Friday, September 30, 2011

என்னால முடியாது! பாப்பா மலர்


என்னால முடியாது!

காலை வேளை! ஏய் சுதா! அங்க என்ன பண்றே? இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வை! வா இங்க வேலை நிறைய இருக்கு! சதா புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா எல்லா வேலையும் ஆகிடுமா? என்று குரல் கொடுத்தாள் சுதாவின் தாய் விஜயா.
   “என்னால முடியாது! ரமா என்ன பண்றா? அவளை கூப்பிட்டு கழுவச் சொல்லு! இந்த வேலையெல்லாம் எனக்குத் தெரியாது! பிடிக்கவும் பிடிக்காது! என்று மறுத்தாள் சுதா.
   ஆமா! வேலைன்னாலே உனக்கு கஷ்டமா இருக்கு! இந்த வயசுல கத்துகிட்டாத்தானே நாளைக்கு உதவும். எல்லா வேலையும் ரமாவே செஞ்சிகிட்டு இருந்தா நீ எப்ப கத்துக்கிறது? முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும் போகபோகப் பழகிடும். வாம்மா! சுதா கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா!
      அதெல்லாம் முடியாது ரமாவை கூப்பிட்டுக்க நான் காமிக்ஸ் படிச்சிகிட்டு இருக்கேன் என்று கதை புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.
   அவ தண்ணி கொண்டு வர போயிருக்கா! உன்னால முடியுமா முடியாதா? அம்மா கத்த என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்லே ஏன் தொந்தரவு பண்றே? என்று மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.
   பாவம் ரமா அவளையே எவ்வளவு வேலை வாங்கறது அவ தண்ணி எடுத்து வர போயிருக்கா! ஒரு நாளாவது நீ எடுத்து வந்திருக்கியா அட்லீஸ்ட் ஒரு குடமாவது! ஆனா வீட்ல நீதான் அதிக தண்ணி செலவழிக்கிற ஆளு! நேரம் ஓடுது கொஞ்சம் ஹெல்ப் பண்ணாத்தான் என்ன?
   அதெல்லாம் எனக்குத் தெரியாது! நானா அவளை தண்ணி கொண்டு வரச் சொன்னேன். அவளாலே முடியலைன்னா முடியலைன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே!
 இனி இவளோடு பேசிப் பயனில்லை என்று தானே பாத்திரம் கழுவி முடித்தால் தாய். இவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது எனவும் யோசிக்க ஆரம்பித்தாள்.
   மறுநாள் காலை சுதா பள்ளிக்குச் செல்ல குளித்துவிட்டு ஆடைகளை எடுத்தாள் அவை துவைக்கப் படாமல் அழுக்காக இருக்க அம்மா ட்ரெஸ்ஸ துவைக்கலையா? என்றாள்.
   என்னால முடியாதும்மா இனி உன் டிரெஸ் துவைக்க! நேத்து நீதானே சொன்னே? முடியலைன்னா முடியலைன்னு சொல்லிட்டுப் போன்னு! அதான் துவைக்க முடியலைம்மா சொல்லிட்டேன் என்றாள் தாய்.
   கண்களில் நீர் மல்க அழுக்கடைந்த துணியை போட்டுக் கொண்டு ரமா தலையை வாரி விடேன் என்றாள்  ஐயையோ என்னால முடியாதும்மா! எனக்கு கையெல்லாம் வலிக்குது என்றாள் ரமா.
  வேறு வழியின்றி தானே பின்னிக் கொண்டு அழுக்கான டிரெஸ்ஸோடு பள்ளிக்கு சென்றாள் சுதா. அங்கே அழுக்கு துணிபோட்டு வந்ததால் வெளியே நிறுத்தினர். மதிய உணவு இடைவேளையில் தன் பையில் டிபன் பாக்ஸை தேடிய சுதா அதிர்ந்தாள்.
  அங்கு டிபன் பாக்ஸ் இல்லை! வழக்கமாக அம்மாதான் பையில் வைப்பது இன்று வைக்கவில்லை போலும் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மாலையில் சோர்வோடு வீடு திரும்பியவள் அப்படியே படுக்கையில் விழுந்தாள்.
   அப்போது அங்கு வந்த அவள் தாய் சுதா! ஒரு நாள் எங்க உதவியில்லாம உன்னால சமாளிக்க முடியலை பார்த்தியா? நானும் ரமாவும்தான் உன்னோட வேலையெல்லாம் பார்த்து பார்த்து செய்யறோம். பதிலுக்கு ஒரு சின்ன உதவி கேட்டாலும் நீ செய்ய மறுக்கிறே? உன் வேலைகளோட வீட்டு வேலைகளையும் செய்யற எங்களுக்கு நீ இந்த சின்ன உதவி கூட செய்யலைன்னா எப்படி? நாங்க உன்னோட வேலைகளை செய்யாத போது உன் கதி என்னாச்சு பார்த்தியா? இது போல வீட்டு வேலைகளை செய்யாம விட்டா வீட்டோட கதி என்னாகும்னு யோசிச்சுப் பார்! அழாதே வா சாப்பிடலாம் காலையில சாப்பிட்டவள் ரொம்ப சோர்வா இருக்கே! என்று அவளை வருடிக் கொடுத்தாள் அந்த தாய்.
   அம்மா என்னை மன்னிச்சுடும்மா! இனி கட்டாயம் வீட்டு வேலைகளில் என்னோட பங்கும் இருக்கும் என்று அன்னையை அணைத்துக் கொண்டாள் சுதா.

அறவுரை!

ஏலாதி

இடர்தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறும்சொல் காணின் கல்வியின்கண்
விண்டவர் நூல் வேண்டா விடும்.


விளக்கம்}   பிறர் துன்பம் நீக்குதல் மற்றவரை இகழாமை கீழ்மக்களுடன் சேராமை பசித்துண்பம் நீக்குதல் தீய ஒழுக்கத்தை கைவிடல் பழகுபவர் விரும்பும் சொற்களை பேசுதல் எனும் இவ்வாறு பழக்கங்களை மேற்கொள்பவன் கற்றவருக்கு நிகரானவன் ஆவான்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் பானு அதையா.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Thursday, September 29, 2011

ஹை! ஹைக்கூ! 2

வானம் வரையும்
வரைபடம்
மின்னல்!

அதிகாலையிலும்
வியர்த்தன புற்கள்
பனி


பின்னிரவில்
எங்கோஒலிக்கும் பாடல்
தாலாட்டு!

விரட்ட விரட்ட
விடாமல்துரத்துகிறது
காய்ச்சல்!


கைகால்களை உடைத்தும்
சிரித்துக் கொண்டிருந்தார்
பிள்ளையார்.

மழை
பூமிக்கு குடை
காளான்கள்
 

பரபரப்பான உலகில்
அமைதியாய் நின்றது
சிலை
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

பல்லாவரத்தில் நள்ளிரவில் உலா வந்த "பேய்': அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

குறி சொல்பவரின் பேச்சை கேட்டு, பல்லாவரம் மார்க்கெட்டில் இளம்பெண் நிர்வாணமாக சென்றார். அவரை, "பேய்' என நினைத்து பலரும் அலறி அடித்து ஓடினர். துணிச்சல்கார இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண்ணுக்கு உடை அளித்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்.

நேற்று முன்தினம் நிறைந்த அமாவாசை. இரவு 1 மணிக்கு சென்னை பல்லாவரம் பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஜீப்பில் ரோந்துப்பணியில் இருந்தார். பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அங்கிருந்து மிகுந்த பதட்டத்துடன் நால்வர் ஓடிவந்தனர்.ஜீப்பை பார்த்ததும் நின்ற அவர்கள் இன்ஸ்பெக்டரிடம்,"" சார் மார்க்கெட்டில் தலைவிரி கோலத்துடன் பேய் உலா வருகிறது,'' என்று கூறினர். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், அவர்களை போகச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேய் வந்ததாக கூறிய மார்க்கெட் பகுதியில் தன் ஜீப்பை செலுத்தினார்.

தொடர்ந்து, சென்றபோது, தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்ததுடன், நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச்சை எடுத்து, கால் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார். அப்போது தான், அது பேயல்ல... இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து வருகிறார் என்பது புரிந்தது.

உடனடியாக, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அங்கிருந்த பெண் போலீசாரிடம், அவர்களது மாற்று உடையை எடுத்து வருமாறு கூறினார். அவர்களும் உடனே, உடையுடன் ஜீப்பில் வந்திறங்கினர். போலீசை பார்த்ததும் அந்த நிர்வாணப் பெண் அங்கிருந்து ஓடினார். அரை கிலோமீட்டர் விரட்டி, பல்லாவரம் மார்க்கெட் அருகிலேயே மடக்கிப் பிடித்து, அப்பெண்ணுக்கு உடைகளை மாட்டி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த பெண், அப்பகுதியில் ஒருவரை காதலித்துள்ளார். நன்றாக பேசிக் கொண்டிருந்த காதலன், திடீரென கம்பி நீட்டிவிட, அவனை மறக்கமுடியாத நிலையில், அங்குள்ள குறிசொல்லும் சாமியார் ஒருவரை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர், "நிறைந்த அமாவாசை இரவில், குளித்துவிட்டு, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈர உடலுடன் ஊரைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும்' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அப்பெண், திருவண்ணாமலையிலேயே அப்படி செய்தால், ஊருக்கு தெரிந்து விடும் என்று, பம்மலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கியவுடன், 11 மணிக்கு குளித்துவிட்டு, ஈரஉடையுடன் பொழிச்சலூர் - பம்மல் சாலையில் நடந்து வரும்போதே, உடைகளை ஒவ்வொன்றாக களைந்துள்ளார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து, நிர்வாணமாக பல்லாவரம் வந்ததாக தெரியவந்தது.

பின்பு பல்லாவரத்தில் இருந்து, குரோம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து, நேற்று காலை மீண்டும் விசாரித்தபோது, இது போன்று ஊர்வலமாக போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசி சேர்த்து வைப்பார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.இதையடுத்து, போலீசார் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிக்கு தகவல் அளித்தனர். அவர்கள், இப்பெண்ணை ஏற்க மறுத்ததால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

""பேயென்று நினைத்து அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியதால் பரவாயில்லை; பெண்ணென்று தெரிந்திருந்தால்... நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் அரங்கேறியிருக்குமே'' என்று வருத்தப்பட்டார் பெண் காவலர் ஒருவர்.

நன்றி தினமலர்

கேட்பவர் இதயத்தை நொறுங்க வைக்கும் கள்ளக்குறிச்சி ஆசிரியைகளின் பாலியல் அத்துமீறல்கள்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட இரு ஆசிரியைகள் குறித்து அந்த சிறுமி கூறியதைக் கேட்கும் போது காது கூசிப் போய் விடும். அந்த அளவுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் இரு ஆசிரியைகளும் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கொதிப்படைய வைப்பதாக உள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில்உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர்.

இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர்.

அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்து அவர்கள் இரு ஆசிரியைகளையும் வீடு புகுந்து தாக்கினர். இதில் போர்ஷியா படுகாயமடைந்தார். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைக் கைது செய்யாமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அடைந்தது. அங்கு காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இதையடுத்து சுதாரித்த போலீஸார் லசி போஸ்கோவைக் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்தவரான போர்ஷியா தனது ஊருக்கு ஓடி விட்டார். முன்ஜாமீனும் வாங்கி விட்டார். அதேபோல லசி போஸ்கோவும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். லசி கடலூர் கோர்ட்டிலும், போர்ஷியா கள்ளக்குறிச்சி கோர்ட்டிலும் தினசரி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த இரு ஆசிரியைகளும் செய்த செயல்களை சிறுமி ஷாலினி தனது தந்தையிடம் கூற அதை அவர் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதைப் பார்க்கும் யாருக்கும், அந்தக் குழந்தை கூறியதை கேட்கும் யாருக்குமே இதயம் அடைத்துப் போய் விடும். அதில் கூறப்பட்டுள்ள செய்கைகளை அச்சில் ஏற்ற முடியாது. அந்த அளவுக்கு இரு ஆசிரியைகளும் மிகவும் அநாகரீகமாக அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களின் செய்கையால் குழந்தை ஷாலினி மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளாள். அதிலும் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறை என்று ஆசிரியைகள் கூறியது அவளது மனதிலிருந்து இன்னும் விலகவில்லையாம். இதனால் பள்ளியிலிருந்து ஷாலினியை நிறுத்தி விட்டனர் சுரேஷ் தம்பதியினர்.

அதற்குப் பதிலாக தனது மகளுக்கு வீட்டிலேயே சிடிக்களைப் போட்டு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் சுரேஷின் மனைவி. மேலும் குழந்தையை சரளமாக, இயல்பு நிலைக்குக் கொண்டு சுரேஷும், அவரது மனைவியும் தீவிரமாக முயன்று வருகின்றனராம். அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் ஷாலினியைச் சேர்க்கவுள்ளார் சுரேஷ்.

இந்தக் கொடூரச் செயலை செய்த இரு ஆசிரியைகளும் திருமணமானவர்கள், குழந்தைகளும் உள்ளனர். ஆனால் சிறுமி ஷாலினியிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் கள்ளக்குறிச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு தற்போது போயுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி இந்த இரு ஆசிரியைகளால் பாதிக்கப்பட்டோர் குறித்த முழு விவரம், ஆசிரியைகளின் பின்னணி, குறிப்பாக போர்ஷியாவின் பின்னணி உள்ளிட்டவை குறித்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தட்ஸ் தமிழ்

Wednesday, September 28, 2011

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

சென்னை :தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:கல்வி கற்கும் முறை மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்களை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தும் வகையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள தேர்வு முறை, மானப்பாடம் செய்து எழுதும் வகையில் உள்ளது. வகுப்புகளில் படிப்பதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து செயல்படும் வகையில் இல்லை. கேள்வித்தாள்களும், பாடங்களுக்கும் அப்பாற்பட்டு அவர்களை சிந்திக்கவிடுவதில்லை.

எனவே, தேசிய கல்விக் கொள்கைபடி, பாடங்கள் மற்றும் பாடங்கள் அல்லாத உடற்கல்வி, ஓவியம் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய தேர்வு மதிப்பீட்டு முறையால், குழந்தைகளுக்கு அழுத்தத்தை குறைப்பதோடு அவர்களது தனித் திறனை வளர்க்க உதவும். இந்த மதிப்பீட்டு முறை, ஏற்கனவே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்திலும் தற்போதுள்ள தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றி, முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது அவசர, அவசியமாகிறது.

புதிய தேர்வு முறைப்படி, கல்வியாண்டு மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் செப்டம்பர் முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலம் மூன்றாவது பருவமாகும்.

ஒரு பருவம் முழுவதும் வகுப்பறைகளில் தேர்வு நடத்தி உடனடியாக மதிப்பீடு செய்வது . இது உடனடி மதிப்பீடு. பருவ இறுதியில் தேர்வு நடத்தி மதிப்பீடு செய்வது, மொத்த மதிப்பீடு என்ற வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் வகுப்பறை உடனடி தேர்வுகளுக்கு மொத்த மதிப்பெண் 40, பருவ இறுதியில் நடைபெறும் மொத்த தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 60. இரண்டு மதிப்பெண்களை கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். மொத்தம் 6 வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டு, இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள 4 தேர்வுகள் கணக்கில் கொள்ளப்படும்.பாடங்களுக்கும், பாடங்கள் அல்லாத உடற் பயிற்சி கல்வி உள்ளிட்டவற்றுக்கும் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல் 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12 மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும் வழங்கப்படும். புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.

வகுப்பறை தேர்வு மற்றும் பருவ இறுதி தேர்வு இரண்டையும் சேர்த்து மொத்த மதிப்பெண் 100 என நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். இதுபோன்று, ஒவ்வொரு பருவத்துக்கும் தேர்வு நடத்தப்பட்டு, கிரேடு வழங்கப்படும்.

இதில், ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ) கிரேடு திருப்தி இல்லை. இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்படும். ஒரு பருவத்தில் படிக்கும் பாடங்களை அடுத்த பருவத்தில் படிக்க தேவையில்லை.

கல்லூரிகளை போல, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு செமஸ்டர் முறை அமல்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வு முறை கல்வியாளர்கள் வரவேற்பு : ""தேர்வு முறையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். சி.பி.எஸ்.இ., திட்டத்தை பின்பற்றி தமிழக அரசு அறிவித்துள்ள தேர்வு மதிப்பீடு முறை வரவேற்கத்தக்கது,'' என, கல்வியாளர் சதீஷ் கூறினார்.

ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வரும், கல்வியாளருமான சதீஷ் கூறியதாவது:தமிழக அரசு பள்ளி தேர்வு மதிப்பீட்டு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். தொடர் மதிப்பீட்டு முறை என்பது வரவேற்கத்தக்கது. ஒரேயொரு தேர்வு முடிவை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவெடுப்பது முறையல்ல.மாணவர்களின் தேர்ச்சிக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளின் முடிவுகளை கருத்தில் கொள்வது சரியானது. மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒரு மாணவனின் கல்வித்திறனை மதிப்பிட முடியாது. சி.பி.எஸ்.இ., முறையை பின்பற்றி, "கிரேடு' முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.இவ்வாறு சதீஷ் கூறினார்.

நன்றி தினமலர்.

    டிஸ்கி}எப்படியோ பசங்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?

மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.

 நன்றி தினமலர்
  
                                                                                                    
  
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
 

Monday, September 26, 2011

மகாளய அமாவாசை


 
 

சூரியன் கன்னி ராசியில் புகும்போது (புரட்டாசி மாதம்) எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு செல்லும்படி உத்தரவிடுகிறார். அச்சமயம் நமது இறந்து போன பெற்றோர் அவர்களது பெற்றோர்களுடன் கூடி, நம்மைக் கண்டு ஆசிர்வாதம் செய்வதற்காக வருவார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை ஆகும். இதற்கு முன்னதாக வரும் பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை திதி) முதல், அமாவாசைக்கு அடுத்துள்ள பிரதமை வரை உள்ள நாட்கள் மகாளயபட்சம் எனப்படும். இந்த சமயத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பானி, மஹாபானி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.
மகிமை மிக்க மஹாளய புண்ணிய காலம்: பிதுர்களை வணங்கும் புண்ணிய காலம் மஹாளயபட்சம் ஆகும். இந்த நாட்கள் பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக் கப்படும். மகாளய கால  நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்கள் இந்த பட்சத்தின் பெருமையைப் போற்றிக் கூறியுள்ளன.  இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.  இந்த பதினான்கு நாட்களும் பிதுர்வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.
முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இல்லறத்தார் கடமைகளில் முதல் கடமையாக முன்னோர் வழிபாட்டைக் (தென்புலத்தார் வழிபாடு) குறிப்பிடுகிறார். திருமணத்தடை, புத்திரப்பேறு இன்மை, கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் என்று வாழ்வின் அனைத்து விதமான சிரமங்களையும் போக்கும் ஈடுஇணையற்ற பிதுர் வழிபாட்டினை இம்மஹாளய புண்ணிய காலத்தில் செய்து பயனுடையதாக்குவோம்.
அமாவாசையில் அன்னாபிஷேகம்: திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகாளய அமாவாசை தினத்தன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது. பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில்  எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள  அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
பலன்: இந்நாளில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும்.

நன்றி தினமலர்

உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ரத்தன் டாடா

லண்டன்: உலகின் செல்வாக்குமிக்கவர் பட்டியலில் இந்தியாவின் சோனியா காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லண்டனில் இருந்து வெளிவரும் நியூஸ்டேட்மேன் பத்திரிகை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் சக்திமிக்க முதல்நிலை மனிதர்கள் 50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 'மேடம் காந்தி' என்ற சிறப்புப் பெயரை அவருக்கு வழங்கியுள்ளது இந்தப் பத்திரிகை.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இடம்பெற்றுள்ளார். உலோகத் தலைவர் என்ற சிறப்புப் பட்டமிட்டு அவரை அப்பட்டியலில் சேர்த்துள்ளது நியூஸ்டேட்மென்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சல் மெர்கெல் உலகின் முதல் செல்வாக்கு மிக்கவராக பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான் ராணுவ தலைவர் அஷ்பாக் கியானிக்கும் இந்தப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

Sunday, September 25, 2011

என் இனிய பொன் நிலாவே!பகுதி 5

என் இனிய பொன் நிலாவே!
                       பகுதி 5
                                    “ப்ரியம்வதா”
முன்கதை சுருக்கம்}  மதுமிதா இக்கால இளைஞி.  இண்டர்வியு அட்டெண்ட் பண்ண அவளுக்கு உடனே வேலை வழங்கி ஆச்சர்யம் கொடுத்த அபிஷேக் அவளை விரும்புவதாக கூறுகிறான். அதை மறுத்து பஸ் ஏறிய மதுமிதா பர்ஸை தொலைத்துவிட கண்டக்டர் கீழே இறக்கிவிட்டார்.
இனி}
       கையில் பர்ஸுடன் புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த அபிஷேக்கை பார்த்ததும் ஆத்திரமாக வந்தது மதுவிற்கு இது இவன் வேலைதானோ? ஆளைப் பார்த்தால் டீசண்டாய் இருந்துகொண்டு இந்த வேலையா செய்கிறான்? என்று நினைத்தவள் மறுகணம் நாக்கை கடித்துக் கொண்டாள். ஒரு மல்டி லெவல் நிறுவனத்தை நடத்தும் அவன் இந்த கேவலமான் வேலை செய்ய மாட்டான் என்று நினைத்துக் கொண்டு ஆனாலும் அவன் மனதை நோகடிக்க வேண்டுமென்றே கேட்டாள்.
    இந்த வேலை எத்தனை நாளாய் நடக்கிறது! கம்பெனி நிலவரம் சரியில்லையோ? என்றாள் நக்கலாக.
   ஒரு கணம் அப்படியே இறுகிப் போன அபிஷேக் சட்டென இயல்புக்கு வந்து உனக்கு எல்லாவற்றையும் தவறாக நினைப்பதே வேலையாகிவிட்டது மது என்றான்.
   நான் அப்படி என்ன தவறாக நினைத்து விட்டேனாம்?
  இப்போ நீ என்னை பார்த்து கேட்டது சரியான கேள்வியா?
 பின்னே என்னுடைய தொலைந்து போன பர்ஸ் உங்களிடம் இருந்தால் பின் எப்படிக் கேட்பதாம்? என்றாள் மது.
பெண்புத்தி பின் புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது! எந்த திருடனாவது திருடிய பொருளை திருட்டுக் கொடுத்தவரின் முகத்தின் எதிரில் காட்டுவானா? என்று மடக்கினான் அபிஷேக்.
  அ. அ..அது வந்து..
  என்ன வந்து போயி ! இப்போதாவது ஒரு சாரி கேட்டால் என்ன உன் அக்கவுண்டில் பணமா குறைந்து போய்விடும் என்றான் அபிஷேக்.
   எதற்கு நான் சாரி கேட்க வேண்டும்?
என்னை தவறாக எண்ணியதற்கு!
 நீங்கள் தவறு செய்ய வில்லை என்று என்ன ஆதாரம்?
அம்மணி போட்டு வறுத்து எடுக்காதே நீ சாரி கேட்காவிட்டால் போகிறது நடந்தது இதுதான்.நீ என்னிடம் கோபமாக பேசிவிட்டு உன் கைப்பையை எடுக்கும்போது அதனுடன் வெளியே வைத்திருந்த பர்ஸ் நழுவி உள் பக்கமாக விழுந்துவிட்டது.
  கடைசிப்பந்தி கவனித்து எடுத்துக் கொடுத்தான். உங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்களே ஒர் பெண் அதான் சார் உங்கள் சினேகிதியாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஜெய்ஹோ கேட்டார்களே அவர்களுடைய பர்ஸ் அவசரத்தில் விட்டுப் போய்விட்டார்கள் நீங்கள் கொடுத்துவிடமுடியுமா என்று கேட்டான்.
   அவனே உன்னை என் சினேகிதி என்று சொல்லிவிட்டான் மறுத்தால் நன்றாக இராது நீ என்னுடைய சினேகிதியாக இல்லாவிட்டாலும் ஸ்டாப் உன்னுடைய பொருளை உன்னிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதல்லவா? என்றான் அபிஷேக்.
   என்னது நான் உங்கள் சினேகிதி என்றா சொன்னான்?
 ஐயோ தெரியாமல் சொல்லிவிட்டான் விடேன். நீ என் சினேகிதி இல்லாமல் வேறு எவளோ ஒருத்தியாக கூட இருந்து தொலையேன்! இந்தா முதலில் இந்த பர்ஸை பிடிக்கிறாயா? என்று பர்ஸை நீட்டினான் அபிஷேக்.
பர்ஸை வாங்கிக் கொண்ட மது பிரித்து உள்ளே செக் செய்ய நான் அனாவசியமாக யாருடைய பொருளையும் உரிமை கொண்டாடுவது இல்லை என்றான் அபிஷேக்.
 இருக்கட்டுமே! ஆனால் நான் என்னுடைய பொருளை சரிபார்த்து வாங்கும் பழக்கம் கொண்டவள் இதில் அனாவசியமாக யாருடைய பொருளாவது இருந்துவிட்டால்? என்றாள் மது.
  நியாயம் தான் என்று ஒத்துக் கொண்டவன் மது நேரமாகிவிட்டது. உன்னுடைய வீட்டில் கொண்டு விடுகிறேன். யாரோ முன் பின் தெரியாதவன் அல்ல அழைப்பவன். உன்னுடைய வருங்கால.. இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்திய அபிஷேக் உன்னுடைய வருங்கால முதலாளி நான் அழைக்கிறேன். என்னுடன் காரில் வருகிறாயா? என்றான்
    அவன் அவனுடைய வேலைகளை பார்த்து செல்லலாம் ஆயிரத்தெட்டு வேலைகள் அவனுக்கு குவிந்து கிடக்கும் ஆனால் அதையெல்லாம் விட்டு இவள் பின்னால் சுற்றிக் கொண்டு இவள் விருப்பத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றானே ஒரு வேளை நிஜமாகத்தான் காதலிக்கின்றானோ! இல்லை இல்லை இது நமக்கு சரிபட்டு வராது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மது.
   என்ன மது யோசிக்கிறாய்? நான் வேறு யாரோ அல்ல  உன் முதலாளி! நாளை நீ என்னுடைய பர்சனல் அஸிஸ்டெண்டாய் பொறுப்பேற்றால் இதே போல் என்னுடன் பல இடங்களுக்கும் காரில் வர வேண்டியிருக்கும். மேலும் நீ தைரியசாலியான பெண்தானே நான் என்ன உன்னை கடித்தா தின்று விடப் போகிறேன் நான் ஒன்றும் அசைவப் பிராணிஅல்ல என்றான் அபிஷேக்.
   நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் இப்போது நான் உங்கள் காரிய தரிசி அல்லவே! திடீரென்று காரில் சென்று இறங்கினால் என்னுடைய தெருவே என்னை தப்பாக பேசும். அதனால் தயவு செய்து நீங்கள் கிளம்புகிறீர்களா என்றாள் மது.
   அப்புறம் உன் விருப்பம்! என்னுடன் வந்தால் ஜெய்ஹோவையும் கேட்ட மாதிரி இருக்கும் வீட்டிற்கும் நேரத்திற்கு சென்றமாதிரி இருக்கும் என்று சொல்லவந்தேன்.
  உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி சார்! ஆனால் நான் பஸ்ஸில் போய் கொள்கிறேன் என்று அருகில் இருந்த பஸ் நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மதுமிதா.
   மது அட்லீஸ்ட் நான் உன்னை பஸ் ஸ்டாப்பிலாவது டிராப் பண்ணுகிறேனே என்றான் அபிஷேக்.
  இனியும் மறுத்தால் நாகரீகமாக இருக்காது என்று சரி விடமாட்டீர்கள் போலிருக்கிறதே என்று காரில் ஏறினாள் மதுமிதா.
   காரில் ஏசியின் காற்று மிதமாக இருக்க ஸ்டீரியோவைத் தட்டினான் அபிஷேக். ஜெய்ஹொ பாடல் ஒலிக்க அதில் மூழ்கினாள் மது. அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை! ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அவர்களை கட்டி போட்டிருந்தார்.
பஸ் நிறுத்தம் வர ஓரம் கட்டி நிறுத்தினான் அபிஷேக் . மது இறங்க கார் கதவை திறந்தாள். அச்சமயம் ஜீன்ஸும் தொப்புள் தெரிய ஸ்லிவ்லெஸ் டாப்ஸும் அணிந்த பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.
   அபி! அபிக் கண்ணா உன்னை எங்கேல்லாம் தேடறது உனக்காக நான் காத்துக் கிடக்க இந்த பிச்சைக்காரியை எங்கு பிடிச்சே! பணக்காரன் கிடைச்சா விடமாட்டாலுங்களே! ஏய் இன்னும் என்ன பார்த்துகிட்டு இறங்கி ஓடிப்போ! என்றவளை முறைத்தாள் மது.
    நிலவு வளரும்(5)

டிஸ்கி உடல் நலம் சரியில்லை மீண்டும் ஜுரம் வந்து விட்டது. அதனால் இன்று நிறைய பதிவிட முடியவில்லை! இந்த கதைக்கு பொருத்தமான படங்கள் இருந்தால் thalir.ssb@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவலாமே! நன்றி!
  தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Saturday, September 24, 2011

பெருமாளின் புண்ணிய மாதம்!

மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத்தில், "பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.
இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எம தர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்' என்பர்; "பட்சம்' என்றால், "15 நாட்கள்' எனப் பொருள்.
இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோதசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் செப்., 27) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும்.
ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது. தென்மேற்கு திசையை, "கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். இவரை, "கன்னி மூலை கணபதி' என்பர். சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பையில் உள்ள கன்னி மூலை கணபதி கோவிலைத் தரிசித்த பிறகே மலையேறுகின்றனர். ஏதாவது வேண்டுதல் வைத்து, மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும்.
நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்.,10) அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு <உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்., 24, அக்., 1, 8, 15) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு செப்., 28 - அக்., 5) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி யாகவும் வழிபடு கிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். இந்நேரத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பது சிறப்பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடு கின்றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில்களில், "பாரிவேட்டை' எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
முருகனுக்கும் இம்மாதத்தில் விழா <உண்டு. திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பாலபிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர்ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நடக்கும். அங்குள்ள காசி விஸ்வநாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம். இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.
***

தி. செல்லப்பா


நன்றி வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே! 

படம்

படம் 


“அந்த படத்தை இன்று எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தீர்மாணித்தேன்.ஆனால் மனசாட்சி பயமுறுத்தியது. வேண்டாம்டா யாராவது பார்த்துட்டா அசிங்கம். வெளியே நடமாட முடியாது” என்று பயமுறுத்தியது.
    ஆனால் சபலம் தட்டியது. அந்த படத்தில் வரும் காட்சிகளை பார்த்துவிட்டு நண்பர்கள் சொன்னபோது நாமூம் பார்க்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டியது மனசு. 
   டேய் சூப்பர்டா மாமு! அருமையா இருக்கு படம் கொடுத்த காசுக்கு குறைவே இல்லாம காட்டியிருக்காங்க! விட்டுறாத இன்னிக்குத் தான் கடைசி நாளாம். கண்டிப்பா போய் பார்த்துடு இதான் சான்ஸ் இல்லேன்னா டவுனுக்குத்தான் போய் பார்க்கணும் என்று ஆவலை வேறு தூண்டி விட்டனர்.
   சரி இன்று எப்படியாவது போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்து கிளம்பினேன். 
   வீட்டை விட்டு கிளம்பும் போதே எங்கேடா போறே? என்று அப்பாவின் குரல் என்னைத் தடுக்க தடுமாறினேன். இ.. கோயிலுக்கு! என்று திக்கி திணறி சொல்ல அதுக்கு எதுக்குடா வியர்த்து வழியறே? சரி போய்வா! என்று அவர் பாட்டுக்கு ஈஸிச் சேரில் சாய அப்பாடா என்று பெருமூச்சுடன் கிளம்பினேன்.
     தியேட்டருள் நுழைந்தேன். கூட்டம் அள்ளியது! இந்த படத்திற்கு இவ்வளவு கூட்டமா? இந்த படத்துக்குதாண்டா இப்ப மவுசு அதிகம் என்று மனது கூற கவுண்டரில் க்யுவில் நின்றேன். எல்லோரும் என்னையே வெறித்துப் பார்ப்பது போல ஓர் பிரமை.
  போஸ்டரில் அந்த காட்சி தெரிந்து எனது சபலத்தைத் தூண்டியது. போஸ்டரிலேயேஇப்படி அள்ளுதே திரையிலே எப்படி இருக்கும்? கற்பனை ஓடியது க்யுவில் நின்ற ஒரு சிறுவன் என்னை வெறித்துப் பார்த்தான். சின்ன பையன் தைரியமாக தனியாக வந்திருக்கிறான்.நாம் போய் நடுநடுங்குகிறோமே? துணிந்து கவுண்டரில்டிக்கெட் கொடுப்பவனும் மேலும் கீழும் பார்த்துவிட்டு டிக்கெட்டை கொடுத்தான்.
   தியேட்டர் உள்ளே சென்று அமர்ந்தேன். காட்சி ஆரம்பமாகியது. ஓர் சூனியக் கார கிழவி காலை அடுப்பில் விட்டு எரியச் செய்து சமையல் செய்ய விசில் சத்தம் காதைப் பிளந்தது .என்ன வாசகர்களே எதையோ எதிர்பார்த்து வந்தீங்களா?
   இது ஒரு மாயாஜாலப் படம் தான். எங்க வீட்டுல சினிமான்னாலே யாருக்கும் பிடிக்காது இந்தபடத்த பார்க்கத்தான் இப்படி கஷ்டப்பட்டு வந்தேன் உங்களையும் கஷ்டப் படுத்திட்டேன் ஐயையோ அடிக்க வராதீங்க பாஸ்!.


தங்கள் வருகைக்கு நன்றி! கருத்தினை இட்டு செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களிக்கலாமே!

Friday, September 23, 2011

சச்சின் பயந்தாங்கொள்ளி சோயப் அக்தர் தாக்கு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயப் அக்தர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்திய வீரர் சச்சின் மற்றும் திராவிட் பற்றி தெரிவித்துள்ள சில கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது பந்துவீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பீதியை அளித்தவர். ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கிய அக்தர் அணியில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை மையமாக கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை எழுதிய அக்தர் வெளியிட்டார். 'தங்கள் சர்ச்சைக்குரிய' (கான்ட்ரோவஸ்லீ யுவர்ஸ்) என்ற பெயரில் எழுதியுள்ள அக்தர் அந்த புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரை ஆட்டத்தில் பெரிய திறமைசாலிகள் என்று கூற முடியாது. அந்த 2 பேருக்கும் ஆட்டத்தில் சரியான துவக்கத்தை அளிக்கவோ, ஆட்டத்தை முடிக்கவோ தெரியாது.

சச்சின் எனது வேகபந்துகளை சந்திக்க பயந்தது உண்டு. இதை தெரிவிக்க நான் எதற்கு பயப்பட வேண்டும். சச்சின் மற்றும் திராவிட் ஆகிய 2 பேரும் அணியின் வெற்றிக்கு உதவும் வீரர்கள் என கூற முடியாது. பாலிவுட் நடிகரும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவருமான ஷாருக்கானிடம் எனக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தில் திருப்தியில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

ஆனால் அவரும், ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியும் சேர்ந்து என்னை சம்மதிக்க வைத்தனர். அதற்கு பின் அவர்கள் 2 பேரின் ஆலோசனையும் நான் கேட்கவில்லை, என கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து இந்திய வீரர் சச்சினிடம் கேட்டபோது, சோயப் அக்தரின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கருத்து தெரிவி்த்தால் எனது புகழுக்கு இழுக்காக அமையும், என்றார்.

டிஸ்கி} இது ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்று எடுத்துக் கொள்வோம். அக்தரின் பந்துகளை உலககோப்பை 2003ல் சச்சின் வெளுத்து வாங்கியதை அவர் மறந்திருக்கலாம் கோடானு கோடி ரசிகர்கள் மறக்கவில்லை! 

நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் இன்று துண்டு, துண்டாக பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பஸ் அளவு பெரியதாகும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.

அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும். இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் பாகங்கள் இன்று மதியம் முதல் நாளை காலை வரை வந்து விழும் வாய்ப்புள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் செயற்கைக்கோளின் பகுதிகள் வந்து விழலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய நிலவரப்படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் அதிகளவில் அண்டார்டிக்கா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் விழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடலில் தான் விழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஏற்கனவே தெரிவித்தபடி செயற்கைகோளில் இருந்த எரி பொருள் தீர்ந்துவிட்டதால் அதை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் இயலாத காரியம்.

இதுவரை செயற்கைக்கோள் தாக்கி யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் கடந்த 1997ல் ஒக்லாவைச் சேர்ந்த வில்லியமஸ் என்பவர் மட்டும் காயமடைந்துள்ளாக தெரிகிறது. செயற்கைக்கோள் ஒன்றின் சிறிய துண்டு அவரது தோளில் விழுந்ததால் காயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்

எழிலி! பாப்பா மலர்!

      எழிலி!

பவளபுரி என்ற ஊரில் பொன்னன் என்ற ஏழை விவசாயி வசித்துவந்தான். அவனது ஒரேமகள் எழிலி. எழிலி பெயருக்கேற்றபடி அழகானபெண். அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது என்பர். ஆனால் அழகும் அறிவும் இணைந்த ஆரணங்கு எழிலி.
   பொன்னனுக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம். அவனுக்கு சிறிதளவு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் பயிரிட்டு வாழ்க்கை நடத்திய அவனுக்கு கஷ்டகாலம் பிடித்துக் கொண்டது. அந்த வருடம் மழைப் பொய்த்தது. கதிரவன் காய்ந்தான். பயிர்களும் காய்ந்தன. ஏழை விவசாயி பொன்னனின் வயல்களும் காய்ந்து போயிற்று.
   அவன் சாப்பாட்டிற்கு என்ன செய்வான் பாவம்!அந்த ஊரில் பெரிய மனிதரான மகேந்திரனிடம் சென்று கடனுதவி கேட்டான். பெரிய மனிதர் என்ற போர்வையில் வாழும் மிருகம் மகேந்திரன். அவனுக்கு எழிலியை மணக்க வேண்டும் என்ற விருப்பம் வெறியாக மாறிக்கொண்டு இருந்த நேரமது.
   தூண்டிலில் விழுந்த மீனை விட்டுவிடுவானா மகேந்திரன். பொன்னா! நீ நேர்மையானவன் தான் எனக்குத் தெரியும் ஆனால் நான் அடமானம் இல்லாமல் கடன் தருவது இல்லையே?பாவம் உன்னை போன்ற நல்லவர்களுக்குத்தான் கடவுள் சோதனை செய்கிறார். உனக்கு உதவ வேணுமெனில் ஏதாவது அடமானம் வேண்டுமே! எனவே எதையாவது அடமானமாக எழுதிக் கொடு! கடன் தருகிறேன் என்றான்.
   பொன்னனுக்கு அடமானம் வைக்கக் கூடிய பொருள் எது என்று தெரியவில்லை! ஐயா! எனக்கு அடமானமாக வைக்கக் கூடிய பொருள் ஏதும் இல்லையே? என்றான். மகேந்திரன் உன்னுடைய வீடு இருக்கிறதே என்றான்.சரி வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டு கடன் தாருங்கள் என்றார்.
   மகேந்திரனும் அவ்வாறே வீட்டை அடமானம் வைத்துக்கொண்டு பணம் தந்தான். அந்த வருடமும் கடவுள் பொன்னணுக்கு கை கொடுக்கவில்லை! மீண்டும் வானம் பொய்க்க வயல் காய்ந்தது. பணம் கேட்டு மகேந்திரன் வந்தான். பொன்னன் வீட்டை தந்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
   தன்னுடைய வயலிலேயே சிறு குடிசை போட்டு வசிக்கலானான் பொன்னன். மீண்டும் பிழைப்புக்கு என்ன செய்வது மகேந்திரனிடம் சென்றான். இச்சமயம் அடமானமாக எதை வைப்பாய் என்றான் மகேந்திரன்.
   வயலை வைத்துக் கொண்டு பணம் தரும்படி கேட்டான் பொன்னன். மகேந்திரனும் கொடுத்து அனுப்பினான். மறுநாள் பொன்னண் வயலில் ஏர் உழும் சமயம் மகேந்திரன் வந்து தடுத்தான். என்னிடம் அடமானமாக வைத்த பொருள் இது. இதில் நீ ஏர் உழக் கூடாது. இது இப்போது என் பொருள். என்று தடுத்தான்.
   பொன்னனோ ஐயா இது தான் என் ஜீவனமே! இதையும் தடுத்தால் நான் பிழைக்க என் செய்வேன் என்றான். அதெல்லாம் எனக்குத்தெரியாது அடமானம் வைத்த பொருளில் அனுபவம் செய்ய விடமுடியாது என்றான். ஆனால் உன் கஷ்டம் தீர வேறு வழி கூறுகிறேன்.  உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்துவிடு உன் கடன் எல்லாம் தீர்ந்துவிடும் உனக்கு மேலும் பணமும் கொடுக்கிறேன் என்றான்.
     ஐயா தங்கள் வயது என்ன? என் மகள் வயது என்ன? அவள் சிறியவள் இதை தவிர வேறு வழியே இல்லையா? என்றான் பொன்னன்.
உன் மகளை திருமணம் செய்து கொடுத்தால் கொடு இல்லையேல் இடத்தை காலி பண்ணு என்றான் மகேந்திரன்.
அப்போது அங்கு உடலெல்லாம் புண்ணாக தள்ளாடியபடி வயோதிகன் ஒருவன் வந்தான். இருவருக்கும் நடக்கும் விவாதத்தை கவனித்த அவன்,பொன்னனை அழைத்தான். ஐயா உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்.என்றான். இருவரும் அவனை வினோதமாக பார்த்தனர்.
   நீ யார் எங்கள் விஷயத்தில் குறுக்கிட என்றான் மகேந்திரன். நான் யாராக இருந்தால் என்ன? உனக்குத் தேவை பணம் தானே பொன்னன் வாங்கிய பணம் எவ்வளவு வட்டியோடு அதை திருப்பி தருகிறேன் என்றான் வயோதிகன்.
    இந்த எதிர்பாரா திருப்பத்தால் பேசமுடியாமல் பணத்தை வாங்கிக் கொண்டு இடத்தை காலி செய்தான் கிழவன். பொன்னன் வயோதிகரின் கால்களில் விழுந்து ஐயா உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்றான்.
    பின்னர் அந்த வயோதிகனை தன் இல்லத்தினுள் அழைத்துச் சென்றான். எழிலி வயோதிகணின் புண்களுக்கு மருந்திட்டு விசிறியால் விசிறி உபசாரம் செய்து உணவிட்டாள். அப்போது பொன்னன் ஐயா தாங்கள் செய்த உதவியை மறக்கமுடியாது தாங்கள் யார்? என்றான்.
   நான் யார் என்பதை இப்போது சொல்ல இயலாது. உன் மகள் செய்த பணிவிடைகள் எனக்கு பிடித்து விட்டது எனக்கு கைமாறாக உன் மகளை திருமணம் செய்து கொடுக்கிறாயா? என்றான் வயோதிகன்.
   இது என்ன புது பூதம் புறப்பட்டுவிட்டதே என்று பொன்னன் தயங்க அப்பா கவலைப் படாதீர்கள் இவரை நான் மணந்து கொள்கிறேன். அந்த வஞ்சகனை விட இந்த வயோதிகர் மேல்! மேலும் அழகு நிலையில்லாதது. அன்பே நிலையானது நான் மணப்பூர்வமாக இவரை மணக்க சம்மதிக்கிறேன் என்றாள்.
   இருவருக்கும் திருமணம் ஒரு கோயிலில் எளிமையாக முடித்து வழி அனுப்பினான் பொன்னன். இதை கேள்விப் பட்ட மகேந்திரன் என்னை மணக்காமல் அந்த கிழவனையா மணந்தாள் இப்போதே போய் அவனை அடித்துப் போட்டு அவளை தூக்கி வருகிறேன் பார் என்று கிளம்பினான்.
    எழிலியும் முதியவரும் சென்ற பாதையில் குறுக்கிட்டான் மகேந்திரன். ஏய் கிழவா அவளை மரியாதையாக என்னிடம் ஒப்படைத்தால் உயிர் பிழைப்பாய் என்று மிரட்டினான். இவள் என் மணைவி முடிந்தால் தொட்டுப் பார் என்று வீரம் பொங்க கூறினான் வயோதிகண். நீ என்ன ஒப்படைப்பது நானே எடுத்து கொள்கிறேன் என்று எழிலியின் கரம் பிடித்து இழுத்தான் மகேந்திரன். மறுகணம் அவன் தாடையை பலமாக தாக்கியது ஒரு கரம். அது வயோதிகணின் கரம் தான். அவன் இப்போது வாலிபனாக மாறியிருந்தான்.
   அவனது மந்திர உச்சரிப்பில் சேனைகள் குவிய மகேந்திரன் திக்கு முக்காடிப் போனான். ஆ இதென்ன மாயம் என்று தலை தெறிக்க ஓடிப் போனான். எழிலி வியந்து நிற்க எழிலி திகைக்காதே! நான் வனங்களின் அரசன் வனமாலிகாவின் புதல்வன் முகிலன். ஒரு சாபத்தால் கிழவனானேன். எவள் ஒருவள் என்னை மணப்பூர்வமாக மணக்க சம்மதிக்கிறாளோ அப்போதுதான் என் சாபம் விலகும். உன்னை மணக்க ஆசைப் பட்டேன். நீயும் என்னை மணப்பூர்வமாக விரும்பியதால் இந்த சாபம் நீங்கியது என்றான். உன் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. என் சாபமும் விலகியது என்றான் முகிலன்.
  அதன் பின் முகிலனும் எழிலியும் பல்லாண்டு காலம் சுகமாக வாழ்ந்தனர்.


அறவுரை!

நாலடியார்

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்ற செயினும் –உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வாந்தோய் குடிபிறந்தார்க்கு இல்.
                      சமணமுனிவர்கள்

விளக்கம்} தாம் செய்த உதவியை சிறிதும் எண்ணிப் பாராமல் தமக்கு மிகுதியான தீமைகளை செய்தாலும்  தாம் அவருக்கு திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி தவறியும் தீமை செய்ய மாட்டார்கள். யார் அவர்கள்? வானாளாவிய புகழ் கொண்ட குடியிலே  பிறந்தவர்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

பேச்சுக் கலையின் தந்தை டெமஸ்தனிஸ்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Thursday, September 22, 2011

கண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்

கல்வி அறிவு இல்லாதவரை கண்ணிழந்தோர் என வள்ளுவர் குறிப்பிடுவதில் இருந்தே கண்களின் அருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். உலகின் உள்ள அத்தனை அழகையும் நாம் பார்க்க உதவி புரிவது கண்களே. அந்த கண்களை காக்க நாம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளை பின்பற்றினால் கண்களை பாதுகாக்கலாம்.

கண்களைக் காக்கும் வைட்டமின் ஏ

கண்களுக்கு அத்தியாவசிய தேவை விட்டமின் ‘ஏ’. இதனால் கண்கள் பலத்தையும், நல்ல பார்வையையும் பெறும். விட்டமின் ‘ஏ’ எல்லாவித ஆரஞ்ச் / மஞ்சள் நிற காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கிறது. முக்கியமாக கேரட், ஆரஞ்ச், பரங்கிக்காய், மாம்பழம், பப்பாளி இவற்றில் விட்டமின் ‘ஏ’ உள்ளது.

பசலைக்கீரை, கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளது. மாமிச உணவில் மீன், லிவர், முட்டைகள் இவற்றில் விட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது.

விட்டமின் ‘ஏ’ வுடன் கூடவே விட்டமின் ‘சி’ யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விட்டமின் ‘சி’ கண்களில் கண்புரை வராமல் தடுக்கும். நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்ச், எலுமிச்சம்பழம், முட்டைக்கோஸ், குடமிளகாய் மற்றும் தக்காளியில் விட்டமின் ‘சி’ உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

திரிதோஷ கோளாறுகள்

கண் கோளாறுகள் உண்டாகும் காரணம் திரிதோஷ கோளாறுகள். வாததோஷத்தினால் கண்களைச் சுற்றி கருமை தோன்றும். ‘வறட்சி’ யினால் உலர்ந்து போகும். பித்ததோஷம் கண்கள் சிவந்து போதல், எரிச்சல் இவற்றை உண்டாக்கும். கபத்தால் கண்கள் அரிப்பு, நீர்வடிதல் போன்றவற்றை உண்டாக்கும்.

பழங்கள் காய்கறிகள்

தினசரி உணவில், பயத்தம் பருப்பு, முக்கிரட்டை கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, கேரட், ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பாகற்காய், புடலங்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது கண்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம்.

இது தவிர அரிசி, கோதுமை, பார்லி, பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, உளுந்து, சோளம் போன்ற உணவுகள் கண்ணுக்கு நன்மை தருபவை. வெந்தயம், வெந்தயக் கீரை, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, ஜீரகம், கருமிளகு, லவங்கம், கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் தவறாது உட்கொள்ள வேண்டும்.

பேரீட்சைப்பழம், அத்திப்பழம், மாதுளம்பழம், திராட்சை, இயற்கையாக பழுத்த மாம்பழம், ஆப்பிள், நெல்லிக்கனி, வாழைப்பழம், ஆரஞ்ச், கொய்யா, தக்காளி, கருப்பு திராட்சை, எலுமிச்சம்பழம், பப்பாளி, அன்னாசி, பலாப்பழம் முதலியவை கண்களுக்கு ஏற்றது.

எள் எண்ணெய், மீன் எண்ணெய், நதி மீன்கள், கோழி, சுறா மீன், ஆட்டின் ஈரல், முட்டை,

பசும் பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய், ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர், கிரீம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.

மூலிகை கஷாயங்களால் அடிக்கடி கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி, பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது கண்களுக்கு பாதுகாப்பானது என்கிறது ஆயுர்வேதம்.

எதை தவிர்க்க வேண்டும்

காராமணி, ராஜ்மா, சோயாபீன், முலாம்பழம், தர்பூசணி

செந்தூரகம் எண்ணெய், லின்சிட் ஆயில், பிரெட், பன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்

நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.

என் சாவுக்கு கூடும் கூட்டம்....

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்

நன்றி  தட்ஸ் தமிழ்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: இன்று துவங்குகிறது வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. திருச்சி மாநகராட்சியை தவிர, ஒன்பது மாநகராட்சிகளுக்கு முதல் கட்டமாக அக்டோபர் 17ம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

இதுகுறித்து, தமிழக தேர்தல் கமிஷனர் அய்யர், நிருபர்களிடம் நேற்றிரவு கூறியதாவது: தமிழகத்தில், ஒன்பது மேயர், 755 மாநகராட்சி வார்டுகள், 125 நகராட்சி தலைவர்கள், 3,697 நகராட்சி வார்டுகள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,470 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நகர் பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, வாக்காளர்கள் இரண்டு ஓட்டளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் நகர்ப்புற வாக்காளர்களுக்காக முதல்முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புற வாக்காளர்கள், மாவட்ட வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என, நான்கு பேரை தேர்வு செய்யவேண்டும். இதற்கு, ஓட்டுச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் கமிஷனர் கூறினார்.

100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடக்கும்: ""உள்ளாட்சி தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் இந்த நிமிடத்திலிருந்து (நேற்றிரவு 8 மணி) தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' அச்சடிக்கப்பட்டு ஓட்டுப்பதிவு தேதிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னரே, கொடுக்கப்படும். பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு தினத்தன்று, ஓட்டுச்சாவடிக்கு அருகே வழங்கப்படும். " பூத் சிலிப்'பை அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள் வழங்க அனுமதி இல்லை. பூத் சிலிப்பை வாக்காளர்கள் பெற்றுக் கொண்டதற்கு கையொப்பம் பெற்று, தனி பதிவேடு பராமரிக்கப்படும். பூத் சிலிப்பில், வாக்காளரின் புகைப்படம் இருப்பதால், ஓட்டுப்பதிவுக்காக, பிற ஆவணங்களை வாக்காளர்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர்களோடு, துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான வார்டு ஒதுக்கீடு, அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், தேர்தல் கமிஷனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மட்டுமே தேர்தல் கமிஷனின் பொறுப்பு. உள்ளாட்சி தேர்தலை 100 சதவீதம் நேர்மையாக நடத்த தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். 2006 உள்ளாட்சி தேர்தலை போல் அல்லாமல், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இவ்வாறு மாநில தேர்தல் கமிஷனர் கூறினார்.
திருச்சிக்கு தேர்தல் இல்லை! தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டபோது, திருவெறும்பூர் பேரூராட்சி அதோடு இணைக்கப்பட்டது. "மக்களின் கருத்தை அறியாமல், தன்னிச்சையாக அரசே இந்த முடிவை எடுத்துள்ளது' எனக் கூறி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், "திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது தவறு' என, ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதனால், திருச்சி மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடக்கவில்லை.
வேட்பு மனு தாக்கல் துவக்கம்: செப்., 22ம் தேதி
மனு தாக்கல் கடைசி நாள்: செப்., 29
மனு பரிசீலனை: செப்., 30
திரும்பப் பெற கடைசி நாள் : அக்., 3
ஓட்டுப் பதிவு: அக்., 17 மற்றும் 19
ஓட்டு எண்ணிக்கை: அக்., 21ம் தேதி

நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கான நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதனால், நான்கு விதமான ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

மொத்த ஓட்டுச் சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்

உள்ளாட்சித் தேர்தலில், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், ஓட்டுப் பதிவு, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரத்து, 518 ஓட்டுச் சாவடிகள், ஊரக பகுதிகளிலும், 25 ஆயிரத்து, 590 ஓட்டுச் சாவடிகள், நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 4,876 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை, இந்திய தேர்தல் கமிஷனிடம் பெற்று உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக தேர்தல் கமிஷன் தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து இந்தியாவிலேயே முதன் முதலாக ஆன்-லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

* மொத்தம், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
* இவர்களில், 2 கோடியே, 32 லட்சத்து, 98 ஆயிரத்து, 838 பேர் ஆண் வாக்காளர்கள். 2 கோடியே, 30 லட்சத்து, 37 ஆயிரத்துல 930 பேர் பெண் வாக்காளர்கள். இதர வாக்காளர்கள், 611
*'ஊரக பகுதிகளில், 1 கோடியே, 33 லட்சத்து, 18 ஆயிரத்து, 643 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே, 31 லட்சத்து, 24 ஆயிரத்து, 227 பெண் வாக்காளர்களும், 158 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 2 கோடியே, 64 லட்சத்து, 43 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர்.
* நகர்ப்புறங்களில், 1 கோடியே, 80 ஆயிரத்து, 195 ஆண் வாக்காளர்களும், 99 லட்சத்து, 13 ஆயிரத்து, 703 பெண் வாக்காளர்களும், 453 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 1 கோடியே, 99 லட்சத்து, 94 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான, "டெபாசிட்' தொகையை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

பதவி பொது எஸ்.சி., - எஸ்.டி.,
ஊராட்சி உறுப்பினர் 200 100
ஊராட்சித் தலைவர் 600 300
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 600 300
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000 500
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் 1,000 500
நகராட்சித் தலைவர் 2,000 1,000
மாநகராட்சி மேயர் 4,000 2,000
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் 500 250
நகராட்சி வார்டு உறுப்பினர் 1,000 500
மாநகராட்சி உறுப்பினர் 2,000 1,000

தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்ணிக்கை விவரம்: நகர்புற உள்ளாட்சிகளில் 663 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 2,046 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 915 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 17 ஆயிரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஐந்து அலுவலர்கள் வீதமும், கிராமப்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஏழு அல்லது எட்டு அலுவலர்கள் வீதமும், 6 லட்சத்து 30 ஆயிரம் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓட்டுப்பெட்டிகளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும்: இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவிற்கு ஊரகப் பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகளும், நகர்புற பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தேர்தலுக்கு, 2 லட்சத்து 39 ஆயிரம் ஓட்டுப்பெட்டிகளும், 80 ஆயிரத்து 500 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

வேட்பாளர்கள் செலவு எவ்வளவு? வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, மாநிலத் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. "தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தேர்தல் அலுவலரிடம் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்க தவறுபவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பதவி செலவு(ரூபாயில்)
ஊராட்சி வார்டு உறுப்பினர் 3,750
ஊராட்சி தலைவர் 15,000
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 37,500
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 75,000
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் 56,250
முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி தலைவர் 1,12, 500
தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி தலைவர் 2,25,000
மாநகராட்சி மேயர் 5,62,500
சென்னை மாநகராட்சி மேயர் 11,25,000

நன்றி தினமலர்
Related Posts Plugin for WordPress, Blogger...