கூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்புவது எதற்கு? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.      தலைவர் ப்ளெக்ஸ் பேனரை பார்த்ததும் கடுப்பாயிட்டாரா ஏன்?
ஐந்து வருடத்திற்கு அப்புறம் தொகுதி எம்.எல்.ஏவை கண்டுபிடித்து கொடுத்த தேர்தலுக்கு நன்றின்னு யாரோ பேனர் வச்சிருக்காங்க!

2.      கூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்பிக்கிட்டிருந்தாரே இப்ப இருக்கிற கூட்டணி பிடிக்கலையா?
நீ வேற… சரக்குக்கு சைட் டிஷ் சரியில்லைங்கிறததான் அப்படி சொன்னாரு!

3.      நம்ம தலைவரை கட்சியை விட்டு நீக்கினதும் எரிமலையா சீறுவார்னு பார்த்தேன்…
    அப்புறம்?
  புஸ்வானமா பொசுங்கிட்டாரு!

4.      கேபிள் டீவி கனெக்‌ஷனை கட் பண்ணிட்டு அப்படி விழுந்து விழுந்து படிக்கிறீங்களே என்ன எக்ஸாம்?
பையனுக்கு எல்.கே.ஜி யில சீட் வாங்கறதுக்கு தான்!

5.      அந்த தியேட்டர்ல மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?
    டிக்கெட் கொடுக்கும் போது ஒரு புதுப்பட திருட்டு விசிடி கொடுக்கிறாங்களாம்! அதான்!


6.      என் மனைவி நான் வாயால சொல்றதுக்கு முன்னாடி கையாலேயே செஞ்சிடுவா!
பலே! பலே!
அடப் போப்பா நான் அடிவிழும்னுதான் சொல்லுவேன்! ஆனா அவ அடிச்சே காட்டிடுவா!


7.      அந்த தலைவர் ஏன் எல்லா மேடையிலேயும் ஹெல்மெட்டோட பேசுறார்?
முன்னெல்லாம் அழுகின முட்டை வீசுனாங்க! இப்ப கல் எறியறாங்களாம்!

8.      தலைவருக்கு விவரமே பத்தலை?
ஏன்?
எல்லா தொகுதியிலும் நோட்டோ எப்படி போட்டியிடலாம்னு கேட்டு கேஸ் போட்டிருக்காரே?

9.      அந்த ஆஸ்பிட்டல் ரொம்ப மோசம்?
எப்படி?
சொத்து டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டுதான் ட்ரீட்மெண்டே ஆரம்பிப்பாங்களாம்!

10.  அரசர் மேல் ராணியாருக்கு என்ன கோபம்?
சேடிப் பெண்களிடம் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாராம்!


11.  தலைவர் எதுக்கு திடீர்னு 50 கிலோ மிளகாய் ஆர்டர் கொடுத்திருக்கார்?
பிரச்சாரத்துல காரம் ரொம்ப கம்மியா இருக்குன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!

12.  அந்த ஓட்டல்ல காசில்லாம சாப்பிட்டிட்டு மாவாட்டி கஷ்டப்பட வேண்டாம்!
அடடே!
முன்கூட்டியே மாவாட்டிக் கொடுத்து சாப்பிடலாம்னு சொல்ல வந்தேன்!

13.  புலவர்கள் ஏன் மன்னர் மேல் கடுப்பாய் இருக்கிறார்கள்?
பொற்கிழி தருகிறேன் பேர்வழி என்று நூறு ரூபாய்க்கு செல்லாக் காசுகளை துணியில் கட்டிக் கொடுத்துவிட்டாராம்!

14.  குற்றப்பத்திரிக்கையை வாங்கினதும் தலைவர் சொன்னதை கேட்டு ஜட்ஜே சிரிச்சுட்டார்!
அப்படி என்ன சொன்னார்?
ரொம்ப ஏழ்மையான பேப்பர் போல விளம்பரமே இல்லையே! நம்ம கட்சி விளம்பரம் நாலு பக்கத்துக்கு கொடுத்திரலாமான்னு கேட்டார்!

15.  மன்னர் இப்போதெல்லாம்எதற்கு அடிக்கடி நகர்வலம் வருகிறார்?
அந்தப்புரத்தில் ராணிகள்  நச்சரிப்பு தாங்க முடியவில்லையாம்!


16.  வர வர ராப்பிச்சை யோட வாய்க்கொழுப்பு அதிகமா போயிருச்சு!
ஏன்?
இன்னிக்கு சமையல் நல்லா இல்லையே ஐயா ஊரில இல்லையான்னு கேக்கறான்!

17.  அந்த டாக்டர் எதையும் ஸ்கேன் பண்ணிப் பார்க்காம முடிவெடுக்க மாட்டார்!
அதுக்காக என் பர்ஸ்ல பணம் இருக்கான்னு ஸ்கேன் பண்ணி பார்க்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லை!

18.  நம்ம தலைவருக்கு பிரதமர் ஆசை வந்திருச்சுன்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
எதைக்கேட்டாலும் மவுனமாவே இருக்காரே!

19.  கடற்கரையிலதான் கூட்டம் போடுவேன்னு தலைவர் எதுக்கு அடம்பிடிக்கிறார்!
அங்கதான் காசு செலவில்லாம கூட்டம் கூடுமே!


20.  மன்னர் ஏன் இப்போதெல்லாம் உடைவாள் அணிந்து வருவது இல்லை!
உஷ்! சத்தமாய் பேசாதே! சமையல் கட்டில் காய்கறி நறுக்க அருவாள்மணையில்லை என்று ராணி எடுத்துக் கொண்டுவிட்டாராம்!

21.கூட்டணி உடன்பாடு ஏற்பட்டும் தலைவர் ஏன் முகத்தை திருப்பிக்கிட்டு உக்காந்துட்டு இருந்தார்?
  அந்த கட்சி தலைவர் முகத்தில முழிக்கமாட்டேன்னு ஏற்கனவே சொல்லியிருந்தாராம்!

அனைத்தும் சொந்த சரக்குங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

















 














Comments

  1. டைம்லி விட்டுகள் அருமை !சொந்த சரக்குங்க என்று சொன்னது அருமையிலும் அருமை !

    ReplyDelete
  2. முதல் ஜோக்கே அதிரடி ஆரம்பம்... ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!