தளிர்

தளிர்
தேன் சிந்தும் பூஞ்சோலை!

Wednesday, May 2, 2012

வாகை சூடிய ஹீரோவின் சோகக் கதை!

அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களை வாகை சூடியவர் அவர். சமிபத்தில் அவர் மற்றொரு ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் கலகலப்பான படத்தின் இசை வெளியீடு நடந்தது. கலகலப்பாக இருக்க வேண்டிய ஹீரோ சைலண்டாக பம்மிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் பேசவேண்டிய தருணத்தின் போது அப்படியே நழுவ பிடித்து இழுத்து வந்தார்கள்அவருடைய நிலை புரியாதவர்கள் மனிதர் தள்ளாடியபடி எதுவும் பேசாமல் ஒருபக்கமாக தலை சாய்த்தபடி வணக்கம் நன்றி என்று மட்டும் கூறி விட்டு ஒதுங்கினாராம். அப்போதுதான் தெரிந்ததாம் மனிதர் ஓவர் உற்சாக பானத்தில் இருப்பது அழைத்து வந்தவர்கள் அதிர்ந்துதான் போனார்களாம்! மனிதர் நல்ல பையனாயிற்றே! ஏண் இப்படி? என்று புலம்ப  எல்லாம் புதுசா கல்யாணம் கட்டிகிட்டதாலே வந்த வினை! என்று கிசுகிசுக்கிறது நெருங்கிய வட்டாராம்! நடிகர் பழைய நிலைமைக்கு மாறுவாரா? கடவுளுக்கே வெளிச்சம்!


  கார்த்தி-ப்ரணீதா நடித்த படம் சகுனி! இது 22 கோடிக்கு விலை போயுள்ளதாக கோலிவுட்டே பரபரப்பாக இருக்கிறது. இதுவரை கார்த்தியின் எந்த படமும் இந்த அளவிற்கு விற்றதில்லையாம். மே 11ல் வெளியாகும் சகுனி இந்த அளவுக்கு தகுதியானதா என ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்.

பாலாஜி சக்திவேல்  இவரை மறக்க முடியுமா? காதல், கல்லூரி போன்ற மறக்கமுடியாத படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகி வெளியாக உள்ளது வழக்கு எண் 18\9 என்ற புதிய திரைப்படம். இதன் பிரிவியு பார்த்த அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது படம். நான் எடுத்ததெல்லாம் படமே அல்ல! இதுதான் படம் இதை தயாரித்ததற்காக பெருமை படுகிறேன் என்றுகூறியுள்ளார் லிங்கு சாமி!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...