வல்லவனுக்கு வல்லவன்! பாப்பா மலர்!



வல்லவனுக்கு வல்லவன்!

இந்த உலகில் நாம் தான் திறமைசாலி, புத்திசாலி மேதாவி என்பது போல பலர் நடந்து கொள்கிறார்கள். கற்றவர்களுக்கு பணிவு வேண்டும். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பது பழமொழி. இதை அறியாமல் பலர் தானே சிறந்தவன் என்று கூத்தாடுகிறார்கள். பின்னர் அவர்கள் வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. .இப்படி தற்பெருமை பட்ட திருடன் ஒருவன் ஏமாந்த கதை இது. வாய்வழியாக கேட்டதை எழுத்தாக சொல்லி இருக்கிறேன். படித்து மகிழுங்கள்!
 ஒரு ஊரில் மகா புத்திசாலியான திருடன் ஒருவன் வசித்து வந்தான். பிறரை ஏமாற்றி திருடுவதே அவன் தொழில்.தினமும் ஒருவரையாவது ஏமாற்றி பணமோ பொருளோ லவட்டி விடுவான். இவன் வருகிறான் என்றாலே எதையாவது ஏமாறப் போகிறோம் என்று மக்கள் அஞ்சி நடுங்கினார்கள். ஏமாந்து போய் பொருளை இழப்பதால் புகார் கூறவும் வெட்கப்பட்டு விட்டு விடுவார்கள். இது அந்த திருடனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது.
   தான் என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற நிலையில் தனது புத்திசாலித்தனத்தை தானே மெச்சிக் கொள்வான். ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள். நமக்குத்தான் எல்லோரையும் ஏமாற்றத்தெரியும் எல்லோரும் ஏமாளிகள் என்ற நினைப்பு அவனுக்கு தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பே அவனுக்கு உற்சாகத்தை கொடுக்க தவறு செய்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் பலரது பொருள்களை கொள்ளையடித்து வந்தான்.
    ஒருநாள் இப்படி யாரையோ ஏமாற்றி ஒரு மூட்டை நிறைய தங்கம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான் அந்த திருடன். அது ஊரில் ஒதுக்கு புறமான பகுதி. அந்த ஒதுக்கு புறத்தில் கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றடியில் சிறுவன் ஒருவன் நின்று கிணற்றை எட்டிப்பார்ப்பதும் அழுவதுமாக இருந்தான். திருடனுக்கு சிறுவனின் செய்கை வித்தியாசமாக இருக்கவே அவனை நெருங்கி  தம்பி! ஏன் அழுகிறாய்? என்ன விசயம் என்று கேட்டான்.
   அந்த சிறுவன், அண்ணே! எங்க அம்மா ஒரு பெரிய வெள்ளிச் சொம்பை கொடுத்து பால் வாங்கிட்டு வரச் சொன்னாங்க! அதை எடுத்து வந்த நான் இந்த கிணத்து மேல வைச்சிட்டு பக்கத்துல இருந்த மாங்கா மரத்துல மாங்காய் பறிக்க கல் அடிச்சிகிட்டு இருந்தேன். அப்ப பலமா அடிச்ச காத்துல சொம்பு கிணத்துல விழுந்துடுச்சி! சொம்பு இல்லாம போனா அம்மா அடி பிண்ணிடும் அண்ணே! கிணத்துல இறங்கவும் பயமா இருக்கு! அதான் அழுதுகிட்டு இருக்கேன்! என்று சிறுவன் அழுதபடி கூறினான்.
   டேய் சொம்பு! நல்ல பெரிய சொம்பாடா! படி பாலாவது பிடிக்குமா?
 ஆமாண்ணே! நல்ல பெரிய சொம்பு இவ்ளோ பெரிசு இருக்கும்! சிறுவன் கையை விரித்துக் காட்டினான்.
   திருடனுக்கு இன்று நான் நரிமுகத்தில் விழித்தோம்! என்று சிரிப்பு வந்தது. கிணற்றில் இறங்கி அந்த சொம்பையும் லவட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான். சரி  தம்பி அழாதே அந்த சொமபை நான் எடுத்து தரேன்! அதுவரை இந்த மூட்டையை நீ பத்திரமா பாத்துக்கணும் என்ன? என்றான்.
   கண்டிப்பா அண்ணே! நீங்க வெள்ளிச் சொம்பை எடுத்துக் கொடுத்தீங்கன்ணா எங்கம்மா கிட்ட அடி வாங்காம தப்பிச்சிடுவேன்! நான் பத்திரமா உங்க மூட்டையை பாத்துக்கறேன் நீங்க கவலைப்படாம இறங்குங்க! என்றான் சிறுவன்.
திருடன் கிணற்றினுள் இறங்கினான். தண்ணீரின் அடி ஆழம் வரை துழாவினான். ஒரு சொம்பும் கிடைக்க வில்லை! ஒரு முறைக்கு இரண்டுமுறை தேடிப் பார்த்தான். எதுவும் கிடைக்காது போகவே ஆத்திரமுடன். டேய் பையா! என்னையா ஏமாற்றுகிறாய்? உள்ளே ஓண்ணும் கிடைக்கலயே! மெய்யாலுமா வெள்ளிச் சொம்பை கிணத்துல போட்டியா என்றான்.
  வெளியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை! டேய் பையா! பையா! என்று கூப்பிட்டு பதில் வராது போகவே வேகமாக மேலேறி வந்தான். அங்கு அந்த பையனையும் காணவில்லை! அவனது மூட்டையையும் காணவில்லை!
   திருடனுக்கு அப்போதுதான் உறைத்தது! பையன் நம்மை ஏமாற்றிவிட்டான் என்று! நாம்தான்பெரிய  ஏமாற்றுக் காரன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! இன்று என்னையும் ஒருவன் ஏமாற்றி விட்டானே! பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் அல்லவா இழந்து விட்டேன்! என்று வருந்தியபடி தன் வீடு போய் சேர்ந்தான்.
  வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு! உயர்வு வரும் போது பணிவு வேண்டும்! பிறரை ஏமாற்றி பிழைக்க கூடாது!
 தெரிந்து கொள்வோம்!
1. ங்காரு பூமி என்ழைக்கப்டுது ஆஸ்திரேலியா.
2.யிரம் ரிளின் பூமி என்ழைக்கப்படுது பின் லாந்து
3.குவேக்கர் ரம் என்து பிடெல்பியா
4.தங்வாசல் ரம் என்து சான் பிரான்சிஸ்கோ
5.ண்ணீர் வாசல் என்து பாபல் மண்பம்  
   
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பணிவு எப்போதும் வேண்டும்... தெரிந்து கொள்வோம் தகவல்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. நல்ல படிப்பினை ஊட்டும் கதை ...திருடர்களுக்கும் ,
    அகந்தையில் அலைபவர்களுக்கும் !

    ReplyDelete
  3. அருமையானா கதை... பின்னால் தந்திருக்கும் துனுக்குகளும் மிக அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  5. சிறுவர்களுக்கேற்ற குட்டிக் கதை.
    பொது அறிவுத் தகவலும் பயனுள்ளவை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!