மின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசுக்கு "டாட்டா': தமிழக அரசு புது முடிவு

புதிய மின் திட்டங்களுக்கு, மத்திய அரசு நிலக்கரி ஒதுக்கீடு தராததால், முழுவதுமாக வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின் திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், கடுமையான மின் பற்றாக்குறையை சமாளிக்க, தினசரி மின்வெட்டு அமலாகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், தமிழகத்தில், 24 மணிநேர மின் சப்ளை இருக்கும் என, அரசு அறிவித்துள்ளது.தற்போது, சென்னையில் வள்ளூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில், புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றின் பணிகள் திட்டமிட்டபடி முடியும் பட்சத்தில், அடுத்த ஆண்டில், தமிழகத்திற்கு, 2,800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். இதனால், தற்போதைய, 3,500 மெகாவாட் பற்றாக்குறை ஓரளவு தீர்க்கப்படும்.

புதிய மின் நிலையங்கள் அவசியம்: அடுத்த ஆண்டில் கூடுதலாக, 22 லட்சம் மின் இணைப்புகள் வரும் என்பதால், கூடுதலாக, 1,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதுபோன்று, எதிர்காலத்தில் அதிகரிக்கும் மின் பயன்பாடுகளையும், பற்றாக்குறையையும் சமாளிக்க, புதிய மின் திட்டங்களை, தற்போதே திட்டமிடுவது அவசியம்.இதன்படி, தமிழக அரசின் சார்பில், எண்ணூரில், வடசென்னையில், மூன்றாவது, நான்காவது கூடுதல் நிலையங்கள், தூத்துக்குடி மற்றும் உப்பூர் ஆகிய பகுதிகளில், புதிய மின் நிலையங்களை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு, கடந்த ஆட்சியிலேயே, மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக மின் துறையிலிருந்து விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், மற்ற அனுமதிகளை வழங்கிவிட்டு, நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு தரவில்லை.ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலக்கரி ஒதுக்கீட்டிற்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதனால், எதிர்காலத்தில், மின் வினியோக நிலைமை மோசமாவதைத் தடுக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, புதிய முடிவெடுத்துள்ளது.

30 சதவீதம் போதாது...:இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்திலுள்ள மின் உற்பத்தி மையங்களுக்கு, ஆண்டுதோறும் தேவைப்படும் நிலக்கரியில் 70 சதவீதத்தை, மத்திய அரசு கொடுக்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தை, இறக்குமதி செய்து ஈடுகட்டுகிறோம். தற்போது, புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிலக்கரி தராததால், 100 சதவீதம் அல்லது 70 சதவீதம் இறக்குமதி நிலக்கரியையும், 30 சதவீதம் இந்திய நிலக்கரியையும் பயன்படுத்தி, புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும். தமிழக அரசு, 100 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய திட்டங்களுக்கு, 30 சதவீதம் மட்டும் நிலக்கரி தர முடியும் என தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டினருடன் ஒப்பந்தம்:இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:எனவே வடசென்னை, எண்ணூர், உப்பூர் மெகா மின் திட்டம், தூத்துக்குடி விரிவு ஆகிய ஐந்து புதிய மின் திட்டங்களுக்கு, 2.7 கோடி டன் வெளிநாட்டு நிலக்கரி மூலம், மின் உற்பத்தி செய்யும் கொதிகலன்களை அமைக்க, பாரத மிகுமின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும்.புதுத் திட்டங்களுக்கு, 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், தடையில்லாமல் நிலக்கரி வழங்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் பணிகளையும், நிலக்கரி இறக்குமதிக்கான கப்பல்கள் மற்றும் துறைமுகம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனங்களை டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்க, அரசு அறிவிப்பு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய திட்டம் மின்திறன்(மெகாவாட்டில்)
வடசென்னை நிலை 3 800
வடசென்னை நிலை 4 1,600
எண்ணூர் இணைப்பு 600
தூத்துக்குடி கூடுதல் 800
உப்பூர் மெகா திட்டம் 1,600
மொத்தம் 5,400

நன்றி தினமலர்

Comments

  1. மக்களுக்கு நல்லது நடந்தால் சரி

    ReplyDelete
  2. உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2