புகைப்பட ஹைக்கூ 58

புகைப்பட ஹைக்கூ 58

அனைவருக்கும் கல்வி!
ஆனால் எங்களுக்கு
குப்பையிலே வேள்வி!

படிப்புக்கு குட்பை!
பசிக்கு பொறுக்குகிறோம்
குப்பை!

குப்பைகளோடு
குப்பைகளாய்
குழந்தைகள்!

உங்களுக்கு குப்பை!
எங்களுக்கு
வாழ்க்கை!

குப்பையில்தேடுகிறோம்
குதுகலமான
வாழ்க்கை!

இரைந்த குப்பைகளில்
மறைந்து போனது
மழலைமனசு!

தகரக்குவியலில்
அகரம் பயில்கிறோம்!
கிடைக்குமா சிகரம்!

நாங்கள் அழுக்கானதும்
சுத்தமானது
வீதி!

திருத்தி எழுத
பழகுகிறோம்
திசைதெரியா வாழ்க்கை!

திருத்தப்படாத
தெருவோர
எழுத்துக்கள்!

குருத்தில்
கருகும்
சருகுகள்!

உறுத்தினாலும்
   ஒறுக்கவில்லை
   வாழ்க்கை!

   கலைக்கப்பட்டது
   குப்பையோடு
   குழந்தைகளின் வாழ்க்கை!

   அழுக்குக் குவியலில்
   அமிழ்ந்தது
   குழந்தைகள் கனவு!

   கிளற கிளற
   வளருகிறது
   குப்பை!

   குப்பையாய் போனது
   குழந்தைகளின்
   கல்வி!

   எழுதாமலே
   அழிக்கப்பட்டது
   ஏழைகளின் எழுத்து!

   தங்களின் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   




Comments

  1. /// எழுதாமலே
    அழிக்கப்பட்டது
    ஏழைகளின் எழுத்து!///
    என்ன பாவம் செய்தன இக்குழந்தைகள்?

    ReplyDelete
  2. படத்தினைப் பார்க்கவும் பதிவினை நோக்கவும்
    உடைகிறது உள்ளம் உகுக்கிறது கண்கள்...

    என்று தீரும் இந்த ஏழ்மையின் ஓலம்..

    மனதில் அழுந்தும் பதிப்பு சகோ!

    ReplyDelete
  3. காட்சி கவிதை தந்தது உங்களுக்கு
    கவிதை காட்சியாய் விரிந்தது எங்களுக்குள்
    மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்



    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
    பயணம் போறேண்டா .
    வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
    படிச்சிட்டு வாரேண்டா
    என்று பட்டுகோட்டையாரின் வரிகள் தான் நினைவுக்கு வருது அருமையான பதிவு

    ReplyDelete
  6. சகோதரருக்கு வணக்கம்..
    நெஞ்சை உருக்கிய வரிகள். என்ன பாவம் செய்தன அக்குழந்தைகள். அவ்ர்களின் வாழ்க்கை மாறி காட்சிகள் மாற வேண்டுமென்பதே எனது விருப்பமும் இறைவேண்டலும். கவிதை நன்று. தொடர வாழ்த்துக்கள் சகோதரரே.. நன்றி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!