ஹவ் ஈஸ் இட்!

    ஹவ் ஈஸ் இட்!


சென்னை கடற்கரையோரமாக அமைந்திருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய அறையில் காதில் இயர்போனுடன் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த பங்கஜ் வர்மாவை அந்த அழைப்பு எரிச்சல் ஊட்டியது.
  பங்கஜ்வர்மா! இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய ஹீரோ! 80களில் கபிலும் கவாஸ்கரும் ஊட்டி வளர்த்த கிரிக்கெட் சச்சினால் வளர்ந்து இப்போது பங்கஜ் மேல் தவழ்ந்து கொண்டிருந்தது. இந்திய அணியின் மிடில் ஆர்டர். வெகு விரைவில் சச்சினின் சாதனைகளை முறியடிப்பான் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன. அதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. வயது இன்றைய இளைஞிகளை சுண்டி இழுக்கக் கூடிய வயதுதான். சென்னையில் நடைபெறும் ஐ.சி.எல் தொடரில் பங்கேற்பதற்காக அந்த ஹோட்டலில் தங்கியிருந்தான். சென்னை அணியின் கேப்டன்!. இளமை அவனைக் கொண்டாடிக்கொண்டிருந்தது.
      காலிங்க் பெல் மீண்டும் தொடர்ச்சியாக ஒலிக்க ஒருவித எரிச்சலுடன் எஸ் கமிங்க்! என்று கதவைத் திறந்தான். வெளியே முன் வழுக்கையுடன் பல்லெல்லம் காவிக் கறை தெரிய சிறிது தொந்தியுடன் நின்றிருந்தான்.  “யார்?” பங்கஜ் கேட்கவும், “உள்ளே போய் பேசலாமா?” பங்கஜின் அனுமதிக்காக காத்திராமல் அவன் அறையினுள் நுழைந்து சோபாவில் அமரவும். “பாஸ்டர்ட்!” என்று மெல்லியதாய் முணுமுணுத்தபடி உள்ளே வந்த பங்கஜ் அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
    “ அலோ! யார் நீ? என் அனுமதியின்றி என் அறையினுள் நுழைந்து இப்படி அமர்ந்திருக்கிறாய்?”
    “ கூல்டவுன் கேப்டன் ஜி! களத்தில் மட்டும் அவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள்! இங்கு ஏன் இவ்வளவு டென்சன்?”
    “ முதலில் நீ யார்? என்று சொல்!”
   “தாதா! பாவேஷ்ஜியை கேள்விப்பட்டிருக்கிறாயா?”
  “ யார் அந்த பாவேஷ்?”
 “விளையாட்டில் வளர்ந்த அளவுக்கு உனக்கு பொது அறிவில் வளர்ச்சி இல்லை!”
          “இருந்துவிட்டு போகட்டும்! நீயே சொல்! யார் அவர்?”
 “என்னஜி! இப்படி ஒன்றும் தெரியாதவராய் இருக்கிறீர்கள்! பாவேஷ்ஜி! அவர் நிழல் உலகத்தின் தாதா! அவரைத்தெரியாதவர் யாரும் இல்லை! ஆனால் பாவம் உனக்குத்தான் தெரியவில்லை!”
  “ தாதாவைப் பற்றி எனக்கு என்ன தெரிய வேண்டும்! எனக்கு தெரிந்த ஒரே தாதா சவுரவ் கங்குலிதான்!”
    “ஹாஹா! உங்கள் ஜோக்கிற்கு நான் சிரித்துவிட்டேன்! சரி வந்த காரியம் பேசுவோமா?”
    “உன்னிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?”
 “ஆரம்பிக்கும் போதே இப்படி எடக்காய் பேசினால் எப்படி? இன்றைக்கு நீதான் இந்திய கிரிக்கெட்டின் தூண்! ஐ.சி.எல் தொடரில் சென்னை அணியின் தலைவன் நீ! நீ ஆடினால் வெற்றி தானாக வருகிறது! நீ அவுட்டானால் வெற்றியும் அவுட்! அதனால்தான் உன்னிடம் பேச வந்தேன்!”
 “ உன்னைப் போன்றவர்களுடன் எனக்கு என்ன பேச்சு இருக்கிறது! எனக்குத் தெரிந்தது கிரிக்கெட்! உங்கள் தொழிலும் என் தொழிலும் வேறு!”
   “ என்ன பாஸ்! நீ கிரிக்கெட்டில்தான் பெரிய ஆள்! தாதா என்றதும் அடிதடி ரவுடி என்று நினைத்துவிட்டாய் போலும்! எங்கள் தாதா ஓர் சூதாடி! உலகில் அனைத்து விசயங்களிலும் சூதாடி கோடிகளாய் குவிப்பவர்!”
   “ மரியாதையாக வெளியேப் போ! நான் இப்போதுதான் வளர்ந்துவருகிறேன்! உன் போன்றவர்களால் எனக்கு எப்போதுமே தொல்லைதான்!”
     “கேப்டன் ஜி! நான் சொல்வதைக் கேட்டுக்கொள்! இந்த தொடரில் இறுதி போட்டிக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள்! இறுதிப் போட்டியிலும் வெற்றிப் பெற்றுவிடுவீர்கள்! ஆனால் அப்படி வென்றால் எங்களுக்கு நஷ்டம் ஆகிவிடும்! அதனால் சொல்வதைக் கேளுங்கள் இறுதிப் போட்டியில் நீ விரைவில் அவுட் ஆக வேண்டும்!”
    “அதற்கு  வேறு ஆளைப்பார்!”
  “ ரொம்பவே டென்சன் ஆகாதீர்கள் பாஸ்! இந்த தொடரில் ஆடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் மிஞ்சிமிஞ்சிப் போனால் சில கோடிகள் கிடைக்குமா? அவுட்டானால் பல கோடிகள் கிடைக்கும்!”
  “ உன்னுடைய சில கோடிகளுக்கு நான் மயங்க மாட்டேன்! நான் விலைபோக விரும்பவில்லை!”
     “அலோ பாஸ்! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்! இப்போது பதினாலு கோடி கொடுத்து உன்னை அணி வாங்கி இருக்கிறது! ஆனால் எதுவரை? நீ இந்த சீசனில் ஆடினால் ஓக்கே!  சரி அப்படியே ஆடினாலும் உன்னைவிட ஒருவன் சிறப்பாக ஆடினால் அவன் பின் ஓடுவார்கள்! அன்று அவனுக்குத்தான் விலை அதிகம்! நாட்டுக்காக ஆடுபவர்கள் பணத்தைப் பார்க்க கூடாது! நீங்கள் கிளப் கிரிக்கெட் தானே ஆடுகிறீர்கள்? உன்னை இப்போது கொண்டாடுபவர்கள் ஒருநாள் அணியிலேயே சேர்க்க மாட்டார்கள்! அப்போது நீ நாக்கை வழிக்க வேண்டும்! அது ஏன்? நான் சொல்வதைக் கேட்டால் நீ எப்போதும் கோடிகளில் புரளலாம்!”
   “ நிறுத்து! நீ முதலில் இந்த இடத்தை விட்டுக் கிளம்பு! இல்லை போலீஸிற்கு போன் செய்ய வேண்டியிருக்கும்!”
     “அப்போது நீ ஒத்துக் கொள்ள மாட்டாய்?”
 “கட்டாயமாக இந்த ஈன காரியத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்!”
   “பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாயே!”
 “இருந்துவிட்டுப் போகிறேன்! உன் கருணைக்கு மிக்க நன்றி!”

“ வருகிறேன்!”
“ இனி இந்த பக்கம் வராதே! அதுவே எனக்கு நீ செய்யும் உதவி!”

அவன் வெளியே சென்றதும் கதவை இழுத்து சார்த்தினான் பங்கஜ்!
   உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து சில எண்களை வேகமாக அழுத்தினான். மறுமுனையில் ரிங் போய் கரகரத்தது குரல், அலோ!
    “நான் பங்கஜ்!” 
 “ நீ சொன்னது மாதிரியே ஒருவன் வந்தான்! பேரம் பேசினான் ஒத்துக் கொள்ளவில்லை!”
    “நல்லது செய்தாய்! வந்தவன் எப்படி இருந்தான்?”
 “நல்லவேளை தப்பினாய்! கொஞ்ச நாளாகவே உன் மீது சந்தேகம் இருக்கிறது! அதனால் அந்த டீவி சேனல் இப்படி உன்னை மறைமுகமாக மாட்டி வைக்க இருந்தது! அதிலும் ஒருவன் நம்ம ஆளாக இருக்க போக விவரம் சொன்னேன்! நீயும் நல்லமாதிரி நடந்துகொண்டு தப்பித்தாய்!’
   தேங்க்ஸ்! நல்லகாலம்! இல்லையென்றால்…
 “சரி! சரி! இந்த தேங்க்ஸ் நாளை மேட்ச்சில் இருக்க வேண்டும்!”
   “கண்டிப்பாக!”
மறுநாள் சேப்பாக்கம் அரங்கில் நிரம்பி வழிந்த கூட்டத்தின் ஆரவாரத்திற்கிடையே களம் புகுந்தான் பங்கஜ்!
பாவம் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள்! ஏமாறத் தயாராக காத்திருந்தார்கள்!.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments


  1. வணக்கம்!

    நாட்டின் நிலைமையைக் காட்டும் எழுத்துக்கள்!
    கூட்டும் துயரைக் குவித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. ஹௌ இஸ் இட்?! சூப்பர்!

    நாட்டு நிலவரம் புட்டு புட்டு!

    ReplyDelete
  3. கிரிக்கெட்டின் சூதாட்டத்தின் நிலமையை தோலுரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உண்மை உண்மை... இன்றைக்கு பணம் தான் முக்கியமே...!

    ReplyDelete
  5. என்னடா சுவாரசியமே இல்லை ... நல்லவனாக காண்பிக்க முயற்சிக்கிறீங்களோன்னு யோசிச்சேன்..கடைசியில் சுவாரசியம் புரிந்தது...

    ReplyDelete
  6. ஹவ் ஈஸ் இட்......

    வெரி குட்! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!