பார்வைகள்

பார்வைகள்
     சிறுகதை
எழுதியவர்: எஸ்.எஸ்.பி

எண்ணெய் கண்டு பலநாளானபரட்டைத் தலையுடன் அழுக்குச் சட்டையும் கிழிந்த பேண்டும் அணிந்து அவன் பேருந்தில் ஏறியபோது பயணிகள் சிலர் முகம் சுளித்தனர்.சில கல்லூரி மாணவிகள் இதுக்கெல்லாம் எதுக்கு பஸ்? என்று அவன் காதுபடவே முணூமுணுத்தனர்.அவன் எதயும் லட்சியம் செய்யாமலே டிச்கெட் வாங்கி கொண்டு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பக்கம் அமர்ந்தான்.
        அப்பெண், யோவ் இது லேடீஸ் சீட் இதுல உக்கார என்ன தைரியம் உனக்கு என்று எதிற்க இன்னா கொறஞ்சா பொயிடும் உன் கற்பு? என்று பதில் பேச , கண்டக்டரோ யோவ் தகறாறு பண்ணாம வேற இடத்துல உக்காருய்யா! என்று அதட்ட மன்னிச்சுருப்பா என்று எழுந்து என் பக்கத்தில் அமர்ந்தான்.
          அவன் உடை என்மீது படாதவாறு தள்ளி அமர்ந்தேன் பெரிய ரவுடியாய் இருப்பானோ. அழுக்கும் வியர்வையும் கலந்துஒரு நெடி அவன் மீது வீசவே பார்வையை ஜன்னல் பக்கமாய் திருப்பினேன்.
     அடுத்த ஸ்டாப்பில் ஒர் இளைஞர் பட்டாளமே பஸ்ஸில் ஏறியது. சில நிமிடங்களில் தன் வேளையை காட்ட ஆரம்பித்தது. வல்கராய் வசனங்கள்,இடித்தல் உரசல் என ஒரே அழும்பு பண்ண ஒருவன் துணிந்து ஒரு பெண்ணின் இடையை கிள்ள அவள் முறைக்க அவன் அதை லட்சியம் செய்யாமல் மீண்டும் இடித்தான் பஸ்ஸில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர வாய் திறக்க வில்லை.
    அப்போது அந்த பரட்டை ஆசாமி எழுந்து சில்மிஷம் செய்தவனின் சட்டைக்காலரை பிடித்து ஏண்டா பொறுக்கி பயலே நீ அக்கா தங்கச்சி கூட பொறக்கலியாடா? உன் உடன்பொறந்தவமேல கைவச்சா சும்மா இருப்பியா? இனிமே எவனாவது யார் மேலயாவது கை வச்சிங்க... கை இருக்காது.என்றவன் பெண்களை பார்த்து நீங்கள்ளாம் பயந்துபயந்து போறதாலதான் இவனுங்கள்ளாம் துளுத்திட்டானுங்க என்னை போல பரதேசியா இருந்தா கேள்வி கேப்பீங்க இவனுங்களை பார்த்து பயந்து சாகிறீங்களே துணிஞ்சு எதிர்த்து பாருங்கம்மா துரும்பா ஓடிப்போவானுங்க என்றவன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினான்.
  பஸ்ஸில் இருந்தோர் இப்போது அவனை பார்த்த பார்வையில் ஓர் மரியாதை இருந்தது.

இந்த சிறுகதை ஓர் மீள் பதிவு! வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! தங்கள் வருகைக்கு நன்றி!
      

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!