90 வினாடிகளில் பின்லேடன் கதை முடிந்துவிட்டது - புதிய தகவல்கள்

லண்டன்: அமெரிக்கா அறிவித்தது போல 45 நிமிட சண்டையில் பின் லேடன் கொல்லப்படவில்லை. 90 வினாடிகளில் அவர் கதையை முடித்துவிட்டனர் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த மே மாதம் 2-ந்தேதி அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்லேடன் கோஷ்டியினருடன் 45 நிமிடங்கள் நடந்த துப்பாக்கி சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், அவர் 45 நிமிட துப்பாக்கி சண்டையில் கொல்லப்படவில்லை. அமெரிக்காவின் 'நேவி சீல்' என்ற அதிரடிப்படையினரால் 90 வினாடிகளிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையின் முன்னாள் கமாண்டர் சக் பாரெர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், பின்லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தான் அபோதாபாத் வீட்டிற்கு 2 ஹெலிகாப்டர்களில் வீரர்கள் புறப்பட்டு சென்றனர். அதில் ஒன்று நொறுங்கி விழுந்து விட்டது.

மற்றொரு ஹெலிகாப்டர் மட்டும் பின்லேடனின் அபோதாபாத் வீட்டின் மாடியில் இறங்கியது. அதில் இருந்து இறங்கிய அதிரடிப்படை வீரர்கள் பின்லேடன் வீட்டிற்குள் புகுந்து 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

முதல் ரவுண்டில் பின்லேடன் மனைவிகளில் ஒரு காயமடைந்ததாகவும், பின்னர் அவரே வழிகாட்டியதாகவும் இந்தப் புத்தகம் கூறுகிறது.

அதை தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த 90 வினாடிகளிலேயே பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். 45 நிமிட சண்டையின்போது அவர் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பின்லேடன் சாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பின்லேடனைக் கொன்ற விஷயத்தில் அமெரிக்கா பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

  1. அமெரிக்கா பொய் சொன்னதாகவே இருக்கட்டும்...அதனால இப்ப என்ன குடி முழுகி போகுது...வஞ்சகமாக கொல்லப்பட்ட கடாஃபி கொலை பற்றி ஒன்னும் பேசல...இந்த பயங்கரவாதி பற்றி ஏன் இவ்வளவு ஆர்வம்...நீங்க அவனுங்க ஆதரவாளரா...??? போங்க... போயி வேற வேல இருந்தா பாருங்க...

    ReplyDelete
  2. Afghanistan Prabakaran nothing else. . .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!