ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர்

ஈரோடு: நாடு முழுவதுமாக சில்லரை தட்டுப்பாட்டால், மக்கள் அவதியுறும் நிலையில், ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மாற்றித் தருவதன் மூலம், ஓரளவு சில்லரை தட்டுப்பாடு நீங்குகிறது. எனினும், வர்த்தக நிறுவனங்கள் முதல், பஸ், ரயில்கள் வரை, சில்லரை தட்டுப்பாடு பிரச்னை, பெரிய தகராறாக மாறி விடுகிறது. ஈரோடு கடைகளில், ஒரு ரூபாய் நாணயம் மொய் கவரின் உட்பகுதியில் ஒட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. திருமணம், காது குத்து, சீர் உள்ளிட்ட விசேஷங்களில் மொய் வைக்க, பணத்தை கவரில் வைத்து கொடுப்பது வழக்கம். பலரும், 101 ரூபாய், 201 ரூபாய், 501 ரூபாய்... என, எவ்வளவு தொகை வைத்தாலும், அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதுபோன்ற சமயங்களில், ஒரு ரூபாய் நாணயம் கிடைப்பது அரிதாகி விட்டதால், கவர் தயாரிப்பு நிறுவனங்களே, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, கவரை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளன. ஸ்டேஷனரி,பேன்சி, கிப்ட் விற்பனை கடைகளில், இத்தகைய கவர் விற்கப்படுகிறது.

ஈரோடு கடைக்காரர் கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காகவே, ஒரு ரூபாய் நாணயம் வைக்கப்பட்ட மொய் கவர், விற்பனைக்கு வந்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு, இங்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய சாதாரண கவரை நான்கு ரூபாய்க்கும், பார்டர் வைத்து, குஞ்சம் வைத்த கவரை ஆறு ரூபாய்க்கும் விற்கிறோம். 100 கவர் கொண்ட கட்டு, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கவராக வாங்கினால் ஆறு ரூபாயாக விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!

Comments

  1. ஒரு வித்தியாசமான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ஓட்டுப் போட்டாச்சு .
    நம்ம கடப்பக்கமும் வாங்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete
  2. அம்பாளடியாள் said...

    ஒரு வித்தியாசமான தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ஓட்டுப் போட்டாச்சு .
    நம்ம கடப்பக்கமும் வாங்க நன்றி பகிர்வுக்கு ....

    நன்றி சகோதரி! அடிக்கடி உங்க கடைக்கு வருகிறேன் போதுமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!