கழிப்பறை இல்லாததால் தாய்வீடு சென்ற மணப்பெண்!

கழிப்பறை இல்லாததால் தாய்வீடு சென்ற மணப்பெண்!

               எதற்கெல்லாமோ சண்டை போட்டுக் கொண்டு தாய்வீடு செல்கிறாள் மனைவி. ஆனால் அத்தியாவசியமான கழிப்பறை கேட்டு தாய்வீட்டிற்கு சென்று கழிப்பறை கட்டியும் சாதித்து விட்டார் ஒரு பெண். தமிழ் நாட்டில் அல்ல. இங்கு தான் ரோட்டோரங்கள் பொதுக்கழிப்பிடங்களாகஆக்கப்பட்டுவிட்டனவே!
        உ.பியில் கோரக்பூர் அடுத்த விஷ்ணுபூர் கிராமத்தில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள அமர்ஜித் என்பவர் பிரியங்காவை திருமணம் செய்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கழிப்பறை இல்லை என்பதை தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பிரியங்கா  கழிப்பறை கட்டியபின்  என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்  என்று கூறி பிறந்தவீட்டிற்கு சென்று விட்டார்.
    இத்தகவல் கிராமத்தில் எல்லோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து சுலாப் என்ற தன்னார்வ அமைப்பு  அமர்ஜித் வீட்டிற்கு கழிப்பறை கட்டித் தந்தது. இந்த கழிப்பறையின் திறப்பு விழா சமிபத்தில் கோலாகலமாக நடைபெற்று பிரியங்கா புகுந்த வீடு வந்து சேர்ந்தார். இதைப்பார்த்து ஜோதி என்பவரும் கழிப்பறை இல்லாத வீட்டில் இருக்க மாட்டேன் என்று குரல் எழுப்ப அவரது பிரச்சனையும் தீர்க்கப்பட்டது. நல்லா விவரமாத்தான் இருக்காங்க!

ஐயோ பாவம் அப்துல் கலாம்!

     இப்படி எழுத எனக்கு மனசு வரவில்லைதான்! ஆனால் என்ன செய்வது அப்துல் கலாம் மீதுமிகுந்த மதிப்பு வைத்திருந்த எனக்கும் இன்னும் சிலருக்கும் அவரது சமீபத்திய அறிவிப்பு இப்படி சொல்ல வைத்திருக்கிறது. இந்தியாவின் ஏவுகணையின் தந்தை! இளம் இளைஞர்களின்  ஹீரோவாக திகழ்ந்த அப்துல் கலாம் பற்றி ஏற்கனவே ஒரு சர்ச்சை இருந்து வந்தது. அது 2004ல் சோனியாவை பிரதமர் ஆகாமல் தடுத்தவர் இவர்தான்! அதனால் தான் இரண்டாம் முறையாக ஜனாதிபதி ஆகாமல் சோனியா இவரை தடுத்துவிட்டார் என்று கூறுவார்கள்.  ஆனால் அப்போதெல்லாம் வாய் திறவாத அப்துல் கலாம் இப்போது சோனியா பிரதமர் ஆவதை நான் தடுக்கவில்லை! அவர் விரும்பியிருந்தால் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பேன் என்று கூறி  நிறைய பேரின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். இவருக்கு பால் தாக்ரே அஜித் சிங் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்போது எதற்கு இதைச் சொன்னார் என்று தெரிய வில்லை! ஐயோ பாவம் அப்துல் கலாம்!

சைக்கிள் பயணம் மரம் நடுதல்!

சென்னையில் இயங்கி வருகிறது சென்னை டிரக்கிங்க் கிளப்! இதன் உறுப்பினர்கள் வார விடுமுறை நாட்களில் சைக்கிளில் மனம் போன போக்கில் பல கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது ஆங்காங்கே மரங்களை நட்டும் பாசன முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பெரும்பாலும் ஐடி துறையினர். காலை ஐந்து மணிக்கு துவங்கும் இவர்கள் பயணம் மாலை ஐந்து மணிக்கு முடிகிறது. அங்கேயே தங்கி ஓய்வு எடுத்து மறுநாள் காலை மீண்டும்  கிளம்புகின்றனர். சொட்டு நீர் பாசன முறை , மரம் நட்டு வளர்த்தல் கடலோரச்சுற்று சூழல் போன்றவற்றில் ஆர்வமாக ஈடு படுகின்றனராம் இவர்கள்! வாழ்க! வாழ்க!

இண்டர்நெட்டில் பரவும் பிங்கி மருத்துவ பரிசோதனை வீடியோ!

பிங்கி பிராம்னி இந்திய தடகளவீராங்கனை!? இவர் மீது கொல்கத்தா போலீஸில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார் இவர் ஆண் என்றும் தன்னுடன் வசித்து தன்னை பாலியல் கொடுமை படுத்தியதாகவும்பரபரப்பை ஏற்படுத்தினார். பிங்கி ஆசிய விளையாட்டில் தடை ஓட்டத்தில் பதக்கம் வென்றவர். எனவே ஒலிம்பிக் கமிட்டி மருத்துவ பரிசோதனை நடத்தியது. இந்த நிலையில் பிங்கியின் மருத்துவ பரிசோதனை வீடியோ இணையத்தில் சக்கை போடு போட்டுவருகிறது.ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு நடந்த மருத்துவப் பாலின பரிசோதனையின் காட்சி அடங்கிய வீடியோ பதிவு ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது. 29 விநாடிகள் இந்த காட்சி ஓடுகிறது. அந்த சோதனையின்போது பிங்கி உடலில் ஆடைகள் இன்றி காணப்படுகிறார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது போல காட்சி உள்ளது.
பிங்கி முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது அவருக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனை காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது.இது குறித்து பிங்கியின் வக்கீல் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். என்ன கேவலமான நாடு இது?

கோச்சடையான் உரிமை வாங்கியது ஜெயா டீவி
             ரஜினியின் படமான கோச்சடையான் டீவி ஒளிபரப்பு உரிமையை வாங்க பல டீவிக்கள் முயன்றது. இறுதியில் ஜெயா டீவி பல கோடி கொடுத்து இந்த உரிமையை தக்கவைத்துக் கொண்டது. ஆட்சி கையில் இருக்கும் போது கவலை என்ன? முன் ஆட்சியாளர்கள் பாணி தொடர்கிறது மக்களும் ஐந்து வருடம் பொறுத்திருப்பார்கள்!

வியாச பூர்ணிமா

 ஆனி மாத பவுர்ணமி நாளில் வியாசர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. வியாசர் பாரதம் படைத்தவர் , சிரஞ்சீவீகளில் ஒருவர். பெரிய ஞானவானாக  சந்திரவம்ச குருவாக திகழ்ந்தவர். வியாச பவுர்ணமியில் குருவுக்கு மரியாதை செலுத்துதல் மரபு. வட மாநிலங்களில் வியாச பவுர்ணமி சிறப்பாக கொண்டாட படுகிறது. வியாசர் அவதரித்த இந்த நன்னாளில் நமக்கு பாடம் கற்பித்த நல்ல ஆசிரியர்களின் வாழ்த்துக்களை பெறுவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2