கூடற் கலாப மயில்! ஆன்மீகம் அறிவோம்! பகுதி 1


ஆன்மிகம் அறிவோம்!

1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் தெரியுமா?
     மருள் நீக்கியார்

2.சுப்ரபாதம் என்பதன் பொருள் தெரியுமா?
    நல்ல காலை வேளை

3.பிரகலாதனுக்கு தாயின் கருவிலேயே உபதேசித்தவர்
         நாரதர்.

4.கூடற்கலாப மயில் என அழைக்கப்படும் அம்பிகை யார்?
   
         மதுரை மீனாட்சி அம்மன்.
5. ஆழ்வார்களில் அமர்ந்தபடி காட்சி அளிப்பவர்.
      நம்மாழ்வார்.

6.விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் தந்தவர்....
    பிரம்மா

7. தசரதன் என்பதன் பொருள் தெரியுமா?

      பத்து திசைகளிலும் தேர் செலுத்துபவன்.

8. ஆதிசேஷனின் அம்சமாக பிறந்த ராமனின் சகோதரர் யார்?
          லட்சுமணன்.

9. சீதையின் இன்னொரு பெயர் என்ன தெரியுமா?
    வைதேகி.

10. சிவ வடிவங்களில் வசீகர மூர்த்தியாக  திகழ்பவர் யார்?
           பிச்சாடனர்

11. ஸ்ரீ ருத்ரம்  ஜெபித்து சிவனருள் பெற்றவர்
                ருத்ரபசுபதி நாயனார்.

12. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் எது?
            திருத்தொண்டர்புராணம்.

13.கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று கூறியவர் யார்?
       வள்ளலார்.

14.தாமரையின் பெயரால் குறிக்கப்படும் சங்கரரின் சீடர்
          பத்ம பாதர்.

15. சென்னை காளிகாம்பாளை வழிபட்ட வட இந்திய மன்னர்
           சத்ரபதி சிவாஜி.

இதையும் தெரிஞ்சிக்கோங்க!

      குந்தி தன்னுடைய மகன் கர்ணனை பிறந்தவுடனேயே ஆற்றில் விட்டதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக் கொள்ள என்ன செய்வது என்று சிந்தித்தாள். முடிவில் தவ்டிய முனிவரிடம் சென்று பிராயச்சித்தம் கேட்டாள். மாசிமக நாளில் சிவனை வழிபட்டு ஏழு கடலில் நீராடினால் பாவம் நிவர்த்தியாகும் என்று அருள் செய்தார் முனிவர்.
       தீர்த்த யாத்திரை புறப்பட்ட குந்தி மாசிமகத்தன்று நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட்டு அங்குள்ள குளத்தில் நீராடினாள். சிவனருளால் ஏழு கடல் தீர்த்தமும் குளத்தில் சங்கமித்தன. எனவே அந்த குளத்திற்கு  ‘சப்தசாகரம்’ என பெயர் உண்டானது. 12 படித்துறைகளுடன் இக்குளம் உள்ளது. ஆரோக்கியம், ஐஸ்வர்யம் வேண்டுவோர் இந்த குளத்தை 12 முறை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது. 
      கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலான இங்குள்ள சிவலிங்கம் ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும்.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த கோவில் உள்ளது.

நவகிரக  துதி:

   ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயசா:
   குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நம:

தினம் தோறும் காலையில் இந்து துதியை 9 முறை சொல்லிவர நவகிரகங்களின் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும். நன்றி!.

Comments

  1. அருமையான தகவல்கள் இதுவரை அறியாத சிலவற்றையும் உங்களால்
    இன்று அறிந்து கொண்டோம் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. 5 km தொலைவில் உள்ள கோவிலுக்கு ஒருமுறை சென்று வர வேண்டும்... தகவலுக்கு நன்றி - அறியாத சில பெயர்த் தகவலுக்கும்...

    ReplyDelete
  3. இதுவரை அறியாத பல
    ஆன்மீக விஷயங்களை இந்தப் பதிவின் மூலம்
    அறிந்து கொண்டேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அபிமன்யு 15 வயதில் மரணமடைவத்தின் பின்கதை சமீபத்தில்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். அதுபோல நிறைய சுவாரஸ்ய விவரங்கள். சீதைக்கு ஜானகி, மைதிலி என்றெல்லாமும் பெயர்கள் உண்டே

    ReplyDelete
  5. இனிய பதிவு!..
    சர்வதேச மகளிர் தினத்தில் கூடற்கலாப மயில் - எல்லா நன்மைகளையும் தந்து அருள் புரிவாளாக!..

    ReplyDelete
  6. தமிழ் அறிவோடு, இப்போது ஆன்மிக அறிவுமா, ரொம்ப நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள். தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

    இதில் அடியேனுக்கு ஒரு சின்ன சந்தேகம்

    "//சீதையின் இன்னொரு பெயர் என்ன தெரியுமா?
    வைதேகி.//" - ஜானகியும் இன்னொரு பெயர் தானே?

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள்......

    தொடரட்டும் ஆன்மீகம் அறிவோம்.....

    ReplyDelete
  8. கூடற்கலாப மயில் என்பதில், கலாபம் என்பதும் மயில்தான். நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!