பாக்யா இந்த வார இதழில் எனது ஹைக்கூ!

பாக்யா இந்த வார இதழில் எனது ஹைக்கூ!

அன்பார்ந்த நண்பர்களே! ஓர் மகிழ்ச்சியான செய்தி! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏறக்குறைய 20 வருடங்கள் கழித்து எனது படைப்பு ஒன்று வார இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.
    கடந்த 1995ம் வருடம் கோகுலம் சிறுவர் இதழில் எனது இரண்டு சிறுகதைகள் பிரசுரம் ஆகின. அதற்கப்புறம் குமுதம் இதழில் சுஜாதா கேள்வி பதிலில் எனது கேள்வி பிரசுரம் ஆனது. குமுதம் பக்தி, மாலை மலரில் எனது ஊர் கோவில் தல வரலாறு எழுதி அனுப்பி பிரசுரம் ஆனது.
   
 பாக்யா இதழில் வெளியான எனது ஹைக்கூ!


    கோகுலம் இதழில் முதல் படைப்பு வெளிவந்தவுடன் அந்த இதழுக்கு நிறைய கதைகள் எழுதி அனுப்பினேன் ஒன்று கூட பிரசுரம் ஆகவில்லை! அதனால் வெறுத்துப் போய் நிறுத்திவிட்டேன்.  அதன் பின் பல்வேறு சிக்கல்கள். எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
   2011ல் வலைப்பூ அறிமுகம் ஆனது. வலையில் எழுதி வந்தேன். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனாலும் பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் எதுவும் அனுப்பவில்லை. முகநூலில் திடீரென்று நண்பர் எஸ்.எஸ் பூங்கதிர் ஒரு நாள் தொடர்பு கொண்டு மக்கள் மனசு பகுதிக்கு கருத்து சொல்லுமாறு கேட்டிருந்தார். கருத்து அனுப்பினேன். பிரசுரமானது.
   தொடர்ந்து மூன்று இதழ்களாக பாக்யா மக்கள் மனசில் எனது கருத்து பிரசுரமானது. அவர் உங்களது கதை கவிதை ஏதாவது இருந்தாலும் அனுப்புங்கள் என்றார்.
 பாக்யா வார இதழில் வலையில் சிக்கியவை பகுதியில் என்னுடைய ஜோக்!

     சில ஹைக்கூ கவிதைகளை மற்றும் ஜோக் அனுப்பி இருந்தேன். இந்த வார பாக்யா இதழில் எனது  ஹைக்கூ ஒன்று பிரசுரம் ஆகியுள்ளது.
  மூன்றே வரிதான்! ஆனாலும் ஒரு வார இதழில் எனது எழுத்து பிரசுரமாகி பலநூறு பேர்களை சென்றடைவது என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்து பாக்யாவில் வெளிவந்ததும் முகநூல் மூலமாக இதை அறிவித்த நண்பர் எஸ்.எஸ் பூங்கதிர் அவர்களுக்கு மிக்க நன்றி.
    இந்த சிறு ஊக்கம் என்னை தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு எழுத தூண்டி உள்ளது. என் முயற்சி இனி தொடரும். வலைப்பூவை தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் அனைத்து அன்பர்களுக்கும் எனது இந்த வெற்றியை அர்ப்பணிக்கின்றேன்! மிக்க நன்றி!

Comments

  1. வாழ்த்துக்கள் சுரேஷ்.
    மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், மேலும் படைப்புகள் பத்திரிகையில் வெளி வருவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அந்த கவிதை நச்சென்று இருக்கிறது.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தளிர்.. தொடர்ந்து உங்கள் படைப்புகள் பல புத்தகங்களில் வெளிவர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சகோதரர். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் வலைப்பக்கத்தில் வெற்றி நடை போட வாழ்த்துகள். மூன்று வரி என்றாலும் கவிதை பளிச்சென்று சொல்லிச் செல்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சுரேஷ் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. பாக்யாவில் இடம் பெற்று விட்டீர்கள் ,நம்ம சேட்டைக்காரன் ரேஞ்சுக்கு பாக்கியராஜ் நெஞ்சிலும் இடம் பெற்று அசத்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்..
    மேலும் வளர நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  8. பாக்யா வார இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்... மேலும் பல படைப்புகள் வெளிவர வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்! தங்கள் படைப்புகள் மேலும் வெளிவர எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. விடாது எழுதிக் கொண்டிருங்கள் , வெற்றி ஒருநாள் வராமல் போகாது !

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சுரேஷ்..... தொடர்ந்து பல படைப்புகள் பத்திரிக்கைகள்ல் வர வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சுரேஷ்! ஒரு வார இதழில் நமது படைப்புகள் வருவது நிச்சயம் பெருமைக்குரியதுதான். மேலும் மேலும் எழுத்துலகில் சாதிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!