Tuesday, October 30, 2012

தாக்க வருகிறது நிலம் புயல்! தப்பிக்க சில டிப்ஸ்! தட்ஸ் தமிழ் தகவல்!

சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது.
அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது.
இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது.
மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்கம்பங்கள் சாயலாம்
பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்
புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்
சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்
புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.
மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்
மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.
தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அவசர உதவிக்கு...
புயல் மற்றும் மழை வெள்ளம் குறித்த விவரங்களை அறிய சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் தொலைபேசி எண்: 044-28447727 .
சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி! தட்ஸ் தமிழ்

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 12பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 12

உங்கள் ப்ரிய பிசாசு

முன்கதை சுருக்கம்: ரவிக்கு பிடித்துள்ள பேயை விரட்ட திருப்பதிக்கு அழைத்து செல்கிறான் முகேஷ். பாதி வழியில் காணாமல் போகும் ரவி, முகேஷிற்கு போன் செய்து தன்னை தேடாமல் வீட்டுக்கு செல்லுமாறு கூறுகிறான். திருப்பதியில் இறங்கியதும் பைத்தியக்காரன் போன்ற தோற்றமுள்ள ஒருவன் முகேஷை கூப்பிடுகிறான். ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வி வினோதமாக நடந்து கொள்கிறாள். அவள் ஒரு ஆளில்லா வீட்டில் நுழைந்ததாக வினோத் கூற அது பூட்டப்பட்டிருக்கிறது வினொத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக மணி கூறுகிறார்.
முந்தைய பகுதிகளுக்கான லிங்க்

   இனி!
  
கண்டிப்பாக பைத்தியம் முற்றிவிட்டது என்று மணி கூறவும் வினோத், இல்லீங்க ஐயா, நான் பைத்தியம் இல்லே! செல்வி இதுக்குள்ளாறத்தான் இருக்கா! உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசையும் ஏதோ சமையல் வாசனை கூட  என் மூக்குக்கு உறைக்கிறது கொஞ்சம் நம்புங்க! என்றான்.
   சரிப்பா! நம்பறோம்! செல்வி இதுக்குள்ளாற இருந்தாலும் இருக்கட்டும் இப்ப நாம வீட்டுக்கு போவோம்! இந்த அர்த்த ராத்திரியில இங்க நின்னுகிட்டிருக்கிறது தப்பு என்றார் மணி.
   என்ன சொல்றீங்க நீங்க? செல்விய தனியா விட்டுட்டு போறதா?  மறுபடியும் முதலில் இருந்தா? ஐயோ! என்று தலையில் கைவைத்துக் கொண்டார் மணி
   இப்போது ராகவன் வினோத்தை தொட்டு அழைத்தான். வினோத் நீ ஏதோ கனவு கண்டு மிரண்டு போயிருக்கே! செல்வி எங்காத்துல பத்திரமா தூங்கிகிட்டு இருக்கா? நீ வேற யாரையோ பாத்திருக்கலாம்
   அப்ப பூஜாரி வீட்டுல நடந்தது ஊரே திரண்டு வந்ததே?
 பூஜாரி வீட்டுல என்ன  நடந்தது?
நீ கூடத்தானே இருந்தே?
நான் எங்க இருந்தேன்? இப்பத்தான் உன்னை காணாம தேடிகிட்டு துணைக்கு இவரையும் கூப்பிட்டு கிட்டு வரேன்.
  என்னடா சொல்றே? செல்வி ராத்திரியில எழுந்து போய் பூஜாரியை மிரட்டினா? ஊரெல்லாம் கூடிச்சு! அப்புறமா இல்ல நாம எல்லோரும் கிளம்பி வந்தோம்! கொஞ்சம் முன்னாலே நடந்த செல்வி இந்த வீட்டுக்குள்ளே புகுந்துகிட்டா?
   இல்லடா வினோத்! உனக்கு ஏதோ குழப்பம்! ராத்திரி சரியா தூங்காம கனவு கண்டுட்டு இப்படி உளற்ரே!
   இது உளறல் இல்லடா! நிஜம்! நான் கண்ணால பார்த்தது!
எதை கண்ணாலே பார்த்தே?செல்வி இந்த வீட்டுக்குள்ளாற நுழைஞ்சதை!
பூட்டியிருக்கிற வீட்டுல யாராவது நுழைய முடியுமாடா? நீயே நல்லா பாரு! டார்ச் லைட்டை கதவில் அடித்து காண்பித்தான் ராகவன்.
பெரிய பூட்டு ஒன்று தொங்க வினோத் அமைதியானான்.
 அப்ப நான் கண்டதெல்லாம் கனவா? செல்வி வீட்டுலதான் இருக்காளா?
ஆமாம் அவ நல்லா தூங்கிகிட்டு இருக்கா! நீதான் தேவையில்லாம குழம்பிக்கிறே!
நம்ப மாட்டாதவனாக வினோத் மீண்டும் கதவில் காது வைத்து பார்த்தான். ஒன்றும் கேட்க வில்லை! நிசப்தம்.
   தூரத்தில் ஜாமக் கோழி கூவியது. சில்வண்டுகள் ரீங்காரம் தவிர ஏதும் இல்லை!
வினோத் மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம என்னோட ஆத்துக்கு வா! நாளைக்கு காலையில முதல் வேளையா பாயை பார்த்து மந்திரிச்சிக்கிட்டு வந்திடலாம்.எல்லாம் சரியா போயிடும்.
 வினோத் அரை மனதாய் அங்கிருந்து கிளம்பினான்.
இன்னிக்கு யாரு முகத்தில முழிச்சேனே என்னோட பாதி தூக்கம் போச்சு! ஏஞ்சாமி! எல்லாமே விவகாரமா இருக்கே? என மணி  கேட்க
   உங்க பேத்திக்கு பேயி பிடிச்சிகிச்சுன்னு சொன்னீங்களே அதை பாதியில விட்டுட்டீங்களே மீதியை சொல்லுங்களேன். விடியற வேளை வந்தாச்சு! இனி தூக்கம் ஏது? அதையாவது கேப்போம் என்றான் ராகவன்.
    அது ஒரு பெரிய கதைப்பா! அது என்னாதுக்கு இந்த வேளையிலே!
பாதி கதை சொல்லீட்டீங்க? மீதிய சொல்லக் கூடாதா?
  மீதி என்னா இருக்கு சொல்ல?
பாயிகிட்டே போயி மந்திரிச்சோம்! தாயத்து கொடுத்து மந்திரிச்சாரு பேயி ஓடிப்போயிடுச்சு!
   அதான் அது எந்த பேயி? எப்படி ஓடிச்சு? கேட்டுக்கொண்டே நடக்க இதற்குள் ராகவனின் வீடு வந்திருந்தது. வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருக்க செல்வி அங்கு நின்று கொண்டிருந்தாள். இந்த நேரம் கெட்ட நேரத்துல இப்படி மூணு பேரும் எங்க போயி சுத்திட்டு வர்றீங்க? என்றாள்.
   வினோத்தால் தன் கண்களாலேயே நம்ப முடியவில்லை! ஏய் செல்வி நீ எப்படி இங்க? நீ நடு ராத்திரியில எழுந்து வெளியே போகலை?
  இன்ன விளையாடுறியா வினோத்? நான் எங்க வெளிய போனேன்? நீதான் அர்த்த ஜாமத்துல வெளியே போயிட்டு சாவகாசமா வந்துகிட்டிருக்கே! உன்னை காணாம நான் தவிச்சிகிட்டு இருந்தா என்னை வெளிய போனதா கதை அளக்கிற?
   இல்ல செல்வி! நீ வெளியே போனே! வினோத் ஆரம்பிக்கவும் ராகவன் அவன் கையை பிடித்து அழுத்தினான். மெதுவாக அவன் காதில் கிசுகிசுத்தான். வீணா பிரச்சனை பண்ணாதே நாளைக்கு பாய் கிட்ட பாத்துக்கலாம் பேசாம உள்ளே போ என்றான்.
   வினோத் அமைதியானான். ஆமாம் செல்வி எனக்குத்தான் ஏதோ ஆயிடுச்சி உளறிகிட்டு இருக்கேன். தூக்கத்துல எழுந்து வெளியே போயிட்டேனாம்! இவங்கதான் வந்து அழைச்சிகிட்டு வந்தாங்க்க! என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான் வினொத்
    பின்னாலேயே நுழைந்தனர் மணியும் ராகவனும் மூவரும் சோபாவில் அமர  செல்வியும் வந்து அமர்ந்தாள். என்ன உக்கார்ந்திட்டீங்க? தூங்க போகலியா?
இனிமே எங்கேம்மா தூக்கம் அதான் விடியற பொழுதாயிட்டுதே என்றார் மணி.
   மணி அங்கிள்! நீங்க அன்னிக்கு உங்க பேத்திக்கு பேய் பிடிச்சதா இவங்க கிட்டே சொன்னீங்க தானே! அதை திரும்பவும் சொல்லுங்களேன் என்றாள் செல்வி.
  நான் சொன்னது உனக்கு எப்படிம்மா தெரியும்? வினோத் உங்கிட்ட சொன்னானா?
   இல்லேயே?
அப்ப எப்படி உனக்கு தெரிஞ்சதும்மா?
எனக்கு இதுவும் தெரியும்? நாளைக்கு நீங்க பாய்கிட்ட மந்திரிக்க போவதும் தெரியும்! ஆனா இதுக்கெல்லாம் பயப்படமாட்டாள் இந்த வீணா! என்றாள் செல்வி.
  என்ன என்ன சொன்னே?
அங்கிள் என்னாச்சு கதையை சொல்லுங்களேன் என்று சிரித்தாள் செல்வி
மணி அவளையே மிரட்சியாக பார்த்தார்.

 திருப்பதி பஸ் நிலையத்தில் முகேஷ் தம்புடு! முகேஷ் தம்புடு! நில்லண்டி! என்று  தன்னை துரத்தி வரும் அந்த பைத்தியக்காரனை பார்த்து சற்று மிரண்டுதான் போய்விட்டான்.  இருந்தாலும் ஓடக்கூடாது! என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்று நின்று நான் தான் முகேஷ்! உங்களுக்கு என்ன வேணும் எனக்கு தெலுங்கு தெரியாது தமிழில் செப்பண்டி! என்றான்.
   ஏன் தம்பி! தெலுங்க்கு தெலேதுன்னு சொல்லிட்டு செப்பண்டின்னு தெலுகுல மாட்லாட்தாறே என்றான் அவன்.
  ஓ! சாரி! எனக்கு ஒண்ணு ரெண்டு தெலுங்கு வார்த்தைகள் தெரியும் உங்களுக்கு புரிய வைக்கறதுக்காக சொன்னேன். நீங்க நல்லா தமிழ் பேசறீங்க?
   நான் தமிழ் நாடுதான் தம்பி! பிழைப்புக்காக இங்க வந்து கத்துகிட்டதுதான் தெலுங்கு!
  சரி உங்களுக்கு என்ன வேணும்? ஏன் என்னை கூப்பிட்டீங்க? என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேள்விகளை அடுக்கினான் முகேஷ்.
  நீங்கதான் வேணும் தம்பி! உங்க சித்தப்பாருதான் அழைச்சிட்டு வரச் சொன்னாரு! அவர்தான் உங்க அடையாளத்தையும் பேரையும் சொன்னாரு. என்றான் அவன்.
   என்னது எங்க சித்தப்பா அழைத்து வரச் சொன்னாரா? அவருக்கு நான் வருவதை இன்பர்மேஷன் பண்ணவே இல்லையே? அவர் எப்படி கூப்பிட்டு வரச்சொல்லியிருப்பார்? முகேஷ் யோசித்துக் கொண்டிருக்க
   தம்புடு! சுவாமிஜி அந்துரு தெலுசு! அவருக்கு எல்லாம் தெரியும்! அவர்தான் எங்க தெய்வம்! அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை! அவருதான் என்கிட்டே உன்னை அழைத்து வரச் சொன்னது என்று அவன் கூறவும். முகேஷ் தயங்கினான்.
  உங்க பேரு என்ன?
சந்திரன்! நான் அவராலத்தான் உயிரோட இருக்கேன்! சாக கிடந்த என்னை காப்பாத்தினவரு அவரு! நீ என்னை நம்பி தாரளமா வரலாம் என்றான்.
   இல்லே! நான் கிளம்பினதுல இருந்தே பிரச்சனை! அதான் யோசிக்கிறேன்
எல்லாம் சுவாமிஜி பார்த்துப்பாரு! நீ வா! வந்து என் ஆட்டோவில் உக்காரு! பத்தே நிமிசத்துல சுவாமிஜியோட குடிலுக்கு போயிடலாம் என்றான்.
 அப்போது முகேஷின் செல்போன் ஒலித்தது! எடுத்தான் சித்தப்பா காலிங் என்று எழுத்துக்கள் மின்ன ஆன் செய்து காதில் வைத்தான்.
  முகேஷ்! உன்னை தேடி சந்திரன்னு ஒருத்தன் வந்திருக்கானா?
ஆமாம் சித்தப்பா! நீங்க அனுப்பிச்சதா சொல்றார்!
  நான் தான் அனுப்பினேன் அவன் கூட கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்திரு உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியும்! எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்றார்.
  முகேஷ் ஆச்சர்யத்துடன் செல்லை ஆப் செய்து வாங்க போகலாம் என்று சந்திரனின் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.
 ஆட்டோ திருச்சானூர் சாலையில் சீறிப் பாய்ந்தது!
                                   மிரட்டும்(12)

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, October 29, 2012

தளிர் லிமரைக்கூக்கள்!
 தமிழ் தோட்டம் என்னும் தளத்தில் ஹைக்கூ சென்ரியு, லிமரைக்கூ என்று பல கவிஞர்கள் தமது படைப்புக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் இணைந்துள்ள நான் நண்பர் கவியருவி ரமேஷ் மூலம் லிமரிக் எழுத பயின்றேன் சில லிமரிக்குக்களை எழுதியும் வந்தேன். 
    லிமரிக் பற்றி கவிஞரின் விளக்கம் கீழே அதன் பின்னர் எனது லிமரிக்குகள்! படித்து கருத்திட்டால் அகமகிழ்வேன்! மிக்க நன்றி!
  
லிமரைக்கூ
ஆங்கிலத்தில்லிமரிக்என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன்லிமரைக்கூவைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாகலிமரைக்கூவைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின்லிமரிக்வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானியஹைக்கூவின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டுலிமரைக்கூஎன்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.


 

வார்த்தை தடுமாறினால் பிழை!
வான்
மேகம்
தடம்
மாறினால்
வராது
ழை
!

மழையிலிருந்து காப்பது குடை!
மற்றோருக்கு
அதை
கொடுத்து
மனிதம்
காப்பது
கொடை

அதிகாலையில் விழிப்பு
அதிக
கவனமுடன்
படிப்பு
அளித்துவிடும்
வெற்றிவாய்ப்பு
 
வியர்வை சிந்தினால் உழைப்பு
உயர்வை
எண்ணினால்
வராது
களைப்பு

உருவத்தில் சிறியது சித்தெறும்பு
உணர்த்தும்
நீதி
எது
?
சிறுசேமிப்பு

யானைக்கு ஒருகை அது தும்பிக்கை!
மனிதனுக்கு
இருகையுடன்இருக்கவேண்டும்
தளராத
நம்பிக்
கை
!

உழைத்தவன் உறங்கினால் களைப்பு
படித்தவன்
சோர்ந்துதூங்கினால்
கிடையாது
பிழைப்
பு

பூமியில் இருக்கலாம் மேடுபள்ளம்
புவி
ஆள்வோரிடம்
இருக்க
வேண்டும்
உயர்ந்த
உள்ள
ம்
 
மறதி மாணவனின் கெடுதி!
விரைந்து
அதனை
உதறிவிடின்
உயர்வு
உறு
தி
!

இயற்கையின் சொத்து இந்த பூமி!
இடையூறு
செய்து
ஆக்கிரமித்தால்
ஏன்
வராது
சுனா
மி
!

வெள்ளம் வந்தால் பள்ளம் நிரம்பும்
உள்ளம்
வெந்தால்
வெடிக்கும்
இதயத்தில்
வேதனை
நிரம்பும்
!

பயிரினிலே இருக்கலாம் ளை!
இசைப்பாட்டினிலே
என்றும்
தட்டக்கூடாது
ளை

விளக்கின் அடியில் இருக்கலாம் இருட்டு!
விலக்க
வேண்டுமே
பொய்யும்
புரட்
டு
!
மறைய
வேண்டுமே
அறியாமை
இருட்
டு

ஞாயிறு விடுமுறை
போதவில்லை பொழுது, காத்திரு
வரும் வாரம்வரை

இயற்கைக்கு வந்தது று!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில்
உள்ளே
புகுந்தது
நீரு
!
தூர்வாறா
குளங்களால்
பிழை
!

அரசியலில் புகுந்தாச்சி காழ்ப்புணர்ச்சி!
அதனாலே எல்லாமே தலைகீழா மாறிப்போச்சி!
மக்களின் வரிப்பணம் தானே வீணாச்சி!
ங்ளின் ருகைக்கு நன்றி! திவு குறித்ருத்துக்ளை மெண்ட் செய்து ஊக்ப் டுத்துங்க்கள்! மிக்நன்றி!


Sunday, October 28, 2012

உண்மை பேசிய திருடன்! பாப்பா மலர்!

முன்னொரு காலத்தில் ஒரு  நாட்டில் ஒரு பெரிய திருடன் ஒருவன் வசித்து வந்தான். மிக்ச்  சாதாரணமாக யார் வீட்டிலும் புகுந்து திருடி விடுவான். திருடினாலும் அவனிடம் ஒரு உயர்ந்த குணம் இருந்தது அது பொய் பேசாமை!
இந்த குணம் அவனது தாயால் அவனுக்கு கிட்டியது.
    சிறு வயதில் அவனது தாய் நோய் வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தாள். அப்போது இந்த திருடனை அழைத்தாள். இவனோ அப்போதே பெரிய பெரிய இடங்களில் திருடி கோடீஸ்வரன் ஆகும் எண்ணத்தில் இருந்தான். மகனின் தீய பழக்கம் பிடிக்காத அந்த அன்பு அண்ணை  மகனே பிறர் பொருளை களவாடுவது குற்றம் இல்லையா? அதை விட்டு விடு உழைத்து பிழை களவாணி என்ற பெயர் பெறாதே! என்று அன்போடு அறிவுரை கூறினாள்.
     இளமைத்திமிரில் தாயின் அறிவுரை அவனுக்கு கசந்தது. அம்மா! இந்த திருட்டு எனது பிறவிக் குணம். அதை என்னால் விட முடியாது. நான் பல கனவு கண்டு வருகிறேன். அதற்கெல்லாம் திருடாவிட்டால் முடியாது. ஆகவே இதை தவிர்த்து வேறு ஏதாவது கேளேன் என்றான் மகன்.
   தன் கடைசி காலத்தில் மகனை திருடனாக விட்டு போகிறோமே என்ற வருத்தத்தில் அந்த தாய், மகனே! நீ திருடிக் கொள்  ஆனால் இனி எக்காரணத்தை கொண்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு! உன் உயிரே போனாலும் பொய் பேசக் கூடாது  இதையாவது எனக்காக செய்வாயா? என்றாள்.
   மகனும் அம்மா! இனி நான் பொய்யே கூற மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டான். தாயும் இய்றகை எய்தி விட்டாள். அன்று முதல் இவன் பொய் கூறாமல்  விரதம் கடைபிடித்து வந்தான். அவனது  திருட்டு தொழிலுக்கு இது பாதகம் என்றாலும் தாய்க்கு இட்ட சத்தியத்தை அவன் மறக்க வில்லை!
   கோடீஸ்வரனாக வேண்டும் என்ற கனவு அவனை அரண்மனையில் திருடச் சொன்னது. அதனால் அரண்மணைக்கு திருடச் சென்றான். அப்படி செல்லும் போது வழியில் குதிரையில் ஒருவனை சந்தித்தான். அவன் எங்கே போகிறாய் என்று கேட்டான். அன்னைக்கு செய்த  சத்தியத்தால் திருடனும் தான் அரண்மனையில் திருட போவதாக கூறினான்.
    குதிரையில் வந்தவன் அவனிடம் அப்படியானால் நானும் வருகிறேன். திருடுவதில் ஆளுக்கு பாதி பிரித்துக் கொள்வோம் என்றான். திருடனும் சம்மதித்தான். அரண்மனையை அடைந்த அவர்கள் குதிரையில் வந்தவனை வெளியில் காவலுக்கு வைத்து விட்டு அரண்மனையில் நுழைந்தான். உள்ளே சென்ற திருடன் கஜானாவை உடைத்தான். மூன்று வைரக் கற்கள் இருந்தன. ஆளுக்கு ஒன்றரை என்று கல்லை உடைக்க வேண்டி வருமே என்று ஒன்றை வைத்து விட்டு இரண்டு கற்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தான்.
  குதிரையில் வந்தவனுக்கு பேச்சுப்படி பாதி பங்கு என ஒரு கல்லை கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டான். மறுநாள் விஷயம் வெளியில் வந்தது. அரண்மனையிலேயே திருட்டா? மந்திரி விசாரிக்க சென்றார். கஜானாவை  சோதனையிட்டார். ஒரு வைரம் இருக்க ஆசை அவரை வென்றது எடுத்து மடியில் கட்டிக் கொண்டார். திருடன் எடுத்து சென்றதாக இருக்கட்டும் என்று நினைத்து கொண்டார். அரசனிடம்  கஜானாவில் இருந்த மூன்று வைரக்கற்களும் திருட்டு போய்விட்டதாக கூறிவிட்டார்.
      மன்னன் திருடனை பிடிக்க ஆணையிட்டான். விரைவில் திருடன் கைது செய்யப்பட்டான். அவன் பொய் பேசாததால் இரண்டு வைரங்களை திருடியதாக காவலரிடம் கூறினான். அதில் ஒன்றை உடன் வந்தவனுக்கு  ஒப்பந்தப்படி தந்து விட்டதாக கூறினான்.
    மந்திரியோ! எங்கே தம்  திருட்டு வெளிப்பட்டு விடப்போகிறது என்ற பயத்தில், மன்னா! இவன் பொய் சொல்கிறான். சிறையில் அடைத்து விசாரித்தால் உண்மை கிடைக்கும் என்றான்.
     மன்னன், சிரித்தான்! மந்திரியே பொய் சொல்வது திருடன் அல்ல! நீர்தான்!
இவன் பொய் சொல்ல மாட்டான் என்று எனக்குத் தெரியும்! உடன் வந்தவனுக்கு ஒரு வைரம் கொடுத்தான் என்று சொல்கிறானே! அந்த உடன் வந்தவன் நான் தான். மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் இவனை சந்தித்தேன். இவன்  அரண்மணையில் திருடப் போவதாக கூறினான். உடன்  வருவதாகவும் பாதி பங்கு தர முடியுமா என்று கேட்டேன். இவனும் ஒத்துக் கொண்டு அழைத்து வந்து ஒப்பந்தப்படி ஒரு வைரத்தை தந்து  விட்டான். அந்த வைரம் இதோ! என்று மடியில் இருந்து எடுத்து காட்டினார்.


       திருடனான இவன் உண்மை பேசுகிறான்! மந்திரியான நீர் பொய் பேசுகிறீர்! உம்மை போன்றவர்கள் இந்த பதவிக்கு லாயக்கல்ல! உம்மை சிறையில் தள்ளுகிறேன்! இது என் ஆணை! திருடனே! உண்மை பேசும் உன் குணம் உன்னை இன்று காப்பாற்றியது. திருடுவது கேவலமானது! விட்டு விடு அரண்மனையில் நல்ல பணி  தருகிறேன்! உழைத்து உயர்ந்திடு என்றான்.
   திருடனும் மனம் திருந்தி அரசர் கொடுத்த பணியை ஏற்றுக் கொண்டு சிறப்பாக வாழ்ந்தான்.

ங்கள் ருகைக்கு மிக்நன்றி! திவு குறித்ருத்துக்ளை மெண்ட் செய்து உற்சாகப்டுத்துங்கள்! 

Related Posts Plugin for WordPress, Blogger...