பழஞ்சோறு! அழகான கிழவி!

பழஞ்சோறு!

இதுபழைய காலத்தில் அதாவது ஒரு ஐம்பது நூறு வருடங்களுக்கு முன் வந்த துணுக்குகள் நிகழ்வுகளின் தொகுப்பு! பழைய புத்தகங்களை புரட்டிய போது கிடைத்தது. இன்று சொந்தமாக எழுதும்  மூட் வராததால் இந்த  பதிவு! கொன்றைவானத் தம்பிரான் தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும்!

      வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் நாவல் எழுதியவர். அவர் எழுதிய நித்திலக் குவியல் என்ற நூலில் இருந்து சில துணுக்குகள்!

     ஒருவனுக்கு பெரிய உத்தியோகம் கிடைத்தது. அவனுடைய சினேகிதன் அவனுக்கு மங்கல வார்த்தை சொல்வதற்காக வந்தான். உத்தியோகம் கிடைத்தவன் தன்னுடைய உத்தியோக மமதையால் சினேகிதனைப் பார்த்து நீ யார்? என்று வினவினான்.
                      சினேகிதனுக்கு கோபம் வந்தது, 'நான் உன்னுடைய பழைய நேசன், உனக்கு இரண்டு கண்ணும் அவிந்து போனதாக கேள்விப்பட்டு துக்கம் கொண்டாட வந்தேன்' என்றான்.
   நண்பன் முகம் இருண்டு போனது!

தமிழ் படிக்காதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்லர். அவர்கள் எந்த ஊரின் மொழிகளை படிக்கிறார்களோ அந்த ஊரே அவர்களுக்கு தகுந்த இடமாகையால் தாய்மொழியை படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலாந்து தேசத்திற்கு அனுப்பி விடுவோம். பிரெஞ்சு படிப்பவர்களை நாகரீக பட்டினத்திற்கு அனுப்புவோம். லத்தீன் முதலிய பாஷைகளுக்கு சொந்த ஊர் இல்லாதபடியால் அந்த பாஷை படிப்பவர்களை அநாமகரணத் தீவீற்கு அனுப்புவோம்.

    ஓர் அரசனும் அவனுடைய மகனும் ஒரு விகட கவியை அழைத்துக் கொண்டு வேட்டைக்கு போனார்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது மழை பிடித்துக் கொண்டு அரசனும் அவன் மகனும் நனைந்து போய் விட்டனர். நனைந்து போன அவர்களுடைய உடுப்புக்களை கழற்றி ஒரு மூட்டையாக கட்டி விகடகவி தலை மேல் வைத்தனர். அவன் அந்த மூட்டையை தூக்கி செல்லும் போது அரசனும் அவன் மகனும் 'விகடகவி ஒரு கழுதை பாரம் சுமந்து போகிறான்'  என பரிகாசமாக பேசிக் கொண்டு போனார்கள். விகட கவி அவர்களை திரும்பிப் பார்த்து ஒரு கழுதைப்பாரம் தானா! இரண்டு கழுதை பாரம் சுமக்கிறேன் என்று அரசனையும் அவன் மகனையும் கழுதைகள் ஆக்கிவிட்டான்.
    

அழகான கிழவி  எங்கோ எதிலோ எப்போதோ படித்தது!

   'நான் ஆராய்ச்சிக்காக செல்லும் இடம் மனித சஞ்சாரமே இல்லாதது' என்றார் புரபசர். 'என்னுடன் ரேடியோவோ ரிஸ்ட் வாட்ச்சோ காலண்டரோ எதுவும் எடுத்துக் கொள்ளாமல்தான் போவேன். சமையலுக்காக மட்டும் ஒரு சகிக்க முடியாத கிழவிதான் என்னுடன் இருப்பாள்.
   காலண்டர் ரேடியோ எதுவும் இல்லையென்றால் ஊருக்குத் திரும்ப வேண்டிய சமயம் என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என்று கேட்டார் நண்பர்.
                   'என்றைக்கு சமையல்கார கிழவி அழகாகவும், இளமையாகவும் தோன்ற ஆரம்பிக்கிறாளோ அன்றைக்கு ஊர் திரும்ப வேண்டிய நாள் வந்து விட்டது என்று  புரிந்து கொள்வேன்!

   படித்த பழைய புதுக் கவிதை!

மைக், போஸ்டர், கூட்டம் 
ஆரவாரப் பேச்சு
பத்திரிக்கையில் 
அமர்க்களமாய் படம்
வாழ்த்துக் கவிகள்- ஒன்றுமே
இல்லை!
மாதத்தில் ஒருநாள்
சலூன் காரன் எனக்குப் 
பொன்னாடை
போர்த்துகிறான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து  ஊக்கப்படுத்தலாமே!

Comments

  1. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சுரேஷ் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. விகடகவி, முடிவில் கவிதை சூப்பர்...

    ReplyDelete
  4. குட்டி கதைகளும், துணுக்குகளும் நன்று. அதிலும், சமையல்கார கிழவி, சூப்பர்!!!

    ReplyDelete
  5. படித்ததில் பிடித்ததை அழகிய கவிதையுடன் பகிர்ந்தமை அருமை! அனைத்து துணுக்குகளும் அருமை!

    ReplyDelete
  6. நல்ல சம்பவங்களை உள்ளடக்கிய பதிவு..
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  7. அருமையான பதிவு

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு... அதிலும் அந்த மொழி பற்றியும், பேராசிரியர் பற்றிய பதிவு அருமை...

    ReplyDelete
  9. நினைவுகளை மீள் பிரசுரம் செய்தது பழையவை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் தான் நன்றி படைத்ததற்கு

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா!!

    ReplyDelete
  11. ;-)). ரசித்தேன்.

    வேதநாயகம் பிள்ளை எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!