ஈக்களை கட்டுப்படுத்தும் "சமூக சிலந்தி' வலை: கிராமப்புறங்களில் வினோதம்

தாம்பரம்:நகர்ப்புறங்களில் ஈக்களை கட்டுப்படுத்த மக்கள் திணறி வரும் நிலையில், "சமூக சிலந்தி' வலைகள் மூலம், ஈக்களை கட்டுப்படுத்தும் முறை, கிராமப்புறங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் வாழிடங்களில் பரவலாக காணப்படும் பூச்சி வகைகளில், ஈ குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு பெண் ஈ, அதிகபட்சம், 500 முட்டைகள் இடும். முட்டைகளை ஒரே இடத்தில் இடாமல், ஒவ்வொரு இடத்திலும், 75 முதல் 100 முட்டைகள் வரை இடும். இவை சாப்பிடும் இடங்களில் கழிவை வெளியேற்றுவதால், அதன் மூலம் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுகிறது.


ஒரு மாதம் மட்டும்:திரவப் பொருட்களை மட்டுமே சாப்பிடும் ஈக்கள், திடப்பொருட்கள் மீது எச்சியை துப்பி, திரவமாக மாற்றும் தன்மை கொண்டது. இவை ஒரு மாதம் மட்டுமே வாழும். இரவு நேரத்தை காட்டிலும், பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆடி மாதம் மாம்பழம் சீசன் என்பதால், ஈக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.ஈக்களை கட்டுப்படுத்த காடுகளில் உள்ள "சமூக சிலந்தி' வலைகள், கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. காடுகளில், காரைச் செடி மற்றும் முட்புதர்களில் கட்டப்பட்டுள்ள "சமூக சிலந்தி' வலைகளை உடைத்து வந்து, ஈத்தொல்லை அதிகமாக உள்ள இடத்தில் வைத்து விடுகின்றனர். அவற்றின் மீது அமரும் ஈக்கள், சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. சிறிது நேரத்தில், வலையில் உள்ள சிலந்திகள் வெளியே வந்து, ஈக்களை பிடித்து தின்று விடுகின்றன. இப்படி ஒவ்வொரு வலையிலும், நூற்றுக்கணக்கான ஈக்கள் சிக்கிக் கொள்கின்றன.


அழிந்து வரும் இனம்"சமூக சிலந்தி'கள் ( ) இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் மட்டும் காணப்படுகின்றன. வறண்ட காடுகள், முட்புதர்களில் இந்த சிலந்திகள் வலை பின்னும். ஒவ்வொரு வலையிலும், மூன்று அல்லது நான்கு சிலந்திகள் இருக்கும். சில நேரங்களில் சிலந்தி குஞ்சுகளே, தாய் சிலந்தியை தின்று விடும்.


இது குறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா மருத்துவர் திருமுருகன் கூறுகையில், "இந்த சிலந்திகள் அழியும் நிலையில் உள்ளன. எனவே, காடுகளில் இருந்து கொண்டு வரப்படும் சிலந்தி வலைகளை, அழித்து விடாமல் மீண்டும் காடுகளிலேயே கொண்டு போய்விட மக்கள் முன் வரவேண்டும்,' என்றார்.

டிஸ்கி} இதுபோன்ற சிலந்திகள் காரை எனப்படும்புதர்களில் கூடு கட்டுமாம்! இதில் இரண்டு மூன்று சிலந்திகள் உள்ளதாக பார்த்து  அந்த கிளையை ஒடித்து வந்து வைத்தால் அதில் சிலந்திகள் சிக்குமாம். கிராமங்கள் நகரமாய் மாறி வரும் வேளையில் இதை இப்போது கிராமங்களில் கூட காண முடிவதில்லை! இயற்கைக்கு எதிராக பயணித்து இயற்கை தரும் ஏராளமானவற்றை இழந்து வருவது வேதனையான விசயம்!

நன்றி} தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!


Comments

  1. இந்த உலகில் இருக்கும் ஒவ்வொறு உயிரினமும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்கிறது அவைகள் கேட்பதற்க்கும் பார்ப்பதற்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்...


    இதுபோன்ற அறிய உயிரினங்களை அழிவே நோக்கி போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. ///அழிந்து வரும் இனம்"சமூக சிலந்தி'கள் (ஞிணிட்ட்ணிண ண்ணிஞிடிச்டூ ண்ணீடிஞீஞுணூ) இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் மட்டும் காணப்படுகின்றன. வறண்ட காடுகள், முட்புதர்களில் இந்த சிலந்திகள் வலை பின்னும். ஒவ்வொரு வலையிலும், மூன்று அல்லது நான்கு சிலந்திகள் இருக்கும். சில நேரங்களில் சிலந்தி குஞ்சுகளே, தாய் சிலந்தியை தின்று விடும்.///

    அடைப்புக்குறிக்குள் உள்ள வார்த்தையை கவனிக்கவும்!

    நல்ல தகவல் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைக்கு நன்றி நண்பரே! இது மாற்றமுடியவில்லை எனவே நீக்கிவிட்டேன்!

      Delete
  3. thagavalukku nandri... neengal tharum ookkaththukku migavum nandri..
    http://www.rishvan.com

    ReplyDelete
  4. நல்ல தகவல்...
    நன்றி நண்பரே ...

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க வந்தனங்கள் அன்பரே!

      Delete
  5. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  6. ஈக்கள் தான் அமர்ந்துண்ணும் இடங்களில் முட்டையிடும் வழக்கமுடையது. மாம்பழத்தின் மேல் அமர்ந்து இடும் முட்டை, நம் கையினால் உடைபடாது தோலினுள்ளே சென்று முட்டை பொரிந்து புழுக்களாகி அதற்கு மேல் வளராது, இறந்துவிடும்! - தகவலுக்காக!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!