Tuesday, April 30, 2013

ஆசையை வெல்ல பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம் பரப்பும் அவதூறு!!


 வாஷிங்டன்: மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி இருக்கும் தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். காந்தி ஆசிரம விதிப்படி அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும். ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்தாராம். காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், காந்தியை பற்றிய பிற சர்ச்சைகள் குறித்து இன்னொரு பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்... ஹிட்லருக்கு கடிதம் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை நாங்கள் ஒரு போதும் சந்தேகித்தது இல்லை. மேலும் உங்கள் எதிர்ப்பாளர்கள் கூறுவது போன்று நீங்கள் ஒரு அரக்கன் என்று நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார். காந்தி ஒரு 'கே' காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான சில கடிதங்கள் வலுப்படுத்தியுள்ளன. தென்னாப்பிரிக்க பாடி பில்டர் ஹெர்மன் காலன்பாக் மற்றும் காந்தி இடையேயான கடிதங்கள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன. காந்திக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால் காந்திக்கு ஏன் அந்த நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதும் சர்ச்சையாக உள்ளது. 
டிஸ்கி}
 
நமது தலைவர்களை பற்றியே அவதூறு பரப்புவதையே சில வெளிநாட்டு இணையதளங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இது போன்ற இணைய தளங்களை தடை செய்ய வேண்டும். காந்தியைப் பற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அதை சொல்ல அவர்களுக்கு அறுகதை இல்லை! உலகம் போற்றிய ஒரு உத்தமரை தேசபிதாவை அவமதிக்க அமெரிக்கர்களுக்கு யோக்கியதை இல்லை! நமது அரசு இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும். அந்த இணைய தளத்தின் மீது வழக்கு தொடர வேண்டும். சும்மா லைக் போடுவதற்கே வழக்கு போடும் இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்!

முழு முட்டாள்களும் பவர் ஸ்டாரின் பலமும்! படித்ததில் பிடித்தது!

2 முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, பார்த்து சிரித்து மகிழ்வோம்.                                                                                                                  
பவர்ஸ்டார் ஒரு முறை மும்பையில் உள்ள அலுவலகம் ஒன்றில் அலுவலக பணியாளராக (பியூன்) பணியாற்றிக் கொண்டிருந்தார்.அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதாவது யாராவது, ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால், புகுந்து, ஓ... அவரா? அவரை எனக்கு தெரியுமே என்று கூறுவார்.

ஒரு முறை அந்த அலுவலகத்தின் மேலதிகாரி (அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்) ஆர்னால்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார். உடனே எப்போதும் போல நமது பவர்ஸ்டார், ஓ ஆர்னால்டா அவர் என்னோட நண்பராச்சே என்று கூறினார்.இதைக் கேட்ட முதலாளிக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்ன ஆர்னால்டை உனக்குத் தெரியுமா? சரி அடுத்த முறை நான் அமெரிக்காவிற்குப் போகும்போது உன்னையும் அழைத்துச் செல்கிறேன். உனக்கு ஆர்னால்டை தெரியுமா இல்லையா என்பைத அப்போது பார்க்கிறேன் என்று கூறினார்.அதற்கு பவர்ஸ்டாரும் ஒப்புக் கொண்டு தலையசைத்தா*ர்.

முதலாளி சொன்னபடியே பவர்ஸ்டாரை அமெரிக்காவிற்கு அழைத்துப் போனார். பிறகு ஆர்னால்டின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆர்னால்ட் பவர்ஸ்டாரை பார்த்ததும் ஓடி வந்து "ஹாய் பவர்... எவ்வளவு நாளாச்சுடா உன்ன பார்த்து... எங்கடா போன இவ்வளவு நாளா" என்று கேட்டவாறு அவரை உள்ளே அழைத்துச் சென்று தேனீர் விருந்து அளித்தார்.அதுவரை வாசலில் நின்றிருந்தார் அதிர்ச்சியடைந்த முதலாளி. பின்னர் பவர்ஸ்டார் வந்ததும்,

ஒபாமா வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒபாமாவும் ஆர்னால்டைப் போலவே பவர்ஸ்டாரை கட்டி அணைத்துக் கொண்டு, "ஒரு காபியாவது குடித்துவிட்டுப் போ" என வற்புறுத்தினார்.இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போனார் முதலாளி.

கடைசியாக வாடிகனுக்கு பவர்ஸ்டாரை அழைத்துப் போனார் முதலாளி. அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தில் உள்ளே நுழைவது மிகக் கடினமான விஷயமாக இருந்தது. எனவே பவர்ஸ்டார்
தனது முதலாளியிடம் "கொஞ்சம் இங்கேயே இருங்கள். நான் போய் வருகிறேன்" என்று கூறி சென்றார்.
சிறிது நேரத்தில் வாடிகன் மாளிகையின் பால்கனியில் இருந்து போப்பின் கைகளை பிடித்துக் கொண்டு பவர்ஸ்டார் தோன்றினான்.அவ்வளவுதான் வாசலில் நின்று இதனைப் பார்த்துக் கொண்டிருந்த முதலாளி மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்த பின் பவர்ஸ்டார், என்ன ஆனது உங்களுக்கு? என்று கேட்டார்.

அதற்கு முதலாளி, "ஆர்னால்டை உனக்குத் தெரியும், ஒபாமாவுக்கும் உன்னைத் தெரியும், போப்புடனும் உனக்கு பழக்கம் இருக்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால்........
நீ போப்புடன் பால்கனியில் தோன்றியதும் அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், என்னிடம்... யாருடா அது பால்கனியில் பவர்ஸ்டார் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது என்று கேட்டான். அதைத் தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை" என்று கூறி விட்டு மீண்டும் மயக்கமானார்.
நன்றி : முகநூல்
#பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...

பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3


பி பி சியில் பேசிக் படித்த கதை! பகுதி 3
வில்லன் ரஜினிநாங்கள் படித்த கோர்ஸ் டி.பி.சி.எஸ். அதில் அரசு டிரைசெம் கோர்ஸ் தனியாக கம்ப்யூட்டர் ப்ரொகிராமர் என்று ஒன்று. இரண்டுக்கும் சேர்த்து பயிற்சி காலம் ஓர் ஆண்டுகள். ஜுலை 95ல் எக்சாம் என்று ஞாபகம். மொத்தம் மூன்று பேட்ச்சாக 30 பேர் படித்தோம். அதில்லாமல் டிரைசெம் கோர்ஸில் தனியாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். அப்படி இப்படி என ஜூலை மாதத்தில் சேர்ந்த நாங்கள் நவம்பர் வரை பொழுதை ஓட்டிவிட்டோம்.
   நவம்பர் இறுதியில் தான் வில்லன் ரஜினி வந்து சேர்ந்தார். இவர் இன்ஸ்ட்டியூட் ஓனர் ரமேஷின் நண்பர் போலும். அப்போது சென்னையில் பிரபலமாக இருந்த சத்யம் கம்ப்யூட்டரில் படித்து வந்தவர் இவர். வேறு வேலைக்கு செல்லும் முன் எங்களுக்கு கோர்ஸ் எடுக்க வந்தார். Cobal என்று ஒரு லாங்க் வேஜ் அதை எடுக்க வந்தார் இவர்.
   ஆரம்பத்திலேயே அவரை எங்கள் குருப்பிற்கு பிடிக்கவில்லை! அவர் பாடம் எடுத்தவிதமும் எங்களிடம் நடந்து கொண்ட விதமும் சரி ஒன்றும் எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை! அதுவரை ஒழுங்காக வகுப்புக்கு சென்று கொண்டிருந்த நாங்கள் அவர் வந்த பின் கட் அடிக்க ஆரம்பித்தோம். இதனால் எங்கள் பேட்ச்சில் யாரும் அந்த லாங்வேஜை ஒழுங்காக படிக்கவில்லை! அது என்னமோ தெரியவில்லை நமக்கு ஒருவர் மீது அபிமானம் வந்து மிகவும் பிடித்துவிட்டால் அவரைத்தவிர யாரையும் பிடிக்காமல் போகிறது டீச்சர்களை பொறுத்தவரை. என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பிலும் ஹிஸ்டரி ஆசிரியர் திரு சண்முக சுந்தரம் மாற்றலாகி திரு முத்தையா வந்தபோது சுத்தமாக அவர் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை! அதுவரை நல்ல மதிப்பெண்கள் எடுத்த நான் குறைவாக எடுக்க ஆரம்பித்தேன். இது ஏன் என்று தெரியவில்லை.
  அது போன்ற ஒருசூழலே கம்ப்யூட்டர் செண்டரிலும் ஏற்பட்டது. ரஜினியை எங்களுக்கு பிடிக்கவில்லை! எங்கள் குருப் பெண்களுக்கும் தான். மொத்தமாக சென்று பவானி
மேமிடம் சொன்னோம். நீங்களே வகுப்பு எடுங்கள் ரஜினி வேண்டாம் என்று ஆனாலும் அது நிர்வாகம் சம்பந்தமான விசயம் என்று மேம் மறுத்துவிட்டார். ரஜினியை பழிவாங்குவதாக நினைத்து நாங்கள் வகுப்புகளை புறக்கணித்தோம். இதற்கிடையில் ஒரு நாள் ரிசப்ஷனில் பவானி மேமுடன் ரஜினி பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடத்தில் மேம் அழ ஆரம்பித்து விட்டார். இதை உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு ரஜினி மீது மேலும் வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஜனவரி முதல் வாரத்தில் பவானி மேம் விடை பெற ரஜினியே கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார். எங்களுக்கு வேறு வழி இல்லை! வேண்டா வெறுப்பாக தொடர்ந்தோம். நல்ல வேளை முக்கிய பாடங்களை பவானி மேம் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
     மே மாதத்தில் சில நாட்கள் யூனிவர்சிட்டி எக்ஸாம் காரணமாக நான் இன்ஸ்ட்டியூட் செல்லவில்லை! தேர்வு முடிந்து சென்றபோது  ரெகார்ட் ஒர்க் நிறைய கொடுத்தார்கள் அவசர அவசரமாக முடித்தோம் பிரிண்ட் அவுட் எடுப்பது எல்லாம் வெங்கட் குமார் செய்தான்.  அப்போதுதான் பிராக்டிகல் எக்ஸாம் பொன்னேரியிலேயே வேண்டுமென்றால் கூடுதல் பணம் தர வேண்டும் என்றார்கள் ஒத்துக் கொண்டோம்.
    அதுவரை நான் சிஸ்டத்தில் ஒரு பத்து மணி நேரம் உட்கார்ந்திருந்தால் அதிகம்! அந்த லட்சணத்தில் இருந்தது என் படிப்பு. பிராக்டிகல் எக்ஸாமில் முதலில் வைவா ரஜினிதான் கேள்விகள் கேட்டார். ஐந்து கேள்விகள் இருபத்தைந்து மதிப்பெண்கள் என்று நினைக்கிறேன். நான் ஒன்றொ இரண்டோதான் சரியாக பதில் கூறினேன். ரஜினி தலையில் அடித்துக் கொண்டார். வைவாவில் எனக்கு குறைந்த மதிப்பெண்களே கிடைத்தது. அதுவும் அருணா மேம் சொல்லி அந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ரஜினி வழங்க மறுத்துவிட்டார்.
  பிராக்டிகல் தேர்வு 400 மதிப்பெண்கள் அதில் வெங்கட் குமாருக்கு மட்டுமே அதிகபட்ச மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. எனக்கு 378 மதிப்பெண்களே வழங்கப் பட்டது. அடுத்து தியரி எக்ஸாமும் சோசியல் ஸ்டடி என்று ஒரு தேர்வு இது இரண்டும் மீஞ்சூரில் உள்ள விநாயகா ஐடிஐ யில் வைக்கப்பட்டது.
   தேர்வுகளை எழுதி முடித்தோம். ஒரு மாத இடைவெளிக்கு பின் முடிவுகள் வெளிவந்தன. பிராக்டிகலில் அதிக மதிப்பெண் பெற்றதால் வெங்கட் குமார்தான் எங்கள் பேட்ச்சில் அதிக மதிப்பெண் பெறுவான் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த கனவை கலைத்து நான் அவனை விட இரண்டு மதிப்பெண்கள் கூடுதல் பெற்று முந்திவிட்டேன். யாராலுமே இதை நம்ப முடியவில்லை! எனக்கு தியரியும் சோசியலும் கை கொடுத்தது. அனைவரும் பிரிய முடியாமல் பிபிசியை விட்டு பிரிந்தோம்.
    இந்த இறுதி காலங்களில் வெகேஷனுக்கு பழவேற்காடு சென்று வந்தோம். பொன்னேரி தியேட்டரில் சதிலீலாவதி படம் பார்த்தோம். அப்போது எங்களுடன் படித்த உமா தியேட்டரில் எங்களுக்குகாக பத்து சீட்களை மடக்கி வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தார். அப்படியும் எங்களுக்கு சீட் போதாமல் ஸ்டூல் போட்டுக் கொண்டு படம் பார்த்தோம்.
   என்னுடன் படித்த கணேசன், வெங்கட்குமார், ஜகன், தயாளன்,வேதவல்லி, ரமாதேவி, அனுராதா,மீனாட்சி,ஜெயந்தி, லீலாமானுசா ஆகியோரில் வெங்கட் , ஜகன் , தயாளனோடு இன்னும் தொடர்பில் உள்ளேன். மற்றவர்கள் நிலை தெரியவில்லை!  கவிஞர்கள் கூறுவது போல அது ஒரு அழகிய நிலாக் காலம்! நினைவுகள் நினைக்க நினைக்க இனிக்கும்.

டிஸ்கி: முதல் பகுதியில் சொன்னது போல என் அக்காவை அடிக்கடி சந்திக்க வாய்ப்பாக நினைத்துதான் இந்த கோர்ஸ் எடுத்தேன். ஆனால் அதுவும் கைகூட வில்லை! ஒரு வருடத்தில் சில நாட்களே அக்காவுடன் சந்தித்து பேசி மகிழ முடிந்தது. படிப்பு முடியும் தறுவாயில் அக்காவிற்கு திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. அது ஒரு பெரிய கதை! எப்படியோ உறவினை சேர்க்க ஒரு பத்தாயிரம் செலவு செய்து பார்த்தேன். ஆனால் வீணானதுதான் மிச்சம். 
தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, April 29, 2013

முருகர் எப்படி தூங்குவார்?நடிக வேளும் முருக வேலும்! உண்மை நிகழ்ச்சி!


கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.
                                                                                                                                                                                      நன்றி: முகநூல்

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 21


தளிர் ஹைக்கூ கவிதைகள்!
வெப்ப மூச்சை
வெளியே விட்டது
மின்விசிறி!

நிழலைத் தேடுகையில்
சுட்டது
வெட்டிய மரங்கள்!

 வயல்களில் முளைத்தன
 வண்ணமிகு வீடுகள்!
 நகர வளர்ச்சி!

கட்டிவைத்தார்கள்
மணத்தது
கூந்தலில் பூ!
 
ஒளிந்து கொண்டது
காற்று
ஓடிப்போனது தூக்கம்!

கூட்டம் கலைத்தது
வெடிச்சத்தம்
பறவைகள்!

முரட்டுத்தழுவல்
தள்ளாடியது கொடி
காற்று!

சாய்ந்து கொண்டதும்
ஒய்வெடுத்தார்கள்
நிழல்!

துகில் உரித்ததும்
பசி அடங்கியது
வாழை!

பூத்துக் கொட்டின
பொறுக்க முடியவில்லை!
நட்சத்திரங்கள்!

காவல் இருந்தும்
கவர்ந்தன கண்கள்
இமைகள்!

மிதிபட்டன புற்கள்
உருவானது
பாதை!

பூக்கவில்லை
மணத்தது மண்
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, April 27, 2013

பாக்யராஜிடம் இளையராஜா கற்ற பாடம்!

‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார். இறைவனுக்கு நன்றி... பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி. இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்... நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க. வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம் சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா. வில்லன் ஹீரோ ஆனால்... ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி...அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி. ரொம்பக் கஷ்டம்... இப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன். ரொம்ப தப்புனு புரிஞ்சது... அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது. பாரதிராஜா செஞ்சது சரி... புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும். பாடம் கற்றேன்... அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்," என பேசினார்.

நன்றி: தட்ஸ் தமிழ்
 

Friday, April 26, 2013

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி2


சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி21.நம்ம ஏட்டையா பத்திரிக்கைகளுக்கு ஜோக் எழுதி அனுப்புவாரா?
 எப்படி கபாலி கண்டுபிடிச்ச?
மாமூலுக்கு பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு கேக்கறாரே?
                            அ. பேச்சியப்பன்.
2.தலைவர் கம்ப்யூட்டருக்கு தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடங்கப் போறேன்னு சொல்றாரே ஏன்?
 பேஸ்புக்கில யாரோ அவரை பத்தி தாறுமாறா எழுதிக்கிட்டே இருக்காங்களாம்!
                                  பி. பர்சானா.
3.தமிழகத்திலே பவர் கட்டை பத்தி கவலைப்படாத ஒரே வியாபார நிறுவனம் எது தெரியுமா?
  தெரியலையே?
  இருட்டுக்கடை அல்வா கடைதான்!
                               டி.கே சுகுமார்.
4 சம்பாதிக்கறதுக்கு தலைவருக்கு மட்டும் எப்படித்தான் புதுபுது ஐடியாவா தோணுதோ!
 ஏன் என்ன செய்யறார்?
 நாலு ஆசிரமங்களை லீஸுக்கு எடுத்து நடத்தறாரே!
                                        பி. முத்துசாமி.
5.குடிச்சுட்டா எதைத்தான் பேசறதுன்னு விவஸ்தையே இல்லாம பேசக்கூடாது தலைவரே!
  ஏன்யா அப்படிச் சொல்றே?
 பின்னே முதல் அமைச்சராக முடியலைன்னா வட்டி அமைச்சராவது ஆவேன்னு நீங்க சொல்றீங்களே அதுக்கு பேரென்ன?
                                      ராஜ்குமார்.
6. தலைவர் சிக்கனத்தை கடைபிடிக்க என்ன வழிச் சொல்றார்?
பெட்ரோல் குண்டுக்கு பதிலா டீசல் குண்டு எரியச் சொல்றார்!
                               கருணை வள்ளல்.
7.தலைவரோட அறுபதாம் கல்யாணத்துல தலைவர் எதுக்கு அந்த தொண்டரை அடிச்சாரு?
இப்பவாவது குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கங்க தலைவரேன்னு சொன்னாராம்!
                                             சி. கோபால்.
8.உங்க அறிவை வச்சு எப்படியாவது பார்லிமெண்ட் தேர்தல்ல ஜெயிச்சாகணும் தலைவரே!
 அடப் போய்யா! நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்!
                                  கு. வின்செண்ட்.
9.ஐ டோண்ட் நோ ன்னா என்னடா அர்த்தம்?
  எனக்குத் தெரியாது!
 அட உனக்கும் தெரியாதா?
                                     ப. ராஜேஸ்வரி.
10.டேய் ரங்கா.. சைக்கிளுக்கு காத்து இல்லைன்னு சொன்னேனே என்ன செஞ்சே?
  ஃபேனுக்கு கீழே நிறுத்தி இருக்கிறேன் முதலாளி!
                    ஸ்ரீரவி ராகுல்.
11. மாப்பிள்ளை கமல் ரசிகரா இருக்கலாம்... அதுக்காக இப்படியா?
   என்ன சொல்றாரு?
கல்யாண வீடியோவை கல்யாணத்துக்கு முதல் நாளே டி டி. எச் ல ஒளிபரப்பணும்னு சொல்றாரே!
                                      ராம் ஆதிநாராயணன்.
12.தலைவர் ஏன் கிடைச்ச பத்மஸ்ரீ பட்டத்தை வேண்டாம்னு சொல்லிட்டார்!
  உங்களுக்கு பத்மஸ்ரீ கிடைச்சிட்டா தன் பதவியை ராஜினாமா செய்துடுவேன்னு மகளிர் அணித்தலைவி பயமுறுத்துறாங்களாம்!
                                     என் சண்முகம்.
13.என்ன சொல்றீங்க இருபது வருஷமா சைக்கிளில் போயும் உடம்பு குறையலையா?
  ஆமாங்க டாக்டர் நான் கேரியர்ல உக்காந்துப்பேன்!
                                 ஜே. தனலட்சுமி

14.நம்ம தலைவர் செய்யற மோசடிக்கு அளவே இல்லாம போச்சு?
என்ன ஆச்சு?
கரண்ட் வேண்டி யாகம் நடத்த போறதா சொல்லி நன்கொடை வசூலிச்சிகிட்டிருக்கார்!
                                         சி. சரஸ்வதி.
15.தலைவர் காற்றாலையை பார்த்துட்டு கோபமாயிட்டாரு!
     ஏன்?
 கரண்ட் இல்லாத நேரத்துல எதுக்கு இவ்ளோ பேன் அப்படின்னுதான்!
                               எம். பூர்ணிமா.
16.நான் சட்டசபைக்கு வருவதில்லை என்று கேலி பேசுவோரை கேட்கிறேன்! நான் கோர்ட்டுக்கு போவது முக்கியமா? இல்லை சட்டசபைக்கு வருவது முக்கியமா?
                                    அம்பை தேவா.
17பக்தையே! ஏன் என் தவத்தை கலைத்தாய்?
  நம்ம ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்கு!
                                              பர்வீன் யூனுஸ்
18.அந்த திருடனுக்கு ஓவர் தெனாவட்டுன்னு எத வச்சி சொல்றீங்க ஏட்டய்யா?
   நாங்க பூட்டுல கைவச்சாத்தான் நீங்க வீட்ல கால் வைக்க முடியும்னு சொல்றானே!
                                  காயல் ஹாஜா.
19.குறுகிய காலத்துல நீங்க எப்படி ஆயிரம் கோடி சம்பாதிச்சீங்க?
   ஜட்ஜ் ஐயா! ஆர்வத்துல கேக்கறீங்களா? இல்ல ஆதங்கத்துல கேக்கறீங்களா?
                                    பெ. பாண்டியன்.
20.தலைவர் மலை வாசஸ்தலத்துல ஓய்வு எடுக்கும் போதே நினைச்சேன்!
   என்ன ஆச்சு?
 அவர் மேல மலை அபகரிப்பு வழக்கு போட்டிருக்காங்க!
                                             சிக்ஸ் முகம்.

நன்றி: வாரமலர், சிறுவர்மலர், ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


Thursday, April 25, 2013

சித்திரை முழுநிலா நாள்!


    சித்திரை முழுநிலவு நாள் அன்று, நிலா சோறு சாப்பிடும் வழக்கம், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தமிழர் பண்பாட்டில், பவுர்ணமிக்கு தனி இடம் உண்டு. சங்க இலக்கியங்களில், பவுர்ணமி அன்று கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய தனிப் பட்டியலே இருக்கிறது.முழு நிலவை கொண்டாடுவது என்பது உலகம் முழுவதும் இருந்தாலும், தமிழகத்தில் அதற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. குறிப்பாக சித்திரா பவுர்ணமி தினத்தன்று, வீடுகளிலும் கோவில்களிலும் பல்வேறு சிறப்பான சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

அன்றைய இரவு பொழுதை, ஆற்றங்கரைகளில், குடும்பத்துடன் கழித்து மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. உலகமயமாதல் போன்றவற்றால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதுபோன்ற பாரம்பரிய பழக்கங்கள் இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆற்றங்கரை தோப்புக்கள்...:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. இந்த ஆற்றங்கரைகளில், அடர்ந்த, அருமையான தோப்புக்களும் உள்ளன.சித்திரை முழு நிலவு அன்று, சொந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, விதம் விதமான உணவுகளை சமைத்து, இந்த ஆற்றங்கரை தோப்புக்களில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. உறவுகள் எல்லாம் ஒன்று கூடி, குடும்ப விஷயங்களை குதூகலமாக பேசும் அந்த சந்தோஷ நிமிஷங்களை, இன்றும் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அனுபவிக்க தயங்குவதில்லை. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஐயங்கார் குளம் கிராமத்தில் பிரபல உற்சவமான நடவாவி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு வருவோர் தங்களுக்கு பிடித்தமான உணவினை சமைத்து வந்து, வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து விட்டு, தாங்கள் எடுத்து வந்த புளியோதரை, சாம்பார் சாதம் உள்ளிட்ட வகை வகையான உணவுகளை நிலவொளியில் உண்டு மகிழ்கின்றனர்.

உறவுகளின் சங்கமம்: ஓரிக்கை, காவாந்தண்டலம், வாலாஜாபாத் உள்ளிட்ட ஆற்றுப்படுகை பகுதிகளிலும் மக்கள் வீடுகளில் சமைத்து வந்து தரை விரிப்பான்கள் விரித்து நிலா சோற்றை உண்டு, கதை பேசி அதிகாலை புறப்பட்டு செல்வதும் நடைமுறையில் உள்ளது.பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடமாக உள்ள திருமுக்கூடல், பழைய சீவரம், பழவேலி ஆற்றங்கரை சித்திரா பவுர்ணமி நாளில் களை கட்டி இருக்கும்.
மெலிதாக வீசும் தென்றலோடு, நிலவொளியில், ருசியான உணவுகளை உண்டு மகிழ்வதற்காக ஒரு பெரும் கூட்டமே அங்கு வரும். இந்த நாளில், இங்கு, நதிகள் மட்டுமல்லாமல், உறவுகளும் சங்கமமாகி, சந்தோஷப்படுகின்றன.                                                                                                                                                                         நன்றி: தினத்தந்தி, தினமலர்

Tuesday, April 23, 2013

பி.பி.சியில் பேசிக் படித்த கதை பகுதி 2


அன்புக்கு பணிந்த கதையும்!  ஆணவத்தினை பணியவைத்த கதையும்!


சென்ற பகுதியில் பிபிசியில் பேசிக் படித்த கதை என்று கணிணி கற்றுக் கொண்ட நாள்களை நினைவு கூர்ந்தேன்! ஆமாம் அது என்ன பிபிசி என்று யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தேன். நீங்களும் கேட்கவில்லை! நானும் கதை நிகழ்ந்த வேகத்தில் சொல்லவில்லை! பாரத் பிரில்லியண்ட் கம்ப்யூட்டர் செண்டர் என்பதன் சுருக்கமே பிபிசி.
     சென்ற பகுதியில் பவானி மேடம் டெஸ்ட் வைத்தார்கள் நாங்கள் யாரும் ஐந்து மதிப்பெண்களை கூட தாண்ட வில்லை! என்று சொல்லியிருந்தேன். மேடம் கிளாஸிற்கு வராமல் ரிசப்ஷனில் அழுது கொண்டு இருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா?. ரமேஷ் சார்! இனிமே மேடம் கிளாஸ் எடுக்க மாட்டேன்னு சொல்றாங்க! வேலையை விட்டும் நின்னுக்க போறாங்களாம்! நீங்க என்ன இந்த மாதிரி விளையாட்டுத்தனமா இருக்கீங்க என்றார்.
  அன்று ஆகஸ்ட் பதினைந்து சுதந்திர தினம். நான் அப்போது நடத்திக் கொண்டிருந்த சங்கத்தில் கொடியேற்றி விட்டு இன்ஸ்ட்யூட்டில்  அனைவருக்கும் கொடியும் சாக்லேட்டும் கொண்டு சென்று  கொடுத்திருந்தேன். என்னப்பா சுரேஷ்! கொடியெல்லாம் ஏத்தி சுதந்திர தினம் கொண்டாடறே! ஆனா படிக்க மாட்டியா? என்று ரமேஷ் கேட்டார். தலை குனிந்து கொண்டேன். நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே! உங்க மேமை நீங்களே கன்வின்ஸ் பண்ணுங்க! என்று அவர் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
    கிளாஸில் யாருக்குமே மேடமை பார்க்கும் துணிவு இல்லை! முதலில் பெண்களை அனுப்ப முடிவு செய்தோம். என் அக்காவின் ப்ரெண்டான ரமாதேவியும் அவரின் தோழிகளும் ரிசப்ஷணுக்கு சென்று மேடமை அழைத்தார்கள். நாங்களும் பின் தொடர்ந்து சென்றோம்.கலங்கிய கண்களை துடைத்துக் கொண்ட மேம் நான் இன்னாப்பா பண்ணேன்! ஏன் இப்படி மார்க்ஸ் எடுத்து இருக்கீங்க! ஒருத்தரும் சரியா ப்ரஸெண்ட் பண்ணலை! வெறுத்துப் போச்சு! நான் நடத்தறது புரியலைன்னா நீங்க சொல்லியிருக்கலாம் இல்லையா? என்றார்.
        வெங்கட் குமார்! எங்களில் சீனியர். அவன் தான் முதலில் வாயைத்திறந்தான். மேம்! இப்ப தமிழ்ல பேசறீங்க இல்லை! கிளாஸ் எடுக்கும்போது மட்டும் நீங்க பீட்டர் விட்டா எங்களுக்கு எப்படி புரியும்? என்றான்.
   மேடம் சிரித்து விட்டார்! அப்ப நான் இங்கிலீஷ்ல சொன்ன எதுவுமே உங்களுக்கு புரியலையா? அதான் விஷயமா?
   அதுதான் விஷயமே! இங்கிலீஷ்லயே பேசிட்டு போனா எங்க யாருக்கும் புரியாது. நாங்க எல்லோரும் தமிழ் மீடியம் படிச்சவங்க! சுமாராத்தான் இங்கிலீஷ் தெரியும்! என்றான் குமார்.
   ஆனா கம்ப்யூட்டர் கோர்ஸை இங்கிலீஷ்ல தானே நடத்த முடியும்!
 மேம்! எல்லாத்தையும் தமிழ் படுத்த வேண்டாம்! எங்களுக்கு புரியறாமாதிரி சொல்லித்தந்தா போதும்! என்றோம். இந்த வாரம் திரும்பவும் கிளாஸ் எடுங்க! அடுத்த டெஸ்ட்ல நாங்க மார்க் எடுக்கலன்னா அப்ப நீங்க கேளுங்க என்றோம்.
   மேடமும் ஒத்துக் கொண்டார். அந்த வாரம் முழுவதும் மீண்டும் அதே பாடத்தை நடத்தி கடைசியில் டெஸ்ட் வைத்தார். இந்த முறை அனைவரும் 20ஐ தொட்டு நல்ல  மதிப்பெண்கள் எடுக்க மேடமிற்கு மகிழ்ச்சி. எங்களில் ஒருவராகி போனார். அவர். ஆகஸ்ட் மாதம் வந்த அவர் டிசம்பர் இறுதியில் இன்ஸ்ட்டியுட்டை விட்டு  விலகப் போவதாக சொன்ன போது அனைவருக்கும் அதிர்ச்சி. எங்களுடன் படித்த ஜகன் அழுதே விட்டான். ஆனால் அவர் படித்த படிப்புக்கு இன்ஸ்டிடியூட் வேலை சரியல்ல! நல்ல வேலை கிடைக்கும் போதே பிடித்துக் கொள்வதுதான் சிறப்பு என்று சொன்னார். அவருக்கு பிரிவு உபசார விழா வைத்து பரிசு கொடுத்து வழி அனுப்பி வைத்தோம். இது நாங்கள் அன்புக்கு அடிபணிந்த கதை.
  அதே சமயம் ஆணவத்திற்கு எதிராக எழுந்த கதை ஒன்றும் இந்த கணிணி வகுப்பில் உண்டு. ரமேஷ் சார் ஓனர் என்றால் அவரது தங்கை ஒருவரும் வகுப்புக்கள் எடுப்பார். அவர் பெயர் அருணா. பவானி மேம் வருவதற்கு முன் அவர்தான் சிலவகுப்புக்கள் எடுத்தார்.  அந்த சமயம் அசைன்மெண்ட் சமர்ப்பிக்கும் படி ஏதோ சில ப்ரொகிராம்கள் கொடுத்தார்.

   இடையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை இருந்ததால் திங்கள் கிழமை வகுப்புக்கு சென்றொம். வகுப்பில் சென்று  அமர்ந்திருந்த போது அருணா மேம் வந்தார். அசைண்மெண்ட் எங்கே முடிச்சிட்டீங்களா? என்று கேட்டார்.  முடிச்சிட்டோம் மேம் என்றோம்.
   கொண்டாங்க என்றார். அனைவரும் பேப்பர்களை கொடுத்தோம். முழு வெள்ளைப் பேப்பரில் எழுதி இருந்தோம். ஓரம் மடித்து எழுதி இருந்தோம்.
   பேப்பர்களை வாங்கி பார்த்த மேமிற்கு ஆத்திரம் வந்தது.
  இதுக்கு பேர்தான் அசைன்மெண்டா? இப்படித்தான் சப்மிட் பண்ணுவீங்களா? ஒரு மார்ஜின் போடலை முக்கியமான வேர்ட்ஸை ஸ்கெட்ச் பண்ணலை! ஃப்லோ சார்ட்ஸ் எல்லாம் கோணல் மாணலா இருக்கு இப்படியா ஒரு அசைண்மெண்ட் சப்மிட் பண்ணுவீங்க! யூஸ்லெஸ் ஃபெலோஸ்! என்று கொதித்து எழுந்தார். பேப்பர்களை முகத்தில் விசிறி அடித்தார். கிளாஸை விட்டு வெளியேறி விட்டார். அப்புறம் அவர் வரவே இல்லை.
   உண்மையில் எங்கள் யாருக்கும் அசைண்மெண்ட் எப்படி சப்மிட் செய்வது என்று தெரியாது. அரசு மேனிலைப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் நாங்கள்! ஆங்கில எழுத்தே ஒழுங்காக அழகாக எழுதத் தெரியாது. முதலிலேயே இப்படி இப்படி பண்ண வேண்டும் என்று யாராவது சொல்லி யிருந்தால் அதே மாதிரி செய்து இருப்போம். எழுதி முடித்தபின் இப்படி எழுதக் கூடாது! இப்படி எழுதவேண்டும் என்று சொல்லியிருக்கலாம் அதை விட்டு ஓவராக ஆணவத்தில் மேடம் ஆடுவதாக எங்கள் அனைவருக்கும் தோன்றியது.
  நாம் என்ன பள்ளி பிள்ளைகளா? இப்படி மிரட்டுவதற்கும் முகத்தில் அடிப்பதற்கும்! நாம் பணம் கட்டுவதால்தானே இந்த இன்ஸ்ட்யூட் நடக்கிறது. இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் பேட்ச்சில் உள்ள பத்து பேரும் கூடினோம். நாளை கிளாஸை  அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்று முடிவெடுத்தோம். இதற்கு மாணவிகள் கூட ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால் லீலா மானுஷா என்ற சக மாணவன் மறுத்து விட்டான்.
   அவன் மேடம் வீட்டிற்கு பக்கத்திலேயே இருப்பவன். அதுவும் இன்றி தான் தான் புத்திசாலி என்ற மமதையும் அவனுக்கு உண்டு. மேமிற்கு ஜிங் சாங் என்று நாங்கள் எப்போதும் அவனை கூறுவோம். அவன் இந்த விசயத்தில் எங்களோடு ஒத்து போகவில்லை! சரி நாம் ஏன் நின்றோம் என்று தெரியவைக்க ஒருவன் வேண்டும். அது அவனாக இருக்கட்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் அனைவரும் புறக்கணிக்க லீலா மானுஷா மட்டும் வகுப்புக்கு சென்றுள்ளான்.
  மத்தவங்க ஏன் வரலை என்று அருணா மேடம் கேட்க அவன் விசயத்தை போட்டு உடைத்துள்ளான்.
  மறுநாள் நாங்கள் கிளாஸிற்கு சென்றோம். ஏம்பா இப்படி பண்ணீங்க! நான் உங்க நல்லதுக்கு இல்லே அப்படி பண்ணினேன் என்றார்கள் அருணா மேம்.
  நிங்க எங்களை ஸ்கூல் பசங்களை விட கேவலமா நடத்தறீங்க! இத மாதிரி செய்யாதீங்க!  பேப்பரை முகத்தில் விசிறி எறியறீங்க! நாங்க என்ன குழந்தைங்களா? நீங்க என்ன செய்தாலும் பொறுத்து போக என்றான் குமார்.
   சாரி! இனிமே அப்படி நடக்காது என்றார் அருணா மேம். அதன் பின் அவர் எங்களுடன் ஜாலியாக பேச ஆரம்பித்து விட்டார். நாங்களும் அந்த பிரச்சணையை மறந்து விட்டோம். பவானி மேம் வேலை செய்கையில் எங்களுக்கு கோபால் என்று ஒரு லாங்க்வேஜ் கற்றுக் கொடுக்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் பெயரில் ஹீரோ! ஆனால் எங்களுக்கு எல்லாம் வில்லனாக தெரிந்தார். இவரை எப்படி துரத்துவது என்று நானும் ஜகனும் கூடி யோசித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவர் பெயர் ரஜினி!
இனிய நினைவுகள் தொடரும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, April 22, 2013

புகைப்பட ஹைக்கூ 25


புகைப்பட ஹைக்கூ 25


 ஈரம் வற்றியதும்
 வெடித்தது
 பூமி!

உடைந்தது நிலம்
உடையவில்லை
நட்பு!

வற்றல் பூமியில்
வட்டமேசை
மாநாடு!

காய்ந்த ஏரியில்
மேய்ந்தன
பிள்ளைகள்!

சுட்டெரித்த சூரியன்
சுருங்கிப் போன
நிலமகள்!

இரத்தம் வற்றியதும்
சுருங்கிப்போனது
முகம்!

விளையாட்டு மைதானமானது
கோடையில்
ஏரி!

குடித்துக்
கெட்டது
குளம்!

வற்றிப் போனதால்
வறண்டு போனது
நிலம்!

வாய் பிளந்த நிலம்
தாகம் தீர்க்குமா
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, April 20, 2013

ஐந்து முட்டாள்கள்! பாப்பாமலர்!


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

ஆம் மன்னா!”


அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்புஎன்றார்.


அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னாஎன்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

தொடரும்என்றார் மன்னர்.

மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான்இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

சரி அடுத்து

இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்

களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர்அடுத்ததுஎன்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவதுஎன்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்என ஒத்துக் கொண்டார் மன்னர்.

சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.,
மன்னா.! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு வலைப்பூவே கதி     என வாழ்ந்து, இந்த மொக்கையான கதைக்கு வந்து, நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி படித்துகொண்டிருக்கிறாரே, இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

நன்றி முக நூல்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...