Saturday, May 26, 2012

தப்பாட்டம் ஆடும் தமிழக ஐ.டி அமைச்சர்! பரப்பரப்பு தகவல்கள்!

சென்னை: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் பொய்யாக தாம் பி.ஏ. படித்திருப்பதாக அரசுக் குறிப்பில் இடம்பெறச் செய்திருப்பது தவறு என்று சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரும் இது தொடர்பாக போயஸ் தோட்டத்துக்கு புகார் மேல் புகார் அனுப்பி வருகின்றனர்.

உண்மையில் முக்கூர் சுப்பிரமணியம் படித்திருப்பதுதான் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தலின் போது செய்யார் தொகுதி வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் பி.ஏ. என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். பேரவைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின் போது பி.ஏ. இரண்டாம் ஆண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 6-ம் வகுப்பு பெயில் என்று குறிப்பிட்டிருந்தார்.

முக்கூர் சுப்பிரமணியம் வெற்றி பெற்ற பின்னர் அரசின் குறிப்புகளில் பி.ஏ. என்றே இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தவுடன் பி.ஏ. என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டு அனைவரது வாயையும் அடைத்தனர்.

இது தொடர்பாக முக்கூர் சுப்பிரமணியத்திடம் கேட்கும் பத்திரிகையாளர்களிடம் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. படிப்புக்கு சேர்ந்ததற்கான ரசீது, ஐ.டி.கார்டு, ஹால் டிக்கெட் ஏன் மார்க் ஷீட் எல்லாம் கூட இருக்கிறதே என்று காலரைத் தூக்கிவிடுகிறார். சரி என்று வாங்கிப் பார்த்தவர்கள்தான் வாய் பிளந்து போய் நின்றனர். பி.ஏ. பொலிடிக்கல் சயின்ஸ் பாடம் எடுத்திருக்கும் இவரது மார்க் ஷீட்டில் ஒரு பாடத்தில் கூட பாஸ் இல்லை. எல்லாமே பெயில்தான்..

ஆக முக்கூர் சுப்பிரமணியம் பி.ஏ.க்கு டிரை பண்ணியிருக்கிறார். அதை முடிக்கலை. ஆனால் பி.ஏ. படித்தாக "முதலமைச்சரை ஏமாற்றி, அரசின் குறிப்புகளில் போர்ஜரி" செய்திருக்கிறார் என்று அவரது ஆதாரங்களை வைத்தே ஆப்பு அடிக்கக் கிளம்பிவிட்டனர் அதிமுக உடன்பிறப்புகள்.

இது மட்டுமல்ல இவர் மீது ஏகப்பட்ட வழக்குகளும் இருக்கிறதாம். இதில் திருட்டு கேஸூம் அடக்கம். ஆனால் இதைப்பற்றியெல்லாம் வேட்பு மனுத்தாக்கலின் போது எதுவும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்..

அம்மா அமைச்சரவை மாற்றியமைச்சு நாளாச்சு... முக்கூரார்தான் திருஷ்டி கழிப்பார் போல..

டிஸ்கி} தமிழக முதல்வரின் கவனத்திற்கு இதெல்லாம் சென்று மாற்றி அமைத்தாலும் தவறு தவறுதானே! இது போன்றவர்க்ளை கட்சியில் சேர்த்து அமைச்சரும் ஆக்கி பார்த்து தீராத அவமானத்தை தேடிக் கொண்டுள்ளார் ஜே! இதெல்லாம் அவருக்கு சகஜம்! என்கிறீர்களா? அவருக்கு சகஜம் என்றாலும் இது போன்று அமைச்சர்களை நியமிப்பது அவரது நிர்வாக திறமையின்மையைத்தானே காட்டுகிறது. தீர விசாரிக்காமல் சீட் தந்து எம் எல் ஏ ஆக்கி அமைச்சரும் ஆக்கி விட்டு பின்னர் பத்திரிக்கைகள் ஜோக் வெளியிட்டால் மட்டும் சீறுவது ஏன்? அம்மா சிந்திக்க வேண்டும்!

தகவல் உதவி : தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்து கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...