அந்த தொப்புள் என்னுது இல்லே! கதம்ப சோறு பகுதி 8

கதம்ப சோறு  பகுதி 8

தெலுங்கானா நாடகங்கள்!

    ஒரு மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டியும் பிரிக்க கூடாது என்று ஒரு கோஷ்டியும் அடித்துக் கொள்கின்றன. நன்றாக இருந்த ஒன்றை கூறு போடுவதாக உறுதி அளித்துவிட்டு இப்போது செய்வது அறியாமல் விழிபிதுங்கி நிற்கிறது காங்கிரஸ். மிகப்பெரிய மாநிலங்களை நிர்வாக வசதிகளுக்காக பிரிப்பது என்றால் சரி! ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக அவசர அவசரமாக அறிவித்துவிட்டு இப்போது ஆளாளுக்கு உண்ணாவிரதம் என்று கிளம்பிவிட்டார்கள். பிரிக்கும் வரை சும்மா இருந்த ஜெகன் மோகனும், சந்திரபாபு நாயுடும் உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்கள். ஆந்திராவின் ஒருபகுதியான சீமாந்திராவில் கலவரங்கள் வெடித்து அந்த பகுதியே இருளில் மூழ்கிப்போய் உள்ளது. ஒன்றும் செய்யமுடியாமல் விழிக்கிறது மத்திய அரசு.

அந்த தொப்புள் என்னுது இல்லே! நஸ்ரியா!

    முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று தெரியவில்லை! தமிழ் சினிமாவின் தவமணி தேவி காலத்தில் இருந்தே கவர்ச்சிக்கு ஒரு தனி அந்தஸ்து உண்டு. இழுத்து போர்த்தி நடித்தவர்கள் கூட கவர்ச்சி மாயையில் கரைந்து போனார்கள். இப்போது நஸ்ரியா நையாண்டி பட இயக்குனர் சற்குணம் தன்னை ஏமாற்றிவிட்டார். படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என்று கூறினேன். ஒத்துக்கொண்டவர் இப்போது கவர்ச்சியாக தொப்புள் தெரியும்படி நடனக் காட்சிகள் அமைத்து படம் எடுத்துள்ளார். அந்த தொப்புள் காட்சியில் தெரிவது நான் அல்ல என் உருவத்தில் வேறொரு நடனப்பெண்ணின் இடுப்பை படம்பிடித்து ஒட்டி பயன்படுத்திவிட்டனர். இதனால் என்னை அவமானப்படுத்தி ஏமாற்றிவிட்டனர். இந்தபடம் வெளியாகக் கூடாது என்று சொல்லி போலீஸ் கமிசனரிடம் முறையீடு செய்துள்ளார். வர வர சென்னை கமிஷனர் ஆபீஸ் எதற்கு என்று கேள்வி எழுகிறது. சினிமா தகறாருகளை தீர்த்து வைக்கவா போலிஸ் கமிஷ்னர்! இயக்குனர் சற்குணமோ விளம்பரத்திற்காக இது மாதிரி நடந்து கொள்கிறார் நஸ்ரியா என்று சொல்கிறார். இதனால் நஸ்ரியாவுக்கு விளம்பரம் கிடைக்கிறதோ இல்லையோ படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது! என்னமா யோசிக்கிறாங்க ஒரு படத்தை புரமோட் பண்ண!

சாம்பியன்ஸ் கோப்பை விடைபெற்ற சகாப்தங்கள்!

     சென்னை அணி மேட்ச் பிக்ஸிங் செய்கிறது என்று அது விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளை பார்த்தே சொல்லிவிடலாம். அனேகமாக சென்னைக்கு தடை வந்தால் அதைக்கண்டு மகிழும் முதல் ஆள் நானே! டி 20 போட்டிகள் மேட்ச் பிக்ஸின் கருவூலங்களாக மாறிவருகின்றன. இந்த சமயத்தில் இரண்டு ஜாம்பவான்கள் டி 20 களத்தில் இருந்து விடைபெற்றார்கள் அவர்கள் சச்சின் மற்றும் டிராவிட். இருவரும் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்தவர்கள் 40வயதை தொட்டுவிட்ட இவர்களில் டிராவிட் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிட்டார். சச்சின் 200வது டெஸ்டுக்காக காத்திருக்கிறார். சாம்பியன்ஸ் லீக் கடைசி போட்டியில் மும்பையும் ராஜஸ்தானும் இறுதி ஆட்டத்தில் சந்தித்துக் கொண்டது. இதுவே இந்த இருவீரர்களின் இறுதி டி 20 போட்டியாக அமைந்துவிட்டது. மும்பை இறுதி போட்டியில் வென்று சச்சினுக்கு பிரியாவிடை அளித்தது. இறுதிபோட்டிக்கு அணியை வழிநடத்திய டிராவிட்டும் விடைபெற்றார்.இரு நல்ல ஆட்டக்காரர்கள் இனி இவர்களை கலர் உடையில் மைதானத்தில் காண முடியாதது ரசிகர்களுக்கு வெறுமைதான்.

சீனியர் குற்றவாளி! ஜுனியர் நீதிபதி!

    ஒரேகல்லூரியில் படித்தவர்களில் சீனியர் குற்றவாளியாக நிற்க அவருக்கு தீர்ப்பு சொன்னவரோ நீதிபதி. லாலுவின் வழக்கில்தான் இந்த விநோதம் நடந்துள்ளது. லாலு வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு தண்டனை தந்த நீதிபதி பிரவாஸ்குமார்சிங் லாலுவின் ஜுனியர். அதாவது இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் தம்பணியை துவக்கியவர்கள். கல்லூரியில் படிக்கும் போது சிறந்த மாணவனாக திகழ்ந்த லாலு இப்போது குற்றவாளி. கடந்தவருடம் லாலு முதல் முறையாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்தபோது நானும் சட்டம் படித்தவன் தான் என்று குறிப்பிட்டார். இதை ஏற்கனவே அறிந்திருப்பதாக நீதிபதி பிரவாஸ்குமார். இந்த சுவையான தகவலை வெளியிட்டது உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான எஸ். பி சன்யாஸ். இது வினோதமான விஷயம்தான் இல்லை!

தமிழ் பாடலுக்கு டான்ஸ் ஆடும் பிராவோ!

   மேற்கிந்திய தீவு அணியின் வீரர் டிவைன் பிராவோ! இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். மைதானத்தில் கேட்ச் பிடிக்கும்போதும் விக்கெட் வீழ்த்தும் போதும் இவர் போடும் ஆட்டம் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். மைதானத்தில் ஆல்ரவுண்டராக கலக்குவதுடன் டான்ஸ் ஆட்டத்திலும் ஆர்வம் உள்ளவர் போல பிராவோ! இவர் இப்போது ஒரு தமிழ்படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட உள்ளார். உலா என்ற திரைப்படத்தில் ஒரு துள்ளல் இசைப்பாடலுக்கு  ஆடப்போகிறார் பிராவோ! திரைபடத்தில் ஆடுவது குறித்து பிராவோ கூறுகையில் நான் டிரினிடாட் நகரில் பிறந்து வளர்ந்தவன்,இசைக்கும் நடனத்துக்கும் புகழ்பெற்றது டிரினிடாட். கலிப்ஸோ இசைவடிவத்தை கொடுத்தது எங்கள் ஊர். இசைக்கு நடுவில் வளர்ந்த நான் நடனமாட வந்ததில் வியப்பில்லை என்றார். கலக்குங்க பிராவோ!

விண்வெளிச் சுற்றுலா!
   அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் விண்வெளிச் சுற்றுலாவை அறிவித்து முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கட்டணம் எவ்வளவு தெரியுமா? 150 லட்சம் ரூபாய். அநேகமாக இந்த ஜனவரியில் விண்வெளி சுற்றுலாவை நடத்திவிடுவார்கள் போல. இதுவரை 600 பேர் இந்த சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்துள்ளனராம். முதல் 1000 பேருக்கு மட்டுமே இந்த கட்டணம். வர்ஜின் கேலக்டிக் திட்டப்படி இது இரண்டு கட்டப்பயணம். இரண்டு பேர் கை கோர்த்து நிற்பது காணப்படும் ஒயிட் நைட் டூ எனப்படும் விமானம். ஸ்பேஸ்ஷிப் டூ எனப்படும் இன்னொரு குட்டிவிமானம். இது முதல் விமானத்தை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் இதில் இருவரே பயணிக்க முடியும் முதல் விமானம் இந்த குட்டிவிமானத்தை சுமந்து சென்று சுமார் 52ஆயிரம் அடி உயரம் சென்றதும் ஸ்பைஸ் ஷிப் டூ தனியாக பிரியும். அப்போது அது அசுர வேகத்தில் பறக்கும். பூமியில் இருந்து 100 கி.மீ உயரத்தில் உள்ள பகுதியே விண்வெளி! இதை சுற்றிக் காட்டிவிட்டு திரும்பிவிடுமாம் ஸ்பேஸ் ஷிப் டூ. மொத்தம் இரண்டரை மணி நேர பயணத்தில் விண்வெளியில் மிதப்பது ஆறே நிமிடங்கள்தான்! அந்த ஆறு நிமிட திக் திக் பயணத்திற்கு  புக்கிங்க் செய்து காத்திருக்கும் பிரபலங்கள் சிலர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங், அமெரிக்க பாடகி கேத்தி பெரி, பிராட் பிட், ஏஞ்சலினா ஜூலி ஆகியோர்!

நாய் போட்ட பூனைக் குட்டிகள்;

   பூந்தமல்லி அருகே தெரு நாய் ஒன்று எட்டு குட்டிகளை ஈன்றது. அதில் நான்கு பூனைக் குட்டிகளாக இருந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதும் அந்த பகுதியே பரபரப்பு ஏற்பட்டது. பிளாட்பார வாசியான கணேசன் என்பவர் வளர்த்து வரும் அந்த நாயின் பெயர் ரோசம்மாள். இது குறித்து கணேசன் கூறுகையில் நேற்று குட்டி போட்டதும் சென்று பார்த்தபோதுதான் நான்கு குட்டிகள் வித்தியாசமாக இருந்தன. பின்னர் உற்றுப்பார்த்தபோது அவை பூனைக் குட்டிகள் என தெரியவந்தது என்றார். நாய் பூனைக் குட்டிகளை போட்டதா? இல்லை வேடிக்கை செய்ய யாராவது பூனைக் குட்டிகளை நாயிடம்  விட்டார்களா என்பது அந்த நாய்க்கே வெளிச்சம்!

விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்!

   பரசுராம பூமி எனப்படும் கர்நாடாகா மங்களூர் மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வர சுவாமி கோவிலில் இருவிதவைகள் அர்ச்சகர்களாக நியமணம் செய்யப்பட்டனர். இந்திராசாந்தி, லட்சுமி சாந்தி என்ற அந்த பெண்களுக்கு முறைப்படி அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இருவரும் முறைப்படி பூஜை செய்து தீர்த்த பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கினர். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில் மாறி வரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் பெண்களை பூமாதேவியாக மதிக்கும் நம் நாட்டில் அவர்கள் கணவனை இழந்து விட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள இயலாமல் புறக்கணிப்பது மூட நம்பிக்கை இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றார். இந்த நியமனத்தை பல பெண்கள் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

டிப்ஸ்: டிப்ஸ்: டிப்ஸ்
  வேப்பிலையை நன்கு அரைத்து அத்துடன் மஞ்சள் தூள், பால்,கடலை மாவு சேர்த்து முகத்தில் பூசி பத்துநிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பருக்கள் மறையும்.

நகச்சுற்றுக்கு உப்புக் கலந்த வெங்காயச் சாறை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து நகச்சுற்று மீது வைத்துக் கட்டுப்போடவும். வீக்கம் வலி குறைந்து போகும்.

கடலைமாவை நன்றாக கரைத்து அதில் பட்டுத்துணியை ஊற வைத்து கசக்கினால் அழுக்குகள் போய்விடும்.

செல்போனை டீவி,ஃபிரிட்ஜ், கம்ப்யூட்டர், போன்ற மின்சாதனப் பொருட்களின் மீதோ அவற்றின் அருகிலேயோ நீண்ட நேரம் வைத்திருந்தால் விரைவில் பேட்டரி வீக் ஆகிவிடும்.

புதிய காட்டன் துணிகளை துவைப்பதற்கு முன் உப்புத்தண்ணீரில் அரைமணிநேரம் ஊற வைத்து  காயவைக்கவும். பின் வழக்கம் போல துவைக்க துணிகள் சாயம் போகாது.

மொபைலில் சார்ஜ் குறைந்து ஒரு பாயிண்ட் இருக்கும் போது பேசுவதை தவிர்க்கவும். அப்போது அதில் அதிக கதிர்வீச்சு இருக்கும்.

மாணவனின் நாட்டுப்பற்று!

நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார். 

ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை. 

''
அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை. 

''
மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை'' 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!







Comments

  1. நஸ்ரியாவின் தொப்புள் பதிவுகள் இதுவரை ஆயிரம் படித்துவிட்டேன்....அண்ணன் தளிர் அண்ணாவின் தொப்புள் பதிவு கொஞ்சம் நகைச்சுவையானது.......அந்த தொப்புள் என்னுது இல்லே! நஸ்ரியா!

    ReplyDelete
  2. விடைபெற்ற சகாப்தங்களை நினைத்தால் சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது... டிப்ஸ்கள் பயனுள்ளவை...

    ReplyDelete
  3. கதம்பச் சோறு அருமை
    குறிப்பாக நஸ் ரீன் ஊறுகாய்
    சுவாரஸ்யமான் கதம்பச் சோறு தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அர்ச்சகர்களாக விதவைகள். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நல் முயற்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!