’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’னு மன்னர் ஏன் சொல்லக்கூடாது? ஜோக்ஸ்!

  ஜோக்ஸ்!

  1. தலைவா… உங்களை பத்தி ‘பேஸ்புக்ல’ கண்டபடி திட்டி இருக்காங்களாம்!
உடனே அந்த புக் ஸ்டாலுக்கு முன்னாடி நாளைக்கு நாம போராட்டம் பண்ணுவோம்!
                          கார்த்திக் அமர்த்யா.

  1. அந்த வித்வான் எந்த தைரியத்துல தினமும் ஒரு கச்சேரி பண்றாரு?
கேக்கறதுக்கு யாரும் இல்லைங்கிற தைரியத்துலதான்!
                           பா. ஜெயக்குமார்.

 3.எங்க ஸ்டாரோட படம் இன்னிக்கு டீவியில ரிலீஸ் ஆகப்போவுது!
அதுக்காக வீட்டுக்கு முன்னாடி கட் அவுட் வெக்கணுமாக்கும்!
                                 சிக்ஸ்முகம்.

 4.டீ சுடுதண்ணி மாதிரி இருக்கு!
 அப்படியா! இந்தாங்க ஒரு டம்ளர் சுடுதண்ணி இதுல நுரை வரவைங்க பாக்கலாம்!
                    சென்னிமலை சி.பி.செந்தில்குமார்.

 5.அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு பேபியை வன்மையாக கண்டிக்கிறேன்!
  தலைவரே! அது லாபி!
                       கோவை நா.கி பிரசாத்

 6.சீரியல்ல அப்பா ரோல்ல நடிக்க சான்ஸ் கேக்கறீங்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
நான் நாலு குழந்தைக்கு அப்பா சார்!
                         வி. சாரதி டேச்சு.

 7. தலைவருக்கு சினிமா நாலட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?
கும்கிங்கிறது நடிகர் ராம்கியோட தம்பியான்னு கேட்கிறாரே!
                          சி.பி.செந்தில்குமார்

8.தலைவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில என்ன கேட்டார் தெரியுமா?
   என்னது?
தமிழ்நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு?
                            பி.பாலாஜி கணேஷ்

9.தளபதி! நல்ல வேளை எதிரி நாட்டு மன்னன் என்னை சவுக்கால் அடித்ததை யாரும் பார்க்கவில்லை!
 மன்னா! அதை வீடியோ எடுத்து அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ஷேரும் லைக்கும் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது!
                     சொக்கம்பட்டி தேவதாசன்.

10. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று ஏன் மன்னா கூறினீர்கள்?
 அதற்கு என்ன அமைச்சரே இப்போது?
அந்தப்புரத்தில் ஆண்கள் கூட்டம் அலைமோதுகிறது பாருங்கள்!
                         நா,கி பிரசாத்

11. எதிரி மன்னன் சரியான கோழை மந்திரியாரே!
   எப்படி மன்னா?
ஜெயிக்க முடியாது என்று தெரிந்துதானே பயந்து ஓடுகிறேன் அப்படி இருந்தும் என் முதுகில் அடிக்கிறானே!
                         அதிரை புகாரி.

12.        படை வீரர்களே புறப்பட தயாராகுங்கள்!
            மன்னா! நமது படையில் அப்படி யாரும் இல்லையே!
                         நா.கி.பிரசாத்.

13.        நல்லவருமான, வல்லவருமான சிறந்தவருமான, பெருமை மிக்கவருமான அருமை மிக்கவருமான…
       தலைவரு ‘வருமான’ விரும்பிங்கறதை அவன் தெளிவா புரிஞ்சி வச்சிருக்கான்யா!
                          வீ. விஷ்ணுகுமார்.

14.        தலைவர் திடீர்னு ஏன் தோட்டக்காரனை கூப்பிட்டு வெச்சு சத்தம் போடுறாரு?
தோட்டத்துக்கு செம்மன் லாரி வர்றப்பல்லாம் ‘சம்மன் வந்திருக்கு… சம்மன் வந்திருக்கு’ன்னு எகனைமொகனையா சொல்லியிருக்கான்!
                  பெ. கருணைவள்ளல்

15.        என்னை எதிர்த்த யாரும் தோற்றதில்லை!
மன்னா! இப்படியெல்லாமா பெருமைப்பட்டுக்கொள்வது!
                வீ. விஷ்ணுகுமார்
.
16.        என்ன டாக்டர் இப்படி அரைகுறையாத் தையல் போடுறீங்க?
  யோவ் பேசாமப் படுய்யா! சரியா எட்டு மணிக்கு கரண்ட் போயிரும்!
17.                                   அ.ரியாஸ்.

 தலைவரோட லொல்லு தாங்க முடியலை!
   ஏன் என்னாச்சு?
மூணு தடவை அமைச்சரா இருந்ததால விசிட்டிங் கார்டுல xxx மினிஸ்டர்னு போட்டிருக்கார்!
                          அ.ரியாஸ்

 18 தலைவர் சொன்னதை கேட்டு கோர்ட்ல ஜட்ஜே சிரிச்சுட்டாரு!
  அப்படி என்ன சொன்னாரு?
100 கோடி சொத்து எப்படி வந்ததுன்னு கேட்டப்ப ‘குருவி’ மாதிரி சேர்த்தேன்னாரு!
                           தஞ்சை அனார்கலி

 19.டாக்டர்! ஆபரேஷனுக்கு பிறகு நான் உங்க கூட பேசிட்டு இருப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை!
   சித்ர குப்தா! இந்த மானிடன் என்ன சொல்கிறான்!
                           கி.ரவிக்குமார்.

 20.மன்னா! உமது பிறந்த நாளுக்கு எதிரி மன்னன் நம் நாட்டு எல்லையில் ஃபிளக்ஸ் வைத்துள்ளான்!
   என்ன வென்று?
  ‘வாழ்த்த மனசில்லை… வீழ்த்த வருகிறோம்’ என்றுதான்!
                         ஆர். ரகோத்தமன்.

 21.சி.பி.ஐ ஆபிசர் என்கிட்ட சிகரெட் கேக்கறார்யா!
ஐயோ! தலைவரே! உங்களுக்கு தெரிஞ்ச சீக்ரெட்டை கேக்கறாங்க!
                        சிக்ஸ் முகம்.
          
    22. ஆபரேஷன் செஞ்சிகிட்ட உங்க கணவருக்கு கொஞ்ச நாள்          ஷாக் நியுஸ் எதுவும் சொல்லாதீங்க
   கரண்ட் வந்துருச்சுன்னு கூடவா டாக்டர்!
                            என். உஷாதேவி.

   (பழைய ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து தொகுத்தது)

டிஸ்கி}  எட்டுமணிநேர கடுமையான மின்வெட்டினால் இணையம் வருவது கொஞ்சம் தடைபட்டுள்ளது. அதனால் சக நண்பர்களின் பதிவுகளை படிக்க நேரம் இல்லை! நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 






Comments

  1. அந்த வித்வான் எந்த தைரியத்துல தினமும் ஒரு கச்சேரி பண்றாரு?
    கேக்கறதுக்கு யாரும் இல்லைங்கிற தைரியத்துலதான்!

    :))) அனைத்துமே முத்து முத்தான நகைச்சுவைகள் எழுதியவர்களுக்கும்
    பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  2. அனைத்தும் நல்ல துணுக்குகள்...

    இங்கும் 10 hours Powercut...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே,,
    அனைத்தும் மனதுக்குள் மவுனமாய் புகுந்து கிச்சு கிச்சு மூட்டிச் செல்கிறது. அருமை சகோ. வாழ்த்துக்கள் தொடருங்கள்..

    ReplyDelete
  4. எல்லோரும் இந்நாட்டு மன்னர்... உங்களைப் போன்றே என்னையும் அதிகம் ரசிக்க வைத்தது!
    மதுரையிலும் பத்து மணி நேர மின் வெட்டு தவிக்க வைக்கிறது !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!