என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

           ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} மதுமிதாவை விரும்பும் அபிஷேக் அவளை பெண்கேட்டு வரப்போவதாக மதுமிதாவிடம் தெரிவித்தான். அதே சமயம் அவளது வீட்டில் அவளை பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதாக கூறினர்.

அப்பா! என்ன சொல்றீங்க பையனுக்கு என்னை பிடிச்சு போச்சா? எப்படி என்னை பார்க்காமலே இப்படி சொல்றார்! நல்லா விசாரிச்சீங்களா?
  ஏம்மா! உன் அப்பாவை பத்தி இப்படி சந்தேகப்படறே! விசாரிக்காம இருப்பனா? பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப் போய்தான் உன்னைத்தான் கட்டுவேன்னு ஒத்தகால்ல நிற்கிறாராம்! இடமும் நல்ல இடமா தோணுது நம்ம வசதிக்கு இது கொஞ்சம் பெரிய இடமும் கூடத்தான்! ஆனாலும் ஒரே பொண்ணு உன்னோட வாழ்க்கை நல்லா அமையனும் இல்லையா? கடனோ கிடனோ வாங்கி சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணி முடிச்சா என்னோட சுமை குறையும் இல்லையாம்மா? என்றார் அவளது தந்தை.
   அப்பா நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு கடன் அதிகமானா அது உங்களுக்கு சுமையா இருக்காதாப்பா! என்றாள் மது!.
  அது ஒண்ணும் பெரிய விசயமே இல்லைம்மா! வீட்டுல கல்யாணமாகத பெண்ணுங்களை வைச்சிருக்கறதுதான் இந்த காலத்துல பெரியசுமை! நல்ல இடமா தெரியுது. முடிச்சிடலாமுன்னு தோணுது நீ என்ன சொல்றேம்மா! என்று அவளிடமே கேட்டார் அந்த அப்பாவி அப்பா!.
  இல்லேப்பா! வ. வந்து.. என்று மென்று விழுங்கினாள் மதுமிதா.
  என்னம்மா நீ வந்து போயின்னு இழுத்துகிட்டு இருக்க சட்டுன்னு நல்ல பதிலா சொல்லுவியா?
 அது  அது வந்துப்பா.. மாப்பிள்ளைக்கு என்னை பிடிச்சு போச்சுன்னு சொல்றீங்க ஆணா எனக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேணாமா? என்றாள் மதுமிதா.
  ப்பூ இவ்வளவு தானா விசயம் நான் கூட வேறு என்னமோ ஏதோ என்று பயந்து போய்விட்டேன்! இதோ பார் மது அந்த தம்பியை பார்த்ததுமே உனக்கு பிடித்துப் போய்விடும் பாரேன்! நீ ஒன்றும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே! அப்பா ஒன்றும் உன்னை படுகுழியில் தள்ளிவிடமாட்டேனாக்கும் என்று சிரித்தபடி கூறினார்.
   அதில்லைப்பா உங்களைப் போய் அப்படி நினைப்பேனா? திடீரென்று மாப்பிள்ளை வீடு பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் எனக்கு ஒரு மாதிரி பயமாக வந்துவிட்டது என்றாள் மது.
 அப்படியெல்லாம் எதுவும் தவறாக நடக்காது மது. முதலில் நீ மாப்பிள்ளையை பார்! உனக்கு பிடித்தால்தான் கல்யாணம்! ஆனால் உனக்கு கட்டாயம் பிடித்துப்போகும்! என்றவர் மது நான் கிளம்புகிறேன்! நீ எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அலுவலகம் செல்! முன் கூட்டியே அடுத்தவாரத்திற்கு லீவு கேட்டு வை என்ன? என்று கிளம்பிவிட்டார்.
  மதுவிற்கு இதென்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக இருக்கிறதே! அப்படி யார் என்னை முன் கூட்டியே பார்த்திருக்க கூடும் என்று சிந்தித்தாள்
  என்னடி யோசனை கல்யாணக் கனவா? என்றபடி வந்த அன்ன பூரணியை போம்மா! மாப்பிள்ளையையே பார்க்கவில்லை இதற்குள் கனவு கினவு என்று உளறிக் கொண்டு இருக்கிறாயே? என்றாள்.
 இப்போது அப்படித்தான் சொல்வாய்? கல்யாணமானதும் பார் அம்மாவா அது யார்? என்று கேட்கப் போகிறாய்? என்று மேலும் விரட்டினாள் அந்த தாய்.
  அம்மா போதும் நானே குழப்பத்தில் இருக்கிறேன் நீ என்னடாவென்றால் இப்படி ஓட்டிக் கொண்டிருக்கிறாயே?சிணுங்கினாள் மதுமிதா.
  அப்படி என்னடி குழப்பம் உனக்கு?
 அதான்மா அந்த மாப்பிள்ளை என்னை பார்த்து விட்டார் என்கிறீர்களே அப்படி எங்கு பார்த்தாராம்? அதுதான் எனக்கு குழப்பமே!
  பார்த்தாயா? பார்த்தாயா? கல்யாண கனவில்லை என்றாய்! ஆனால் மாப்பிள்ளை எங்கு பார்த்தார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் இதிலிருந்தே தெரிகிறது உன் ஆசை!
  ஆசையுமில்லை மண்ணாங்கட்டியும் இல்லை! அந்த மனிதர் என்னை எங்கு பார்த்து தொலைத்தாரோ அது தான் என் மண்டையை குடைகிறது! வேறு ஒன்றுமில்லை!
 ஏன் மது அவசரப்படுகிறாய்? ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளேன்! நீயே நேரடியாக மாப்பிள்ளையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளேன் என்று நமுட்டு சிரிப்புடன் கூறிவிட்டு சமையல் கட்டில் நுழைந்தாள் அன்னபூரணி.
 இது என்னடா இந்த காலை இப்படி விடிந்து தொலைத்துவிட்டது என்றுஅலுப்புடன் ஆபிசிற்கு கிளம்பினாள் மதுமிதா.
   அலுவலகம் செல்ல சற்று தாமதமாகிவிட்டது! சென்றதுமே எம்டி அழைக்கிறார்கள் என்று சொன்னதுமின்றி ஒரு மாதிரி புன்னகைத்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.
  எப்போது எந்த கதை கிடைக்கும் என்று வெறும் வாயை மென்று கொண்டிருப்பவள் அவள். அவளை அலட்சியம் செய்து அபிஷேக்கின் அறைக்குள் நுழைந்தாள் மது.
  சாரி சார் இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது! என்றாள்
 இருக்கட்டும்மது! அப்புறம் நான் சொன்ன விசயம்பற்றி உனக்கு ஏதும் மறுப்பு இல்லையே என்றான்.
  அது பற்றிதான் சொல்ல வேண்டும்சார்! ஆனால் அலுவலக நேரத்தில் எதற்கு சொந்த விசயம் பேசவேண்டும். மாலையில் பேசுவோம் சார் என்றவள் வேலையில் மூழ்கலானாள்.
 மாலையில் அபிஷேக்கிடம், வீட்டில் அடுத்தவாரம் லீவு எடுக்கசொல்கிறார்கள்! என்னை பெண் கேட்டு வருகிறார்களாம் என்றாள் மதுமிதா.
 இதானா விசயம்! நான் என்னமோ என்று நினைத்தேன்!
சரி நான் என்ன செய்யட்டும்!
லீவு தருகீறேன். போய்மாப்பிள்ளைக்குத் தரிசனம் தா! என்றான் அபிஷேக்.
மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என்றாள் மது!
ஏன் அதைக்கூட நான் சொல்லித்தரவேண்டுமா? உனக்கு சுயபுத்தி இல்லையா? என்றான் அபிஷேக்.
 இருக்கிறது நன்றாக இருக்கிறது! நீங்கள் என்னை பெண் கேட்டு வரப்போவதாக சொன்னீர்களே! இப்போது வேறு ஒருவர் வருவது தேவையா? நீங்கள் முன்னதாக!
 ஏன் மது என் மேல் நம்பிக்கை இல்லையா என்றான் அபிஷேக்!
இருப்பதால்தான் கேட்கிறேன்! வேறு யாரையும் பார்க்க நான் விரும்பவில்லை!
  அப்படியானால் வீட்டில் சொல்லிவிடுவதுதானே!
அது முடியாமல்தான் கேட்கிறேன்! நான் அந்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது?
 பிடித்திருந்தால் ஓக்கே சொல்லேன்! என்றான் அபிஷேக் சிரித்தபடி!
அவனை முறைத்தாள் மதுமிதா!
                    நிலவு வளரும் (14)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!