Saturday, June 30, 2012

நெல்லையில் நித்தி நடத்திய யாகம்! கலக்கல் கதம்பம்!

நெல்லையில் நித்தி நடத்திய யாகம்!

தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து விடுபடவும் போலீஸ் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நித்தியானந்தா தனது சீடர்கள் மூலம்  ரகசிய யாகம், வழிபாடு செய்து வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. சிதம்பரம் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவில் இந்த ரகசிய யாகத்தை உச்சிகால பூஜைக்கு முன்பாக சிவாச்சார்யார்களை கொண்டு நித்தியின் சீடர்கள் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இதற்காக பட்டு வஸ்திரங்களும் நிறைய பூக்களும் தருவிக்கப்பட்டதாகவும் பூஜைக்கான நைவேத்தியங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக அதிகாரியோ பட்டு வஸ்திரங்கள்  சார்த்த மும்பை பெரிய தொழில் அதிபர் பெயரில் அனுமதி வாங்கப்பட்டது. நித்தியானந்தாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது என்கிறார். இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
     இங்கே என் கேள்வி} நித்தியானந்தா ஒரு திருட்டு ஆசாமி என்று எல்லோரும் சொல்லி வரும் வேளையில் இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோவில் அர்ச்சகர்கள் செய்தது நியாயமா? ஒரு திருடனுக்கு இந்தமாதிரி இவர்கள் உதவுவார்களா? பணம் கிடைக்கிறது என்பதற்காக இந்த மாதிரி செயல்களில் இறங்கலாமா? கோவில் நிர்வாகத்திற்கு இது தெரியாமலா இருக்கும்?  ஆயிரம் யாகம் செய்தாலும் அவனது விதியை வெல்ல முடியுமா? தெய்வம் நின்று கொல்லும் பெண்பாவம் சும்மா விடாது நித்தியானந்தா!
  கொசுறு செய்தி!
         கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை வந்த நித்தியானந்தா நெல்லையப்பரை  தரிசித்து விட்டு பிரகாரவலம் வந்த போது குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு இங்குதான் சான்னித்தியம் இருக்கிறது. அங்கு நெல்லையப்பரை இல்லை என்று கூறியுள்ளார். இதனால் நெல்லையப்பர் நித்தியானந்தா மேல் கோபமாக இருப்பதாகவும் ஒரு கேரளா ஜோசியர் இதைக் கண்டறிந்து நெல்லையப்பரை குளிர்விக்க பிராயசித்தம் செய்யும்படி அறிவுறுத்தியதாகவும் அதனால் யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிஸ்கி} சாமியாருக்கே ஒரு சாமியார் அறிவுரை தேவைப்படுது! நித்தி கதவை திற காற்று வரும் என்றார்! இவர் வீட்டு கதவை திறந்து வைத்ததால்  கோர்ட்டு கேசு எல்லாம் வந்து விட்டது!  வாழ்க போலி சாமியார்களும் அவரை நம்பும் கூட்டங்களும்! 

 வெல்கம்பேக் டூ யுவராஜ்!

உலக கோப்பை நாயகன் யுவி! வெற்றிகரமாய் புற்று நோயை வென்று காட்டியிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் திடீரென நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். வெளிநாடு சென்று இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் வெற்றி கரமாக நோயை வென்று தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். நோயிலிருந்து மீண்ட அவர் இப்போதுதான் வலைப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்து உள்ளார். விரைவில் இந்திய அணிக்காக ஆட வரலாம். இதற்கிடையில் அவர் தனது சகா விராத் கோஹ்லியுடன் இணைந்து இந்தி சினிமா ஒன்றிற்கு சென்று வந்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
இப்போது தான் கேங்ஸ் ஆப் வேஸிபர் என்ற இந்தி சினிமாவை பார்த்துவிட்டு வந்தோம். என்னுடன் வந்த விராத் கோஹ்லியும், பிரவீண் குமாரும், சினிமா காட்சிகளை ரசித்து பார்த்தனர்.
சினிமாவில் வரும் நடிகர் மனோஜ் பஜ்பாய் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு சினிமாவில் மீண்டும் ஒரு சிறப்பான இடத்தை பெற்று தர உதவும். அதேபோல நானும் இந்திய அணிக்கு மீண்டும் விரைவில் திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பயிற்சியின் இடையே பேசிய யுவராஜ் சிங், தற்போது உடல்நிலை தேறி வரும் நான், இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பையில் கலந்து கொள்ள இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் யுவராஜ்!

அடுத்த படம் இயக்க ரெடி ஐஸ்வர்யா!

கொலவெறி புகழ் ஐஸ்வர்யா அடுத்த படத்தை இயக்க  கைவசம் இரண்டு கதைகள் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அவரது மூனு படம் சிறந்த இயக்குனர் விருதை பெற்று தந்தாலும் வியாபார ரீதியாக பெரிய  ஹிட் அடிக்கவில்லை இருந்த போதிலும் அடுத்த படம் இயக்க ஆர்வமாக உள்ளார் ஐஸ்வர்யா! அதில் ஒன்று குழந்தைகள் படமாம்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்கபோகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.
இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

டென்னிஸ் பிரச்சனைகள்!

   இந்திய டென்னிஸ் அணிகள் இரண்டை ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வாய்ப்பு இருந்தும் மகேஷ் பூபதியை பயசுடன் விளையாடுமாறு சொன்னதில் ஆரம்பித்தது பிரச்சனை. பயசின் முகத்தை பார்க்கவே பிடிக்க வில்லை என பூபதி வார்த்தைகளில் விஷம் கக்கினார். ஜீனியர்களுடன் விளையாட முடியாது என்று பயஸ் கூற போபன்னா தன் பங்கிற்கு பயசுடன் விளையாட முடியாது என்று களத்தில் குதிக்க ஏக ரகளை. கடைசியில் இந்திய டென்னிஸ் சங்கம் பூபதிக்கு பணிந்து போனது. இரண்டு அணிகளை தேர்வு செய்து பூபதி- போபன்னா, பயஸ்- விஷ்ணு வர்த்தன் என அனுப்பிவிட்டு பயசுடன் சமாதானம் பேசியது. இதில் பலிகடா ஆனது பப்ளி சானியாதான்! இவரை கலப்பு இரட்டையரில் பயசுடன் ஆடுமாறு கூறிவிட்டது டென்னிஸ் சங்கம். பயசும் இந்த உடன் பாட்டிற்கு ஒத்துக் கொண்ட நிலையில் இந்திய டென்னிஸ் சங்கம் ஆணாதிக்க மனப்பான்மையில் நடந்து கொள்கிறது என்று பேட்டி கொடுத்து தன் பங்கிற்கு பீதி கிளப்பியுள்ளார் சானியா!
  இவர்கள் இப்படி அடித்துக் கொள்வதை பார்த்தால் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி வருவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
நாடு முக்கியம் தம்பிகளா! 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை தாராளமா சொல்லிட்டு போங்க பதில் மொய் கட்டாயம் உண்டு! அப்புறம் உங்க இஷ்டம்!
எனது அடுத்த பதிவு  இஷ்டப்பட்டு பாராட்டுங்க! விரைவில்!

 

 

97000= 1000 கரூர் வைஸ்யாவின் கருணை!

வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 97 ஆயிரம் ரூபாயில், லோக் அதாலத் மூலம் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலுத்துவது என செட்டில்மென்ட் ஏற்பட்டது.
கரூர் வைஸ்யா வங்கியில் கடன் பெற்றவர்கள் தொடர்பான வழக்குகள், லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. லோக் அதாலத்துக்கு, மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த லோக் அதாலத்தில், கை விரல்களை இழந்து கஷ்டப்படும் தொழிலாளிக்கு யோகம் அடித்தது. பொன்னேரி தாலுகாவில் உள்ள மலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் கரூர் வைஸ்யா வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருந்தார். வட்டியுடன் சேர்த்து 96 ஆயிரத்து 903 ரூபாய் வங்கிக்கு அவர் திருப்பிச் செலுத்த வேண்டும். அவரால் செலுத்த முடியவில்லை. காரணம், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கையில் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டன. இதனால், அவரால் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியவில்லை; வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனையும் செலுத்த முடியவில்லை. இவரது வழக்கு, லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. மனிதாபிமான அடிப்படையில் தர்மலிங்கத்தின் நிலையை வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர். கடைசியில், வெறும் 1,000 ரூபாய் மட்டும் வங்கிக்கு செலுத்தினால் போதும் என, முடிவெடுத்தனர். ஆயிரம் ரூபாயை தர்மலிங்கம் அப்போதே செலுத்தினார். 
தகவல் உதவி} தினமலர்

குளவி நண்பன்! பாப்பா மலர்!குளவி நண்பன்!மானூர் என்னும் அழகியசிற்றூரில்  விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை.  விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து வேலைகளில் உதவி செய்வான்.
   ஒரு நாள் அவன் தன் குடிசை வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவற்றில் கூடு கட்ட முனைந்து கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த  விக்ரமன் அதை விரட்டினான். ஒரு அட்டையை எடுத்து அதை அடிக்க முயன்றான்.
    அப்போது அந்த குளவி பேசியது நண்பா! என்னை அடிக்காதே என்றது. விக்ரமன்ஆச்சர்யத்துடன் யாரது குளவியா பேசுவது என்றான். ஆம் குளவிதான் பேசுகிறேன். நண்பா என்னை அடிக்காதே! என்னுடைய உதவி உனக்கு ஒரு சமயத்தில் தேவைப்படும் என்னை விட்டுவிடு என்றது.
 விக்ரமனும்குளவிதானே என்று எண்ணாமல் குளவியாரே உன்னை கொல்வதால் எனக்கும் ஒன்றும் இல்லைதான்! ஆனால் என்னை தொந்தரவு செய்யாமல் போய்விடு என்றான்.
    குளவியும் நண்பரே! உனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் என்னை நினைத்து குளவி நண்பா என்று அழை நீ எங்கிருந்தாலும் உன் முன் வந்து உனக்கு உதவுவேன். நான் ஒரு கந்தர்வன் ஒரு ரிஷியின் சாபத்தால் குளவியானேன்.இதனால்தான் உன்னோடு பேச முடிந்தது என்று கூறி பறந்து சென்று விட்டது.
   நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்  விக்ரமனனின் பாட்டி, பேரா எனக்கோ வயதாகிறது. முன்பு போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை! பக்கத்து நாட்டுக்கு சென்று ஏதாவது வேலை தேடி பிழைத்துக் கொள் உனக்கும் வயது ஏறிக் கொண்டே போகிறது. என்னுடனே இருந்தால் உலக அனுபவங்கள் கிடைக்காது. நான் எப்படியாவது பிழைத்துக் கொள்கிறேன். நீ வேலை தேடு என்று அவனை பக்கத்து தேசத்திற்கு செல்லுமாறு கூறினாள்.
    விக்ரமனும்பாட்டி சொல்படி பக்கத்து தேசத்திற்கு கிளம்பினான். கையில் கட்டுச் சோற்றுடன் இரண்டு நாட்கள் பயணித்த அவன் மூன்றாம் நாள் இரவுஒரு காட்டை அடைந்தான். அதை கடந்தால் தான் பக்கத்து நாட்டினை அடைய முடியும். நடுக்காட்டில் ஒரே இருள் பாதை புலப்படாமல் அவன் அங்கேயே தங்க முடிவு செய்தான். உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிப் பார்த்தான்.
    மரத்தின் மேலிருந்து பார்த்த போது தூரத்தில் ஓர் வெளிச்சம் தென்பட்டது. எனவே அங்கு ஏதாவது தங்குமிடம் இருக்கும் நமக்கும் உணவில்லை கொண்டுவந்த உணவு காலியாகிவிட்டது. அங்கு சென்று பார்ப்போம் என்று அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.ஒரு பத்து நிமிடத்தில் அந்த வெளிச்சத்தை அவன் நெருங்கினான். அது ஒரு அழகிய மாளிகை! ஆச்சர்யத்துடன் அதனுள் நுழைந்தான். மாளிகையில் யாரும் இல்லை. மாளிகை முழுவதும் பாறாங்கற்கள் இரைந்து கிடந்தன.
    இவ்வளவு அழகிய மாளிகையில் மனிதர்களே வசிக்க வில்லையா? ஏன் பாறாங்கற்கள் இரைந்துகிடக்கிறதுஎன்று யோசித்தவாறே மேலும் உள்ளே நுழைந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் விசும்பலாக வெளிவந்தது.  விக்ரமன்அங்கு சென்றான்.
   அங்கு ஒரு அழகிய இளவரசி பஞ்சணையில் அமர்ந்த படி அழுது கொண்டிருந்தாள்.  விக்ரமன் பெண்ணே நீ யார்? ஏன் அழுகிறாய்? என்றான்.  விக்ரமனை கண்டு திடுக்கிட்ட அவள் நீங்கள் யார்? எப்படி இதனுள் வந்தீர்கள் அதை முதலில் சொல்லுங்கள் என்றாள்.
     விக்ரமன் தன்னுடைய விவரங்களை சொல்லி முடிக்க அவள் நான் ஒரு இளவரசி இந்த மாளிகை ஒரு அரக்கனுடையது. அவன் என்னை கடத்திக் கொண்டு வந்து இங்கு அடைத்து வைத்துள்ளான்.என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முயன்று வருகிறான். நான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து வருகிறேன். என் விருப்பம் இல்லாமல் என்னை தொட்டால் இறந்துவிடுவேன் என்று மிரட்டியதால் என்னை விட்டு வைத்திருக்கிறான். வெளியில் கற்களாக இருப்பவர்கள் என்னை மீட்க வந்தவர்கள் அரக்கனைஎதிர்க்க முடியாமல் கல்லாக மாறிவிட்டார்கள். அவன் எதிரில் வந்தாலே கல்லாக்கி விடுவான் என்று கூறி முடித்தாள்.
   பெண்ணே கலங்காதே நான் உன்னை மீட்கிறேன் என்ற விக்ரமன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பின் இளவரசி எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இரவில்அரக்கன் வரும் சமயம் விளக்கை அணைத்துவிடுங்கள் அவன் கண்ணால் பார்த்தால்தானே கல்லாக்க முடியும். நான் பாறை மறைவில் அமர்ந்து சவால் விட மற்றதை என்னுடைய நண்பன் பார்த்து கொள்வான் என்று சொன்னான்.
   நண்பரா அது யார்? என்றாள் இளவரசி இப்போதுவருவான் பார் என்று குளவியை நினைத்து அழைத்தான் விக்ரமன். உடனே அங்கு குளவி தோன்றியது. இளவரசியை மீட்க வேண்டும் இரவில் இருட்டில் நான் பாறை மறைவில் அமர்ந்து அவனோடு பேசுவேன். நீ அவன் கண்கள் இரண்டையும் கொட்ட வேண்டும். அப்புறம் உன் படை வீரர்கள் அவன் உடல் முழுதும் கொட்டினால் அவன் தீர்ந்தான் என்றான் விக்ரமன்.
   அன்றைய இரவில் அரக்கன் நுழைந்ததும் விளக்கை அணைத்து விட்டாள் இளவரசி! என்ன இது மாளிகை இருட்டாகிவிட்டதே என்று அரக்கன் குரல் கொடுக்கும் போதே உன் முடிவு நெருங்கி விட்டது அதனால்தான் இருட்டாகிவிட்டது என்று குரல் கொடுத்தான் இருளில் ஆள் தெரியாமல் யார் யார் அது என்று அரக்கன் தேடவும் நான் உன் முன்னால் தான் நிற்கிறேன் என்னை தெரியவில்லையா என்று பாறை பின்னால் ஒளிந்து குரல் கொடுத்தான் விக்ரமன்.
   யாரடா நீ என் பலம் தெரியாமல் மோதுகிறாய்! இதோ விளக்கு ஏற்றிவிட்டு உன்னை கவனிக்கிறேன் என்று விளக்கை ஏற்றமுயன்ற அரக்கன் கண்ணில் குளவி கொட்டியது மாற்றி மாற்றி கொட்ட வலியால் துடித்தான் அரக்கன்! ஆ அம்மா! என் கண் போயிற்றே என்று அவன் சொல்லி முடிக்கும் முன் ஏராளமான குளவிகள் அரக்கனை சூழ்ந்து கொண்டன.
   குளவிகளின் கடி தாளாது அலறி உயிரை விட்டான் அரக்கன்.அரக்கன் மறைந்ததுமே அவனது மந்திரசக்தியும் மறைந்து கல்லானவர்கள் உயிருடன் வந்தார்கள்.இளவரசியை அவர்களிடம் ஒப்படைத்தான் விக்ரமன். குளவி நண்பணுக்கு நன்றி சொன்னான்.
    இளவரசியை மீட்ட விக்ரமனுக்கு அந்த நாட்டில் பலத்த வறவேற்பு செய்தார்கள். இளவரசியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த நாட்டின் இளவரசன் ஆன விக்ரமன் தனது பாட்டியை அழைத்து வந்து வைத்துக் கொண்டு சுகமாக வாழ்ந்தான்.

உங்களுக்குத் தெரியுமா?

தாய்லாந்து நாட்டின் பழைய பெயர் சயாம்.

தங்கக் கதவு பாலம் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Friday, June 29, 2012

பசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி:

ஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.
ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர்.

பஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து "பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் "ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களால், கோசாலைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும், 350 முதல், 500 நாட்டுப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.இவற்றிடம் இருந்து பெறப்படும் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம், குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில் உட்பட, ஏராளமான பொருட்களை தயாரிக்கின்றனர்.

"அரசு உதவ வேண்டும்':பஞ்ச கவ்யப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னோடி விவசாயிகள், கவுந்தப்பாடி பாலசுப்பிரமணியம், வெப்படை முரளி, முத்தூர் முத்துசாமி, கோபி கணேசன் கூறியதாவது:கோசாலைகள் தவிர, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பஞ்சகவ்யா, அர்க் (கோமியம்), சோப்பு, சாம்பிராணி, விபூதி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கின்றனர். காய்ச்சி வடித்த கோமியத்தை, நாள்தோறும் இருவேளையும், ஐந்து மி.லி., குடித்தால், சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. குறிப்பாக, கேன்சருக்கு சிறப்பான நிவாரணியாக உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தயாரிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சந்தைப்படுத்தவும், அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

டிஸ்கி} பசு மிகவும் புனிதமாக கருதப்படும் இந்தியாவில் தமிழகத்தில் இந்த மருத்துவ பொருட்களை உரிய முறையில் சந்தை படுத்தினால் நல்ல லாபம் கிடைக்கும் விவசாயிகளும் மகிழ்வார்கள். முதலில் இந்த தொழிலுக்கு காப்புரிமை (பேடண்ட்) வாங்கி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அமெரிக்கா காரன் அடித்துகொண்டு போய்விடுவான். இது குறித்தவிழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு இந்த தொழில் புரிவோருக்கு உதவ முன்வர வேண்டும்

தகவல் உதவி} தினமலர்

புகார் உண்டு! திகார் இல்லை! நான்ரசித்தசிரிப்புகள் 14

     நான் ரசித்த சிரிப்புக்கள்!

இது பொய் செய்தியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!
 ஏன்?
மின்சாரம் தாக்கி இருவர் பலின்னு போட்டுருக்காங்களே!
                      ராஜபாளையம் பேச்சி.

தன்னை அரெஸ்ட் பண்ண போதுமான ஆதாரம் இல்லைன்னதும் தலைவர் என்ன சொன்னார்?
புகார் உண்டு... திகார் இல்லைன்னு பஞ்ச் அடிக்கிறார்!
                           வீ.விஷ்ணுகுமார்

தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!
 என்ன சொன்னார்?
நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!
                            வீ.விஷ்ணுகுமார்.

உன் புருஷனுக்கு இஷ்ட தெய்வம் எதுடி?
எங்களுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து அவர் கும்பிடாத தெய்வம் இல்லை!
                      ஆர்.சி முத்துக்கண்ணு.

கோர்ட்டுக்கு ஆகும் செலவைக் கூட தலைவர் எப்படி எழுதறார் பார்!
என்ன எழுதியிருக்கிறார்?
நீதிக்கு தலைவணங்கிய வகைக்குனு எழுதி இருக்கிறார்!
                            அம்பை தேவா.

மன்னரின் திறமையை ஒரே வார்த்தையில் புகழ்ந்ததற்காக மன்னர் புலவரை சவுக்கால் அடிக்கிறாரே புலவர் அப்படி என்ன வார்த்தை சொல்லி புகழ்ந்தாராம்?
   “ஓடுகாலி!”
                      அம்பை தேவா.

தலைவருக்கு மப்பு அதிகமாயிருச்சுன்னு நினைக்கிறேன்!
 எப்படி சொல்றே?
டெங்கு காய்ச்சலை பரப்புகிற கொசுக்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டும்னு பேசி இருக்காரே!
                           க.சரவணகுமார்.

இது அரசியல்வாதி நடத்துற நர்சரி ஸ்கூல்னு எப்படி கண்டுபிடிச்சே?
அவர் நேஷன் இஸ் டொனேஷன்னு எழுதி போட்டு இருக்காங்களே!
                      அ. பேச்சியப்பன்.

தலைவர் குஷியா இருக்காரே என்ன விஷயம்?
வருங்கால ஆதினமே வருக வருக னு ஃப்ளெக்ஸ் வச்சிருந்தாங்களாமே!
                            பெ. பாண்டியன்
.
தலைவரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே!
எப்படி?
அரும்பாடு பட்டு கட்சியை வளர்த்தேன்.. எல்லாம் புழலுக்கு இரைத்த நீராய் போச்சேன்னு!
                  கிணத்துக்கடவு ரவி.
ஹீரோயின் மரியாதை கொடுத்ததுக்கா ஹீரோ கோபப்பட்டார்?
அங்கிள்னு கூப்பிட்டாங்களாம்!
                          அ.ரியாஸ்

டாக்டர் ஏன் கோபமா இருக்கார்?
அவர் ரூமுக்கு வெளியே யாரோ பேஷண்டுகள் பிறப்பது இல்லை! உருவாக்கப்படுகிறார்கள்னு எழுதி வைச்சிருக்காங்களாம்!

                            வீ.விஷ்ணுகுமார்.
ஏன்யா நில அபகரிப்புக்குக்கூடவா ஸ்கூல் காலேஜ் எல்லாம் லீவ் விடுவாங்க?
தலைவரே அதே பீதியிலே இருக்காதீங்க! அது நில அபகரிப்பு இல்லே நில அதிர்வு!
                        எம்.தஞ்சை தரன்.

நம்ம தலைவரை அப்பாவின்னு ஏன் சொல்றே?
2012ல உலகம் அழியப் போவுதுன்னு சொன்னா அப்ப 234 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமான்னு கேக்கறாரே!
                       பர்வீன் யூனுஸ்.

விதிமுறையை மீறி கட்டினதுக்காக உங்க மேல யார் புகார் கொடுத்தது?
என் ரெண்டாவது பொண்டாட்டியோட முதல் புருஷன்!
                                 அ.ரியாஸ்.

நன்றி ஆனந்த விகடன்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
 

சானியாமிர்சாவை லவ்விய சந்தானம்!

வாழ்க்கையில் சில கேரக்டர்கள் சுவாரஸ்யம்! எது நடந்தாலும் ஓக்கே! நான் இப்படித்தான் இருப்பேன்! என் வாழ்க்கை என்னுடையது நான் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்வது ஒருவகை! இந்த வகையினரின் நடத்தை பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும்.
    இன்னொரு வகை எல்லாவற்றிற்கும் பிறரை பழி போடுவது! கடவுளை குற்றம் சொல்வது. நான் பிறந்த நேரம் சரியில்லை அதான் இப்படி அல்லாடுறேன் என்று சதா புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் ஒரு ரகம்!  இவர்கள் வாழ்க்கை எப்போதும் இனிப்பது இல்லை!
    நாம் பார்க்க போகும் கேரக்டர் சந்தானம்! சினிமா நடிகர் சந்தானம் போலவே ஒரு ஜாலி டைப் கேரக்டர்! கையில் காசிருந்தால் கர்ணன் தான்! கொடை வள்ளலாகி கூடியிருக்கும் தோழர்களுக்கு பாட்டில் பாட்டிலாய் சரக்கு சப்ளை செய்வார். காசு இல்லையேல் அன்று அவனுக்கு கொடுத்தோமே என்று கணக்கு பார்த்து அவனிடம் சென்று கேட்க மாட்டார். அப்படியொரு நல்ல குணம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதர் இந்த சந்தானம்.
     இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஏற்பட்டு விட்டது. சானியா மிர்சாவுடனான காதல் தான் அது. என்னடா சந்தானத்துக்கும் சானியா மிர்சாவுக்குமா? ஏணி வைச்சாலும் எட்டாதே என்று யோசிக்கிறீர்கள் தானே! இது ஒரு தலைக் காதல்! அப்போதுதான் சானியா டென்னிஸ் அரங்கில் அடிபதித்த காலம் பத்திரிக்கைகள் ஆகா ஓகோ என்று புகழ சந்தானம் அவளை லவ் பண்ணத் துவங்கி விட்டான்.
     என்னயா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல பண்றீர்! இதெல்லாம் சரிபட்டு வருமா? என்றால்  உனக்கென்னடா! அவ என்னை லவ் பண்றாலோ இல்லையோ நான் அவளை லவ் பண்றேன்!  என்றூ சிம்பிளாக கூறிவிட்டு செய்தி தாள்களில் சானியாவின் படங்களை சேகரிக்க ஆரம்பித்து விட்டான்
      ஒரு 192 பக்க லாங் சைஸ் நோட்டு வாங்கி அது முழுக்க சானியாவின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். யோவ் இது உம்ம வயசுக்கு நல்லா இல்ல! தகுதியும் இல்ல சின்ன பசங்க மாதிரி இந்த சின்ன பொண்ணை சைட் அடிச்சிகிட்டு திரியாதேயும் என்றால் போடா  இதுக்கெல்லாம் வயசு காரணம் இல்லை மனசுதான் காரணம் அவ என்னை விரும்பாவிட்டால் என்ன நான் அவளை மானசீகமா லவ் பண்ணிட்டு போறேன் என்று சினிமா டயலாக் விடுவான்.

    சில பேர் குஷ்பு சிம்ரன் என்று சினிமா நடிகைகள் மீது அதீத காதல் கொள்வர்! நிஜம் அவர்கள் கண்ணை மறைக்கும். அவர்களுக்கு திருமணச் செய்தி வந்தால் வீட்டில் சாப்பிடாது ஒரு ரெண்டு வாரங்கள் தாடி வளர்த்து திரிவர். இன்னும் சிலர் தாங்கள் மணக்க போகும் பெண்ணுக்கு அந்த நடிகையின் பெயரை சூட்டி சமாதானப் பட்டுக் கொள்வர் அது மாதிரி இவருக்கு சானியா பித்து பிடித்து விட்டது.
    அறை முழுக்க சானியா ப்ளோ அப்களை ஒட்டி வைத்து மகிழ்ந்து கொண்டிருந்த அவருக்கும் ஒரு ஆப்பு வந்தது. டென்னிஸில் கொடி கட்டி பறந்த சானியா கொஞ்சம் சறுக்க ஆரம்பித்தார். பத்திரிக்கைகள் மெல்ல ஓரம் கட்ட  ஆரம்பித்தன. என்னடா இது என் செல்லத்தை பத்தி ஒரு நியுசும் வர மாட்டேங்குது  என்று புலம்பி தீர்த்தான் ஒரு நாள்.
     என்னத்த பெரிசா ஆடி கிழிக்கறா? ஒண்ண மாதிரி ஆளுங்க தான் ஜொள்ளு விட்டுகிட்டு அவ பின்னாடி திரியறீங்க! அவளும் அவ ஆட்டமும் சுத்த வேஸ்ட் என்றதற்கு என்னிடம் கோபித்துக் கொண்டு  மூணு நாள் பேச வில்லை. சானியாவின் முகவரி தெரிந்து கொண்டு பிறந்த நாள் தெரிந்து கொண்டு வாழ்த்து அனுப்பி பார்த்தான் ஒரு லெட்டர் எழுதி அனுப்பினான் எதற்கும் பதில் இல்லை.ஆனாலும் விடாது தொடர்ந்து அவளது பிறந்தநாள் போட்டியில் வென்றதற்கு அதற்கு இதற்கு என்று வாழ்த்து அனுப்பிக் கொண்டே இருந்தான் சந்தானம்
       என்னயா சானியா! சானியான்னு புலம்பினீயே உம்மோட வாழ்த்துக்கு ஒரு தேங்ஸ்  அனுப்பினாளா அவ? என்றேன்! என் செல்லத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும் இதுல என்னோட லெட்டரை அவ பார்த்திருப்பாளோ என்னமோ? என்று வக்காலத்து வாங்கினார்.  இது தெரியுது இல்லை அப்புறம் ஏன் அவளையே நினைச்சிகிட்டு காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்க கூடாதா? என்றேன்.
     யோவ் உமக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணம் பண்ணிட்டு என்னத்த சாதித்து இருக்கீங்க நீங்கள்ளாம்!  என்று மடக்கினான் சந்தானம். திடுமென ஒரு நாள் எல்லோரையும் அழைத்து பார்ட்டி கொடுத்தான். என்னடா என்ன விஷேசம் கல்யாணம் பண்ணிக்க போறீயா என்றதற்கு என்னடா சந்தோஷமான நேரத்துல் அதை ஞாபகப்படுத்தறே என் சானியா லெட்டர் போட்டிருக்காடா? என ஒரு கடிதத்தை காண்பித்தான். அது டைப் செய்யப்பட்ட ஒரு கடிதம். அவனது வாழ்த்துக்கு நன்றி கூறியிருந்த அதில் இறுதியில் சானியா கையெழுத்து இருந்தது. சாதிச்சிட்டடா என்ற போது அவன் முகத்தில் பெருமை மிளிர்ந்தது. அந்த கடிதத்தை பிரேம் போட்டு வைத்திருந்தான் அவன்.
     திடிரென ஒருநாள் அந்த செய்தி வந்தது. நான் தான் சந்தானத்திற்கு முதலில் சொன்னேன். யோவ் உம்ம லவ்வருக்கு கல்யாணமாம்! போயி தடுக்கலை என்றேன்!
தெரியும்டா!  என்னது அப்ப உன் லவ்?

   என்னடா இது பைத்தியகாரத் தனமா கேக்குற? அவளை எல்லாம் நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமா? அவ எங்கே நான் எங்கே? என்றான்,. அப்ப அவ பைத்தியாமா அலைஞ்சியே அவ போட்டோவை கட் பண்ணி ஒட்டிகிட்டே? வேற பொண்ண கட்டிக்க மாட்டேன்னு  சொன்னே?
  நான் எப்ப அப்படி சொன்னேன்? இப்ப கல்யாணம் வேண்டாம்னுதான் சொன்னேன்! இதெல்லாம் நடக்காதுன்னு தெரியும் ஆனா வாழ்க்கைல ஒரு எண்டர்டெய்ன் மெண்ட் வாணாமா? என்னை பார்த்து நீங்க எல்லாம் எவ்வளவு  பொறாமை பட்டீங்க? அவகிட்ட இருந்து லெட்டர் வந்ததும் உங்களுக்கு எவ்வளவு வயித்தெரிச்சல்! என்னை இல்லை பைத்தியக்காரன்னு சொன்னீங்க  நான் தான் பைத்தியமா அலைஞ்சேன்னா அவளை பத்தி தெரிஞ்சிக்க நீங்க என் பின்னாடி அலைஞ்சீங்க! உங்களை எண்டர்டெய்ன் பண்ணேன் தட்ஸ் ஆல் என்றான்.
அப்ப உன்னோட லவ்? நான் லவ் பண்ணேலேன்னு யார் சொன்னது சானியாவுக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் அதுல நானும் ஒருத்தன்! அவ மேல அன்பு செலுத்தினேன் ஆனா அது காதல்னு நீங்கதானே கோர்த்து விட்டீங்க! இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் மாமே என்றான்.

  ஒரு சுபயோக சுபதினத்தில் சோயப் மாலிக் கழுத்தில் தாலி கட்டினார் சானியா! அதற்கும் மறக்காமல் வாழ்த்து அனுப்பிய சந்தானம் இதுவரை கல்யாணம் கட்டிக் கொள்ளவில்லை!
      என்னப்பா சந்தானம் எப்ப கல்யாணச் சோறு? என்றால் இப்ப ஹன்சிகாவை லவ் பண்ணிகிட்டு இருக்கேன்! பார்க்கலாம் என்றான் ஜாலியாக!

கதை நிஜமல்ல! கற்பனைதான்! கதைக்கும் சந்தானத்தின் படத்திற்கும் நிச்சயமாய் எந்த சம்பந்தமும் இல்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Thursday, June 28, 2012

நவரச நாயகன் நித்தி! காமெடி கும்மி!பேஸ்புக் போட்டோஸ்!

 வணக்கம் போய் வரேன்!
படங்கள் உதவி} பேஸ் புக், கூகுள் இமெஜஸ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

நியாயம்! ஒருபக்ககதை!

நியாயம்!


ஒவ்வொரு முறையும் ராகவனோடு கடைக்கு போகையிலும் கவனித்தாள் கோமதி. வெத்தலை பழம் பூ போன்றவைகளை அந்த கிழவியிடமே வாங்குவான். வேறு பலர் கூப்பிட்டாலும் காதிலேயே வாங்க மாட்டான்.
  இத்தனைக்கும் அந்த கிழவி கறார் விலைதான் சொல்லுவாள் பத்து பைசா குறைக்கமாட்டாள். எல்லோரிடமும் பேரம் பேசி பொருள் வாங்கும் கோமதிக்கு கூட இந்த கிழவியிடம் பாச்சா பலிக்கவில்லை!
 ஏம்மா என்கிட்ட ஒரே விலைதான்! இஷ்டமானா வாங்கு! இல்லை போயிகினு இரு! என்பாள் அந்த கிழவி எத்தனையோ முறை இப்படி சொல்லிவிட்டாள். ஆனால் ராகவன் தான் விடாப்பிடியாக இந்தகிழவியிடம்தான் வாங்குவேன் என்று அடம்பிடித்து வாங்குகிறான்.
   அன்று ராகவன் கடைக்கு வரவில்லை என்றதும் கோமதிக்கு நிம்மதியாக இருந்தது! இன்று அந்த கிழவியிடம் வாங்காமல் வேறு எங்காவது வாங்கி கொள்ளலாம்! எப்படி கறாராக பேசுகிறாள்? என்னை போல ஒரு நாலு வாடிக்கைகளை இழந்தால்தான் புத்தி வரும் என்று சபித்தாள்.
  அவள் தேவையான் பழம் வெத்தலைகளை வேறு கடையில் பேரம் பேசி வாங்கி கொண்டு வருவதை பார்த்தாள் கிழவி! நல்லா பாரு! இன்று எவ்வளவு குறைத்து வாங்கிப் போகிறேன் தெரியுமா? ஊரிலேயே நீ ஒருத்திதான் வியாபாரம் செய்வது போல பேசினாயே! இன்று ஒரு வாடிக்கை இழந்து விட்டது என்று அழு! என்று மனதினுள்பொறுமியபடி காணாதது போல வீட்டுக்கு வந்து விட்டாள்.
   அன்று மாலை வீட்டுக்கு வந்த ராகவனிடம் நடந்ததை கூறினாள் கோமதி. என்னமோ அந்த கிழவிதான் பழம் விக்கிறாப்போல அவகிட்டேயே வாங்கி காசை வேஸ்ட் பண்ணீங்களே? இன்னிக்கு எவ்வளவு மிச்சம் பிடிச்சிருக்கேன் பார்த்தீங்களா? என்று பெருமிதம் பட்டுக் கொண்டாள்.
  காசு மிச்சம் பிடிச்சு சாதிச்சிட்டுதா நினைக்காதே எனக்கும் தெரியும் அந்த கிழவி அதிகமாத் தான் விற்குதுன்னு! ஆனா யோசிச்சு பாரு அதுக்கு ஒரு எழுபது வயசுக்கு மேல இருக்கும் இந்த வயசிலயும் உழைச்சு சாப்பிடனும்னு நினைக்குது உடம்பு நல்லா இருக்கிறவங்களே வேசம் போட்டு பிச்சை எடுத்து சம்பாதிக்கிற காலத்தில வயசான காலத்திலேயும் உழைக்க நினைக்கிற அந்தம்மாவுக்கு நான் கொடுக்கிற மரியாதைதான் அவங்க கிட்ட பொருள் வாங்கிறது என்றான்ராகவன்!
  கணவனின் கருத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த கோமதி நானும் இனிமே அந்தம்மாகிட்டேயே வாங்கிறேங்க என்றாள்! 

 டிஸ்கி}
 தமிழ் தோட்டம் கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை! 

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்!

Wednesday, June 27, 2012

தாலியை தின்ற நாய்! கேரளாவில் அதிசயம்!

தாலியை கடித்து தின்ற நாய்குட்டி! 

கேரளாவில் கொல்லம் மாநிலத்தின் மைய நாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லத்தி. இவர் செல்லமாக பாமரேனியன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த செல்ல நாய் இவருடன் படுக்கையிலேயே படுத்து தூங்குமாம். லத்தி மாடர்ன் பெண்மணி போலும். புருஷன் கட்டிய தாலியை இரவில் படுக்கும் போது தலையணை அடியில் வைத்துவிட்டு தூங்குவாராம். வழக்கம் போல அன்றும் அப்படி கழட்டி வைத்து விட்டுத் தூங்கியவருக்கு விடிந்ததும் அதிர்ச்சியோ அதிர்ச்சி தாலியைக் காணோம்.
        அதிர்ச்சியில் உறைந்து போனாலும் வீடு முழுக்க தேடிய அவர் இறுதியில் நாயின் வாயில் சில தங்க துணுக்குகள் ஒட்டியிருப்பதை கவனித்து உள்ளார். ஆகா பயல் சிக்கிட்டான் என்று விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார். நாய் ஆய் போனதில் சில பாகங்களே கிடைத்துள்ளது. விஷயம் ஊர்ஜிதமானது. விஷமக்கார நாய் தான் தாலியை  பிஸ்கெட்டாக நினைத்து மென்று முழுங்கி விட்டது என்று.
   இரண்டரை பவுன் தங்கத்தை சுவாகா செய்த நாயை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று தாலி முழுங்கியதை கூறினார்கள். அங்கு வாந்தி வரவழைத்து தாலியின் சில பகுதிகளை மீட்டனர். ஆனாலும் இன்னும் சில பகுதிகள் நாயின் இரைப்பையில் இருப்பதை கண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
   ஒரு வழியாக நாய்க்கு வயிற்றில் ஆபரேஷன் முடித்து  தாலியை மீட்டனர். தாலி பாக்கியம் பெற்ற நாய் இப்போது ரெஸ்டில் இருந்து வருகிறது. இந்த நாய் ஏற்கனவே  லத்தியின் செல் போன் உள்ளிட்ட சில பொருள்களை மென்று தின்றுள்ளதாம். இருந்தாலும் தாலியை முழுங்கியது கொஞ்சம் அதிகம்தான் இல்லை!

தாலியை கழட்டி வைக்கும் அம்மணிகள் இனி பக்கத்தில் நாயை சேர்க்காதீர்கள்! நான் உங்கள் புருஷனை!? சொல்ல வில்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

அண்ணா மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து! சென்னையில் பரபரப்பு!

சென்னை அண்ணா சாலையில்  அண்ணா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் 17 எம் என்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் காயமடைந்தவர்கள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
    சென்னையில் பல்வேறு கோரமான விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும் பாலத்தில் இருந்து அதுவும் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குப்புற கீழே விழும் பஸ் விபத்து இதுவரை நடந்தது இல்லை. இதனால் பொதுமக்கள் மனதில் பீதியுடன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். 
   விபத்திற்கு காரணம் பேருந்தின் ஓட்டுனர் அலைபேசி பேசியபடி ஓட்டியதும். வளைவு திருப்பத்தில் அவரது இருக்கை கழன்று கொண்டு பேலன்ஸ் தடுமாறி கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்ததாக  விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
   ஓட்டுனர்களே உங்களை நம்பித்தான் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கிண்றனர். அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் என்று பலவித கடமைகள் உண்டு. விபத்துக்கள் எதிர்பாராதவை என்றாலும் இது போன்ற விபத்துக்கள் நாமே வரவழைத்துக் கொள்பவைதானே. பேருந்து ஓட்டும்போது அலைபேசியில் பேசுவது ஏன்? பெரும்பாலான ஓட்டுனர்கள் அவ்வாறு பேசியவாறேத்தான் ஓட்டுகிறார்கள். 
    இன்னும் சிலர் புகை பிடித்துக் கொண்டும் ஓட்டுகிறார்கள் பேருந்தில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டம் ஓட்டுனர்களுக்கு கிடையாதா? நாம் அழைத்துச் செல்வது பயணிகள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களையும் என்ற நினைவு ஓட்டுனர்களுக்கு வேண்டும். நிர்வாகமும் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இது மாதிரியான விபத்துக்களை தவிர்க்கலாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

திருந்தாத டீச்சரால் உயிரிழந்த மாணவி!

ஆசிரியர்களே திருந்துங்கள்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் படித்த நாளிதழ் செய்தி இந்த பதிவை எழுத தூண்டியது.நாளிதழில் சிறு பத்தியில் வந்த செய்தி என்றாலும் இது சிந்திக்க வேண்டிய ஒன்று. அதுவும் ஆசிரியர்களை பற்றிய ஒன்று. சென்னையில் ஒரு பள்ளி மாணவி ஆசிரியையின் வற்புறுத்தலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. மிகவும் நன்றாக படிக்க கூடிய அந்த மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? ஒரு பக்கம் ஆசிரையை, மறுபக்கம் அம்மா! இருவருக்கும்பதில் சொல்ல முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டது அந்த இளம் பிஞ்சு! அப்படி என்ன நெருக்கடி! எல்லாம் வழக்கமாக ஆசிரியர்கள் பண்ணுவதுதான்!
     அந்த ஆசிரியையின் வீடு அதே ஊரிலேயே அந்த மாணவியின் தெருவில் இருந்துள்ளது. பள்ளிக்கு வந்த மாணவியை தன் வீட்டிற்கு தினமும் மதிய வேளையில் அனுப்பி தனக்கு சாப்பாடு எடுத்துவரச் சொல்லி இருக்கிறார் அந்த ஆசிரியை. மாணவியும் மறுக்காமல் செய்து வந்தாள். ஒரு நாள் இதை மாணவியின் தாய் பார்த்து விவரம் கேட்டிருக்கிறாள். மாணவியும் ஆசிரியை சோறு எடுத்து வரச் சொன்னதாக தன் தாயிடம் தெரிவித்து இருக்கிறாள். உடனே அந்த தாய் இதென்ன வேலை! நாளையில் இருந்து இதை செய்ய முடியாது என்று தெரிவித்து விடு என்று கூறியுள்ளார்.
மாணவியும் தாய் சொன்னதை ஆசிரியையிடம் சொல்ல, அவரோ நீ சாப்பாடு எடுத்து வராவிட்டால் உன்னை வெளியில் நிற்க வைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஒரு சமயம் அப்படியும் செய்து விட்டார். அத்துடன் தேர்வில் பெயில் ஆக்கிவிடுவேன் என்றும் சொல்லியுள்ளார். வீட்டில் அம்மா செய்யாதே என்கிறார்! ஆசிரியர் செய்யாவிட்டால் பெயில் ஆக்கிவிடுவதாக கூறுகிறார். மனமுடைந்த சிறுமி மரணத்தை தழுவி விட்டாள். இப்போது விசாரணை நடந்து வருகிறது.
    இது எல்லா ஆசிரியர்களும் செய்வது இல்லை என்றாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த  மாதிரி வேலைகளை மாணவர்களிடம் சுமத்தத்தான் செய்கின்றனர். ஆசிரியர்கள் குருதான்! ஆனால் இன்று குருகுல முறையில் கல்வி கற்பது இல்லையே! மாணவர்களிடம் பணிவிடையை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அன்போடு கேட்டு பெறுவது அதைவிட்டு மிரட்டி சாதிக்க வேண்டுமா?
     படிக்கிற வயதில் டாய்லெட் கழுவ விடுவது! வெளியில் அனுப்பி சிகரெட், டீ போன்றவற்றை வாங்கி வரச் செய்வது சாப்பிட்ட டிபன் பாக்ஸை கழுவச் சொல்வது போன்ற வேலைகளை மாணவர்களிடம் ஏன் செய்யச் சொல்லவேண்டும்? மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொள்ளலாமா?
   இந்த மாதிரியும் அல்லாமல் இன்னும் கேவலமாக சிலர் நடந்து கொள்கின்றனர். அதுதான் பாலியல் தொல்லை கொடுப்பது! இந்த மாதிரி செய்திகளை இப்போது அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இவர் இந்த மாணவியிடம் இப்படி நடந்து கொண்டார். அவர் அப்படி நடந்து கொண்டார் என்று படிக்கவே அசிங்கமாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எப்படி ஆசிரியர்கள் ஆனார்கள். சில மாதங்களுக்கு முன் பிளஸ் ஒன் மாணவனுடன் ஒரு ஆசிரியை ஓடியதாக ஒரு தகவல் வந்தது. இதெல்லாம் எப்படி?
    ஆசிரியர் தொழில் கண்ணியமானது! மற்றவர்கள் மதிக்கும் படியான ஒரு தொழில்! இந்த தொழிலில் இருப்பவர்களின் இக்கால செயல்கள் அந்த தொழிலையே அசிங்க படுத்துவதாக அமைந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? இவர்களைஎல்லாம் எப்படி ஆசிரியர்களாக நியமித்தார்கள். இவர்களுக்கு போதுமான மனவளர் பயிற்சி முறைகள் அளிக்காததுதான் காரணமாக எனக்குத் தோன்றுகிறது.
   கடைசியாக இன்னுமொரு செய்தி இப்போதைய ஆசிரிய பெருமக்களுக்கு குறில் நெடில் கூடத் தெரியவில்லையாம்! வெர்ப் எது நவுன் எது என்றும் புரியவில்லையாம்? இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன? அது குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. காசு வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமிக்கும் வரையில் இது போன்ற அநாகரிகங்களும் கேவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.
  ஆசிரியப் பணி புனிதமானது! உங்களைத்தான் மாணவர்கள் பின்பற்றப் போகின்றனர். ஆசிரியர்களே திருந்துங்கள்! புதிய சமுதாயம் சிறப்பாக உருவாக ஒத்துழையுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Tuesday, June 26, 2012

ஒரு இனிய உதயத்துக்கு தயாராகுது தழுவாத "கை'கள்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக வீராவேசம் பேசிய தே.மு.தி.க., அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த்தை தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும், முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தை விட்டுத்தர, அவர்கள் முன்வரவில்லை. இதனால், தலைமையின் முடிவை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

புறக்கணிப்பு:தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன், 5,104 ஓட்டுக்களை வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு, அக்கட்சி சொன்ன காரணம், "நதிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றில், மத்திய அரசால், தமிழக மக்களுக்கு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை' என்பது தான்.இதைக் கேட்டதும், காங்கிரஸ் நிர்வாகிகள், "தே.மு.தி.க., தேர்தலை புறக்கணிக்கக் கூடாது' என்று, கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சிலர், தே.மு.தி.க., நிர்வாகிகளை சந்தித்து, இதுகுறித்து ரகசிய பேச்சும் நடத்தி வருகின்றனர். தி.மு.க., தரப்பிலும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. சங்மாவிற்கு ஆதரவாக, விஜயகாந்திடம் பேசப்படும் என்று அறிவித்த பா.ஜ., நிர்வாகிகளும், இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தலை கால் புரியலை...:அ.தி.மு.க.,வை தவிர்த்து, முக்கிய தேசிய கட்சிகள் தங்களை தொடர்பு கொண்டதும், தே.மு.தி.க., தரப்பில், குறிப்பாக எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில், "நம்ம மவுசு நமக்கே தெரியலை' என்று பேசிக் கொண்டனர். நமக்கு கிடைக்கும் கொஞ்ச அந்தஸ்தையும், இழக்கக் கூடாது என, ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை, நாமும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் என்பது, அவர்கள் எண்ணமாக உள்ளது.இதனால், தே.மு.தி.க., தலைமைக்கு, நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர். தேசிய அரசியலில் கால் வைக்க வேண்டும் என்றால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தழுவாத "கை'களாக இருந்து என்ன பயன், ஒரு இனிய உதயத்துக்கு வழி வகுப்போம் என, குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

உசுப்பேத்தி, உசுப்பேத்தி...:தே.மு.தி.க., தலைமை, ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அதற்கு,"பல்ஸ்' பார்த்துள்ளது என்பதே உண்மை என, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். புறக்கணிப்பை வாபஸ் பெறுவது குறித்து, நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு, எதிர்காலத்தில், தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில், குறிப்பாக, ஜெயிக்கிற பக்கம் தாவுவதற்கு, இப்பவே தயாராகி விட்டனர் என்பதே உண்மை.மாநிலத்தில், ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களாகி, பிரயோஜனமில்லை என்றாகி விட்டது. மத்தியிலாவது, கிடைக்கிற வாய்ப்பை வளைச்சுப் போடுங்கோ என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.

டிஸ்கி} போங்கப்பா! நீங்களும் உங்க அரசியலும்!  எல்லாற்றிலும் ஏமாறுவது அப்பாவி பொது ஜனங்கள்தான்! நல்லா குளிர்காயுங்கடா சாமி!

தகவல் உதவி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

சச்சினை நிராகரித்த லில்லி!

ஒரு பந்து வீச்சாளராக வேண்டும் என்ற வேட்கையுடன் சென்னையில் உள்ள எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனுக்கு வந்த 14 வயது சச்சின் டெண்டுல்கரைப் பார்த்த அந்த மையத்தின் பொறுப்பாளரும், உலகின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவருமான டென்னிஸ் லில்லி, அவரை பயிற்சிக்கு ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டாராம்.
இதை நினைவு கூர்ந்து பேசிய லில்லி, நான் சச்சினுக்கு நல்லதுதான் செய்தேன் என்று நினைக்கிறேன் என்று கூறிச் சிரித்தார்.
டென்னிஸ் லில்லி தலைமையிலும் அவரது நேரடிக் கண்காணிப்பிலும் இயங்கி வரும் இந்த வேகப் பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி மையம் பல உலகப் புகழ் பெற்ற பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் முக்கியமானவர் ஜாகிர் கான்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மையத்தின் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ள லில்லி தற்போது சென்னையிலிருந்து விடைபெறுகிறார். இதையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1987ம் ஆண்டு என்னிடம் 14 வயது சிறுவன் ஒருவன் வந்தான். அவனை நான் உற்றுப் பார்த்தேன். உயரத்தில் சிறியவனாக உள்ள இந்த சிறுவனால் எப்படி பந்து வீச்முடியும் என்று கருதிய நான் உடனே அந்தப் பையனை பந்து வீச்சாளர் பயிற்சிக்குத் தேர்வு செய்ய முடியாது என்று நிராகரித்து விட்டேன். நான் நல்லதுதான் செய்திருக்கிறேன் என்று கருதுகிறேன்.
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் டெண்டுல்கர் என்னிடம் வந்தார். அப்போது பேட்ஸ்மேனாக தன்னை கூறிக் கொண்டார். சரி எனது பவுலர்களை சமாளி பார்ப்போம் என்று கூறினேன்.
முதல் பந்தை பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் பறக்க விட்டார் சச்சின். அதைப் பார்த்த நான், இது ஏதோ ப்ளூக்கில் வந்தது. அடுத்த பந்தை அடி பார்ப்போம் என்றேன். அந்தப் பந்து பார்க்கைத் தாண்டி ஓடிப் போய் விட்டது. அந்த சிறுவனைப் பார்த்து நான் வியந்தேன்.
பிறகு தலைமைப் பயிற்சியாளராக இருந்த டி.ஏ.சேகரிடம், யார் இந்தப் பையன் என்றேன். அதற்கு அவர் சச்சின் என்றார். இந்தப் பையனைத்தான் நீங்கள் கடந்த ஆண்டு நிராகரித்தீர்கள் என்றார்.
அவர் சச்சின் என்று கூறியது எனக்கு சர்ச்சிங் என்று கேட்டது. பிறகு சேகரிடம் கூறினேன், எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பையன் ரன்களை மட்டுமே தேடிக் கொண்டிருக்கப் போவதில்லை. மேலும் மேலும் ரன்களைக் குவித்து தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பான் என்றேன்.
அதன் பிறகு நடந்ததுதான் அனைவருக்கும் தெரியுமே. இன்று வரை சச்சினின் ரன் தேடல் நிற்கவில்லை என்றார் லில்லி.
லில்லியால் 1987ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட சச்சின் 1989ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார். அதன் பிறகு அவரது அதிரடி இன்று வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

டிஸ்கி} லில்லியின் சேவை நம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியது! அவரது இடத்தை நிரப்புவது யார்? சுவையான தகவல் கூறி விடைபெறும் அவரை வாழ்த்தி விடை கொடுப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

சச்சின் மகனுக்கு கிரிக்கெட் அணியில் இடம்!

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு வழியாக கிரிக்கெட் அணி ஒன்றில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் சச்சின் மகனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் அப்பாவைப் போல கிரிக்கெட் ஆடி வருகிறார். சச்சினும், இவரும் சேர்ந்து இந்திய அணியில் விளையாடுவார்கள் என்றுகூட அவ்வப்போது கிண்டலடித்து செய்திகள் வரும். சச்சின் தனது 100வது சதத்தை எடுக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது சச்சினும், அர்ஜூனும் சேர்ந்து ஆடுவது போலவும், அப்போது சச்சின் 99 ரன்களுடன் இருப்பது போலவும், அர்ஜூன் சதம் அடித்திருப்பது போலவும் கூட கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டு அலப்பறை செய்தார்கள்.
இந்த நிலையில் அர்ஜூன் டெம்டுல்கருக்கு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில்இடம் கிடைக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் அர்ஜூன் டெண்டுல்கரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடந்த சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான சோதனை ஆட்டத்தின்போது சதம் அடித்திருந்தார் இடது கை ஆட்டக்காரரான அர்ஜூன் என்பது நினைவிருக்கலாம். தற்போது 12 வயதாகும் அர்ஜூன், ஜிம்கானா அணிக்காக ஆடி வருகிறார்.
அர்ஜூன் டெண்டுல்கர், இடது கை வேகப்பந்து வீச்சாளரும் கூட.1999ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்த அர்ஜூன் தனது தந்தையுடன் பலமுறை இந்திய அணியின் பயிற்சி முகாம்களில் தலை காட்டி வருகிறார். மேலும் இந்திய வீரர்களுடனும் அவர் பயிற்சிகளில் பங்கேற்பதுண்டு. இப்போது அவருக்கு 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பாவைப் போல அசத்தட்டும் அர்ஜூனும்...!

தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்தகருத்துக்களை பகிரலாமே!

Monday, June 25, 2012

அடுத்த நிதி யார்? தட்ஸ் தமிழ் அலசல்!

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார்.
இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது.
நிதித்துறையில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அன்னிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதோடு ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தும் திறமையும் கொண்ட ஒருவர் தான் இப்போதைய தேவை. அதே நேரத்தில் நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் காங்கிரசின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்படாத வகையில் நேக்கு போக்காக அரசியலையும் நிதி விவகாரங்களையும் கவனமாகக் கையாளும் திறன் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார்.
அதில் முதல் சாய்ஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான்.
ஆனால், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்க முடியாத அளவுக்கு அவருக்கு ஏராளமான பணி நெருக்கடி. இதனால், வேறு ஒருவரை நிதியமைச்சராக்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது.
ப.சிதம்பரம்:
அடுத்த சாய்ஸாக இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அடிப்படையில் வழக்கறிஞரான சிதம்பரத்துக்கு நிதி நிர்வாகம் அத்துப்படியான விஷயம். 2004-2008ம் ஆண்டில் இவர் நிதியமைச்சராக இருந்கபோது தான் நாடு 9 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
சர்வதேச பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோதும், நிலைமை சமாளித்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து காட்டினார்.
ஆனால், அதே காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களால் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது கடும் கோபம் கொண்ட சோனியா அவரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
உள்துறையை கொஞ்சமாவது செயல்படும் துறையாக மாற்ற ப.சிதம்பரமே சரி என்று மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து அவரை உள்துறை அமைச்சராக்கினர்.
உள்துறை அமைச்சராக ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. மாதிரி தான் உள்துறையை கையாண்டு வருகிறார் சிதம்பரம். தினமும் ஐ.பி உள்ளிட்ட உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை, வாரந்தோறும் உள்துறை-உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக ஆலோசனை, கிடைக்கும் ரகசிய தகவல்கள் வெளியே லீக் ஆகிவிடாமல் கட்டிக் காத்து உடனடி நடவடிக்கைகள் எடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிதம்பரத்தின் பங்கு மிகச் சிறப்பாகவே உள்ளது.
இதற்கு முன் இந்தத் துறையை கையாண்ட சிவராஜ் பாட்டீல் அந்தத் துறையை சீரழித்து வைத்த நிலையில், அதை சரி செய்யவே சிதம்பரத்துக்கு நெடு நாட்கள் பிடித்தன. இப்போது அந்தத் துறையிலிருந்து சிதம்பரத்தை மாற்ற சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் விருப்பமில்லை என்கிறார்கள்.
இதனால், சிதம்பரம் நிதியமைச்சராகவது சாத்தியமில்லை.
ஆனந்த் சர்மா:
வர்த்தகத்துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவை 3வது சாய்ஸாக பார்க்கிறார்கள். மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சர்மாவுக்கு பிடித்த துறை வெளியுறவுத்துறை தான். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கு அமைச்சராக்கினர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அவரும் அந்தத் துறையை நன்றாகவே நிர்வகித்து வருகிறார். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மா சர்வதேச அளவில் நிதி நிலைமை சரியில்லாதபோதும் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருபவர்.
சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் கடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு இவரிடம் திறமை உள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
சி.ரங்கராஜன்:
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கு உடம்பெல்லாம் பொருளாதார மூளை தான். இப்போதும் காலையில் தினமும் பிரதமர் நாட்டின் நிதி விஷயங்களை விவாதிக்கும் முக்கிய நபர் ரங்கராஜன் தான்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது தான் இந்திய நிதி நிலைமை நல்ல நிலைக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுத்துத் தான் பணவீக்கம், பெட்ரோல்-டீசல் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அது தவறு என்று சொல்பவர். மானியங்களுக்கு எதிரானவர்.
தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர். ஆனால், அரசியல் பின்புலம் இல்லாதவர். அரசியல்ரீதியாக நிதி விவகாரங்களை பார்க்க மறுப்பவர். ஓட்டு அரசியல் இவருக்குத் தேவையில்லை. ஆனால், காங்கிரசுக்குத் தேவையாச்சே!.
மான்டேக் சிங் அலுவாலியா:
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங்கை நிதியமைச்சராகவும், ப.சிதம்பரத்தை வர்த்தகத்துறை அமைச்சராகவும் வைத்துக் கொண்டு தான் பல மாயாஜாலங்களைச் செய்தார். இந்த டீமுக்கு முதுகெலும்பாக இருந்தவர் மான்டேக் சிங் அலுவாலியா.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கரமான இவர் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உள்ளார். இவரும் சி.ரங்கராஜன் மாதிரியே முழு பொருளாதார வல்லுனர் தான். அரசியல்வாதி இல்லை.
இதனால் நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிடும் இயல்புடையவர். மானியங்களை கட்டுப்படுத்தி அரசின் செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தச் சொல்பவர். பெட்ரோல், டீசலை விலையை மானியத்தைக் கொடுத்து குறைக்க வேண்டியதில்லை என்பவர்.
இவர் சொன்னதில் பல விஷயங்களை மன்மோகன் சிங்கால் கேட்க முடியவில்லை. காரணம், அரசியல். இவர் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நாடு சந்திக்கும் பல பொருளாதார நெருக்கடிகள் வந்தே இருக்காது.
இவர் நிதியமைச்சரானால் பங்குச் சந்தைகளில் பணம் புரண்டோடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுக்கள் அல்லவா புரண்டு ஓட வேண்டும்...
ஜெய்ராம் ரமேஷ்:
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் எல்லோருக்குமே நண்பர். முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவான நபர் தான் என்றாலும் பக்கா அரசியல்வாதி.
கடந்த 2 முறையும் மத்தியில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பாஜக ஆட்சியின் கடைசி ஆண்டில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது, 'இந்தியா ஒளிர்கிறது' என்று ஒரு போலி பிரச்சாரம் முன் வைக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் செலவில் டிவி, பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தபோது அதை சமாளிக்க சோனியாவால் உத்தரவிடப்பட்ட நபர் ஜெய்ராம்.
''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' (காங்கிரசின் கை எப்போதும் சாதாரண மக்களுடனே கைகோர்த்து நிற்கும்.. இது எனக்குத் தெரிந்த இந்தி translation) என்ற பதிலடி விளம்பரத்தை ஜெய்ராம் ரமேஷ் தான் முன் வைத்தார்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் கடுப்பில் இருந்த மக்களுக்கு பாஜகவின் India is shining, Feel good factor (Feel good ஹோரகா ஹை.. ஹம் feel great factor லாங்கே...) என்று பிரமோத் மகாஜனும், வெங்கய்யா நாயுடுவும் டிவியில் மாறி மாறி பேசி வெறுப்பேற்றி வந்த நிலையில், மிக அமைதியாக முன் வைக்கப்பட்ட ''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' கோஷம் ஏழைகளை காங்கிரஸ் பக்கமாகத் திருப்பியது.
இதையடுத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்கினார் ரமேஷ். இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.
கையை மடித்துவிட்ட வெள்ளை ஜுப்பா, நுனி நாக்கு ஆங்கிலம், அலைபாயும் வெள்ளை முடி, லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் முன்னோடி, பஞ்சாயத்து ராஜ் விவகாரங்களிலும் சர்வதேச பொருளாதார விவகாரங்களிலும் அலாதி ஆர்வம், சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்களில் தீவிர ஞானம், சுற்றுச்சூழல் விவகாரங்களில் எந்த நாடுடனும் மோதும் திறன் என எல்லாம் தெரிந்த, எல்லாம் கலந்த மேதாவி தான் ஜெய்ராம் ரமேஷ்.
அரசியலும் தெரியும், டெக்னாலஜியும் தெரியும், நிதி விவகாரங்களும் அத்துப்படி.
ஆனால், ஓவராக ரூல் பேசுவார். சட்டப்படி தான் எல்லாம் என்பார். தவறு செய்தால் சொந்தக் கட்சி முதல்வரையே விமர்சிப்பார், நல்லது செய்யும் எதிர்க் கட்சி முதல்வரை வெளிப்படையாகவே பாராட்டுவார்.
இந்தியாவில் ரூ 60,000 கோடியை நிலக்கரித்துறையில் முதலீடு செய்ய வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டி ஏராளமான தடைகளைப் போட்டார் ரமேஷ். இதனால் இவர் மீது முதலீட்டாளர்களுக்கு கோபம் உண்டு.
இவரது செயல்களால் கடுப்பான பிரதமர் இவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார். ஆனால், அதிலும் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.
கார்களுக்கான டீசல் விலையைக் குறைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளவர். இவர் நிதியமைச்சரானால் ஒன்று டீசல் மீதான வரி உயரும் அல்லது டீசல் கார்கள் மீதான வரி உயரும் அல்லது இரண்டுமே நடக்கும்!.
கார் நிறுவனங்கள் இவரை நிதியமைச்சராக்க விட்டுவிடுவார்களா?

தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...