ஓடிப்போயிடலாமா? சிறுகதை

ஓடிப்போயிடலாமா?

சென்னை மெரினாக் கடற்கரை.கதிரவன் தன் காதலியைத்தேடி மறைந்துக் கொண்டிருக்க கடலலைகளின் பேரிரைச்சல் அங்கு துள்ளிவிளையாடிய வாண்டுகளின் முன்னால் தோற்றுக் கொண்டிருந்தது. சுண்டல்காரர்கள் பிஸியாக தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என்று வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்க ஒர் படகு மறைவில் இளம் காதலர்கள் ரமேஷும் வந்தனாவும் அமர்ந்து இருந்தனர்.
   “என்ன ரமேஷ் பீச்சுக்கு வர்ச்சொல்லிட்டு பேசாம உட்கார்ந்திருக்கீங்க? என்ன விஷயம்? சொல்லுங்க!’ என்றாள் வந்தனா.
 ரமேஷ் சிறிது நேரம் மௌனித்து இருந்தான்.அவன் ஏதோ சிந்தனையாக இருக்க வந்தனா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
  “என்ன ரமேஷ் இது? இப்படி பேசாம உட்கார்ந்து இருக்கறதுக்காகவா பீச்சுக்கு கூப்பிட்டீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதாவது பேசுங்களேன்!”
  ரமேஷ் மெதுவாக சன்னமான குரலில் பேச ஆரம்பித்தான். “வந்தனா ஏன் இப்படி கத்தறே? இரு சொல்லிடறேன் எப்படி ஆரம்பிக்கிறதுன்னுதான் யோசிச்சிகிட்டு இருந்தேன்.நீதான் ரொம்ப அவசரப்படறியே”
 “ரமேஷ்! ஸ்டைட்டா விஷயத்துக்கு வாங்க! சுத்தி வளைக்காதீங்க!”
 “ஓகே! ஓகே! சொல்லிடறேன். எங்க வீட்ல எனக்கு பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.நேத்துக் கூட ரெண்டு மூணு ஜாதகம் வந்துது. எங்கப்பாவும் சில பொண்ணுங்களோட போட்டோக்கள குடுத்து எது பிடிச்சிருக்குதுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாரு”
“நம்ம காதல் விஷயத்தை உங்க பேரெண்ட்ஸ்கிட்ட சொல்ல வேண்டியது தானெ!”
“வந்தனா என்னை பத்தி உனக்கு தெரியுமில்ல இப்படி கேக்குற? எங்கப்பா ஒரு சத்தம் போட்டா அடங்கிப் போயிடுவேன். அவர்கிட்ட எப்படி சொல்லறது?”
“தைரியம் இல்லாதவங்க காதலிக்க கூடாது ரமேஷ்!”
ரமேஷ் வந்தனாவை முறைத்தான். “எனக்கா தைரியம் இல்ல வா நாம ரெண்டு பேரும் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிடலாம்.” என்றான்.
 வந்தனா கலகலவென சிரித்தாள். “அப்ப மட்டும் உங்கப்பா ஆசிர்வாதம் பண்ணிடுவாரா? பெத்தவங்க சம்மதமில்லாம கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்ல!” என்றாள்.
“அப்படின்னா நம்ம கல்யாணம் நடக்க வழியே இல்லை!”
“ ஏன் இல்லை ரமேஷ்! உங்கப்பா கிட்ட பேசுங்க! என்னை பத்தி எடுத்து சொல்லுங்க! நான் இல்லாம வாழமுடியாதுன்னு சொல்லி புரியவைங்க!”
“இதையெல்லாம் எங்க அப்பா ஒத்துக்கமாட்டார்.நாம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் பெஸ்ட்!”
“ஸாரி ரமேஷ்! எனக்கு இதில விருப்பம் இல்லை! தன் காதலை அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூட தைரியம் இல்லாத உங்கள காதலிச்சதை நினைச்சு வருத்தப் படறேன்! இத்தனை காலம் பெத்து வளர்த்தவங்களையே புரிஞ்சிக்க முடியாம காதலுக்காக ஏமாத்தலாம்னு சொல்ற நீங்க நாளைக்கு இடையில வந்த என்னை ஏமாத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? ஆணுக்கு அழகு தைரியம் அந்த தைரியம் உங்க கிட்ட இல்ல. தைரியம் இருந்தா உங்க அப்பா அம்மா சம்மதத்தோட வாங்க! இல்லயா உங்கப்பா பார்த்த பெண்ணை கட்டிகிட்டு சந்தோஷமா இருங்க! குட்பை!”
தன் புடவையில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டு தீர்க்கமான பதிலையும் சொல்லிவிட்டு சென்ற அவளையே பார்த்தபடி சிலையாக நின்றான் ரமேஷ்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2