"மதிமுக" நாயகிக்கும் வைகோவிற்கும் என்ன சம்பந்தம்? ஜோக்ஸ்

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 8


1.   உங்க பையன் இப்ப என்ன பண்றான்?
ஒரு பணக்காரவீட்ல மாப்பிள்ளையா இருக்கான்.சம்பளம் எதுவும் கிடையாது.வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு நாள் கிழமைன்னா துணி எடுத்துத் தருவாங்க!

2.   எங்க வீட்ல என் மனைவியை விட  எனக்குத்தான் பவர் அதிகம்!
பரவாயில்லையே!
ஆமா போனவாரம் கண்டெஸ்ட் பண்ணப்ப டாக்டர் சொன்னாரே!

3.   உங்க பேரு கங்கா.. சின்னவீடுங்க ரெண்டு பேரு பேரும் யமுனா, காவேரின்னு செலக்ட் பண்ணிட்டீங்களே... அது எப்படி தலைவரே?
எல்லாம் ஒரு முன் யோசனைதான் வருங்காலத்துல நதிகள் இணையும் போது அதைச் சொல்லி இவுங்களையும் ஒரே வீடா இணைச்சுடலாமேனுதான்!

4.   நான் தினமும் ஆபிஸுக்கு புறப்படும் போது யாருக்கும் தெரியாம என் மனைவிக்கு கிஸ் கொடுத்திட்டுதான் கிளம்புவேன் நீங்க?
நானும் அப்படித்தான்.. நீங்க போனதுக்கப்புறம்!
                         விகடன் அட்டைபட ஜோக்ஸ்  9-1-94

5.   பட்டப்பகல்ல கேட்டை திறந்து பூட்டை உடைச்சு கதவை நொறுக்கி பீரோவை குடைஞ்சு திருடினியாமே?
ஆமாங்க ... கொஞ்சம் சிரமமாத்தான் இருந்துச்சு எஜமான்!
                            கொங்கனாபுரம் வே.செந்தில்
6.   இன்ஸ்பெக்டர் வர்றாரு.. சேலை முந்தானையால கழுத்து செயின்களை மறைச்சுக்க!
ஏன்?
அவர் கண்ணுலபட்டா ராத்திரி திருடன் வர்றது நிச்சயம்!
                            கமுதி என்.சேதுராமன்.
7.   ஏன் ஆபிஸ்லேருந்து நடந்து வர்றீங்க?
டாக்டர் என்னை தூங்கி எழுந்தவுடன் தினமும் வாக்கிங் போகச் சொல்லியிருக்காரே!
     
                         சி.எம்.மகேஷ்
8.   ஏன் என் லீவ் லெட்டரை மானேஜர் நம்ப மாட்டேங்கிறாருன்னே தெரியலை.. எனக்கு ஃபுளுக் காய்ச்சல் வந்தது உண்மைடா!
சரி அதுக்காக லீவ் லெட்டர்ல ‘புளிக்காய்ச்சல்’னு எழுதறதா?
                             பாஸ்கி
9.   ஏங்க.. ஒரு கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகும்?
இருநூறு ரூபாயிலே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.. அப்புறம்தான் பிரச்சனை.. மாசா மாசம் நம்ம சம்பளமே செலவாகும்!
                               கார்த்திக்
10. உங்களை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிட்டாங்களாமே..!
ஆமாண்ணே! தெரியாத்தனமா தலைவர் பிறந்தநாள் கொண்டாடின அன்னிக்கே என்னோட பிறந்தநாளையும் கொண்டாடினேன்..
                                 நிலா.
11. இந்த ஜட்ஜ் கொஞ்சம் குழப்பமான டைப் னு நினைக்கிறேன்!
புரியலையே!
 பின்னே என்ன... நேத்து ஒரு வழக்கிலே குற்றவாளிக்கு இரண்டுவருடம் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்னு தீர்ப்பு கொடுக்கிறாரு!
                               நாணி.
12. நம்ம கட்சிக்கு குரங்கு சின்னம் வைக்கவே வேண்டாம்னு நான் முட்டிக்கிட்டேன் யாராவது கேட்டீங்களா?
இப்ப என்ன ஆயிருச்சு?
மொத்தமா நம்ம ஆளுங்க எதிர்கட்சிக்கு தாவிட்டாங்க?
                              பகவத்
13. என்னோட காதலர் வைகோ கட்சியில இருக்கார்னு நினைக்கிறேன்!
எதனாலடி அப்படி சொல்றே?
எப்ப லெட்டர் எழுதினாலும் ‘மதிமுக’நாயகியேன்னுதான் எழுதறார்!
                             நிலா.
14. தலைவரே உங்க ராசிக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பமாயிருக்கு!
பயப்படாதே! நேத்துலேர்ந்து நான் வேற ராசிக்கு மாறிட்டேன்!
                            வி. கிருஷ்ண குமார்.
15.  டாக்டர், நமஸ்காரம்!
வாங்க! நாளைக்குத்தானே ஆபரேஷன் பண்ணப்போறேன்! இன்னிக்கே எதுக்கு மாலையெல்லாம் எடுத்திட்டு வந்திருக்கீங்க?
இது பேஷண்டுக்கு டாக்டர் உங்களுக்கு இல்லை!
                           பாஸ்கி.
16. என்ன தரகரே! பொண்ணு ஓவியம் மாதிரி இருப்பான்னு சொன்னீங்க.. ஒரு கண்ணு பெரிசு.. ஒரு கண்ணு சின்னது.. ஒரு காது யானைக்காது மாதிரி இருக்கு நெத்தியிலே மூக்கு இருக்கு கழுத்துல வாய் இருக்கு...!!
அதனாலே என்னங்க.. மாடர்ன் ஓவியம் மாதிரி இருக்குன்னு சொல்லுங்க!
                                                 கார்த்திக்
17. அங்கிள் நீங்க பாஸா?
ம்.. பர்ஸ்ட் கிளாஸ்!
போனவருஷமும்  ஃபர்ஸ்ட் கிளாஸ்னு சொன்னிங்க! இந்த வருசமும் ஃபர்ஸ்ட் கிளாஸ்னு சொல்றீங்க! அப்படின்னா பெயில்தானே!
                           நிலா.
18. தலைவருக்கு டாக்டர் பட்டம் தர வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?
ஏன் என்ன சொல்றாரு?
 கூடவே ஒரு நர்ஸ் வேணும்னு அடம்பிடிக்கிறாரு!
                         குடந்தை பாலகி
19. எப்பவும் ‘லொக்கு லொக்கு’ன்னு இருமிகிட்டிருக்கிற நம்ம ஹெட் கிளார்க், சம்திங் வந்துட்டா போதும் கொஞ்சம் மாத்தி இருமுவார்..!
எப்படி?
“லக்.. லக்”குன்னுதான்!
                       கடலூர் சார்லி
20.  மத்தவங்க மாதிரி பெண்டாட்டி முந்தானையை பிடிச்சுகிட்டு போறவன் இல்லை நான்..
அட! அப்படியா?
 ஆமா! என் பெண்டாட்டி சுடிதார்தான் போடுவா!
                              பரணி.
21. உன்னை எதுக்காக கைது பண்ணி கோர்ட்டுக்கு கூட்டிகிட்டு வந்திருக்காங்க தெரியுமா?
ஓ! தெரியுமே... ஆறு மாச மாமூல் பாக்கிக்காக!
                      எம்.பி.எம்.ராஜவேலு.

நன்றி: ஆனந்த விகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. செம கலக்கல் சிரிப்பு ஜோக்ஸ்....!

    ReplyDelete
  2. ஜோக் தொகுப்பு சூப்பர்
    பரிதி முத்துராசநிம் வலைப பக்கத்தில் உங்கள் கவிதையை படித்தேன்.
    "விதைத்தாலும்
    முளைக்கவில்லை
    குழந்தையிடம் கள்ளம்"
    மிக அருமை சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!