தளிர் ஹைக்கூ கவிதைகள்! பகுதி 25

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

பெற்றவளை காத்தது
நிழல்
மரம்!

பற்றவைத்தவனுக்கு
உருகுகிறது
மெழுகுவர்த்தி!

ரகசியபடையெடுப்பு!
முற்றுகையில் வீரர்கள்!
எறும்புகள்!

சத்தமிட்ட ஓலைகள்!
அடக்கிவைத்தது
காற்று!

கரையக் கரைய
வெளிப்படுகிறது அழுக்கு!
சோப்பு!

திறந்ததும்
விரிந்தது உலகம்!
விழி!

இளைப்பாறியது வெயில்
இறங்கி வந்தது
மழை!

இறைக்கப்பட்டன வாக்குறுதிகள்
பொறுக்கப்பட்டன் வாக்குகள்!
தேர்தல்!

பிஞ்சாக இருக்கையில்
இனிக்கிறது!
குழந்தை!

காற்றில் பிறந்து
காற்றால் இறக்கிறது
நீர்க்குமிழி.

இறங்கிவந்ததும்
உறங்கிப்போனது களைப்பு!
நிழல்!

ஒட்டி உறவாடி
விலைபேசியது
அலைபேசி!

வெப்பவீச்சை
விரட்டி அடித்தது
வேனில் காற்று!

பூக்களைக்
கொத்தியது காக்கை
வாசலில் கோலம்!

அடித்ததும் ரசித்தார்கள்
கோவில் திருவிழாவில்
மேளம்!

காவல் இருந்தும்
கவர்ந்தன கண்கள்!
இமை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அனைத்தும் அருமை...

    குழந்தை படம் பிரமாதம்...

    ReplyDelete
  2. கவிதியா அருமை.
    அந்த குழந்தை படம் கொஞ்சும் அழகு.

    ReplyDelete
  3. அட! இவ்வளவு ஹைக்கூவா... எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  4. haikoo அனைத்தும் அருமை ,ரசித்தேன் !

    ReplyDelete
  5. மெழுகுவர்த்தி ரசித்தேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!