வழிப்போக்கனுக்கு உதவிய விக்கிரமாதித்தன்! பாப்பா மலர்!

வழிப்போக்கனுக்கு உதவிய விக்கிரமாதித்தன்! பாப்பா மலர்!


ஒரு சமயம் விக்கிரமாதித்த மஹாராஜா அயல் நாடுகள் எல்லாம் பயணம் செய்துவரக் கிளம்பினார். பல்வேறு நகரங்களையும் புனித ஸ்தலங்களையும் கண்டுகளித்துவிட்டு, மலைகள், நதிகள் பல கடந்து ஒரு நகரத்தினை அடைந்தார் விக்கிரமாதித்தன்.
  அந்த நகரத்தில் ஆகாயம் தொடும் அளவிற்கு உயர்ந்த மாளிகைகளும் கோபுரங்கள் உடைய கோவில்களும் நிறைந்திருந்தன. விக்கிரமாதித்தன் நகரின் வெளியே இருந்த ஒரு விஷ்ணு கோவிலின் குளத்தில் இறங்கி நீராடிவிட்டு பிறகு கோவிலுக்குள் சென்றார்.இறைவனை வணங்கினார்.
  “ பிரபோ! உன்னைப் போற்றுவதற்கு மௌனமாக இருப்பதொன்றே சிறந்தவழி என்பதை அறிவேன்; வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட விஷ்ணுவை பிரம்மாவினால் கூட சரியாக அறிய முடியாது. உன்னையன்றி வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை. நான் உன்னை எப்போதும் பூஜித்து வர அருள் புரியவேண்டும். கைகளாலோ,கால்களாலோ, செயல்,வாக்கு உடல் ஆகியவற்றால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட என்னுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடு இறைவா! கருணைக்கடலே என்னை வாழ்த்தி அருளுவாய்!” இவ்வாறு இறைவனை வணங்கிய விக்கிரமாதித்தன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து மண்டபத்தில் அமர்ந்தார்.
   அப்போது அந்த வழியே வழிப்போக்கன் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம், ஐயா, தாங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார் விக்கிரமாதித்தன்.
   ஐயா! நானோர் தேசாந்திரி! உலகம் முழுவதும் சுற்றி வருபவன். நீங்கள் யார்? உங்களை இதற்கு முன் பார்த்தது இல்லையே? என்று அரசனைக் கேட்டார் வழிப்போக்கன்.
    “நானும் உன்னைப்போன்று ஓர் வழிப்போக்கன் தான்! என்றார் விக்கிரமாதித்தன்.
   இதை அந்த வழிப்போக்கன் நம்பவில்லை! விக்கிரமாதித்தனை கூர்ந்து நோக்கிய அவன், தங்களைப் பார்த்தால் சர்வ லட்சணங்களும் பொருந்திய அரசகுமாரன் போலத் தெரிகிறது! நீங்கள் ஓர் அரசனாகத்தான் இருக்க வேண்டும். தலையில் எழுதி வைத்த எழுத்தை யாராலும் மாற்றமுடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன காரணமோ தாங்கள் இந்த வேடத்தில் இருப்பதற்கு? என்றான்.
    விக்கிரமாதித்தன், ஆம்! ஐயா! நீங்கள் சொல்வது உண்மைதான்! நான் உஜ்ஜைனி தேசத்து அரசன் விக்கிரமாதித்தன். “விவேகமுள்ள உபதேசம் சிறு குழந்தையிடம் இருந்து வந்தாலும் ஏற்க வேண்டும்.கெடுதலான யோசனைகள் நல்ல வயிற்றில் உதித்தவனிடம் இருந்து வந்தாலும் நிராகரிக்க வேண்டும் என்று நீதிநெறி சொல்லுகிறது. நீங்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறீர்களே என்ன காரணம்? என்று கேட்டார்.
    “என்னுடைய வருத்தத்தை சொல்வதால் என்ன பிரயோசனம் ஏற்படப் போகிறது? நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்!” என்று அலுத்துக் கொண்டார் வழிப்போக்கன்.
   “ உங்கள் வருத்தம் என்னவென்று சொன்னால் என்னாலான உதவியை செய்கிறேன்!” என்றார் விக்கிரமன்.
   “அரசே! பக்கத்தில் நீலம் என்றொரு மலை இருக்கிறது. அங்கு காமாட்சி தேவி வசிக்கிறாள். கோவிலின் அருகே பூமிக்குள் செல்லும் சுரங்கம் ஒன்று இருக்கிறது. அதன் வாயில் மூடப்பட்டு உள்ளது. காமாட்சி மந்திரத்தை ஜெபித்தால் அச்சுரங்கத்தின் வாயில் திறக்கும். அதனுள் எட்டுவித உலோகங்களை தங்கமாக்கும் பாதரசமுள்ள பாத்திரம் இருக்கிறது. பன்னிரண்டு வருஷங்களாக நான் தேவியை பிரார்த்தித்து வருகிறேன்! சுரங்க வாசல் திறக்கவில்லை.” என்றான் வழிப்போக்கன்.

   “ ஐயா! நான் உங்களுடன் வந்து காமாட்சி மந்திரம் உச்சரித்து சுரங்கத்தை திறந்து உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்!” என்றார் விக்கிரமன்.
  இருவரும் புறப்பட்டு நீலமலை சென்று அங்கிருந்த காமாட்சி தேவியின் சன்னதியை அடைந்தனர். இருட்டிவிட்டதால் மண்டபத்தில் படுத்து உறங்கினர்.
   விக்கிரமாதித்தன் கனவில் தேவி தோன்றி, விக்கிரமா! நீ ஏன் இங்கு வந்தாய்? இந்த சுரங்கம் திறக்க வேண்டுமானால் 32 லட்சணங்கள் பொருந்திய ஒரு ராஜனின் இரத்தத்தை கதவில் தெளிக்க வேண்டும்!” என்று சொல்லி மறைந்தாள்.
   பொழுது விடிந்தது! விக்கிரமன் குளித்து முடித்து தேவியை துதித்துவிட்டு சுரங்கத்தின் அருகே சென்றான். காமாட்சி மந்திரத்தை உச்சரித்து,  “தேவி! முப்பத்திரண்டு லட்சணங்களும் பொருந்திய ஒருவனின் இரத்தத்தை நீ விரும்பும் பட்சத்தில் இதோ என்னுடைய இரத்தத்தை பெற்றுக்கொள்!”என்று தன் கழுத்தை துண்டித்துக் கொள்ள வாளை ஓங்கினான்.
   அப்போது, தேவி பிரத்யட்சமாகி,விக்கிரமாதித்தனை தடுத்து, மன்னா! உன் செய்கை என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது! உனக்கு விருப்பமானதை கேள்! தருகிறேன்!” என்றாள்.
   “தேவி! எனக்கு உன் அருள் கிடைத்தால் போதும்! இதோ இந்த சுரங்கத்தில் இருக்கும் பாதரசமுள்ள பாத்திரம் இந்த வழிப்போக்கருக்குத் தேவைப்படுகிறது! பன்னிரண்டு வருஷ காலமாக இதற்காக உன்னைத் துதித்து வருகிறார்! அவர் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக! அதுவே என் விருப்பம்!” என்றான் விக்கிரமாதித்தன்.
    “மன்னா! சுயநலமற்ற உன் கருணை மனம் போற்றத் தக்கது! முன் பின் தெரியாத ஒரு வழிப்போக்கருக்காக உன் உயிரையும் கொடுக்கத் துணிந்தாய்! நீ நீடுழி வாழ்வாய்!  உன் விருப்பப்படியே ஆகட்டும்! என்ற காமாட்சி தேவி பாதரச பாத்திரத்தை எடுத்து வழிப்போக்கனிடம் கொடுத்து மறைந்தாள்.
  வழிப்போக்கனும் விக்கிரமாதித்தனின் கருணை மனம் கண்டு நெகிழ்ந்து அவனை பலவாறு புகழ்ந்து விடைபெற்றான். விக்கிரமாதித்தனும் நாடு திரும்பினான்.
   பிறருக்கு உதவும் தயாள குணம் படைத்த விக்கிரமன் போன்ற மன்னர்கள் அந்த காலத்தே வசித்தார்கள் என்பது பெருமைக்குரியதாய் உள்ளதல்லவா? நாமும் நம்மாலான உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். நம்மை ஆள்பவர்களையும் நல்லவர்களாய் தேர்ந்தெடுத்தல் வேண்டுமல்லவா?

 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
  

  

Comments

  1. நல்ல கதை. இவரைப் போல அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள் மிகக் குறைவே...

    ReplyDelete
  2. அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள் குறைந்து கொண்டெ வரும் காலத்தில், அருமையான கதை நண்பரே

    ReplyDelete
  3. மன்னா! சுயநலமற்ற உன் கருணை மனம் போற்றத் தக்கது!//

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மன்னன் விக்ரமாதித்தன்.
    பாப்பாமலரில் வந்த கதை அனைவருக்கும் நலம் பயக்கும் நல்லவைகளை கடைபிடித்தால்.
    பகிர்வுக்கு நன்றி.
    அம்புலிமாமா வாங்கியவுடன் படித்து முடிப்போம் முன்பு. படம் சிதரலேகா மிக அருமையாக வரைவார்.

    ReplyDelete
  4. நல்ல கதை...ஆனால் அந்த வழிப்போக்கன் நல்ல விதமாக அந்தப் பாதரசத்தைப் பயன்படுத்தினானா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது :)

    ReplyDelete
  5. அன்பு நண்பரே தாங்கள் எப்பொழுது கொச்சின் வருவதாக இருந்தால் தகவல் தாருங்கள்.தங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மனமுவந்து செய்து தருகிறேன்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்
    எனது மெயில்:buttersnr@gmail.com
    Mobaile:09037058590

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தேவைப்படின் தொடர்பு கொள்கிறேன்! நன்றி!

      Delete
  6. நல்லதொரு கதை நண்பரே! //நாமும் நம்மாலான உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். நம்மை ஆள்பவர்களையும் நல்லவர்களாய் தேர்ந்தெடுத்தல் வேண்டுமல்லவா?//

    பிறருக்கு உதவுவதில் இருக்கும் இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை எனலாம்! அதுவும் எதிர்பாராத உதவி!

    ReplyDelete
  7. நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!