கார் கண்ணாடியிலிருந்து சன் ஃபிலிமை நீக்குவது எப்படி?

கார் கண்ணாடிகளில் கருப்பு பேப்பர் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையில் இந்த தடை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துவிட்டது.

இதனால், சன் ஃபிலிமை நீக்குவதற்கு ஸ்டிக்கர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பலர் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பேப்பரை நீக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அங்கு குறைந்தது இதற்கு ரூ.500 கட்டணமாக வாங்குகின்றனர். இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், நாம் சிறிது கவனமும், சிரத்தையும் எடுத்தால் வீட்டிலேயே கார் கண்ணாடியில் இருக்கும் கருப்பு பேப்பரை எளிதாக நீக்கிவிடலாம். இதற்கான வழிமுறைகளை காணலாம். இதற்கு சற்று பொறுமை அவசியம்.

முதலில் காரை நல்ல வெயிலில் நிறுத்தவும். 15 நிமிடங்கள் கழித்து கார் கண்ணாடியில் நன்கு சூடேறிய பின்பு உட்புறம் தண்ணீரை பாட்டிலில் நிரப்பிக் கொண்டு உட்புறம் முழுவதும் கண்ணாடிகளில் ஸ்பிரேயர் மூலம் பீய்ச்சி அடிக்கவும். பின்னர் சிறிது நேரம் காரை மூடிவிடுங்கள்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் கண்ணாடியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும். ஒரு கூர்மையான கத்தியை கொண்டு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பேப்பரின் ஒரு பகுதியை மெதுவாக உரித்து எடுக்கவும். எந்த பக்கம் எடுப்பது எளிதாக இருக்கிறதோ அந்த பக்கத்திலிருந்து மெதுவாக நீக்கவும்.

கருப்பு பேப்பரை நீக்கும்போது அடிக்கடி தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும். உலர்ந்துவிட்டால் உரித்து எடுப்பது சிரமமாகி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பின்னர் கண்ணாடியில் கருப்பு பேப்பரில் இருக்கும் பசை ஒட்டியிருந்தால் அதை மிஸ்டர் மஸில்(Mr Muscle) சுத்தம் செய்யும் திரவத்தை பீய்ச்சி அடித்து காட்டன் துணி அல்லது செய்தித் தாளை கொண்டு துடைத்து சுத்தப்படுத்தவும். பின்புற கண்ணாடியில் கருப்பு பேப்பரை நீக்கும்போது எடுக்கும்போது மிகவும் கவனம் தேவை.

இந்த வழிமுறையை கவனமாக செய்தால் கண்டிப்பாக நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஸ்டிக்கர் கடைகளில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இராது.

தகவல் உதவி: தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!