விஜய காந்த்தும் வெட்டி அரசியலும்!

விஜய காந்த்தும் வெட்டி அரசியலும்!

  தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் புதிது புதிதாக அரசியல் கட்சிகள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் அவை ஜாதியை முன்னிறுத்தியே செயல் பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் ஒரு ஏழு ஆண்டுகளுக்குமுன் கட்சி தொடங்கினார் புரட்சிக் கலைஞர்.
   பெயருக்கேற்ப கட்சி கொள்கைகளில் புரட்சிகளை அறிவிக்கும் போதே முதல் குட்டு விழுந்தது. கட்சியின் ஏக போகமாக எல்லா உரிமைகளையும் தானே வைத்துக் கொண்டதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை பின்பற்றினால் தான் அரசியல் கட்சி அந்தஸ்து அளிக்க முடியும் என்று கூறவே அதன்படி கட்சி விதிகள் மாற்றியமைக்கப்பட்டு கட்சியும் தொடங்கப் பட்டது.
   முதல் சட்டசபைத் தேர்தலும் வந்தது. அதில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று களத்தில் குதித்ததில் தனி ஆளாக விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஒரளவிற்கு பாமக, மதிமுகவைவிட கூடுதலாக வாக்கு சதவீதம் பெற மற்ற கட்சிகளை திரும்பி பார்க்கவைத்தது.
  குறிப்பாக தேமுதிகவின் வளர்ச்சி பாமகவை பெரிதும் பாதித்தது. ராம தாஸ் வெளிப்படையாகவே தேமுதிகவை எதிர்த்தார். திருமாவளவனும் ஒத்துப் பாடினார். இதெல்லாம் தேமுதிகவை மேலும் வளர்க்கவே செய்தது. பலர் கட்சியில் இணைந்தனர் பலர் விலகினர் ஆனாலும் தேமுதிக தமிழகத்தில் ஒர் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவைத்தது அந்த தேர்தல்.
   திமுக, அதிமுக விற்கு மாற்று தேடிய பல இளைஞர்கள் விஜயகாந்தின் ரசிகர்கள் இந்த கட்சியை வளர்க்க தன் கைப்பணத்தை செலவழித்துபாடுபட்டனர். உடன் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் சில வெற்றிகளை ருசித்தது தேமுதிக. இடைத் தேர்தலிலும் அதிமுகவை பின் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.
  இங்கேதான் ஆரம்பித்தது சிக்கல். எப்போதும் இரண்டாமிடம் பிடித்தால் போதுமா? ஆட்சியை பிடிக்க வேண்டாமா? என்ற கருத்து கட்சிக்குள் ஏற்பட ஆரம்பித்தது. கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடிக்க எல்லோரும் எம்ஜிஆரா என்ன? இதை அவர்கள் உணரவில்லை. கட்சி வெற்றி பெற்றுவிடும் பல பத்விகளை பிடித்து சம்பாதிக்கலாம் நாலு காசு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் தொண்டர்களிடையே பரவ ஆரம்பித்தது.
  விஜயகாந்தும் மக்களோடு கூட்டணி என்றவர் கொள்கையை மாற்றி கூட்டணிக்குத் தயார் என அறிவித்தார். காங்கிரஸ் மறைமுகமாக தேமுதிக வுடன் சேர முயற்சித்தது. அது திமுகவின் உள்ளடியால் பலிக்க வில்லை. மீண்டும் விஜயகாந்த் பல்டி அடித்தார் தனித்தே போட்டி என்றார் லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி அடைய அவர்களிடையே சலிப்பு ஏற்பட்டது எத்தனை காலம் தான் கைக்காசை செலவழிப்பது  சம்பாதிக்க வேண்டாமா? என்ற கோஷம் எழவே மீண்டும் கூட்டணி என்று முடிவானது.
   அதிலும் அதிமுகவுடன் கூட்டணி! அதிமுக எப்போதும் வென்றவுடன் கூட்டணி கட்சிகளை கழற்றிவிடும் ரகம் அதனுடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சி அந்தஸ்து பெற்றாகிவிட்டது. அப்படியும் மக்களுக்கு என்ன செய்தது தேமுதிக. முக்கியமாக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கூட விவாதங்களில் கலந்து கொள்ள வில்லை விஜய காந்த்.
   மூன்று மாதங்களாக அதிமுக அரசை விமர்சனம் செய்யவில்லை விஜயகாந்த் ஏன் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான சீட்டுக்களை பெறவே மவுனமாக இருந்தார். ஆனால் கிடைத்தது பட்டை நாமம் தான்! இப்போது இந்த தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிடுகிறார். முதல்வராக வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறார்.
   நடப்பது என்ன சட்ட மன்ற தேர்தலா என்ன? முதல்வராவதற்கு? ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராகவே நடந்துகொள்ளத் தெரியவில்லை! பாதி நாட்கள் சபைக்குவரவில்லை! வந்தும் வாயே திறக்கவில்லை! அப்படி பட்டவருக்கு முதல்வர் வாய்ப்பை மக்கள் வழங்க வேண்டுமாம் இது என்ன நியாயம்?
  நேற்றுவரை அதிமுக பற்றி குறை சொல்லாதவர் இன்று அடுக்கடுக்காய் குறை கூறுகிறார். அவரது மனைவியோ அவரைவிட ஒருபடி மேலே போய் அன்னா ஹசாரேவை வம்புக்கு இழுக்கிறார். ஊழலுக்கு எதிராக இவர்கள்தான் முதல் குரல் கொடுத்தார்களாம் காமெடியாக இல்லை! குடும்ப அரசியல் பற்றியும் இவர்கள் பேசுகிறார்கள். ஊழலை எதிர்த்தவர்கள் ஏன் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்கள்?
  இன்று அரசியலுக்கு வருபவர்கள் சம்பாதிக்கவே வருகிறார்கள். முடிந்தவரைச் சுருட்டிக் கொள்ளவே அவர்கள் எண்ணம்.இதை அறியாமல் இவர்கள் பின்னால் தொண்டர்கள் கூட்டம் சுற்றிக்கொண்டு அவர்கள் பிழைப்பை கெடுத்துக் கொள்வதுதான் மிச்சம்.
  விஜயகாந்த் மக்களின் விடிவெள்ளி அல்ல! வெட்டி அரசியல் வாதிகளில் ஒருவர் என்று மக்கள் புரிந்துகொண்டால் சரி!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

  1. உண்மைய சரியான கோணத்தில் சொன்னிர்கள் Brother.

    ReplyDelete
  2. சற்றேரக்குறைய உங்களுடைய கருத்துதான் என்னுடையதும், ஆனால் பெரும்பாலான மக்கள் அப்படி நினைப்பதில்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!