இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள யோசனைகள் இருபது!




இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள யோசனைகள் இருபது!




1.உடல் நோய்வாய்ப்படும் போது வென்னீர் குடிக்க நேரிடும். சூடாக உள்ள நீரில் குளிர்ந்த நீரை கலந்து குடிப்பது சரியல்ல. வெந்நீரை ஆற்றிக் குடித்தால்தான் உரிய பலன் கிடைக்கும்.
                 உமாகண்ணன், சென்னை
2.உணவு உண்டபிறகு குளிக்ககூடாது. ஏன் தெரியுமா? உணவு உட்கொண்ட பிறகு உடல் குளிர்ந்து இருக்கும். அப்போது குளித்தால் உடல் மேலும் குளிர்ந்து போய் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகாது. உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
                                       எஸ் இராமலிங்கம் தூத்துக்குடி.
3.கர்பமாக இருக்கும் பெண்கள் ஏழுமாதம் முடிந்ததில் இருந்து காலையில் கொதிக்கும் சாதத்தில் இருக்கும் கஞ்சியை இரண்டு கரண்டி தெளிவாக எடுத்து ஒரு ஸ்பூன் வறுத்த வெந்தயப்பொடி கொட்டைப்பாக்கு அளவுக்கு வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் தொடர்ந்து பிரசவ காலம் வரை சாப்பிட சுகப்பிரசவம் நடக்கும்.
                                  என். உமா மகேஸ்வரி. மேற்கு மாம்பலம்.

4.இரவு நேரங்களில் அணியும் ஆடைகள், மற்றும் படுக்கை விரிப்புகளை வீட்டிற்குள்ளேயே உதறக்கூடாது.  உணவுப் பண்டங்களை படுக்கையறையில் பறிமாறுதல் கூடாது. மீறிச் செய்தால் நூல் புழுக்கள் உடலில் புகும் அபாயம் உண்டு.
                                             நெ. இராமன், சென்னை.

5.அதிகமாய் காபி டீ குடித்து வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் கொஞ்சம் ஜீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்துவர நிவாரணம் தெரியும். புத்துணர்ச்சி கிடைக்கும்.
                           கே.விஜயலட்சுமி, வேளாந்தாங்கல்.

6.பசும்பாலை சிறிது ஓமம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி சாப்பிட சளி வரட்டு இருமல் காணாமல் போய்விடும்.
                     என். புவனாசாமா, சீர்காழி.

7.சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி சின்னவெங்காயம் பூண்டு மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கும். நோய் கட்டுப்படும்.
                         ஹரிஹரன், கொச்சின்.

8.வெட்டுப்பட்ட பழங்களோ காய்கறிகளோ வாங்கக்கூடாது. அதன் வழியாக கிருமிகள் உட்புகுந்திருக்கும் நோய்கள் வரும்.
                                ஆர். பார்வதி, அம்பத்தூர்

9.பாத்ரூம்களில் பற்பசை சோப்பு போன்றவை திறந்திருந்தால் கிருமித் தொற்று ஏற்படும். எலி, பல்லி சிறுநீர் அதில் பட்டு நோய்கள் பரவும் ஆபத்து உள்ளதால் சோம்பல் படாமல் மூடி வைக்கவும்.
                               ஜீவாகுமார், கே.கே.நகர்.

10.லெமன் ஜூஸ்,சாத்துகுடிஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை தயாரித்தவுடன் பருகிவிட வேண்டும். காரணம் அவற்றில் உள்ள வைட்டமின் சி காற்றில் ஆவியாகிவிடும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியும் இளமையான சருமமும் வேண்டுமென்றால் பழச்சாறுகளை ப்ரெஷ்ஷாக அருந்தி விடுங்கள்.
                            பிரேமா சாந்தா ராம், சென்னை
11.கோடைக்காலத்தில் நார் உரித்த தேங்காய்களை வெளியில் வைத்திருந்தால் வெப்பத்தினால் விரிசல் கண்டுவிடும். இதை தவிர்க்க ஃப்ரிட்ஜில் வைக்கலாம். அல்லது ஈரமான கோணிப்பைகளை அதன் மீது போட்டு வைக்கலாம்.
                         சியாமளா ரமணி, செகந்திராபாத்.

12.ஆண்கள் ஆட்டோவில் பயணிக்கும் போது செல்போனை பாண்ட் பாக்கெட்டில் வைக்க வேண்டாம். ஆட்டோவின் குலுக்கலில் மெள்ள மெள்ள வெளியே வந்து கீழே விழுந்து விட வாய்ப்பு உண்டு.
                               அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.
13.சின்னத் துண்டு கறுப்பு எமரி பேப்பரில் சோப்புத்தூள் போட்டு வாஷ்பேசின் பாத்ரூம் டைல்ஸ்களை தேய்த்து கழுவினால் எந்த கறையும் இருக்காது. புதுசு போல மின்னும்.
                                டி.மங்கை, கரூர்.
14.எல்லார் வீட்டிலும் குழந்தைகளை தரையில் அமரச்சொல்வதே இல்லை. பள்ளியிலும் மேஜை, வீட்டிலும் சோபா என உட்காருவதால் கீழே உட்காரும் வீட்டிற்கு சென்றால் சிரமப் படுகின்றனர்.கூடியவரையில் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது, விளையாடுவது என்ற வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும், இதனால் இடுப்பு, கால்கள் புத்துணர்ச்சி பெறும்.
                   பி.சூடாமணி, ஸ்ரீரங்கம்.

15.கீரை பச்சைக் காய்கறிகளை நறுக்கி சிறிது மஞ்சள்தூள், கால்பங்கு உப்பு சேர்த்து வதக்கினால் பசுமை மாறாமல் இருக்கும். வெண்டை பீன்ஸ் போன்றவை நறுக்கிய நிறத்திலேயே இருக்கும்.
                                வசுமதி மணிவண்ணன், சென்னை.

16.கேஸ் லைட்டர் மக்கர் செய்கிறதா? சமைத்து இறக்கிய சூடான குக்கர் மீது லைட்டரை சிறிது நேரம் வைத்து உபயோகித்தால் வேலை செய்யும்.
                          ஆர்.உமா ராமமூர்த்தி, சென்னை.

17.தோசைக்கல்லில் தோசை சரியாக வரவில்லை எனில் கொஞ்சம் புளியை சிறுதுணியில் மூட்டையாக கட்டி எண்ணெயில் முக்கித் தேய்த்து தோசை சுட்டால் ஒட்டாமல் வரும்.
                                       லட்சுமிசிவம், புரசைவாக்கம்.

18.இரவு படுக்க செல்லும் போது வீட்டின் சாவிகள் செல்போன், பக்கத்து வீடு, எதிர் வீடு போன் நம்பர் ஆகியவற்றை பக்கத்தில் வைத்துக் கொண்டால் எப்பவுமே நல்லது.
                                 விஜயா சுவாமி நாதன் திருச்சி.
19.வாரத்தில் ஒருநாள் சுத்தமான வேப்ப எண்ணெய் துளிஎடுத்து இரவு படுக்கப் போகும் முன் ஈறுகளில் தடவி எச்சிலை விழுங்காமல் துப்பினால் பல் சொத்தை வராது.
                              ஆர். கனகவல்லி பெங்களூரு.
20கோவைக்காய் வாங்கினால் உடனே சமைக்க வேண்டும். ப்ரிட்ஜில் இருந்தால் கூட அடுத்த நாள் பழுத்துவிடும். அது போல நூல்கோல் வாங்கினால் உடனே சமைத்தால் பிஞ்சு பிஞ்சாக நன்றாக இருக்கும். மறுநாள் சமைத்தால் முற்றி விடும்.
                                       ஆர். உமா ராமு. கே.கே.நகர்.

நன்றி: மங்கையர் மலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்தலாமே! நன்றி!


Comments

  1. விடுபட்டது...

    1. கணவனை கரப்பான் பூச்சிக்கு மேலாவது மதிக்க வேண்டும்.

    2. மாமியாரின் சொந்தங்களுக்கு காப்பியில் சற்றேனும் பால் ஊற்ற வேண்டும்

    3. நாத்தனாரை நாய் என்று திட்டக் கூடாது..

    இன்னும் பலப்பல!

    ReplyDelete
  2. பயனுள்ளவை, தொடரட்டும் தங்கள் பயணம்!

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு... மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள குறிப்புகள்!

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
    என்னுடைய தளத்தில்

    தன்னம்பிக்கை -3

    தன்னம்பிக்கை -2

    ReplyDelete
  6. எல்லாமே பயனுள்ளதாய் இருக்கிறது.நன்றி சுரேஷ் !

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள பகிர்வு தோழரே..//கறுப்பு எமரி பேப்பர்//என்பது என்ன..?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!