தளிர்

தளிர்
தேன் சிந்தும் பூஞ்சோலை!

Sunday, December 25, 2011

புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு!

அது எப்படி, சல்மான் கான் தமிழில் இருந்து இந்தியில் டப் செய்த படத்திலும் வெற்றி பெறுகிறார், இந்தியில் ஒரிஜினலாக நடித்தாலும் ஆஹா ஓஹோ வெற்றி பெறுகிறார் என்ற கேள்வியோடும், நானும் கொடுக்கிறேன் மெகா ஹிட் என்ற ஒசத்தியான சபதத்தோடும், ஒஸ்தி படத்தில் நடித்தார் சிம்பு. இந்தியில் சல்மான் கான் நடித்த தபாங் சூப்பர் டூப்பர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். ஆனால் தமிழில் ஒஸ்தி பிசுபிசுத்து விட்டது, ஒஸ்தி படம் பார்த்த எல்லோரும் சிம்புவுக்கு இது ரொம்ப ஜாஸ்தி என்று கமென்ட் கொடுக்கிறார்களாம்.

ஒஸ்தி படத்தால் சிம்புவின் தந்தை டி.ஆருக்கு மட்டுமல்ல திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும் பெருத்த நஷ்டமாம்! இதனால், நஷ்டமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் ஒன்று கூடி சிம்புவுக்கு ரெட் கார்ட் காட்டினால் என்ன என தீவிரமாக ஆலோசித்து வருகின்றனராம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது விரல் நடிகரின் கதை! 

thanks to dinamalar

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...