விற்க முடியாத ஐட்டம்! கதம்ப சோறு!

கதம்ப சோறு:

மழையும் தமிழக நெடுஞ்சாலைகளும்!

    தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு மழை வந்தால் ஜுரம் வந்து விடும். ஈரத்தில் ஊறி ஊறி கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளம் விழுந்து குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளின் எமனாக மாறி விடும் நம்மூர் நெடுஞ்சாலைகள். முழுவதும் குளமாக காட்சி அளிக்கும் இந்த சாலைகளில் பள்ளம் மேடு தெரியாது. இதில் வாகனம் ஓட்ட தனித் திறமையே வேண்டும். ஆங்காங்கே பாலம் மெட்ரோ ரயில் என விரிவாக்க பணிகள் வேறு. சென்னை டிராபிக் மழையில் மேலும் அதிகரித்துவிடும். காலையில் அலுவலகம் செல்வோரும் மாலையில் வீடு திரும்புவோரும் இந்த சாலைகளை அர்ச்சிக்காத நாளே இல்லை எனலாம். ஆட்சிகள் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்த மழைக் காட்சிகள் தான் மாறவில்லை! வருணபகவான் கண் திறந்து விட்டால் வாகன ஓட்டிகளுக்கு அவதிதான். இந்த நிலை என்று மாறுமோ ஒன்றும் புரியவில்லை!

வெள்ளி விநாயகர் கடலில் கரைக்க போறாங்கலாம்!


  சென்னை புளியந்தோப்பில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் சிவசேனா கட்சி நித்யானந்தா மற்றும் பொதுமக்கள் நன்கொடையில் 19 கிலோ எடையில் வெள்ளி விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்டது. இது 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் வித்தியாசமாக இவ்வாறு விநாயகர் சிலை வைத்தார்களாம். வரும் 14ம் தேதி வரை தரிசனத்திற்கு வைக்கப்படும் பிள்ளையார் அன்று மாலை காசிமேடு கடற்கரையில் கடலில் கரைக்கப்படுமாம். எங்கள் பகுதி மக்கள் நலனுக்காக இதை செய்கிறோம் என்கிறார் சிவசேனா மாநில அமைப்பாளர் கலைவாணன்.
    இப்படி எல்லாம் செய்தால் பெரியார் பக்தர்கள் ஏன் கிண்டல் செய்ய மாட்டார்கள். இத்தனை லட்சம் செலவு செய்து கடலில் கொட்டாமல் வேறு பயனுள்ள செலவு செய்திருக்கலாம். அல்லது பொதுமக்கள் வழிபாட்டிற்கு நிரந்தரமாக வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மூடத்தனமான பக்தியாகத்தான் இது எனக்கு படுகிறது.


அப்பாடா! குற்றவாளிங்கன்னு சொல்லிட்டாங்க!

   கடந்த வருடம் டிசம்பர் மாதம் டில்லியில் ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்முறை செய்தது ஆறு பேர் கும்பல். அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடே இது குறித்து பேசியது. இந்த ஆறு பேரையும் கைது செய்த விசாரித்த கோர்ட் அதில் மைனர் சிறுவன் ஒருவனை மூன்றாண்டு தண்டனை என அறிவித்தது. பஸ் டிரைவர் தானாகவே தூக்கிட்டு கொண்டான். மீதமுள்ள நான்கு பேரும் குற்றவாளிகள் என்று டில்லி கோர்ட் நேற்று அறிவித்து உள்ளது. அவர்களுக்கான தண்டனை பின்னர் வழங்கப்படும் என்று கோர்ட் கூறியுள்ளது. இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். சிறுவனாக இருந்தால் என்ன? அவன் செய்ததும் குற்றம்தானே! அதற்கான தண்டனையை அவன் அனுபவிக்க வேண்டாமா? நெற்றிக் கண் திறக்கினும் குற்றம் குற்றமே என்று நல்ல தீர்ப்பு வர வேண்டும். இதனால் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். ஆனால் நம் நாட்டில் இவர்களை விசாரித்து முடிக்கவே 9மாதங்கள் ஆகியுள்ளது. என்ன கொடுமை இது!

குடிக்க வேண்டாம்! ஸ்ப்ரே செய்தால் போதும்!
   அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் பென் யூ  காபியின் மூலப்பொருளான கபினை பற்றி ஆராய்ந்து வருகிறார்.
  இதன் ஒருபகுதியாக காபியை குடிப்பதற்கு பதில் கபினை ஸ்ப்ரே மூலம் உடலில் உட்செலுத்திக் கொள்ளலாம் என நீருபித்து உள்ளார். புத்துணர்ச்சிக்காக மக்கள் குடிக்கும் காபியில் கபின் எனும் மூலப்பொருள் உள்ளது. இதுவே உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கபின் உடலில் ஊடுறுவ அமினோ அமிலங்கள் உதவுகின்றன. திரவ வடிவில் உள்ள கபின் ஸ்ப்ரேயை கை மணிக்கட்டு, கழுத்துப் பகுதியில் தெளித்துக்கொள்வதன் மூலம் கபின் ரத்த நாளங்களில் ஊடுருவிச் சென்று ரத்தத்தில் கலக்கிறது. இதனால் காபி குடிக்கும் போது ஏற்படும் புத்துணர்வு கிடைக்கிறது என்றும் நான்குமுறை ஸ்ப்ரே செய்து கொண்டால் ஒரு கப் காபி சாப்பிட்ட புத்துணர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் ஒருவர் ஒரு நாளில் 20 முறைக்கு மேல் இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்த கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இனிமே விருந்துகளிலே காபி கொடுக்காம ஸ்ப்ரே பண்ணி விடுவார்கள் போல! என்ன இருந்தாலும் சூடா பில்டர் காபி குடிக்கிற  அனுபவம் இதில் கிடைக்குமா? என்பது சந்தேகமே!

பயஸின் 14வது ஸ்பெஷலான பட்டம்!

   தன்னுடைய நாற்பதாவது வயதில் செக் வீரருடன் இணைந்து யூ.எஸ் ஓபனில் இரட்டையர் பட்டம் வென்று சாதித்து உள்ளார் லியாண்டர் பயஸ். அமெரிக்காவில் நடந்த இறுதிப் போட்டியில் லியாண்டர்பயஸ்-ஸ்டெபானக் ஜோடி பெயா-புருணோ ஜோடியை 6-1,6-3 என்ற நேர் செட்களில் வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அதிக வயதில் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார் லியாண்டர் பயஸ். விளையாட்டிற்கு வயது ஒரு தடையல்ல என்றும் நிரூபித்தார்.இதுவரை ஆஸ்திரேலியஓபன்2012, பிரெஞ்ச் ஓபன் 1999,2001,2009, விம்பிள்டன் 1999 யூ.எஸ் ஓபன் 2006,2009,2013 என மொத்தம் 8 இரட்டையர் பட்டங்கள் கலப்பு இரட்டையரில் ஆஸ்திரெலிய ஓபன் 2003,2010, விம்பிள்டன்1999,2003,2010, யு.எஸ் ஓபன் 2008 என மொத்தம் பதினாலு பட்டங்கள் வென்றுள்ளார் பயஸ். இவரை போன்ற வீரர்களால் இந்திய டென்னிஸ் ஓரளவு வளர்ச்சிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

100 வயதிலும் தன் வேலைகளை தானே செய்யும் பாட்டி!
  சென்னை அம்பத்தூர் வேங்கடா புரத்தில் உள்ள 100 வயது நிரம்பிய சாவித்திரி பாட்டி தள்ளாத வயதிலும் தன் வேலைகளை தானே செய்து வருகிறார். ஒவ்வொரு நாளிலும் திட்டமிட்டு வேலைகளை செய்கிறார் அந்த தெருவில் வசிப்போர் இதை ஆச்சர்யமாக பார்ப்பதோடு அவரை பாராட்டவும் செய்கின்றனர். அவர் சொல்கிறார் அதிகாலை நாலுமணிக்கே எழுந்திருப்பேன்! ஒருமணிநேரம் பூஜை, ஆறுமணியில் இருந்து ஏழுமணி வரை என் துணிகளை நானே துவைப்பேன், 9மணியிலிருந்து 10மணிவரை காய்கறி நறுக்குவது உட்பட சமையலுக்கு தேவையான  அனைத்து வேலைகளையும் செய்கிறேன். காலை பத்து மணிக்கு சாப்பிட்டுவிட்டு அன்றைய தினசரிகளை படிப்பேன் முக்கியநிகழ்வுகளை குறிப்பெடுத்துக் கொள்வேன். ஒவ்வொரு நாளிலும் வீட்டில் என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்கிறேன்.
   கடந்த 50 ஆண்டுகளாக காலையில் முழு சாப்பாடும் மதியம் இரவில் பால் மட்டுமே என் தினசரி உணவு. பூச்சிக் கொள்ளி மருந்து பயன்படுத்தாத உணவுகளையே சாப்பிட்டோம், கேழ்வரகு, கம்பு, கோதுமை தானிய வகைகள் முக்கிய உணவாக இருந்தன. அரிசிவகைகள் எப்போதாவது சாப்பிடும் உணவாக வைத்திருந்தேன்.அதுவே என் ஆரோக்கியத்திற்கு காரணம். சுத்தமான நிலத்தடி நீரும் சத்தான காய்கறிகளும் இந்த வயதிலும் நான் திடமாக செயல்பட உறுதுணையாக உள்ளன என்கிறார்.
   இருபது வயதிலேயே வேலைக்கு ஆள் தேடும் உலகில் நூறு வயதிலும் தன் வேலையை தானே செய்யும் இந்த பாட்டிக்கு ஒரு சல்யூட்!

டிப்ஸ்! டிப்ஸ்!

  சீதாப்பழ விதையை பொடி செய்து கடலை மாவுடன் கலந்து தலைக்கு பூசி குளித்துவந்தால் தலையில் உள்ள பேன்கள் ஈறுகள் நீங்கும்.

பட்டு வாங்கும் போது ஒரிஜினல் பட்டுத்துணிதானா என்று செக் செய்ய கைவிரலை துணிமீது வைத்து அழுத்தினால் கைரேகை பதிந்ததும் சட்டென மறைந்துவிடும் வேறு நூல்கள் கலந்து இருந்தால் கைரேகை அப்படியே இருக்கும்.

கடுமையான தலைவலியா? வெதுவெதுப்பான நீரில் ஓரிரு டீஸ்பூன் தேன் கலந்து பருகினால் சிறிது நேரத்தில் தலைவலி போயே போச்!

அது முடியாது!

   மொழி தெரியாத ஒரு ஊருக்கு சென்றான் ஒருவன்! ரொம்ப பசித்தது ஓட்டலுக்கு சென்றான். இட்லியும் சட்னியும் கொண்டுவாப்பா! என்று சொல்லிப் பார்த்தான்! சர்வர் மலங்க மலங்க விழித்தான்! சரிதான் போ! என்று சைகையில் சொல்லி பார்த்தான்! அதுவும் சர்வருக்கு விளங்க வில்லை! பொறுத்து பார்த்த சர்வர் மெனு கார்டை கொண்டு வந்து நீட்டினான்.
  அதில் புரியாத மொழியில் என்னென்னவோ பலகாரங்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. நம்ம ஆளுக்கு ஒன்னும் விளங்க வில்லை! அட தேவுடா! இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே! என்று முழித்தான். சரி ஆனது ஆகட்டும் என்று மெனு கார்டில் கடைசியாக இருந்த ஐட்டத்தினை காட்டி இது ஒரு ப்ளேட் கொண்டு வா! என்றான்.
   சர்வர் அது முடியாது! என்றான்.
ஏன்? எனக்கு அதுதான் வேண்டும் என்றான்  சர்வரோ முடியாது என பிரச்சனை  மேனேஜரிடம்சென்றது.
  நான் கேட்கிற ஐட்டம் இவன் தரமாட்டேன்னு சொல்றான்!
 அப்படி என்னப்பா கேட்டுட்டான்! நம்மகிட்ட இல்லாதது எதுவுமா?
  இல்ல சார்!
அப்ப கொண்டுவர வேண்டியதுதானே!
அது முடியாது சார்!
  ஏன்?
சார்! அவர் கேட்டது நம்ம முதலாளியோட ஒய்பை!
 ஆமா சார்! அவங்க பேருதான் மெனு கார்டோட கடைசியில இருந்தது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசி உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. கதம்பம் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நி ற்க.
    பட்டு சேலை பகுதியில் 'கை ரேகை'க்கு பதில் 'தடம்' எனும் பதம் சரி என படுகிறது.

    ReplyDelete
  2. ஹஹஹா.. அது மட்டும் எப்படி சார் தெரிஞ்சது.. ஹிஹிஹி

    ReplyDelete
  3. அதிசய பாட்டி தான்.
    வெள்ளி வினயாகர் படம் வெளியிட்டதற்கு
    நன்றி. நல்லதோர் தொகுப்பு.

    ReplyDelete
  4. வெள்ளி விநாயகர் எப்படி கடலில் கரைவார் ?கரையில் ஒதுங்கிறதுக்கு முன்னாலே யாராவது ஒதுக்கிகிட்டு போற ஐடியா இருக்குமோ ?பதிவு அருமை ..தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!