என் இனிய பொன் நிலாவே! பகுதி 9

என் இனிய பொன் நிலாவே!
           பகுதி 9
              “ப்ரியம்வதா”

முன்கதை சுருக்கம்} மதுமிதாவை விரும்பும் அபிஷேக் அவளை தனது பிஏவாக நியமிக்கிறான். ஆனால் மதுமிதா பணிக்கு செல்ல மறுக்கவே கட்டாயம் பணிக்கு வந்தாக வேண்டும் இல்லையெனில் இழப்பீடு தந்தாக வேண்டும் என்று மிரட்டுகிறான். கோபமடைந்த மதுமிதா அபிஷேக்கை சந்திக்க அவனது அலுவலகத்திற்கு செல்கிறாள். இனி!
           பயங்கரமா சுடுகிறதே உன் பார்வை ! இந்த ஏசி அறையிலும்! ப்ளிஸ் மது! அப்படி பார்க்காதே! என்றான் அபிஷேக்.
   மிஸ்டர்! என் கோபத்தை கிளறாதீர்கள்! என்னை வேலையில் சேரச் சொல்லி ஏன் கட்டாயப் படுத்துகிறீர்கள்? வேலைக்கு வருவதும் வராததும் என் இஷ்டம்! என்றாள் மதுமிதா.
   அது நீ பணியில் சேராத வரைக்கும்! என்ற அபிஷேக்கை நோக்கினாள் மதுமிதா அ.. அப்படியானால்!
   நீ நேற்றே என்னுடைய பர்சனல் செகரெட்டரி ஆகிவிட்டாய் என்று அர்த்தம்! என்றான் மிதப்பாக அபிஷேக்.
  இது இது பொய்! நான் நேற்றுதான் வேலையே செய்ய வில்லையே இண்டர்வியு முடிந்ததும் அனுப்பி விட்டீர்களே?
    அது நானாக தந்த விடுப்பு! என் நலம் நாடுபவர்கள் ஐ மீன் என் வேலைக்கு உதவுபவர்கள் நலம் நாடி நான் எடுத்தமுடிவு அது!
   இதோபார் மது! நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன்! உன்னை எனக்கு பிடித்துவிட்டது உன்னுடைய குவாலிபிகேஷனும் கூடத்தான். உனக்கு இந்த கம்பெனியில் நேற்றே வேலைக்கான உத்தரவு தயாராகி நீ அதில் கையெழுத்திட்டும் விட்டாய். உனக்கு பிடித்துதானே வேலையில் சேர்ந்தாய் பின் ஏன் நிற்க போகிறாய்? எனக்கு சரியான காரணம் தேவை! என்றான் அபிஷேக்.
   சரியான காரணமாம் மண்ணாங்கட்டி! அந்த ஸ்வேதாவை மணக்க போகிறவனுக்கு என்னை பிடித்து போய்விட்டதா? எப்படி சின்ன வீடாக வைத்துக் கொள்வானோ? பணக்கார பிள்ளைகளுக்கு இதெல்லாம் சகஜம் தானே? என்று மனதில் நினைத்ததை சொல்ல முடியாமல் தவித்தாள் மது.
    பார்த்தாயா? உன்னால் சரியான காரணம் சொல்ல முடியவில்லை! பேசாமல் வேலையில் சேர்ந்துவிடு இன்றும் விடுப்பு கொடுத்தாயிற்று நாளை பணிக்கு வந்துவிடுகிறாயா? என்றான் விடாக் கண்டனாக அபிஷேக்.
   சார்! அ. அது வந்து வீ. வீட்டில்! மதுவின் சுருதி சற்று குறைய அபிஷேக்  என்ன வீட்டில் கேட்க வேண்டுமா? இதை முதலில் யோசித்திருக்க வேண்டும் நீ! இந்த அளவு சம்பளம் வருகிறது என்றால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்களே! என்றான் அபிஷேக்.
  சரியாக படித்து வைத்தது போல அவன் சொல்லவும் இவனுக்கு எப்படி எல்லாம் தெரிந்திருக்கிறது என்று அவன் முகத்தை நோக்கினாள் மது!.
   ஓக்கே நான் தான் உன் பிரச்சனையா? நான் கொஞ்சம் ஓவராகவே நடந்து விட்டேன் தான் என்ன செய்வது தொட்டில் பழக்கம்! உனக்கு விருப்பம் இல்லாதவரை நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் மது! இன்னும் என்ன தயக்கம் தயங்காமல் கூறு என்றான்.
      அந்த ஸ்வேதா விசயம்தான் மதுவிற்கு இடித்தது. இவனும் தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறிவிட்டான். எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு வருடம் ஓட்டிவிட்டால் இவனுமாச்சு இவன் கம்பெனியுமாச்சு! எதற்கு வீணாக இழப்பீடு அது இதுவென சொந்தக் காசை விரயமாக்க வேண்டும். பேசாமல் ஒப்புக் கொள்வோம் என்று நினைத்த வினாடியில்
  அப்புறம் என்ன யோசனை மது! அந்த ஸ்வேதாவை பற்றி யோசிக்கிறாயா? அவள் ஒரு .. வேண்டாம் இப்பொழுது எதற்கு அவளைப் பற்றி பேசவேண்டும்? நீ அவளை ஒரு பொருட்டாக எண்ண வேண்டியதில்லை! நாளை கண்டிப்பாக வேளைக்கு வந்துவிடு! இப்பொழுது எனக்கு அவசரமான ஒரு மீட்டிங்க் இருக்கிறது! அதனால்..!
 நாளை வந்து விடுவாய்தானே என்றான் .

மையமாக தலையை ஆட்டி ஒப்புதல் அளித்த மது அந்த அலுவலகத்திலிருந்து கிளம்பினாள். அவள் வெளியே வரும் சமயம் அந்த ஸ்வேதா உள்ளே நுழைந்தாள்.
  மதுவிற்கு அறுவெறுப்பாக வந்தது. ஓ இதைத் தான் முக்கியமான மீட்டிங்க் என்றானோ? சே வெட்கம் கெட்ட ஜென்மங்கள்! என்று நினைத்துக் கொண்டாள்.
  அப்போது அந்த ஸ்வேதா குரல் கொடுத்தாள்! ஏய் உள்ளே அபி இருக்கிறார்தானே! நீ என்ன இந்த நேரத்திலேயே வீட்டுக்கு கிளம்பி விட்டாய்! இந்த அபி அத்தானுக்கு வேலைக்காரர்களை நடத்தும் விதமே தெரியவில்லை! என்னடி கேட்டுக் கொண்டே இருக்கிறேன் பதிலைக் காணோம்? உன் தொணடையில் எதை முழுங்கி தொலைத்திருக்கிறாய் என்றாள் அதட்டலாக ஸ்வேதா.
   மேடம் கொஞ்சம் மரியாதையாக பேசுகிறிர்களா? நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரியல்ல அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்! அலுவலகத்திற்கு வந்து போகும் எல்லோரையும் இப்படி தவறாக எடைபோடாதீர்கள்! என்றாள் மது.
   வேலைக்காரிக்கு திமிரைப் பார்! நீ என் வேலைக்காரியாக இல்லாவிட்டால் போகிறதடி இன்றில்லாவிட்டாலும் நாளை அபியை நான் மணந்த பின் நீ என் வேலைக்காரிதானே என்றாள் அந்த ஸ்வேதா.
  மன்னிக்க வேண்டும் என்று மது ஆரம்பிக்கையில் ஸ்வேதா அது அப்படி பணிவாக பேசகற்றுக்கொள் பெண்ணே என்றாள்.
  முடிக்கும் முன் குறுக்கிடாதீர்கள் மிஸ் ஸ்வேதா! நாளையைப் பற்றி சிந்திக்காதீர்கள்! இன்று என்ன என்று யோசியுங்கள் நாளை என்பது நடக்காமலும் போகலாம் ஒரு வேளை அப்படி நடந்து விட்டால் அப்போது கண்டிப்பாக நான் உங்கள் வேலைக்காரியாக இருக்கமாட்டேன் என்றாள் மது.
   ஏய் ஏய் உனக்கு அவ்வளவு திமிராடி வேலைக்கார நாயே! என்று கை வீசியவளை தடுத்தது ஒர் கரம். அடி விழும் என்றூ குனிந்த மதுமிதாவும் தடுத்த கரத்தினை ஆச்சர்யத்துடன் பார்க்க அங்கே அபிஷேக்கின் தாய் நின்று கொண்டிருந்தாள்.
   ஸ்வேதா என்ன இது! அலுவலக வறவேற்பறையில் இப்படியா நடந்து கொள்வது அது சரி உனக்கு இங்கு என்ன வேலை! இது அலுவலக நேரமாயிற்றே என்றார் அவர்.
   இல்லை அபியை பார்க்காமல் போரடித்தது அதான் பார்க்க வந்தேன். என்றாள் ஸ்வேதா.
  இதோ பார் ஸ்வேதா சிறிய வயதில் எதையோ பேசினோம் என்பதற்காக அதே கனவில் இருக்காதே! இது விஷயமாய் அபி உன்னிடம் தெளிவாக கூறிவிட்டதாக கூறினானே! இது அலுவலகம் நம் வீடு அல்ல.இங்கு நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் இன்று போர்ட் மீட்டிங்க் இருப்பதால் நானும் வர வேண்டியதாயிற்று நடக்க இருந்த விபரீதத்தை தடுத்ததாயிற்று. இந்த மாதிரி அலுவல் நேரத்தில் தொந்தரவு செய்தால் பிடிக்காது என்று உனக்கு எத்தனை முறை சொல்வது பேசாமல் வீட்டுக்குச் செல்! என்று அவளை அனுப்பி வைத்த அவர் மதுவை நோக்கினாள்.
   யாரம்மா நீ! உனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை! என்று கேட்க மேடம்  நான் மதுமிதா இந்த கம்பெனியின் எம்.டி யின் பி.ஏவாக நியமித்துள்ளார்கள் என்றாள்.
   அப்படியெனில் உனக்கு கீழே என்ன வேலை? இந்நேரம் எம்.டி யுடன் அல்லவா இருக்க வேண்டும் இங்கே வந்து அந்த பெண்ணிடம் வாங்கி கட்டி கொள்ள இருந்தாயே?
  இ. இல்லை மேடம் அவள் தான் என்னை வம்புக்கிழுத்தாள்! என்ற மதுமிதா நான் கிளம்புகிறென் மேடம் என
 எங்கே கிளம்புகிறாய்? உனக்காக அந்த பெண்ணிடம் இவ்வளவு வாதாடினேன் ஒரு நன்றி கூட சொல்ல மாட்டாயா? என்றாள் அபிஷேக்கின் தாய்.
     அ.. அதுவந்து நன்றி  என்ன வந்து போயின்னு சொல்லிகிட்டு இருக்கே நான் யார் தெரியுமா? உன் வருங்கால மாமியார் என்றாள் அபிஷேக்கின் தாய்.
   திடுக்கிட்டாள் மதுமிதா!
                        நிலவு வளரும்(9).

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2