இப்படித்தான் சாவேன்! பாப்பா மலர்!

இப்படித்தான் சாவேன்! பாப்பா மலர்!

கோல்கொண்டா மன்னன் கிருஷ்ண தேவராயரைக் கொண்று அவரது நாட்டை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என நினைத்தான். அதற்காக தன்னிடம் நம்பகமாக உள்ள ஒரு மனிதனை விஜய நகரத்திற்கு  அனுப்பி வைத்தான். அவன் விஜய நகரத்திற்கு வந்ததும் முதலாவதாக கிருஷ்ணதேவராயர் நம்பிக்கை வைத்திருப்பது தெனாலி ராமனிடம் என்று தெரிந்து கொண்டான்.
      உடனே நேரே தெனாலிராமன் வீட்டிற்கு வந்து மிகவும் பழக்கமானவன் போல் சொந்தம் கொண்டாடினான். தெனாலி ராமனிடம் அவன், நான் உன் தாய் மாமன் மகன் சின்னவயதில் ஓடிப்போனேனே அவன் தான் நான் என்றான்.
   தெனாலி ராமனுக்கு சந்தேகம் இருந்தாலும் அவன் மனைவி நம்பியதால் அவனை தன் வீட்டில் தங்க வைத்தான். சில நாட்கள் கடந்ததும் அவன் கிருஷ்ண தேவராயருக்கு தெனாலி ராமன் எழுதுவது போல ஒரு கடிதம் எழுதினான். அதில் அன்றைய இரவு தெனாலிராமனுடைய வீட்டின் பின்புறம் தனியாக வருமாறும் முக்கியவிசயம் குறித்து பேசுவதாகவும் தெரிவித்து இருந்தான்.
   கிருஷ்ண தேவராயருக்கு கடிதம் கிடைத்ததும் அதை படித்ததுமே தெரிந்து கொண்டுவிட்டார் இது தெனாலிராமன் எழுதியது அல்ல என்று.சரி வேறு யார் எழுதி இருப்பார்கள் கண்டுபிடித்து விடலாம் என்று அவன் குறிப்பிட்ட இரவில் தனியாக தெனாலி ராமன் வீட்டிற்கு சென்றார்.
    கிருஷ்ண தேவராயர் தெனாலிராமன்வீட்டு பின் வாசல் வழியே சென்றார் உள்ளே இருளாக  இருந்தது. தீடிரென்று ஒருவன் கத்தியால் ராயர் நெஞ்சில் குத்த முற்பட்டான்.ராயர் கவசம் அணிந்து வந்ததால் லாவகமாக தப்பி குத்தியவனின் கைகளை மடக்கி தன் கையில் இருந்த வாளால் அவனை குத்தினார். அவன் இறந்து போனான்.
  குத்தியவன் தெனாலிராமன் இல்லை என்பதை அறிந்து கொண்ட ராயர் தெனாலி ராமனை கைது செய்ய உத்தரவிட்டார். விசாரணை துவங்கியது. தெனாலிராமன் வீட்டில் தங்கியிருந்தவந்தான் ராயரை குத்தியவன் என்று நிரூபணம் ஆகவே  ராஜத்துரோக குற்றம் தெனாலிராமன் மேல் சாட்டப்பட்டது.
  ராஜத்துரோகிக்கு இடம் அளித்த தெனாலி ராமனுக்கு சட்டவிதிகளின்படி மரண தண்டனை விதித்தார் ராயர். விவேகியான தெனாலி ராமன் சிறிதும் கலங்கவில்லை! மன்னா! அறியாமல் நிகழ்ந்த தவறு இது! அவன் மிகவும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டான்! எனக்கு கருணை காட்ட கூடாதா? என்று கேட்டான்.
  ராயர், ராமா! தண்டணையை மாற்ற முடியாது! உனக்கு மரணம்தான் முடிவு! ஆனால் உனக்கு ஒரு அனுமதி தருகிறேன்! நீ உன் விருப்பம் போல் சாகலாம்! என்றார். தெனாலி ராமன் மிகவும் மகிழ்ந்தான். மிக்க நன்றி மன்னா! தங்கள் கருணையே கருணை நான் வயதாகி கிழவனான பின் சாக விரும்புகிறேன் என்று தலைவணங்கி பதில் சொன்னான்.
    மன்னர் திகைத்துப் போனார்! ராமா! நீ புத்திசாலி என்று நிருபித்துவிட்டாய்!  உன்னை மன்னித்தேன்! நீ விடுதலை அடைந்தாய்! இனியாவது எதிரிகளிடம் எச்சரிக்கையாக இரு என்று எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டார்.

சாவே எதிரில் வந்த போதும் தன் புத்திக்கூர்மையால் பிழைத்த தெனாலி ராமன் போல நாமும் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் பிள்ளைகளே!

விமானம்!

விண்ணில் தவழும் விமானம்- இது
வேகமாய் பறக்கும் விமானம்!
பயணிகளை ஏற்றி பறந்திடும்- அழகாய்
பறவைகளை போல பறந்திடும்!
இறக்கை முளைத்த விமானம்- இது
இயற்கையின் அதிசய விமானம்!
உலகம் முழுவதும் பறந்திடும்- பல
உலக மக்களை ஈர்த்திடும்!
செய்திகளை சுமக்கும்விமானம்-இது
சரக்கினையும் ஏற்றும் விமானம்!
மேகத்தினை கிழித்து பறந்திடும்
மேட்டுக்குடிமக்களின் வாகனம் விமானம்!
அமெரிக்க சகோதரர்களின் கண்டுபிடிப்பு-இது
அறிவியல் யுகத்தின் புது எழுச்சி!

உங்களுக்குத் தெரியுமா?

வைட்டமின் என்ற சொல் லத்தின் மொழியில் இருந்துபிறந்ததாகும் இதற்கு உயிர்சத்து என்பது பொருள்.

கீ போர்டுடன் உள்ள மிகப்பெரிய இசைக்கருவி ஆர்கன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!



Comments

  1. புத்திக்கூர்மை எப்போதும் நமக்கு கைகொடுக்கும்

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் கருத்திட்டு ஊக்கமிட்டதற்கு நன்றி நண்பா!

      Delete
  2. நல்ல புத்திசாலி கதை

    ReplyDelete
  3. ஏற்கனவே அறிந்த கதையானும் சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  4. Replies
    1. தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  5. தெனாலி ராமன் சம்பவம் பாப்பாக்களுக்கு மட்டுமல்ல பாப்பா ஓணர்களுக்கும் அவசியம் தேவை நண்பா
    நல்லதொரு தொகுப்பு

    ReplyDelete
  6. தெனாலிராமன் கதைகள் எப்போதுமே எனக்கு பிடித்தமானவை! நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து உங்கள் சுவடுகளை என் தளத்தில் பதித்துவருவதற்கு மிக்க நன்றி நண்பா!

      Delete
  7. பல நாள் கழித்து தெனாலி கதை படித்து மகிழ்ந்தேன் சார்

    ReplyDelete
  8. கதை, விமானம், இசைக்கருவி எல்லாம் கலந்த அருமையான தொகுப்பு...தொடருங்கள்.........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!