்டிகளை மாத்தி கட்டிட்டவராச்சே! அதை வச்சுத்தான் சொல்றேன்!

17.  நாட்டில் எல்லாம் கிடைக்கிறது என்று மார்தட்டிக் கொள்ளும் ஆளும் கட்சிக்காரர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! எங்கள் தலைவர் எவ்வளவோ முயன்றும் ஒரு ஜாமீன் கூட கிடைக்கவில்லை!.. அப்புறம் எப்படி எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லுகிறீர்கள்?...!


18.  இத்தனை வருஷமா எங்கிட்டேயே வைத்தியம் பார்த்துக்கிறீங்க ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?

    நல்லாத் தெரியுது டாக்டர்! சின்னதா பத்துக்கு பத்து ரூம்ல கிளினிக்  வைச்சிருந்த நீங்க ஒரு ஹாஸ்பிடலையே கட்டியிருக்கீங்களே!

19.  என்னோட அம்மாவுக்கும் பெண்டாட்டிக்கும் இன்னிக்கு காலையிலே பயங்கர சண்டை!
    அப்புறம்?
அப்புறம் என்ன? வாணி-ராணியை பார்க்க எங்க அம்மாவுக்கு விட்டுக்கொடுக்கிறேன்னு வொய்ஃப் ஒத்துக்கவும்  ஆபிஸ் பார்க்கறப்ப எங்கம்மா சாப்பிட்டு முடிச்சுடனும்னு முடிவாகிடுச்சு!


20.  மந்திரியாரே எதிரி இசை ஞானம் மிக்கவனாமே! எந்த வாத்தியத்தில் அவன் வல்லவன்?
ஆம் மன்னா! பிறரை வென்று சங்கு ஊதுவதில் வல்லவனாம்!

21. எதிரி அசந்த நேரத்தில் மன்னர் சுட்டுவிட்டார்!
   ஐயையோ! அப்புறம்?
  அப்புறம் என்ன? எதிரி கழுத்தில் இருந்த முத்துமாலை இப்போது மன்னர் கழுத்தை அலங்கரிக்கிறது!

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்துமே ஹாஹாஹ் ரகங்கள்! சபாஷ் சுரேஷ்! நண்பரே!

    இவ்ளோ சொத்து வாங்கிப் போட்ட தலைவர் இதைவாங்கி போடாததாலே எவ்ளோ பிரச்சனை பார்த்தியா?
    எதைச்சொல்றே?
    ஜாமீனைத்தான்!//

    இப்பத்தான் செய்தி வந்துச்சு அம்மா ஜாமீன் ! அதுக்குள்ள ஜோக்கு! சூப்பர்!

    ReplyDelete
  2. wow அனைத்தும் சூப்பர் சகோ வாழ்த்துக்கள் ....! ரசித்தேன் ரசித்தேன் சிரித்தேன்..

    ReplyDelete
  3. ரசித்துச் சிரித்தோம் சார்..அரசியல் மன்னர் ஜோக் கல கல..

    ReplyDelete
  4. வணக்கம்
    சொல்லிய நகைச்சுவை ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது சிரித்தேன் ஐயா பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அன்பு நன்பா சோக்குகள் அனைத்தும் அருமை.

    தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும் என்றானே எங்கள் அமர கவி அது மெய்யானது இன்று. ஜாமீன் கிடைக்க நக்கலாக யோசனை சொன்னீர்களே இப்போ உங்கள் முகத்தில் அட்டைக்கரி பூசி கொண்டிர்கள் அல்லவா. உங்களின் அற்புதமான எழுத்தாற்றலை ஏன் நல்ல நோக்கத்திற்கு பயன் படுத்தக் கூடாது, ஏன் இப்படி செய்யவேண்டும் ?
    இலட்சியமே இல்லாது அலைகிற எழுத்தாளராய் நீங்கள் போய்விடக்கூடாது. நீங்கள் அடைய வேண்டிய தூரம் அதிகம். யானை தன் வளிமை அரியாமல் 5 காசு பத்து காசு வாங்கி ஆசிர்வாதம் செய்வது கொடுமை இல்லையா. உங்களை போன்ற பணக்காரர்களுக்கு நம் முதல்வர் செய்திட்ட நல்லவைகள் என்று புரியும். அம்மா உணவகம் எத்தனை ஏழைகலின் வாழ்விள் ஒலி ஏற்றி உள்ள்து அரிவீர்கலா?
    உங்களை போன்ற இலக்கை மறந்தவர்களுக்கு பிரமிள்-ன் கவிதை ஒன்று.
    கேள்விகலை மட்டுமே
    வார்த்தைகளாக்கிய உன்னிடம்
    கேட்கிறேன்
    எந்தத்திசை நோக்கியும்
    முடிவுறாப் பாதையொன்றில்
    எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?
    எந்ததக் வின்களத்திற்கும்
    வசப்படாப் புள்ளியொன்றிடம்
    என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?

    நீ முட்டிக் கொண்டு
    இருக்கு இடத்தின் பெயர்
    பிளாக் ஹோல் என்பதறிவாயா?

    அதனால் விழித்துக்கொண்டு நல்லது செய்பவர்களை பகடி செய்யாதீர்கள். எழைகளின் வாழ்விற்கு உங்களை போல் பணக்கார்கள் துரும்பும் கிள்ளப் போவதில்லை. உதவப் போகிறவர்களை வேடிக்கை செய்யாதீர்.

    மற்றவகையில் அருமையான எழுத்து ஆக்க பூர்வமாக மாற்றுங்கள் பங்குசந்தை போன்றவற்றை உங்க்ளுக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொள்ளாமல் எலிய தமிழில் மற்றவர்க்கும் விலக்குங்கள். எழுத்தாளுமையை இந்த மாதிரி நற்காரியத்துக்கு பயன்படுத்துங்கல். இதுவே என் அன்பு வேண்டுகோல். நகைச்சுவை அரசராக இருக்கும் தங்கள் எழுத்தில் பங்குச்சந்த்தை , ஐ.எஸ் ஓ, அனு அண்டம் போன்றவைகளை விலக்கி கூற முர்படுங்கல். இன்னொரு சுஜாதா இந்த தமிழ் உலகுக்கு கிடைப்பார்.

    பரமுசிவசாமி

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை. ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  7. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  8. ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  9. சிரிப்பு வெடி சகோ ரசித்தேன் அதுவும் ஜாமீன் விடயம் தூக்கல்.

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை. ரசித்து சிரித்தேன்

    ReplyDelete
  11. ஹிஹிஹிஹி, எல்லாமே நல்லா இருந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2