தயக்கம் ஏன் இளைஞா! கவிதை!

தயக்கம் ஏன் இளைஞா!

ஓ இளைஞா!
எழுந்திரு!
தயக்கம் ஏன்?
தள்ளிப்போடாதே உன்
வாய்ப்புகள் தள்ளி போகும்.
துள்ளி எழு!
துணிச்சலோடு உலா வா!
அணிவகுத்து நிற்கும்
பணிகள் உன் கண்ணில்
படும்!
உயரத்தில் ஏறினால்
துயரங்களும் சிறிதாகிப் போகும்!
இதயத்தை வரைந்து
நேரத்தை வீணாக்காதே!
கனா காண்பதை விடு!
கையில் எடு தொழில்!
ஊர் சுற்றி கதை பேசாமல்
ஓர் வேலை உனக்குத் தேடு!
முயற்சி இருப்பின்
அயர்ச்சி தவிர்ப்பின்
ஆயிரம் வேலைகள் அவனியில்!
அனுபவம் பயில்!
அசதியை தவிர்!
தள்ளி எறி தயக்கத்தை!
அள்ளிக்கொள் தைரியத்தை!
அவனியில் நீயும் சாதிப்பாய்!
விலகியே இரு!

 அன்பே நீ
என்னிடம் விலகியே இரு!
விலக விலகத்தான்
நெருக்கம் அதிகமாகிறது!
நீ நெருங்கும் போது
மறந்த நினைவுகள்
விலகும் போது
விரைந்து வந்து முட்டி மோதுகிறது!
அருகில் வரும் போது
அடங்கி போகும் காதல்
தொலைவில் செல்கையில்
பீறிட்டு எழுகிறது!
நீ நெருங்கி வருகையில்
குறையும் அன்பு
தூரப்போகையில்
பொங்கி வழிகிறது!
தூரம் அதிகம் ஆக ஆக
நேசம் நெருங்கி வருகிறது!
ஆகவே அன்பே நீ
விலகியே இரு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

டிஸ்கி} இன்று நான் போட நினைத்த பதிவு வேறு! என் சிறுவயதுநினைவுகளை கொண்டு ஒரு சிறுகதை போட நினைத்தேன். ஆனால் காலை முதல் 5மணிவரை பவர்கட்! எனவே என் கையெழுத்து பத்திரிக்கையில் 94ல் எழுதிய இரண்டு கவிதைகளை தந்துள்ளேன்! நன்றி!


Comments

  1. அருமையாக எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!நேற்று உங்கள் தளம் வந்தும் கருத்திட முடியவில்லை! இன்று கருத்திட்டுள்ளேன்!

      Delete
  2. சபாஷ்...நன்றாக இருக்கு - உற்சாகம் தரும் வரிகள்

    ReplyDelete
  3. 2 kavithaikalum arumaiyai irukku. Valthukkal

    ReplyDelete
  4. உயரத்தில் ஏறினால்
    துயரங்களும் சிறிதாகிப் போகும்!//

    கவிதை மிக மிக அருமை
    குறிப்பாக இந்த வரிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதைகள் நன்று சுரேஷ் சார். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  6. இரண்டு கவிதையும் சூப்பர் அழகான ரசிக்கக் கூடியதாக இருக்கிறது சார்

    ReplyDelete
  7. தன்னம்பிக்கை தருகிறது முதலாவது கவிதை.இரண்டாவது காதல் எப்போதுமே அழகுதான் !

    ReplyDelete
  8. இரண்டுமே அருமையான கவிதை நண்பா!

    ReplyDelete
  9. அருமையான படைப்பு அண்ணா தொடருங்கள் வாழ்த்துக்கள் பல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!