ஒண்ணொன்னா... ஒண்ணொன்னா வேணும்!


 ஒண்ணொன்னா... ஒண்ணொன்னா வேணும்!

நண்பரை சந்திக்க போயிருந்தேன். அவரது இரண்டு வயது மகள் ‘ஓண்ணொன்னா ..ஒண்ணொன்னா வேணும்..’ என்று கேட்டு அழுதது.
 நண்பரும் அவரது மனைஇயும் பல விளையாட்டு சாமான்களை கொண்டு வந்து ஒவ்வொன்றாகக் காட்டி, ‘இதுவா ஒண்ணொன்னா? என்று கேட்டனர்.
குழந்தை அனைத்தையும் புறந்தள்ளி அழுதது.ஒண்ணொன்னா வேணும்!
சாக்லேட், பிஸ்கெட் ஆகியவைகளை கொண்டு வந்து கொடுத்தார்கள். அவைகளையும் எட்டி உதைத்தது, ‘ஒண்ணொன்னா வேணும்! என்று அடம் பிடித்தது.
 நண்பர் வெறுத்துப் போய், பக்கத்து மேஜையில் கிடந்த காகிதப்பொட்டலத்தில் இருந்த அரிசிப் பொரியை அள்ளி அதன் முன் போட்டு ‘அழுவாம இதைச் சாப்பிடு... என்று கத்தினார்.
   குழந்தை ஆவலுடன்!ஹை! ஒண்ணொன்னா..” என்று குதூகலத்துடன் அரிசிப் பொரியை பொறுக்கித்தின்றது.
பிறகுதான் புரிந்தது நண்பர் முதல் நாள் குழந்தை முன் பொரிகடலையைப் போட்டுவிட்டு ‘ஓண்ணொன்னா எடுத்து சாப்பிடு!’ என்று சொல்லியிருக்கிறார். குழந்தை அதைத்தான் “ஒண்ணொன்னா” என்று சொல்லி இருக்கிறது.

 பழைய வாரமலர் இதழில் படித்தது!

கண்ணும் தெரியலே! ஒருமண்ணும் தெரியலே! 

சோமு தாத்தா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
தெருவழியே போன ராமசாமி, ‘என்ன தாத்தா சவுக்கியமா? என்று கேட்டான்.
‘யாரு? என்றார் தாத்தா பலஹீனமான குரலில்.
‘நான் தான் ராமசாமி’
‘எந்த ராமசாமி..?’எனக்குத்தான் கண்ணும் தெரியலை ஒரு மண்ணும் தெரியலையே..?’
‘நான் தான் மேட்டு தெரு சுப்ரமணியம் மகன் ராமசாமி..’
‘அப்படியா உட்காரு! எனக்குத்தான் கண்ணும் தெரியலே...! ஒரு மண்ணும் தெரியலே..?’
ராமசாமியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த தாத்தா தூரத்தில் தெருக்கோடியில் போய்க்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் காட்டி... ‘டேய்.. ராமசாமி... அதோ போறாளே ஒரு செவத்த குட்டி... அவ சோனாசலம் பேத்திதானே?’
ராமசாமி தெருக் கோடியை பார்த்துவிட்டு, ‘எங்கே தாத்தா அப்படி யாரும் போறதா தெரியலியே!’ என்றான்.
நல்லாப் பாருடா! ரெட்டை ஜடை போட்டுகிட்டு காதுல ஜிமிக்கி போட்டுகிட்டு, செவப்பு சோளியும்,பொடிப்பொடியா பூப்போட்ட தாவணியும் போட்டுகிட்டு ‘தளுக்கு தளுக்கு’ன்னு போறாளே... தெரியலே?’
‘தெரியலை தாத்தா!’
‘அடப்போடா! உனக்கு கண்ணும்தெரியலே!ஒரு மண்ணும் தெரியலே!’

சின்ன ராசு எழுதிய  தேனடை என்ற புத்தகத்திலிருந்து.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!

Comments

  1. நல்லா இருக்குது தளிரண்ணா!
    http://www.krishnaalaya.com

    ReplyDelete
  2. சுவாரஷ்யமான இதுவரை படித்திராத சம்பவங்கள் அகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. ஆஹா... இரண்டுமே அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  4. தொடர்ந்து கலக்குங்கள்!

    ReplyDelete
  5. குழந்தைகள் மொழி தெரிய கத்துக்க வேண்டி இருக்கு இல்லையா சூப்பரு...ஒன்னொன்னா ஒன்னொன்னா...!

    ReplyDelete
  6. இரண்டும் அருமையான பதிவுகள்
    குறிப்பாக தாத்தா குசும்பு அற்புதம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஒண்ணுக்கு ரெண்டாவே சொல்லிட்டிங்க..பலே.பலே!

    ReplyDelete
  8. குழந்தைங்க பேச்சு அம்மாவுக்குத்தான் புரியும் என்று சொல்வாங்க சில நேரங்களில் பல இடங்களில் அனுபவித்திருக்கிறேன். அருமை அருமை.

    ReplyDelete
  9. இதற்காகத்தான் குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்லுரன்களோ
    இரண்டும் அருமையான பதிவுகள் அண்ணா வாழ்த்துகள்

    ReplyDelete
  10. ஒன்னொன்னா நன்றாக இருந்தது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!