கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 2

ஜோக்ஸ்!


1.      தலைவருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிருச்சு!
எப்படி சொல்றே?
ஓட்டல்ல சாப்பிட்ட டிபனுக்கு பில் செட்டில் பண்றாரே!

2.      அந்த ஸ்டேஷன்ல லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாமே?
எப்படி சொல்றே?
லாக்கப் ரூமுக்கு ஏசி வசதி செஞ்சு கொடுத்திருக்காங்களாம்!

3.      மார்வாடிகிட்ட கடன் வாங்கி படம் எடுத்தாரே உங்க தயாரிப்பாளர் இப்ப எப்படி இருக்கார்!

ஏர்வாடியிலே இருக்கார்!

4.      அந்த ப்ளேயர் ரன்னே எடுக்காம அவுட்டானதுக்கு எல்லோரும் பாரட்டறாங்களே ஏன்?
அவரு ரன் எடுத்தா  ‘வின்’ ஓடிப்போயிருதாம்!

5.      ஒரு காலத்துல அவர் களத்தில இறங்கினா பந்து காணாம போயிரும் அவ்ளோ பெரிய ப்ளேயரு!
இப்போ!
ஸ்டம்பு காணாம போயிருது!


6.      எல்லாதலைவர்களும் கை கோர்த்து போஸ் கொடுக்கும் போது  நம்ம தலைவர் மட்டும் ஏன் தனியா நிக்கிறார்?

அவர் எப்போதும் ஊழல்வாதிகளோடு கை கோர்க்க மாட்டாராம்!

7.      அதோ போறாங்களே அவங்க எல்லாரையும் அழவைச்சு வேடிக்கை காட்டுவாங்க!
அவ்ளோ கொடுமைக்காரியா?
 இல்லே டீ. வீ  சீரியல்ல நடிக்கிறாங்க!

8.      தலைவர் ஏன் எல்லோர் கையையும் அழுத்தி அழுத்தி பார்க்கிறார்?
“ப்ரெஸ் மீட்” டுங்கிறதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!

9.      மன்னர் ஏன் கடுப்பாக இருக்கிறார்?
எதிரி நாட்டு மன்னன் அனுப்பிய ப்ரெண்ட் ரிக்வெஸ்டை அக்செப்ட் செய்யாததால் எஃபி கணக்கை ஹேக் செய்து விட்டானாம்!

10.  தலைவர் கெட் அப்பை மாத்திறாரே ஏன்?

புதுசா ஒரு செட்டப்பை கரெக்ட் பண்ணி இருக்காறாம்!

11.  தலைவர் விவரம் புரியாதவரா இருக்காரா ஏன்?

எல்லா தொகுதியிலும் டெபாசிட் காலின்னு தெரிஞ்சதும் எங்கள் வாக்கு வங்கியை யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள்னு ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கார்!


12.  தலைவர் எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே போட்டு பூட்டி வச்சிருந்தாராம்!
அப்புறம்!
 சி.பி.ஐ. காரங்க வந்து நோண்டி எடுத்துட்டாங்க!

13.  மருந்தை தடவிக் கொடுத்ததற்கா உன் மனைவி அடிச்சிட்டாங்க!
நான் வேலைக்காரி இடுப்பிலே இல்ல தடவிக்கொடுத்தேன்!

14.  அட்சய திருதியைக்கு என்ன வாங்கினீங்க!

என் மனைவி நகை வாங்க நான் கடன் வாங்கினேன்!

15.  ஃபைனான்ஸ் அதிபரை கட்டிக்கிட்டது தப்பா போச்சா? ஏன்?
ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கு!

16.  எதிரி நாட்டு மன்னனின் எடை அளவை எதற்கு மன்னர் கேட்கிறார்?
எதிரியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்!


17.  மன்னா வரிச்சுமை அதிகமாயிருக்கிறது என்று மக்கள் புலம்புகிறார்கள்!
உடனே ஆங்காங்கே சுமைதாங்கி கற்களை நட ஏற்பாடு செய்யுங்கள்!

18.  மன்னர் அடிக்கடி கோயிலுக்கு வருகிறாரே இறைநாட்டம் அதிகரித்துவிட்டதா?
கடவுள் நாட்டமல்ல! கன்னி நோட்டம்! புதிய ராணியாரை தேடுகிறார்!

19.  வர வர நாட்டில் பித்தலாட்டம் அதிகரித்துவிட்டது மன்னா!
அதனால் என்ன? அதையும் தேசிய விளையாட்டாக அங்கீகரித்து விடுவோம்!

20.  ஊரில் உள்ள டூ வீலர்களையே திருடினாயா ஏன்?

எனக்கு போர் வீலர் ஓட்டத் தெரியாது எசமான்!

21.  இன்னிக்கு சமையல்ல கொஞ்சம் பெருங்காயம் ஜாஸ்தியா போயிருச்சு!
அப்புறம்!
 எனக்கு உடம்பெல்லாம் பெரும் “காயமா” போயிருச்சு!

22.  பஸ் கண்டக்டருக்கு பொண்ணை கொடுத்தது தப்பா போயிருச்சு!
ஏன் என்ன ஆச்சு?
அடிக்கடி சில்லறை கேட்டு அனுப்பிச்சு விட்டுடறாரு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. லாக் அப்புக்கே ஏசியா
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    அனைத்தும்
    அருமை
    நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. 3வது பாவம்!
    எல்லாமே அருமை.

    ReplyDelete
  3. எல்லாமே அருமை! அதிலும் 3, 14, 18, 19 , 20

    ReplyDelete
  4. ஆஹா அனைத்தும் அருமை எப்படி இப்படி அசத்துகிறீர்கள்....நன்றி !.வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சிரிக்க முடிந்தது.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!