நூறாவது பாலோவரும் கொன்றை வான தம்பிரானும்!



நூறாவது பாலோவரும் கொன்றை வான தம்பிரானும்!


தளிர் கடந்த வாரத்தில் 100வது பாலோயரை பெற்றது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியபோது பாலோயர்கள் இல்லாமல் நானே மூன்று ஐடிக்களில் பாலோயர்ஸாக இருந்தேன். கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஐடி மூலம் மூன்று பாலோயராக நான் இருந்ததால் காமிக்ஸ் சவுந்தர் 100வது பாலோயராக இணைந்து நான் உங்க நூறாவது பாலோயர் என்று அறிவித்தும் என் கணக்குப்படி நூறாக வில்லை! அதனால் எந்த மகிழ்ச்சியும் காட்ட வில்லை!
   இப்போது 113 பாலோயர்கள் உள்ளனர். அந்த மூன்றை கழித்தாலும் நூறை தாண்டி விட்டது. தளிர் என்ற பெயரில் வலைப்பூ துவக்கி விட்டேனே தவிர வலைப்பூ பற்றி ஒன்றும் தெரியாது எனக்கு.  ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில் ஒரு முறை சுஜாதா சிலாகித்து எழுதி இருந்ததை படித்து இருந்தேன். அப்போது என்னிடம் கணிணி இல்லை!
   கணிணி வாங்கியும் எங்கள் பகுதிக்கு இணைய இணைப்பு பெற சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இணையம் வந்ததும் எல்லோரும் போலவே சில  செய்தி தாள்கள் வாசிப்பு தவிர வாழ்க்கை கல்வி பாடங்களை பார்த்து கழித்து கொண்டிருந்தேன். பின்னர் பேஸ்புக் ஆர்குட் டிவிட்டர் முதலியவற்றில் இணைந்தேன். அப்புறம் தான் பிளாக் தொடங்கினேன்.
   நான் 1987ல் ஏழாவது படித்து கொண்டிருக்கும் சமயம் எழுதும் ஆர்வம் தோன்றியது. கோகுலம் புத்தகம் வாங்கி கொடுத்து என் ஆர்வத்தை வளர்த்தார் என் அம்மா. பின்னர் நான் கையெழுத்து பத்திரிக்கை நண்பர்களோடு சேர்ந்து நடத்திவந்தேன்.
  அதே போல் தான் பிளாக் என்று நினைத்துவிட்டேன். அதனால் எதோ ஒன்றை எழுதி பதிவிட்டேன். சில மாதங்கள் கவனிப்பார் இல்லாமல் என் வலைப்பூ இருந்தது. பின்னர் தற்செயலாய் பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் தளத்திற்கு சென்றேன். அங்கு அவர் எப்படி பிளாக்கை பிரபல படுத்தலாம் என்று கூறியிருந்தார். அவர் சொன்னபடி திரட்டிகளில் இணைத்தேன்.  வாசகர்கள் வந்தார்கள். அப்போது தமிழ் மணத்திலும் இணைத்து இருந்தேன்.
   நாளடைவில் நல்லதொரு முன்னேற்றம் கிடைத்தது. ஆனால் நான் மற்ற வலைப்பூக்களை சென்று படித்து கருத்து இடுவதில்லை! ஏனெனில் என் பட்ஜெட் அப்படி ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி ப்ளானில் இருந்தேன். அதனால் மற்ற வலைப்பக்கங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தேன். இந்த சமயத்தில் தான் சில பரபரப்பான செய்திகளை தட்ஸ் தமிழிலிருந்து காப்பி செய்து வெளியிட்டேன். அது தவறு என்று நான் நினைக்க வில்லை! படித்ததை பகிர்கிறோம் என்ற நினைப்பில் இருந்தேன். இதனால் தமிழ் மணம் என்னை விளக்கியது. தமிழ் மணத்தில் சேர்ந்த போது 1025ல் இருந்த என் ரேங்க் இரண்டே மாதங்களில் 525க்குள் வந்தது. ஆனால் காப்பி பேஸ்ட் செய்தமையால் விலக்கப்பட்டேன்.
  என்னுடைய பேஜ் வியுவும் குறைந்தது. இதனால் அதிகமாக காப்பி பேஸ்ட் செய்தேன். பரப்பரப்பான செய்திகள் மூலம் பேஜ்வியு அதிகரித்தது. என் அலேக்ஸா ரேங்க் குறையாமல் இருந்தது. இப்போது நாம் சொந்தமாக எழுதினால் யாரும் படிப்பதில்லை. இதே மாதிரி பரபரப்பான செய்திகள்தான் விரும்பப் படுகிறது என்று தோன்றிவிட்டது.
    வலைப்பூ எழுதினால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலைப்பூக்களுக்கு சென்று படித்து கருத்து ஓட்டு முதலியன இட்டால் அவர்களும் நம் தளத்திற்கு வருவார்கள் என்பது அப்போது உரைக்கவில்லை! உரைத்தபோது எனக்கு பட்ஜெட் உதைத்தது. இதற்குள் எங்கள் பக்கத்தில் ஆறுவழி சாலை பணிக்காக கேபிள்கள் துண்டாக இணையமும் துண்டானது.
   டிசம்பர் 2011 முதல் பிப்ரவரி 2012 வரை இணைப்பு கிடைக்காது போகவே ரிலையன்ஸ் வயர்லெஸ் இனைப்புக்கு மாறினேன். எனது பட்ஜெட்டும் கொஞ்சம் கூடுதலானது. தமிழ் மணத்திற்கு மெயில் அனுப்பினேன். காப்பி பேஸ்டை குறைத்துக் கொள்வதாக பத்து நாட்கள் கழித்து மகிழ்ச்சி உங்கள் பதிவுகளை இணையுங்கள் என்று தகவல் வந்தது. ஆனால் இணைக்க முடியவில்லை! மீண்டும் மெயில் செய்தேன். பதில் இல்லை. என் சொந்த பதிவுகள் வரவேற்பு இல்லை! பெட்ரொல் விலை உயர்வு பற்றிய செய்தியை தட்ஸ் தமிழிலிருந்து உடனடியாக காப்பி செய்து போட்டேன். மறுநாளே தமிழ்மணத்திலிருந்து நீங்கள் காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள் எப்படி இணைக்க சொல்கிறீர்கள் இனி மெயில் செய்வது வேண்டாம் என்று பதில் வந்தது. வெறுத்து போனென்.
   அப்புறம் சரி இனி எதற்கு கவலை என்று வழக்கம் போல செய்ய ஆரம்பித்தேன். கொஞ்சம் பேஜ்வியு அதிகரித்தது. அந்த சமயத்தில் எனது தம்பியுடன் ஆலோசனை செய்தேன். அவனும் காப்பி பேஸ்ட் வேண்டாம். செய்திகளை உன் பாணியில் எழுது என்றான். சரி என்று அப்படி எழுதிப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பின்னர் மற்றவர்களின் தளங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
  அதில் அட்ரா சக்க தான் முதலில். அவர் இணைந்த தளங்களில் நானும் இணைய ஆரம்பித்தேன். பலரது எழுத்தை படிக்க படிக்க ஆர்வம் வளர்ந்தது. இப்படியும் எழுதலாம் என்று தோன்றியது. எனது காப்பி பேஸ்ட் பதிவுகளை குறைத்துக் கொண்டேன்.
  இப்பொழுது ஒரு டைம் டேபில் வைத்துள்ளேன். திங்கள் கவிதை அல்லது கதை, செவ்வாய் தொடர்கதை, புதன், கட்டுரை அனுபவங்கள், வியாழன், சினிமா, ஜோக்ஸ், வெள்ளி ஆன்மீகம், சனி, சிறுவர் பகுதி, ஞாயிறு பொன்மொழிகள் பொதுஅறிவு என்று பிரித்து ஒருமாதமாக இப்படித்தான் வெளியிடுகிறேன். இத்துடன் கூடுதலாக நான் படித்த சில சுவையான செய்திகளை காப்பி செய்து வருகிறேன். இதையும் கூடிய விரைவில் தவிர்த்து விடலாம் என்று எண்ணியுள்ளேன். என்னுடைய தளத்தையும் மதித்து நூறு பேர்கள் படிக்கிறார்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டிய கடமை எனக்குள்ளது. எனவே நல்ல நல்ல பதிவுகளை தொடர்ந்து தர முயற்சிப்பேன்.

 கொன்றைவான தம்பிரான்.
   எனது பதிவுகளை வாசிப்பவர்கள் இவரை அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நண்பர்  குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் இனத்தை சேர்ந்தவர் போல் இருக்கிறது. தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது வந்து  இந்த மாதிரி தளங்களுக்கு வந்து பிச்சைஎடுக்காதே என்று அறிவுரை கூறுகிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை!.
  நான் ஒரு தளம் சென்று படிக்கிறேன். அங்கு என் தளம் பற்றிய செய்தியை வெளியிடுகிறேன். இதில் இவருக்கு என்ன சங்கடம்  என்று புரியவில்லை! அந்த தளத்துக்கு உரிமையாளர்கள் வேண்டுமானால் இங்கு இந்த மாதிரி கருத்திட வேண்டாம் என்று பதில் சொல்லலாம் அல்லது கமெண்டை நீக்கிவிடலாம். ஆனால் இவர் வந்து இந்த மாதிரி செய்யாதே! நீ நல்லா எழுதினால் தானாகவே நாலு பேர் வருவார்கள் என்று கூறுகிறார்.
  ஒரு பழம் பழுத்திருக்கிறது என்று அதன் வாசனையை கொண்டே உணரலாம்.ஆனால் எதுவரை அந்த பழம் இருக்கும் அருகாமையில் தான் உணரமுடியும். தூரத்தில் இருப்பவர்களால் அறிய முடியாது. அதற்குத்தான் பொருட்களை வியாபாரம் செய்ய விளம்பரம் தேவைப்படுகிறது. திரட்டிகளில் இணைத்தால்தான் படிக்க வருகிறார்கள். இல்லாவிட்டால் யாரும் படிப்பது இல்லை! இது என் அனுபவம்.
  திரட்டிகளில் இணைப்பது போலத்தான் பிரபல ப்ளாக்கர்களின் வலைப்பூவில் நமது வலைப்பூவை அறிமுகப்படுத்துவதும் அங்கு வருபவர்கள் இதை கவனித்து வரலாம் என்று எண்ணி விளம்பரப்படுத்துகிறேன். கட்டாயப்படுத்துவது இல்லை! என் தளத்தில் இந்த பதிவு என்று சொல்கிறேனே தவிர கட்டாயம் வாருங்கள் என்று கூப்பிடவில்லை! விருப்பம் இருப்பவர்கள் வருகிறார்கள் இல்லாதவர்கள் வருவதில்லை!
  இதில் என்ன குறை கண்டார் கொன்றை வானத் தம்பிரான். நேற்று ஒரு பதிவை பாராட்டி விட்டு ஏன் பாராட்டினேன் தெரியுமா? நீ என் வலைப்பூவிற்கு நான் செல்லும் வலைப்பூவிற்கு வந்து பிச்சை எடுக்கவில்லை தினம் இது மாதிரியே நடந்தால் நல்லா பாராட்டுகிறேன் என்று சொல்லியுள்ளார். அவர் வலை தளம் எது என்று எனக்கு தெரியும்? தைரியம் உள்ளவர் வலைதள முகவரி கொடுக்க வேண்டியது தானே!
    இப்படி நான் விளம்பர படுத்துவதால் என் வலைப்பூவின் பேஜ் வியு அதிகரித்து உள்ளதை காண்கிறேன். இதை நிறுத்த போவதாக இல்லை! இப்படி என் தளத்தில் விளம்பரம் செய்யாதே என்று சொல்பவர்கள் என் கமெண்டிற்கு பதில் சொல்லும் போது அறிவிக்கட்டும் அப்புறம் செய்யாதிருக்கிறேன்! அல்லது என் தளத்திற்கு வந்து அங்கு சொல்லட்டும்.
   வலை தள உரிமையாளருக்குத்தான் அவ்வாறு சொல்ல உரிமையுள்ளது . அதை விட்டு இவர் வந்து இப்படி பிச்சை எடுக்காதே என்று கூறுவது சற்றே அதிகப்படியாகத்தான் தோன்றுகிறது. இவர் போனவாரத்தில் கடைசியாக கருத்திட்டு லிங்க் இடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார். அதற்குபின் காணவில்லை! இவர் வராமல் இருப்பதும் அவர்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. வம்புக்கு இழுப்பது போல கருத்திட்டாலும் அவரது கருத்து எனக்கு ஏற்பில்லை என்றாலும் அவர் தொடர்ந்து என் வலைப்பக்கம் வருவதை விரும்புகிறேன். என்ன ஒன்று அவர் தனது சொந்த பெயரில் வந்து கருத்திட்டால் பெரிதும் மகிழ்வேன்!
   இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தொடர்ந்து எனது தளம் வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் திண்டுக்கல் தனபாலன், வரலாற்றுசுவடுகள், நண்டுநொரண்டு, கவிதை வீதி, தென்றல் சசிகலா, எழில், சீனி, கும்மாச்சி, ஹேமா, ராசன், கிருஷ்ணாலயாரவி, கரந்தை ஜெயராமன்,ஹிஷாலி, டி.என் முரளிதரன், ரமணி, சேஷாத்ரி, கவிகாயத்ரி, அம்பாளடியாள், ரமேஷ் வெங்கடபதி, மனசாட்சி, ஹாரிபாட்டர், விச்சு, ஸ்ரீராம், இரவின் புன்னகை, சிட்டுக்குருவி, தனிமரம், தங்கம்பழனி,ராஜபாட்டை ராஜா, ஆர் சரவணன்,ஆயிஷா, சாமூண்டீஸ்வரி,சதீஷ் செல்லதுரை, கோவை மு.சரளா,ராஜி,விச்சு, நண்பர்கள் ராஜ், கொன்றைவானதம்பிரான் மற்றும் ஏனைய பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

  பிளாக் ஆரம்பித்த புதிதில் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த என் ராஜபாட்டை ராஜாவிற்கும் முதல் வெளிபின் தொடர்பாளர் முத்து அமுதாவிற்கும், முதல் பாலோவர் எனது தம்பி செந்திலுக்கும்நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

டிஸ்கி} இதை போன வாரமே எழுதி விட்டேன்! ஆனால் பதிவிடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தவிர்த்தேன்! இப்போது பதிவிட்டு விட்டேன்! இந்த பதிவில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்! நன்றி கூற விட்டுப்போன நபர்களும் மன்னிக்கவும். பின்னூட்டத்தில் விளம்பரம் செய்வது பற்றிய உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்! இது எனது முடிவை மாற்றிக்கொள்வதா வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும்! மிக்க நன்றி! இந்த கொன்றை வான தம்பிரான் யார்? இதற்கும் விடையளிக்க முயற்சிக்கலாம்! நன்றி!



Comments

  1. //டைம் டேபில் வைத்துள்ளேன். திங்கள் கவிதை அல்லது கதை, செவ்வாய் தொடர்கதை, புதன், கட்டுரை அனுபவங்கள், வியாழன், சினிமா, ஜோக்ஸ், வெள்ளி ஆன்மீகம், சனி, சிறுவர் பகுதி, ஞாயிறு பொன்மொழிகள் பொதுஅறிவு என்று பிரித்து ஒருமாதமாக இப்படித்தான் வெளியிடுகிறேன்.//

    அடங கொக்க மக்கா சூப்பர்.. நம்மளால முடியாதுப்பா

    //ரமேஷ் வெங்கடபதி, மனசாட்சி, ஹாரிபாட்டர், விச்சு, ஸ்ரீராம்//

    ஐ நம்ம பேரும் இருக்கு

    நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  2. நேர்மையுடன் மனம் திறந்து சொன்னதற்கு பாராட்டுக்கள். முடிந்தவரை நீங்கள் உங்கள் சொந்தப் படைப்புகளையே எழுதுங்கள். அதற்கான திறமை உங்களுக்கு நிறைய இருக்கிறது.நாங்கள் உங்கள் தளத்திற்கு நிச்சயம் வருகை தருவோம்.அதிகமாகப் பதிவுகள் இட்டுத்தான் உங்களுக்கான பார்வையாளர்களை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதில்லை. திண்டுக்கல் தனபாலன் , வரலாற்றுச் சுவடுகள் இருவரும் குறைவான பதிவுகளே எழுதி இருக்கிறார்கள். ஆனனல் தரமான பதிவுகளால் பல வாசகர்களை பெற்று முன்னணியில் விளங்குகிறார்கள்.சில நேரங்களில் நாங்கள் தாமதமாக பார்வை இடுவோம்.
    வாழ்த்துக்கள் தொடர்ந்து நல்ல பதிவுகளை வெளியிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளி சார்! :)

      Delete
    2. நல்ல பின்னூட்டம் தோழரே..

      Delete
  3. //பின்னூட்டத்தில் விளம்பரம் செய்வது பற்றிய உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்//
    பொதுவில் பகிர்ந்து விட்டாலோ கமென்ட் பெட்டியை திறந்து வைத்து விட்டால் நமக்கு என்னவும் செய்ய உரிமை உண்டு நண்பா.. தப்பு இல்லை என்றே நினைக்கிறேன்..

    என்னை பொறுத்தவரை அவங்க (பதிவர்கள்) சம்மந்தமா ஏதாச்சும் என் பதிவில இருந்தா மட்டும் நான் மற்றவங்க சைடு.ல போய் என் லிங்க சேர் பண்ணுவன்.. மற்றபடி அவங்க பகுதில கமென்ட் பண்றது அந்த பதிவ பொறுத்து தான்.. எல்லாரும் என் கமெண்டுக்கு பதில் ரிப்ளே பண்றாங்களா என்று கூட கீழ இருக்கிற //Subscribe by email // பண்ணி விட்டு தான் வருவேன்.. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 - 50 பதிவு படிச்சாலும் 10 பதிவுகளுக்கு குறைவா தான் என்னால கமென்ட் பண்ண முடியிறது..

    ஒரு வேளை டெம்பிளேட் கமென்ட் போட்ற படியா மற்றவங்க பதிவ நீங்க வாசிக்கல என்று ஒரு கருத்து கண்டிப்பா பதிவர் மனதில இருக்கலாம்.. அதை தவிர்க்க முடிந்தால் ஓகே..

    ReplyDelete
  4. மனம் திறந்து மனதில் உள்ளதை எழுதியிருப்பது பாராட்டுக்குரியது! விமரிசனங்கள் ஊக்கப்படுத்தவும் செய்யும் மனத்தளர்ச்சியினை ஏற்படுத்தவும் செய்யும். இதற்காக தன்னிலை விளக்கம் ஒவ்வொருவருக்கும் கொடுத்து , கால விரயம் செய்யாமல், அடுத்த பதிவு தரமாய் தர மனதினை ஊக்கப்படுத்தி, செயல்படுத்த முனையுங்கள் என் இனிய அன்புத் தோழரே!
    அனைத்தும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்!

    ReplyDelete
  5. தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள் வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete
  6. சபாஷ்..பிடிச்சிருக்கு தங்களின் வெளிபடையா மனதில் பட்டதை பட்டுன்னு சொன்னீங்களே...

    செடுள் போட்டு பதிவா...நடத்துங்க ராசா நடத்துங்க.

    நன்றி நினைவு கூறுதலுக்கு

    ReplyDelete
  7. ஆங்.. மறந்துட்டேன்

    தாராளமாக எனது வலைப்பூவில் உங்கள் தள செய்தியை வெளம்பரம் செய்யலாம்... அதுக்கு இனி தேவை இருக்காது நண்பரே ஏன்னா, எனது தளத்தில் உள்ள தெரிஞ்சவங்க லிஸ்ட்ல உங்க தளம் இணைத்து விட்டேன்

    ReplyDelete
  8. தொடர்ந்து பதிவுகள் எழுதுங்க நண்பா.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தொடருங்கள் ...தொடர்கிறேன் ...வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. என்னை பற்றி குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    இந்த பதிவை நேர்த்தியாகவும் சரளமாகவும் எழுதியிருக்கும் பாங்கு உங்களுக்குள்ள திறமைக்கு சான்று! இயன்ற அளவு copy&paste-டை குறைத்துக்கொண்டு தங்கள் சொந்த படைப்புகளை வெளியிட்டுவந்தால் இன்னும் அதிகம் பேரை சென்றடையலாம்!

    வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  11. நூறாவது பாலோவர் பெற்றதர்க்கு உங்க்அலுக்கு வாழ்த்து சார்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நண்பரே.
    நேர்மையாக கூறியதற்கு பாராட்டுக்கள் நண்பரே.
    //இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தொடர்ந்து எனது தளம் வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் திண்டுக்கல் தனபாலன், வரலாற்றுசுவடுகள், நண்டுநொரண்டு, கவிதை வீதி, தென்றல் சசிகலா, எழில், சீனி, கும்மாச்சி, ஹேமா, ராசன்....... // என்று என்னையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு நன்றிகள் நண்பரே. (ராசன் அல்ல ரசன் என்று விளியுங்கள்)
    நண்பரே முரளி அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
    நான் உங்களின் தளத்தை முதன் முதலில் ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் தான் அறிந்தேன். பின்பு பல பதிவர்களின் பின்னூட்டங்களில் பார்த்து தான் இத்தளத்திற்கு வந்தேன். சினிமா தொடர்பான பதிவுகளை பெரும்பாலும் நான் படிப்பதில்லை. அதை விடுத்து தங்களின் தளத்தில் வரும் கதம்பம், செய்திகள் மற்றும் கதை (பேய் கதை தவிர இன்னும் படிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்) ஆகியவற்றை படித்து கருத்துரையிட்டு வந்தேன் .கடந்த வாரத்தில் பின்னூட்டத்தில் ஒருவர் சில பின்னூட்டங்களில் வழங்கி இருப்பதை படித்தேன். ஒன்றில் அவர் தங்களுக்கு பின்னூட்டங்களில் வரும் தங்களின் இன்றைய பதிவுகள் பற்றி தகவல் கொடுக்க விழைந்ததில் " " குறியிட்டு கூறியிருந்தை பார்த்தேன். உடனே நான் " " குறியை நீக்கமாறு கூறியிருந்தேன். நீங்கள் என்னை தவறுதலாக நினைத்து கொள்வீர்களோ என்று நினைத்தேன். பிறகு புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் விட்டு விட்டேன். கற்றதை பிறருக்கு சொல்வதில் தவறில்லை என்று தான் கூறியுருந்தேன். இதை நானும் ஒரு தளத்தில் இருந்து தான் கற்றேன்.


    இறுதியாக நான் ஒன்று கூற விழைக்கிறேன். தாங்கள் பின்னூட்டங்களில் இன்றைய என்னுடைய தளத்தில் கூறுவதை பார்த்து தான் அதுபோலவே நானும் என்னுடைய தளத்தில் என்று பின் தொடர்கிறேன். இதனால் பல பதிவர்கள் வருவதை ஒப்புக் கொள்கிறேன். தொடருங்கள் நண்பரே. நாளைய வெற்றி நமதே என்ற நம்பிக்கையில் தொடர்வோம்.

    ReplyDelete
  13. கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்! உங்கள் ஆலோசனைகளை ஏற்கிறேன்! இன்னும் ஆலோசனைகளைஎதிர்பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  14. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

    ReplyDelete
  15. வாழ்த்துகள் அன்பரே தொடருங்கள் பதிவுகளில் விளம்பரங்கள் நீக்க உரிமை அந்தந்த தள உரிமையாளருக்கே உண்டு என நினைக்கிறேன்

    ReplyDelete
  16. மனதில் உள்ளவற்றை என்ன ஓட்டத்திலேயே எழுதி விட்டீர்கள். வளர்ச்சிக்கு வாழ்த்துகள். மென்மேலும் உயரங்களை எட்டவும் வாழ்த்துகள். ஹாரி பாட்டர் சொன்னது போல நீங்கள் படிக்கும் தளங்களில் நீங்கள் எண்ணுவதை மனம் விட்டுக் கருத்தாகவோ, பாராட்டாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் வாசகர் வட்டத்தை விரிவாக்கும். என்னையும் நண்பர்கள் வட்டப் பெயர்கள் பட்டியலில் குறிப்பிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  17. You do a godt job. Copy&paste are okay but the best is your own writings. I like most peei kathai(ghost story).

    pl keep it up

    ReplyDelete
  18. கமெண்ட்டில் லின்க் தருவது சம்பந்தப்பட்ட உரிமையாளரைப் பொறுத்த விஷயம் நண்பரே...எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் நண்பரே.................

    ReplyDelete
  20. விரைவில் அன்பர்கள் ஆயிரம் அடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. மனதை திறந்து கொட்டியுள்ளீர்கள் ....

    தொடர்ந்து எழுதுங்கள் என் வாழ்த்துக்கள்...........

    ReplyDelete
  22. வெளிப்படையான பதிவு.... ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில் நாகரீகம் வேண்டும், பிச்சை எடுப்பது என்பது தன்னுடைய அறிவின் தரத்திற்கு ஏற்றார் போல உள்ள சொல் ஆகும். தளிர் அண்ணா இது உங்கள் வலைத்தளம் உங்களுக்கு விருப்பமானவைகளை பதிய உங்களுக்கு உரிமை உள்ளது. அவரவர் கருத்து சுதந்திரத்தில் அநாகரீக முறையில் விமர்சிப்பது தவறு!....

    தொடருங்கள் அண்ணா! வாழ்த்துக்கள் நூறு ஆயிரம் ஆகட்டும்!

    ReplyDelete
  23. தப்பு தம்பி,அண்ணண் பேரை அனுமதியில்லாம பதிவில் பயன்படுத்தியிருக்கிறீயே இது ஞாயாமா? அதுவும் அண்ணன் என்ற விகுதியில்லாமல்.... சரி போ நீ தான் அண்ணாவுக்கெல்லாம் அண்ணா அறிஞர் அண்ணாவா ஆயிட்டியே இனிமே தொட்டு உன்னை நான் தளிர் அண்ணா என்று அழைச்சுக்கிறேன். ஆனா போட்டாவில மட்டும் பனிவோ பனிவா..கவுண்டமணிகிட்ட நடிக்கிற செந்தில் மாதிரி நின்னுக்கோ...

    தளிர் அண்ணா,நீங்க என்னா பண்னூறீங்கோ.....எந்தப் பதிவையும் படிப்பதில்லை சும்மா பொற்கைப் பாண்டியன் கதவை தட்டிட்டுப் போன்னாப்பலே டப டபன்னு எல்லாப் பதிவிலேயும் போயும் பகிர்வுக்கு நன்னி! தொடருங்கள் அப்ப்டீன்னு ஸ்டாண்டர்டா எதையாவது எழுதி ஒட்டிட்டு என் தளத்தில் ஹன்சிகா ரகசியங்கள், நயன் தவித்த தவிப்பு.....சன்னிலியோனை ரசித்த சாருகேசின்னு அசிங்க அசிங்கமா ஒட்டிட்டு போய்டுறீர்....

    ReplyDelete
  24. என் பதிவுக்கு பத்தில் இருந்து இருபதுக்குள் தான் பின்னூட்டங்களே வரும் ஆனால் வருபவை தரமா இருக்கும்..சினிமா விமர்சனத்துகே அவ்வளவுதான் வரும் ஆனாலும் நிதானமா படித்து எழுதியதாய் இருக்கும். திடீரென போனில் (பதிவிடமட்டும் தான் கம்ப்யூட்டர் மத்த நேரமெல்லாம் போனில் தான் மேய்வேன்....) ஹன்சிகா ரகசியங்கள் என்ற உன் பின்னூட்டம் வரும்போது எவ்வளவு எரிச்சல் வரும் தெரியுமா.......

    ReplyDelete
  25. வரலாற்று சுவடுகள், நண்டு சார்,முனைவர் குணசீலன் மாதிரி எழுதினால் கூட பரவாயில்லை....தளிர் அண்னா எடுத்துக்கிற தலைப்பு அத்தனையும் மஞ்சள் .....கேவலமான சப்ஜெக்ட்டுகள்.... அதை நியாயப்படுத்துற மாதிரி அது மாதிரி எழுதுனா தான் கூட்டம் வருதாம்....பேஜ்வ்யூ வருதாம்.... வெட்கம்...வேதனை....

    ReplyDelete
  26. தமிழ்மணம் என்கிற அற்புதமான இன்ஸ்டியூஸனை மாசுபடுத்தி கிட்டத்தட்ட பழுதடையச் செய்ததே தளிர் அண்னாவைப் போன்ற ஆர்வக் குட்டிகள் தான்........ என் தளத்திலேயே இதுமாதிரி விளம்பரம் செய்யாதே என்றிருப்பேன் மஞ்சள் தலைப்பில் பதிவிடுபவரை கணக்கில் எடுத்துக் கொண்டால், என் இமேஜ் என்னாவறது.

    ReplyDelete
  27. தளிர் அண்ணா இந்த தமிழகம் உங்கள் வீட்டருகே ஆறு வழிச்சாலை தந்திருக்கிறது பவர் கட்டிலும் கட் அண்ட் பேஸ்ட் பன்ன தட்டுப்பாடில்லாமல் மின்சாரம் தந்திருக்கிறது. நீங்க பதிலுக்கு என்னா பன்னூறீங்க.....சின்னத்திரை இயக்குனரின் சில்மிஷங்கள் -ன்னு எங்கயோ யாரோ எழுதினதை எடுத்து எல்லார் முஞ்சியிலும் பூசிட்டுவாரீக.... பைனல் கால் வந்தாச்சு நேரமாச்சு பிறகு பார்க்கலாம்

    ReplyDelete
  28. தொடர்ந்த பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தோழரே..//இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியபோது பாலோயர்கள் இல்லாமல் நானே மூன்று ஐடிக்களில் பாலோயர்ஸாக இருந்தேன். கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஐடி மூலம் மூன்று பாலோயராக நான் இருந்ததால் காமிக்ஸ் சவுந்தர் 100வது பாலோயராக இணைந்து நான் உங்க நூறாவது பாலோயர் என்று அறிவித்தும் என் கணக்குப்படி நூறாக வில்லை! அதனால் எந்த மகிழ்ச்சியும் காட்ட வில்லை!
    இப்போது 113 பாலோயர்கள் உள்ளனர். அந்த மூன்றை கழித்தாலும் நூறை தாண்டி விட்டது. // உங்க நேர்மைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  29. பணிகள் அதிகமிருப்பதால் தொடர்ந்து வர இயல்வதில்லை..எமது வலைப்பூவில் தங்கள் பதிவுகள் பற்றி குறிப்பிடுவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..டேஸ்போர்டு பார்க்கத்தவறும் நேரத்தில் இந்தப்பின்னூட்டம் நினைவூட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  30. தளிர் அண்ணா, எனக்கு நீங்கள் விளம்பரம் செய்வதில் அத்தனை வருத்தம் இல்லை. தரமில்லாத காப்பி பேஸ்ட் -காக மட்டுமே கொஞ்சம் கடிந்து கமெண்ட் போட்டேன். நீங்கள் விளம்பரப் படுத்திய பதிவுகள் உங்கள் மேல் எனக்கு நல்ல அபிராயம் தரவில்லை.அதன் பிறகு உங்கள் சில நல்ல போஸ்ட்கள் பார்த்ததாலும், என்னுடைய வெறுப்பேத்தும் ( ஒத்துக் கொள்வதில் எனக்கென்ன தயக்கம்) கமெண்டுகளை நிதானமாக கையாண்டதாலும் நல்ல மனிதர் ஆர்வத்தில் செய்வதறியாது இருக்கிறார் என்றே , நான் உங்களிடம் மன்னிக்கவும் என்ற தொனியில் நிதானம் உங்களிடம் இருக்கு வாழ்க என்றேன். மேம்போக்காக உங்கள் தளத்தை மேய்ந்ததில் உங்கள் பின்புலம் புரிந்தது. இத்தனி இடர்களுக்கிடையில் எழுதுவதே சாதனை தான். ஒரு சிறு கிராமத்திலிருந்து மேல் எழும் ஒருவரை உற்சாகப் படுத்தலாமே என்று தான் லின்க் பற்றி சொன்னேன். சின்னக் குறைகளை களைய வைக்கலாம் என்று நினத்தே ஸாப்ட் டோனில் பின்னூட்டங்கள் இட்டேன்.

    ஆனால் அதுக்கு உங்கள் எதிர்வினை பார்த்ததும் ஆ.....ஆ....என்று ஆனேன் அண்ணா. நிதானம் இருக்குன்னு சொல்லிட்டாரே என்று அவசர அவசரமாய் உதறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  31. சுயதொழில் என்றிருக்கிறீர்கள் சில இடங்களில் ட்யூசன் எடுப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஆசிரியப் பனி செய்பவராக இருந்தால் தளிர் அண்ணா சமூகத்துக்கு சின்ன வின்னப்பம், உங்களைப் பார்த்து எதிர்காலக் குழந்தைகள் வளர்கிறார்கள் அதனால் ஆட்சேபகரமான எதையும் கட் அண்ட் பேஸ்ட் செய்யவேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்ளவிழைகிறேன்.

    என் பெயரில் இவைகளை ஏன் சொல்ல வில்லை விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமால் போனவர்கள் பலர் என்னை போடா பார்ப்பான் என்று ஏசி இருக்கிறார்கள் அதைத் தவிர்க்கவே.

    தளிர் அண்ணா உங்களை விமர்சிக்க நான் யார். விமர்சனங்களுக்கு மன்னித்தருள்க. உங்கள் விருப்பபடி விளம்பரம் காப்பி பேஸ்ட் எதுவேண்டுமானாலும் செய்யுங்கள் நான் என் வழியைப் பார்கிறேன். என் தளத்தில் வந்த விளம்பரம் செய்தாலும் வாயைத் தொறந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்.

    வணக்கம் வாழ்க தளிர் அண்ணா

    ReplyDelete
  32. நண்பர் கொண்றை வான தம்பிரான் அவர்களே! உங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்! நீங்கள் பயன் படுத்திய சில வார்த்தைகள் காயப்படுத்தி என்னை தூங்க விடாமல் செய்தமையால்தான் இந்த பதிவு! உண்மையில் எனக்கு காப்பி- பேஸ்ட் செய்வதில் விருப்பமில்லை! தினம் தோறும் பதிவு எழுத வேண்டும் என்ற ஒரு தவறான எண்ணத்தினால் அந்த சாக்கடையில் விழுந்தேன். மேலும் நீங்கள் சொன்ன மாதிரி மஞ்சள் தனமான தலைப்புக்கள் நான் வைத்ததில்லை! காப்பி பேஸ்டினால் அவர்கள் வைக்கும் தலைப்புக்கு நான் சொந்தக்காரன் ஆகி விட்டேன். தளிர் கல்விநிலையம் என்ற டியுசன் நடத்தி வந்ததால் அங்கு பயிலும் மாணவர்கள் அண்ணா என்று அழைத்தமையால் ஒரு ஐடி தேவைப்பட்டதால் தளிர் அண்ணா என்று ஆனேன். ஆனால் அனைவருக்கும் அண்ணாவாக அறிஞர் அண்ணாவாக ஆக நினைத்தது இல்லை! உங்கள் பின்னுட்டத்திற்கு பதில் அளிக்கும் போதே விளக்கப்பதிவு போடுவதாக சொல்லியிருந்தேன். அதை எழுதி ஒரு வாரம் ஆகி நேற்றுதான் வெளியிட்டேன். யாரையும் சாதிப் பெயர் கூறி திட்டுவதை நானும் விரும்புபவன் இல்லை!உங்கள் தரமான விமர்சனங்கள் என்னை மெருகேற்றும். உங்கள் தளத்தை சொன்னால் அதில் நான் விளம்பரம் செய்யாமல் இருக்கிறேன்! மேலும் நான் படிக்காமல் கமெண்ட் செய்வது கிடையாது. இணையத்தில் குறைந்தது மூன்றுமுதல் நான்கு மணி நேரம் நேரம் கிடைக்கும் போது இருந்து படித்துதான் கமெண்ட் செய்கிறேன். அதிக தளங்களை படிப்பதால் குறைவான வார்த்தைகளில் கமெண்ட் செய்கிறேன். சுயதொழிலாக டியுசன் எடுத்த நான் இப்போது கோயில் குருக்களாய் பணி ஆற்றுகிறேன். உங்களின் கோபம் புரிகிறது. இனி தரக்குறைவான பதிவுகள் தளிரில் வராது. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பான் இந்த தம்பி! மிக்க நன்றி!

    ReplyDelete
  33. என் வார்த்தைகள் காயப்படுத்திய குறித்து வருந்துகிறேன். முகம் தெரியாத ஒரு மனிதரிடம் இத்தனை கடுமையாய் வார்த்தைகளை சொன்னதற்காக நீங்கள் இந்தப் பதிவு எழுதும் முன்னறே வருத்தமுற்றிருந்தேன். நான் முன்கோபி. செய்வதை செய்துவிட்டு பின்னால் அச்சச்சோ இப்படி பன்னிவிட்டோமே என்று வருந்துவது வாடிக்கை. நான் மேதாவி போல் என்னை நினைத்துக் கொண்ட இந்த எபிசோட் மூலம் நான் கற்றது சின்ன சின்ன குறைகளை பூதகரமாக்கக் கூடாது. அடுத்தவர் தரப்பிலும் சொல்ல எதாவது இருக்கும் அதற்கு வாய்பே கொடுக்காமால் அட்டகாசம் செய்யக் கூடாது.
    நான் சொல்ல நினைத்தவற்றை ஆர்பாட்டம் இல்லாமல் சொல்லியிருக்க முடியும் என்று இப்போ புரிகிறது. காப்பி பேஸ்ட் தவிர்த்த உங்கள் எழுத்துக்கள் நன்றாகவே இருக்கு. நீங்கள் பதிவிட நேரம்மட்டுமல்ல பொருளும் செலவழித்து வருகிறீர்கள், என்னைப் போல ஆபீஸ் பொருள் /நேரம் கொண்டு அல்ல.

    இங்கே மற்ற பதிவர்கள் சொன்ன பிறகு எனக்கு உறைத்தது விளம்பரம் வந்தால் எனக்கு என்னா இழப்பு என்று.

    என் தளம் எது என்று கண்டுகொண்டீர்கள் என்றே நினைக்கிறேன் என் தளத்திற்கு கடந்த 10 நாட்களாக நீங்கள் வருவதில்லை. பின்னூட்டமிடுங்கள் விளம்பரம் இட்டுக் கொள்ளுங்கள். இரு வாரங்களில் இந்தியா வரும் போது உங்களை தொலைபேசியில் அழைக்கும் போது என் அடையாளம் சொல்கிறேன் , பொதுவில் வைக்க இப்போ விரும்பவில்லை.

    சம்ஸ்கிருதம் கலந்த என் இயற்பெயரின் தமிழாக்கமே இப்பெயர்-கொண்றைவான தம்பிரான் .


    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி நண்பரே! இப்போதும் உங்கள் தளத்தையும் உண்மைப் பெயரையும் சொல்லவில்லை! ஆனால் க்ளு கொடுத்துள்ளீர்கள்! உங்கள் தளம் எதுவென்று அறியவில்லை! அறிய முயற்சிக்கிறேன்! உங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன்! என் போன் நெம்பர் தெரியுமா? எப்படி அறிந்து கொண்டீர்கள்! எனக்கே என்னுடைய சில பதிவுகள் பிடிப்பது இல்லை! அதனால் அவற்றை குறைத்து வருகிறேன்! விரைவில் தளிர் மணம் வீசும் நல்ல தளமாக மாறும்! நன்றி!

      Delete
  34. செங்கோவி, வல்லத்தான்,ரமேஷ் வெங்கடபதி, எஸ்தர் சபி ஆகியோருக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  35. எதையும் மனதில் வைக்காமல் சொன்னதற்கு முதலில் பாராட்டுக்கள்... மற்றவர்களின் உண்மையான கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்... மற்றபடி மனதில் உள்ள சங்கடங்களை ஒதுக்கித் தள்ளுங்கள்... விருப்பப் பட்டால் Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... அவ்வப்போது மனதில் உள்ள DELETE Key அமுத்துங்க சார்... தொடர்ந்து எழுதுங்கள் நன்றி... (பேச விரும்பினால் : 9944345233)

    ReplyDelete
  36. தனபால்,
    வெரி குட் கமெண்ட். கீப் இட் அப்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!