ஆவி அழைக்கிறது! பகுதி 16

ஆவி அழைக்கிறது!
                            பகுதி 16
                                           எழுதுபவர் “பிசாசு”

முன்கதை சுருக்கம்| ஆழ்வார் குறிச்சியில் உள்ள தனது பங்களாவை சீர் படுத்த முயலும் தனவேலை அவரது பழைய காதலி பொன்னம்மாவின் ஆவி துண்புறுத்துகிறது. பொன்னம்மாவின் மகள் நிதிலாவை தனவேல் வளர்த்து வருகிறார். தான் பொன்னம்மாளின் மகள் என்றும் தன் அப்பா தனவேல் குற்றவாளி என்றும் அறிந்த நிதிலா தனவேலை வெறுக்கிறாள்.இனி
   யாருக்காக இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாரொ அந்த மகளே தன்னை வெறுத்து ஒதுக்குவதை தனவேலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏதோ வாலிப வயதில் பணத்திமிரில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக ஆடிவிட்டார்.அதுவும் பெற்றோருக்கு பயந்தே பொன்னம்மாளை கைவிடும் படி நேர்ந்து விட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. அதற்கு பிராயச் சித்தமாகத்தான் மகளை அனாதை ஆக்காமல் ஏற்று வளர்த்ததே. என்ன ஒன்று நிதிலாவை தன் மகள் பொன்னம்மா தன் பெண்டாட்டி என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மறுத்தார். அதற்கு அவரது செல்வச் செழிப்பும் பரம்பரை கவுரவமும் தடையாக வந்து நின்றது.
       எனவேதான் நிதிலாவை யாருமில்லாத அனாதையாக நிற்பவளுக்கு அடைக்கலம் கொடுப்பதாய் கூறி தத்து எடுத்து வளர்த்தார். கந்தனைக் கூட குழந்தையை தரவில்லை என்று கோபப் பட்டாரே தவிர கொல்லவில்லை. அவனேதான் பாம்பு கடித்து இறந்து போனான்.அது அவருக்கு வசதியாக போய்விட்டது. நிதிலாவை தன் மகள் என்று இன்றுவரை செல்லமாக ஒரு செல்வ சீமாட்டியாகத்தான் வளர்த்துவந்தார். அந்த மகள் இன்று கோபித்துக் கொண்டு தன் முகத்தில் விழிக்க மறுக்கிறாள் என்றால் அவர் மனம் பேதலித்து நின்றார்.
       மகளே எல்லாம் உனக்காகத்தான் ! ஆனால் நீயே என்னை வெறுக்கும் போது நான் எதற்கு வாழவேண்டும்? பொன்னம்மா சென்ற இடத்திற்கே சென்று விட வேண்டும் இந்த லோகத்தில் தான் அவளோடு வாழக் கொடுத்து வைக்க வில்லை ஆவியுலகிலாவது அவள் அருகில் வாழலாமே! அங்காவது அவள் மன்னித்து என்னை ஏற்றுக்கொள்வாளோ? என்று சிந்தித்த அவர் மனம் தற்கொலை செய்து கொள்ள தூண்டியது.
    வேகமாக அறைக்குள் சென்ற அவர் கதவை தாளிட்டுக் கொண்டார். மின்விசிறியில் கயிறை மாட்டி தனது கழுத்தில் கட்டிக் கொண்டவர் பொன்னம்மா இதோ வந்து விட்டேன் என்று நாற்காலியை உதறினார்.
   அதே சமயம் ஸ்ரீவத்ஸன் நிதிலாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.நிதிலா டோண்ட் கிரை மீ! இப்ப என்ன ஆகிப் போச்சு நீ உங்கப்பாவை வெறுக்க ஒரு காரணமும் இல்லை உங்கப்பா ஒரு சூழ்நிலைக் கைதி! அவரோட நிலைமையில அவர் செஞ்சதுதான் சரி. உங்கப்பாவோட கடந்த காலம் கசப்பானதுதான் ஆனா நிகழ் காலத்தில அவர் உன்னை எவ்வளவு அருமையா வளர்த்து ஆளாக்கியிருக்கார். இப்ப அவர் ரொம்பவே மாறிட்டார். அவர் செஞ்ச தப்பை உணர்ந்துதான் உங்கம்மாவை கூட்டிப் போய் கல்யாணம் பண்ண முடிவு செஞ்சு இருக்கார். ஆனா காலம் கடந்து போயிடுச்சு. அதுக்கு பிராயசித்தமாதான் உன்னை தன் கூட கூட்டிப் போய் வளர்த்ததே. உன் மேல உயிரையே வச்சு இருக்கார். நீ அப்படி சொன்னதும் அவர் முகம் பேயறைஞ்ச மாதிரி ஆயிடுச்சு அப்படியே பேதலித்து போய் நின்னுட்டார். இனியும் அவரை தண்டிக்கிறதுல நியாயமே இல்லை. வா.போய் அவரை பார்க்கலாம். என்றான் ஸ்ரீவத்ஸன்.
    ஸ்ரீவத்ஸன் நீங்க கூட என்கிட்ட உண்மையை மறைச்சிட்டீங்க இல்லே?
  சில கசப்பான உண்மைகள் நீயே தெரிஞ்சிக்கறதுதான் நல்லதுன்னு நான் நினைச்சேன்.அதனாலத்தான் சொல்லலை. சரி இப்ப இதை பத்தி பேச நேரமில்லை. வா இடிஞ்சி போயிருக்கும் உங்கப்பாவை என்னோட மாமாவை சமாதானப்படுத்துவோம் வா என்றான் ஸ்ரீவத்ஸன்.
     அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது வீடே களேபரமாக இருந்தது. நல்ல முத்து வாசலிலேயே நின்று கொண்டு என்ன பொண்ணும்மா நீ இப்படி பேசிட்டியே உங்க அப்பன் என்ன காரியம் பண்ணிட்டான் தெரியுமா?
   அப்பா அப்பாவுக்கு என்ன ஆச்சு?
உள்ளே போய் பாரு!
   நிதிலா வேகமாக தனவேலின் அறைக்குள் நுழைந்தாள். அங்கு தனவேலுக்கு முதலுதவி சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தது. அப்பா அப்பா என்னப்பா ஆச்சு  விம்மியபடி அவர் மேல் முகம் புதைத்தாள் நிதிலா.
      மகளே நிதிலா என்னை மன்னிச்சுடும்மா! என்று தொண்டை கமற கேட்டார் தனவேல். விடுங்கப்பா! அதை மறந்திடலாம் என்று நிதிலா கூறியபோது தனவேலின் முகம் மலர்ந்தது அவர் கண்கள் யாரையோ தேடியது ஸ்ரீ .. என்று நா குழற விளிக்க
இதோ இருக்கேன் மாமா என்று முன்னே வந்தான் ஸ்ரீவத்ஸன்.
   அவனதுகையை பற்றி நிதிலாவின் கையோடு இணைத்த தனவேல் அப்பா ஸ்ரீவத்ஸா இந்த பாவியை மன்னிச்சு இவளை ஏத்துக்கோ! இனி நீதான் இவளுக்கு எல்லாம் என் மகளை கண்கலங்காம காப்பாத்து! சந்தோஷமா இருங்க என்று சொன்ன அவர் உயிர் பிரிந்தது.
அப்பா என்று கதறி அழுதாள் நிதிலா. அப்போது ஒரு சூறாவளிக் காற்று அறையில் எழுந்தது. ஒர் உருவம் தோன்றியது. மகளே அழாதே உன் அப்பாவின் நேரம் முடிந்துவிட்டது. ஸ்ரீவத்சனோடு சுகமாக வாழ்! நானும் உன் அப்பாவும் ஆசைப்படுவது அது ஒன்றுதான் என்று கூறியது.

அடுத்த மூகூர்த்ததிலேயே நடத்திட்டாபோச்சு என்றார் நல்லமுத்து. பின்னர் நிதிலாவைப் பார்த்து என்னம்மா நான் சொல்றது சரிதானே? என்று கேட்க நிதிலா வெட்கத்துடன் தலை குனிந்தாள். என்னப்பா ஸ்ரீவத்ஸா என்றபோது அவன் தலையசைத்தான்.
 அடுத்த வினாடி கட்டிலில் இருந்து தனவேலின் உருவமும் எழுந்து பொன்னம்மாள் உருவோடு இணைந்தது. பின்னர் அந்த உருவங்கள் அங்கிருந்து அப்படியே பறந்துசென்றன.
  அடுத்த ஒர்நல்ல மூகூர்த்ததில் ஸ்ரீவத்ஸனும் நிதிலாவுக்கும் திருமணம் இனிதே நடக்க இந்த தொடர் சுபமாய் முடிகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்து இருந்தால் கருத்தினை இட்டுச்செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!