பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் திருமண உடையை காண அலைமோதும் மக்கள்

லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ்-கேட் மிடில்டனுக்கும் இடையேயான திருமணத்தின் போது அணிந்த அலங்கார உடையை காண பக்கிங்ஹாம் அரண்மனையில் பார்வையாளர்கள் குவிந்ததாக, வெளிநாட்டு பத்திரிக்கைகள் செய்தியை வெளியிட்டுள்ளன.

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் தனது தோழியான மிடில்டனை கடந்த ஏப்ரல் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதிக பொருட்செலவில் நடந்த அந்த திருமணத்தின் போது, மணமக்கள் அணிந்திருந்த அலங்கார உடை மிகவும் பிரபலமடைந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக அந்த ஆடைகள், லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதிலும் இளவரசி மிடில்டனின் உடையை காண பார்வையாளர்கள் அதிகளவில் வந்து சென்றதாக தெரிகிறது.

கடந்த ஜூலை 23ம் தேதி முதல் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், மிடில்டன் அணிந்திருந்த திருமண ஆடையை பொதுமக்கள் பார்த்து ரசித்துள்ளனர். அந்த செய்தியை பிரிட்டன் அரண்மனை வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. பார்வையாளர்களிடம் வசூல் செய்யப்பட்ட கட்டணம் மட்டுமே சுமார் 60 கோடி ரூபாய் வசூலை அள்ளி தந்துள்ளது.

இந்த உடைகளின் விலை மட்டுமே சுமார் 1 கோடி ரூபாய். பார்வையாளர்களில், பெரியவர்களுக்கு 1,300 ரூபாயும், சிறுவர்களுக்கு 780 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அரண்மனைக்குள் இதுவரை 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து சென்றுள்ளதாக தெரிகிறது. இதுமேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், திருமண நாளில் மணமக்கள் அணிந்திருந்த வைர நகைகள், காலணிகள், வைர காதணிகள், ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வில்லியம்ஸ்-மிடில்டன் திருமணக் கோலத்திலுள்ள பொம்மைகளும் லண்டனில் அதிக அளவில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ் தமிழ்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2