Monday, February 28, 2011

+2 tips


+2 தேர்வெழுதும் மாணவ மணிகளுக்கு சில டிப்ஸ்.

#அதிகாலை படிப்பு அதிக மதிப்பெண் தரும் அதிகாலையில் மூளை சுறுசுறுப்பாய் இயங்குவதால் படிப்பது மனதில்நன்றாக பதியும்.

#இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள் .நீண்ட நேரம் இரவில் கண்விழிப்பதால் உடலும் மனமும் சோர்வடையும்.

# பாடங்களை மக்கர் செய்யாமல் புரிந்து படியுங்கள்.

#கூடுமானவரை பாடபுத்தகத்திலேயே படியுங்கள். ஆசிரியர் தரும் குறிப்புகளைகவனமாக படியுங்கள்.கைடுபடிப்பதை கூடுமானவரை தவிருங்கள்.

#படிப்பதற்கு இடைஇடையே ப்ரேக் விடுங்கள் அப்பொழுது உங்களூக்கு பிடித்தமான இசை கேட்பது ,விளையாட்டு,புத்தகம் வாசித்தல் போன்றவை உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும்.

#தொடர்ந்து கடினமான பாடங்களயே படிக்காமல் ஈசியான பாடங்களயும் கலந்து படியுங்கள்.படிப்பதற்கு சோம்பல் வராது.

#தேர்வுக்கு கிளம்புமுன் முன் கூட்டியே பேனா 2.பென்சில் சார்ப்பனர், ரப்பர் ஸ்கேல் பேட், ஹால் டிக்கெட் முதலியவற்றை பத்திர்மாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைசி நேர பரபரப்பை தவிர்க்கவும்.

#நல்ல ஊட்ட சத்து மிகுந்த உணவுககளயே உண்ணவும். கடை திண்பண்டங்களை உண்பதை தேர்வு முடியும் வரை தவிர்க்கவும்.முக்கியமாக எண்ணெய் பண்டங்கள் உண்பதை தவிர்க்கவும்.

#தேர்வு அன்று காலை படித்ததை ஒருமுறை ரிவிசன் செய்யவும்.

#தேர்வு ஹாலில் பரபரப்பின்றி பயமின்றி விடைத்தாளை பூர்த்தி செய்யவும். பின்னர் வழங்கப்படும் வினாத்தாளை ஒருமுறை நிதானமாக வாசிக்கவும். பின்னர் விடையளீக்க தொடங்கவும்.

# முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்கவும்.அதற்காக பிரிவு மாற்றி பிரிவு தாவி விடையளிக்க வேண்டாம் இது திருத்துபவரை எரிச்ச்லூட்டும்.

#தேர்வு அறையில் மற்றவர் சொல்லி தரும் விடைகள் தவறாக கூட இருக்கலாம் எனவே நீ சரியென நினைக்கும் விடைக்கே முதலிடம்கொடு.

#எழுதி முடித்தபின் ஒருமுறை சரி பார்த்துவிட்டு தாள்களை ஒழுங்காக கட்டி கண்காணிப்பாளரிடம் தரவும்.

# தேர்வு முடிந்த பின் அதை பற்றி பேசுவது விடைகளை சரிபார்ப்பது போன்ற செயல்கள் வேண்டாம் அது அடுத்த தேர்வை பாதிக்கும்.

# வெற்றிபெற வாழ்த்துக்கள் (நாளை தமிழ் முதல் தாள் முக்கிய வினாக்கள்)

சிரிக்காமல் விடமாட்டோம்


சிரிக்காமல் விடமாட்டோம்!
 
@நமீதா கட்சி ஆரம்பித்தால் என்ன பேர் வைப்பார்?

மச்சான்கள் முன்னேற்ற கழகம்.

@ஆனாலும் நம்ம தலைவருக்கு இந்தளவுக்கு நமீதா பாசம் இருக்ககூடாது!

ஏன் என்னாச்சு!

உங்க ஆட்சியில டி.வி ஷோவுக்குதான் நமீதாவ ஜட்ஜாஆக்கினீங்க எங்க ஆட்சி வந்தா ஹைகோர்ட் ஜட்ஜாவே ஆக்கிடுவொமுன்னு பேசறாரு!

@பரீட்சையில பாஸாக முப்பது வழிகள்னு புத்தகம் படிச்சியே என்ன போட்டிருந்தது?

இந்தபுத்தகத்த மூடிட்டு பாடபுத்தகத்த படிச்சா நீ பாஸுன்னு போட்டிருந்தது.

@நீதிபதி: நீ கோடி வீட்டுல திருடினியா?
திருடன் : கோடிகோடியா கொள்ளையடிச்சவன விட்டுட்டாங்க கோடிவீட்டுல கோடி திருடன என்ன பிடிச்சுடுங்க எசமான்.

@தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடத்துல ஒரு பாட்டி “மகராசனா” இருன்னு வாழ்த்திடுச்சாம்.

@சட்டைய கழட்டுறமாதிரி கூட்டணிய கழட்டி விடற தலைவருக்கு என்னாச்சு சத்ததையே காணோம்?

சாயம் வெளுத்துப்போச்சுன்றதால யாரும் அவர “சட்டை” பண்ணலியாம்.

@நயந்தாராவுக்கு பிடிக்காத படம் எது?

“சிலம்பாட்டம்” தான்


@அம்பயர் அவுட்கொடுத்தும் அந்த பேட்ஸ்மேன் ஏன் வெளியே போகல?

அவர் அவுட்ஸ்டேண்டிங் பேட்ஸ்மேனாம்.

@அந்த பவுலர் ஏன் அம்ப்பயர சுத்திசுத்திவந்து பால் போடறார்.

அவரு பெரிய ஆல் ரவுண்டராம்.

டிஸ்கி1 அட்றாசக்க சி.எஸ்.கே வ பாத்துட்டு நானும் ஏதோ ஜோக் எழுதிட்டேன்  கடுப்பா இருந்தா மண்ணிக்கவும்.
டிஸ்கி 2 ஜோக் மொக்கயா இருந்தாலும் நமிதா படம் போட்டதுக்காவது ஓட்டு போடுங்கப்பா!

Thursday, February 24, 2011

ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அஷ்ட்மி லட்சார்ச்சனை விழா

நிகழும் விஜயஸ்ரீ விக்ருதி வருஷம் மாஸி மாஸம் 13ம் தேதி (25-2-2011) வெள்ளிக்கிழமைகிருஷ்ணாஷ்டமி திதியும் அனுஷம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7.45 முதல் நவகலசஜப ஹோம விதானத்துடன் கூடிய ஏக தின்" ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை" கலசாபிஷேகம் அலங்காரம் திருப்பாவாடை நைவேத்திய ஆராதனை வைபவம் எட்டாவது ஆண்டாக நிகழ்வுற எல்லாம்வல்ல அம்மை அப்பன் திருவுள்ளம்  கூட்டுவித்துள்ளது.

முருகையன் செயல் அலுவலர் ,    ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். பரம்பரை அறங்காவலர். வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர்.


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. எஸ் கைலாச சிவாச்சாரியார்.விழுப்புரம் செல்: 9443189253, டி.வி ரவிசந்திர சிவாச்சாரியார். நாராயன வனம் .செல் 9440180621

செல் போன் செய்திகள்

எனக்கு பிடித்த எஸ்.எம்.எஸ்கள்

உன் மனம் வலிக்கும்போது சிரி! பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்கவை! -சார்லிசாப்ளின்.

love is a like a long sweet dream and marriage is an alarm clock so enjoy sweet dreams till your alarm wakes you up -a famous writter.

butterfly lives only for 8 days.but it flies joyfully capturing manyhearts each moment in life is precious.livehappy&win many hearts.

நெஞ்சை நெருடிய செய்தி! ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் கடைசி கவிதை
எங்கள் கல்லறை மீது எழுதுங்கள் எங்கள் மரண்த்திற்கு காரணம் எங்கள் தாய் மொழி என்று.


How frndship breaks ? both frns wil think,  the other is busy...And willnot contact thinking it may be disturbing..As timepasses both will think let the other contact...After that each will think whi i shuld contact first? Here your frndship willbe converted to hate..Finally without contact the memory becomes weak..They forget each other.. so pass this message to all your frnds whom u want to say i won't let you go out of my life.

Negative thinkers focus on PROBLEMS.positive thinkers focuson SOLUTIONS so be postive at any time in your life to make bright future!
பசங்க மனசுக்கு பிடிக்கலன்னா அவ சானியா மிர்சாவா இருந்தா கூட பாக்கமாட்டானுங்க.பட் பிடிச்சிருந்தா அவ சாணி அள்ளுறவ்ளா இருந்தாலும் விட மாட்டானுங்க. பாய்ஸ் ராக்ஸ்.
 

Wednesday, February 23, 2011

ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா யாகம் குடியாத்தம்

ஸà¯�à®°à¯� மஹா பà¯�ரதà¯�யà®�à¯�à®�ிரா à... on Twitpic

குடியாத்தம் ஸ்ரீ மாசுபடா அம்மன்.


அம்மை  நோய் தீர்க்கும் அம்மா ஸ்ரீமாசுபடா அம்மன்

Monday, February 21, 2011

உறுத்தல்


 
     சிறுகதை

‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ் வேணுமுங்கய்யா அதான் ஐயாவண்ட வந்தேனுங்கய்யா கையில் வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினான்.
     உயரமாய் ஒடிசலாய் கைக்கட்டி நிற்கும் அவனைப்பார்த்து எதுக்குய்யா கம்யூனிட்டிசர்டிபிகேட் என்றேன். . “கடை ஒண்ணு போடனுங்க” “என்ன கடைப்பா”
தலையை சொறிந்துகொண்ட அவன் செருப்பு பை எல்லாம் தெச்சி விக்கிறதுக்கு சாமி” என்றான்.
     “அப்படியா நான் கையெழுத்துப் போடனுமுன்னா 100ரூபா வேணுமே”
   “ சாமி இல்லாதவன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா”
  “இதுல பாரபட்சமே கிடையாதுப்பா லஞ்சம் எல்லோருக்கும் பொதுவுடைமை ஆகிப்போச்சு 100ரூபா ரெடி பண்ணிட்டுவா கையெழுத்து வாங்கிட்டுப்போ”
“சரிங்கய்யா” அவன் அகன்றான்.
நான் அந்தப்பகுதி வி.ஏ.ஓ.எந்த ஒரு வேலைக்கும் என்னிடம் தான் வரவேண்டும் அந்த இறுமாப்பில் தான் திருப்பி அனுப்பினேன்.மாலை ஆபீசில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன்.தீடிரென செருப்பின் வார் அறுந்துவிட்டது. “ச்சே” எரிச்சலாய் வந்தது.யாராவது செருப்பு தைப்பவர்கள் கிடைப்பார்களா என்று தேடினேன்.அதோ ஒருவன். சென்று வார் அறுந்துடுச்சு தெக்கனும் என்றேன்.
நிமிர்ந்த அவன் அடையாளம் கண்டுகொண்டு சார் நீங்களா? என்றான்.
காலையில் கையெழுத்திற்காக வந்தவன். ஐந்து நிமிடத்தில் தைத்து முடித்தவன் சார் பத்து ரூபா என்றான்.
     அஞ்சு நிமிஷவேலைக்கு பத்துரூபாயா அநியாமா இருக்கே என்றேன்.அஞ்சுரூபாதான் தருவேன். என்று ஒரு அஞ்சு ரூபாத்தாளை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.சிறிது தூரம் நடந்திருப்பேன் சார்!சார்! அவன் பின்னாலேயே குரல் கொடுத்தபடியே ஓடிவந்தான்.
    நின்று என்னப்பா கையெழுத்தா ? 100ரூபா ரெடி பண்ணிட்டியா? என்றேன்.
இல்லசார்!.. “பின்ன என்ன?” “சார் நீங்க 5ரூபா கொடுப்பேன்னு சொன்னீங்க.”
“அதான் கொடுத்திட்டேனே”. இல்ல சார் நீங்க 10ரூபா கொடுத்திட்டீங்க நீங்க கொடுத்த 5ரூபாத் தாளில் ரெண்டுத்தாள் ஒட்டிண்டிருந்தது சார்.இந்தாங்க 5ரூபா என்று 5ரூபாயை திருப்பி தந்தான்.
    செய்யும் வேலைக்கு சம்பளம் கிடைத்தும் உபரியாய் லஞ்சம் வாங்கிய நான் அவன் முன் கடுகாய் சிறுத்துப்போனேன். அவனது செயல் என்னை உறுத்த நாளைக்கு வாப்பா கையெழுத்துப்போட்டுத்தரேன் என்றேன் தவறுக்குப் பிராயச்சித்தமாய்
Related Posts Plugin for WordPress, Blogger...