கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 15

ஜோக்ஸ் 

  1. தலைவர் ஏடாகூடமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டாரா?
ஆமாம்! வெள்ள நிவாரண நிதி கொடுக்கிறா மாதிரி சர்க்கரைக்கும் நிவாரண நிதி கொடுக்கணுன்னு அறிக்கை விட்டிருக்கார்!

  1. என் மனைவி சமைக்க ஆரம்பிச்சா வாசனை தெருவைத் தூக்கும்!
அவ்ளோ சுவையா இருக்குமா?
இல்லே அவ்ளோ கறுகலா இருக்கும்!

  1. மன்னர் எதற்கு பாய் தலையணையோடு வெளியே போய்க் கொண்டிருக்கிறார்?
மயிலுக்கு போர்வை கொடுத்தால் போதுமா? பாயும் தலையனையும் கொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறாராம்!

  1. தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவுகிறது இது என்ன காலம்?
கஷ்டகாலம் சார்!

  1. எல்லாத்தையும் செக் பண்ணி பார்த்தீங்களே டாக்டர் ஆனா ஒண்ணை மறந்துட்டீங்களே?
என்ன அது?
என்னோட பேங்க் பேலன்ஸை செக் பண்ணலியே!


  1. தலைவர் குற்றப்பத்திரிக்கையை வாங்கிட்டு கேட்ட கேள்வியிலே ஜட்ஜே அசந்துட்டார்!
அப்படி என்ன கேட்டார்?
மற்ற பத்திரிக்கை மாதிரி இலவச இணைப்பெல்லாம் தரமாட்டீங்களான்னுதான்!

  1. தலைவர் என்ன ஆளுங்கட்சியிலே சேரப்போறாரா?
ஏன் கேக்குற?
வளைஞ்சி கொடுத்து வாழறதுதான் வாழ்க்கைன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்காரே!

  1. மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஆயிரம்….
மரங்களை நடவேண்டுமா?
ஊகும்! ஆயிரம் பதுங்குகுழிகள் அமைக்கவேண்டுமாம்! விரைவில் போர் வருகிறது!

  1. மன்னா! நாட்டில் ஒற்றர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது!
அப்படியா! இனி ரகசியம்கூட ஒலிப்பெருக்கி வைத்து பேசவேண்டும் என்று அறிவித்துவிட்டால் ஒற்றர்களுக்கு வேலை இல்லாது போய் விடும் அல்லவா?!

  1. அந்த டாக்டர் எல்லாத்தையும் ஈசியாத்தான் எடுத்துப்பார்!
எப்படி?
நெஞ்சுவலிச்சுதுன்னு பதட்டமா போனாக் கூட ஈசிஜி ப்ளிஸ்! ஈசிஜி ப்ளிஸ்னு சொல்லுவார்னா பாத்துக்கோயேன்!

  1. அந்த டாக்டர் போலியா இருப்பார்னு சந்தேகப்படறியா? ஏன்?
இரும்புச்சத்துக்கு மாத்திரை எழுதி கொடுங்கன்னு கேட்டா துருப்பிடிச்சிடும் தண்ணி அதிகம் சேர்த்துக்காதீங்கன்னு சொல்றாரே!

  1. தலைவர் திடீர்னு எதுக்கு  “மணிவிழா’ கொண்டாடனும்னு சொல்றார்?
எல்லாம் “மணி” திரட்டத்தான்!

  1. உங்க மனைவியை காணோம்னு ஒருவாரம் கழிச்சி வந்து புகார் பண்றீங்களே ஏன்?
வழக்கம் போல புடவை எடுக்கத்தான் போயிருக்கான்னு நினைச்சிக்கிட்டேன் இன்ஸ்பெக்டர்.

  1. பையனுக்கு ஒரு கால்கட்டு போடனும்னு அம்மா சொன்னப்பவே உஷாராகி இருக்கணும்.
ஏன் என்ன ஆச்சு?
இப்ப சமையல்கட்டே கதின்னு ஆயிருச்சே!

  1. எதிரி மன்னன் கோட்டை வாசலில் நின்று அறைகூவல் விடுகிறான் மன்னா!
அப்படியானால் பின் வாசலை திறக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்லுங்கள்!

  1. அன்பே! நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாய்…
    நம் காதல் வளர்ந்து வருகிறது!
  கூடவே என் வயிற்றில் உங்கள் பிள்ளையும்தான் வளர்ந்து வருகிறது!

  1. பெட்டிக்கடையிலே என்ன தகறாரு?
பெட்டிக்கடைன்னு சொல்றீங்க ஒரு பெட்டியும் விக்கமாட்டேங்கிறீங்களேன்னு கேட்டிருக்கார் ஒருத்தர்!

  1. கேடி கபாலி சொன்னதகேட்டு ஜட்ஜே பீல் ஆயிட்டாரு!
    அப்படி என்ன சொன்னான்?
  இவ்வளவு நாள் ஜட்ஜா இருந்தும் உங்களை யாருக்கும் தெரியலை சூப்பர் சிங்கருக்கு ஜட்ஜா இருக்கறவங்களைத்தானே எல்லோருக்கும் தெரியுதுன்னு கேட்டுருக்கான்!

  1. டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவரோட அலும்பு தாங்க முடியலை!
பார்க்க வர தொண்டர்களுக்கு டோக்கன் கொடுத்து தான் உள்ளே அனுப்பனும்னு  ரூல் போட்டிருக்காரு!

  1. நம்ம படத்துல கதையே இல்லை….!
இதையே சொல்லி படத்த நூறுநாள் ஓட்டிடலாம்னு சொல்லுங்க!

21. மன்னரின் வாள் சாதிக்காததை வாய் சாதித்துவிட்டதா என்ன சொல்கிறீர் மந்திரியாரே!
  வாளால் நிறுத்த முடியாத சண்டையை சரண்டர் என்று சொல்லி வாயால் நிறுத்திவிட்டார் ராணியாரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
 


     


Comments

  1. சூப்பர் சிங்கர் ஜட்ஜ் ஜோக் மிக அருமை.. ரசித்து மகிழ்ந்தேன்

    ReplyDelete
  2. அனைத்தும் கலகல, பேங்க் பேலன்ஸ், இரும்புச்சத்து, கருகல் இவையெல்லாம் தூள்..

    ReplyDelete
  3. கலகலப்பாய் இருக்கிறது

    ReplyDelete
  4. சூப்பர் அப்பு. வைச்சி தாக்குங்க.

    ReplyDelete
  5. ரசித்தேன்
    சிரித்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. கலக்கிட்டீங்க சுரேஷ் ஜி ,கடைசியில் வந்த மன்னர் வாயால் சாதித்தது எனக்கு ரொம்ப பிடித்தது !

    ReplyDelete
  7. நண்பா நலமா ? எல்லாமே சிரிக்க வைத்தன... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அனைத்துமே அருமை. ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  9. ரசிக்க சிரிக்க நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!