தேவை கூடங்குளம் மின்சாரம்!

தேவை கூடங்குளம் மின்சாரம்!

ஏ.கோ.லட்சுமணன், புதுவையிலிருந்து எழுதுகிறார்: "கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அங்கே வசிக்கும் மக்கள் உயிருக்கு, அணுக்கதிர் வீச்சால் ஆபத்து' என, தடை விதிக்கும் படி கேட்கின்றனர். அணுமின் நிலையத்திற்கு யுரேனியமும், கடல் நீரும் தேவை. அதனால் தான், அணு உலைகள், கடலை ஒட்டி அமைக்கப்படுகின்றன. பராமரிப்பதும் சுலபம். அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், நெடும் காலம் தொடர்ச்சியாக கிடைக்கும். உற்பத்திச் செலவு குறைவு. அணுக் கதிர்களால் மனித உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறும் இவர்கள், மற்ற வழிகளில் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை உணர வேண்டும். அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலால், புற்றுநோய் ஏற்படுகிறது. புற்று நோய்க்கு பயந்தால், மின்சார சுகம் கிடைக்குமா? மின்னல், இடி அபாயம், பாம்புகடி தாண்டி விவசாயி பயிரிடுகிறான். வாகனங்கள் விடும் புகையும், போகி, பொங்கல் அன்று டயர், பாலிதீன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்படும் புகையும், ஓசோன் படலத்துக்கு பகை. அதனால், ஓசோனில் ஓட்டை ஏற்பட்டு, சூரியனின் புற ஊதா கதிர்களால், மனித உடலில் தோல்புற்று ஏற்படும். பற்ற வைத்த சிகரெட், கொசுவத்தியால் உண்டாகும் புகையை சுவாசிக்கும் நமக்கு, நுரையீரல் புற்று உண்டாகிறது. ஆனால், அவைகளை பற்ற வைக்காமல் இருக்கிறோமா? மதுபானங்களை குடிப்பதால், மண்ணீரல், கல்லீரல் பாதிக்கப்படுகிறது. அதனால், மதுபான பாட்டில்களை திறக்காமல் இருக்கிறோமா? மற்ற நாடுகள் நம்மை மதிக்க வேண்டுமெனில், மின்சாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும். அதற்கு, அணுமின் நிலையம் சிறந்த வழி. "கோவில் இல்லா ஊரில், குடியிருக்க வேண்டாம்' என்பது, அன்றைய முதுமொழி. "மின்சாரம் தொடர்ச்சியாக இல்லா ஊரில், மிருகங்கள் கூட வாழாது' என்பது இன்றைய புதுமொழி. கூடங்குளம் அணு மின்நிலையம், மின் உற்பத்தி இல்லையேல், வேலை இல்லா திண்டாட்டத்தால், தமிழகம் இன்னொரு சோமாலியா கொள்ளையர்கள் கூடாரமாய் மாறிவிடும். இன்று, அணு மின் நிலையம் இயங்கத் தடை கோரும் மிட்டா மிராசுகளும், அரசியல்வாதிகளும், மின்சாரம் தடைபட்டால், ஜெனரேட்டர் வைத்து, தங்கள் வீடுகளில் சுகமாக வாழ்கின்றனர். ஆனால், சாமான்ய மக்களால், ஜெனரேட்டர் பயன்படுத்த முடியுமா? அரசியல்வாதிகளின் வாக்குறுதியை நம்பி, ஓட்டுப் போடும் நாம், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பு பற்றி, அரசின் வாக்குறுதிகளை நம்ப மறுப்பதேன்? ஒரு வேலை கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுக்காமல் கூறுவதால், நம்ப மறுக்கிறோமோ! நம் நாடு வல்லரசாக வேண்டும் என்றால், தொடர் மின்சாரம் தேவை. போராட்டக் குழுவை, தமிழக மக்களும், புதுச்சேரி மக்களும், பாராட்ட வேண்டுமென்றால், கூடங்குளம் அணுமின் நிலையம், வெகு விரைவாக திறப்பு விழா
காண வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தால், தமிழகம் கூடுதல் வளம் காண, வழி செய்ய வேண்டும்.

நன்றி தினமலர்

டிஸ்கி} இந்த வாசகரின் கருத்தில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை! அறிவியல் ஆக்கவும்செய்யும் அழிக்கவும் செய்யும் ! அழிவுக்கு பயந்து ஆக்கத்தை கைவிட்டால் வருங்காலம் ஏளனம் செய்யும். இதுவரை எதிர்க்காதவர்கள் இன்று திடீரென எதிர்ப்பது ஏன்? இதனால் பாதிப்பு என்று எதை கூறுகிறார்கள்? அரசின் உத்திரவாதத்தை ஏற்க மறுப்பது ஏன்? போன்ற கேள்விகள் எழுகின்றன. முதல்வர் ஜெயலலிதாவும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது ஆச்சர்யமாக உள்ளது. ஏற்கனவே மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகம் இத்திட்டத்தை கைவிட்டால் மீள்வது எப்போது?

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!



Comments

  1. மிகமிக நல்ல பதிவு, அணுமின்சாரம் நாட்டின் இன்றைய தேவை. இந்தியாவில் மட்டும் இருபத்தியேழு அணு உலைகள் உள்ளன, அதில் தாராபூர் அணு உலை அறுபதுகளில் தொடங்கி இன்று வரை ஒரு பிரச்சினையும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இதை உணர்ச்சி பூர்வமாக பார்க்காமல் அறிவுபூர்வமாக சிந்திப்பது நல்லது.

    ReplyDelete
  2. மிக சரியான பதிவு. நிக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள மின் நிலையத்தை குறித்தும் , அதனுடைய பாதுகாப்பு அம்சங்களை குறித்தும் நாம் அறிந்து கொண்டால் , மக்கள் அச்சப்பட தேவை இல்லை என் நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. மின்சாரம் தான் நாட்டின் தேவை என்ற உங்கள் கருத்து மிக சிறப்பானது. அதற்காக மக்களை பலி செலுத்தலாமா என்று சிலர் கேட்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி மக்களை பலி கொடுக்கும் என்று நான் கேட்கிறே கேள்விக்கு இது வரை எந்த பதிலும் இல்லை. போராட்டம் தொடர்பாக நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வாசியுங்களேன்

    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  4. இந்த பிரச்சனை எப்பதான் தீருமோ பாவம் மக்கள்

    ReplyDelete
  5. வலைப்பூவிற்கு வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  6. அணுக கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசித்துக் கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தகவல் உலகம் சொல்கிறது..
    உங்கள் பதிலை அடுத்த பதிவில் போடலாம்..
    ஒரு அணு உலை முப்பது ஆண்டுகள் மட்டுமே இயங்க முடியும் என்றும் அதன் பிறகு அதை மூடி விட வேண்டும் என்றும், மூடிய பிறகு அதன் பராமரிப்பு செலவு அதிகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
    கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பு இல்லாதது என்று தெஹெல்கா இனைய தளம் ஊடகம் தெரிவிக்கின்றது...
    சூரிய ஒளி மின்சாரம் குறித்து நீங்கள் பேசினாலும், அது விலை அதிகம் என்று அரதப் பழசான விதண்டாவாதம் தான் பேசுவீர்கள்...
    நீங்க இருக்கிறது சென்னையில, கொஞ்சம் வீட்டை கல்பாக்கம் பக்கத்தில இல்லனா கூடங்குளம் பக்கத்தில மாத்திகிட்டு வந்து அப்புறமா வீரம் பேசுங்க...

    ReplyDelete
  7. http://maniblogcom.blogspot.com/2011/10/blog-post_11.html

    ReplyDelete
  8. நண்பர் சூர்ய ஜீவா! நான் சென்னையில் இருப்பதால் வீரம் பேசுகிறேன் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்! எதையுமே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! இன்று உற்பத்தி துவங்க உள்ள நிலையில் இந்த அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்துவது ஏன்? என்பதுதான் என் கேள்வி? அத்துடன் அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசிக்கிறது என்றால் விடை கிடைக்காமலா போகும்? சூரிய மின்சாரம் காற்றாலை மின்சாரம் போன்ற மாற்றுவழிகளை நானும் எதிர்க்க வில்லை. அணு உலையால் மட்டுமே ஆபத்து என்று எண்ண வேண்டாம் தக்க பாதுகாப்புடன் அணு சக்தியை பயன் படுத்திக் கொள்ளலாமே என்று தான் கேட்கிறேன்

    ReplyDelete
  9. நல்லா தான் பேசுறீங்க, ஆனால் இது 1990 கலீல் இருந்து நடக்கும போராட்டம் என்பது தினமலர் மட்டும் படித்தால் தெரியாது...
    அணுக்கழிவுகளை என்ன செய்றதுன்னு இத்தனை விஷயமா கிடைக்காத பதில் இனிமேலா கிடைத்து விடுகிறது... ஆனா ஒன்னே ஒன்னு தான்பா புரியல ஜெர்மனி ஜகா வாங்கிடுச்சு, அப்புறமும் ஏன் இன்னும் அணு மின்சாரம் அவசியம், ஏன் காற்றாலை மூலமாகவும் சூரிய ஒளி மூலமாகவும் இன்னும் விலை குறைந்த மின்சாரம் தயாரிக்க கூடாது

    ReplyDelete
  10. @ Suryajeeva :

    // அணுக கழிவுகளை என்ன செய்வது என்று உலகமே யோசித்துக் கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தகவல் உலகம் சொல்கிறது..//

    இந்த பதிவை படித்து பாருங்கள் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன்

    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html

    ReplyDelete
  11. சுரஜீவா ஸார் காற்றாளைகளிலும், சூரிய ஒளியிலும் எடுக்கப்படும் மின்சாரம் மிகவும் குறைவானதே, அதை வைத்துக் கொண்டு நாளுக்கு நாள் பெருகிவரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.

    ReplyDelete
  12. இருதயம் சார் நீங்க நல்லா குழப்புறீங்க, உங்கள் பதிவுக்கு பதிலும் இட்டு வந்தேன்... அதுக்கு நீங்க வேற கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்களே தவிர என் கேள்விக்கு பதிலும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல... மௌனம் சம்மதம்னு எடுத்துக்கிறேன்

    கும்மாச்சி சார், நல்லா கணக்கு போட்டு பாருங்க, அணு சக்தி மின்சாரத்தை விட விலை கம்மி தான்... வெயில் அடிக்காத மேலை நாட்டு கணக்கு வச்சுகிட்டு சூரிய ஒளி சக்தியில கம்மியான மின்சாரம் கிடைக்குதுன்னு கதை விட்டு கிட்டு திரியாதீங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!