ஆவி அழைக்கிறது! பகுதி 15

ஆவி அழைக்கிறது!
                          பகுதி 15
                                    எழுதுபவர் “பிசாசு”

முன்கதை சுருக்கம்|  ஆழ்வார் குறிச்சியில் உள்ள தனது பங்களாவை சீர் படுத்த முயலும் தனவேலை அவரது பழைய காதலியின் ஆவியான பொன்னம்மா துன்புறுத்துகிறது இனி!
   தந்தை ஓட ஓட அந்த உருவம் விரட்ட ஒருவித வெறுப்புடன் நின்று கொண்டிருந்தாள் நிதிலா.
 தன் தந்தை இப்படி பட்டவரா? அவளால் நம்பவே முடியவில்லை. தலைசுற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு. இதென்ன இந்த பங்களா இவ்வளவு மர்மங்கள் நிறைந்த்ததாக இருக்கிறதே? தன் அப்பாவின் வாழ்க்கையும் மர்மங்கள் நிறைந்து கிடக்கிறதே பிறக்கும் போதே தாயில்லாமல் அவதி பட்டுள்ளேனே என பலவாறு குழம்பிக் கிடந்தாள் நிதிலா
   விடாதே அவனை விடாதடா தம்பி! விடாதே! என்று பொன்னம்மா ஆவி ஆக்ரோஷத்துடன் கத்த தம்பியா? என்று கேள்விக்குறியுடன் பார்த்தாள் நிதிலா.
     மகளே அவன் தான் என் தம்பி அவனையும் கொண்னு உன்னை அவன் கிட்ட இருந்து பிரிச்சவன் இந்தபாவி உங்கப்பன். பாவம் அவன் பெஞ்சாதி கைப்புள்ளயோட புருஷனை பறி கொடுத்துட்டு நின்னா ஆனா இந்த பாவி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம உன்னை பிரிச்சு எடுத்துகிட்டு போயிட்டான்.
    என்னை விட அவன் ஆக்ரோஷமானவன் என் தம்பி அவனை விடமாட்டான். டேய் தம்பி அவனை விட்டுடாதே!
   அந்த பேய் உருவம் பயங்கரமான கோரமுகம் கொண்டு தனவேலின் மேல் பாயத் தயாராக தனவேல் பொன்னம்மாளின் காலில் விழுந்தார்.
   பொன்னம்மா என்னை மன்னிச்சுடு என்னோட சூழ்நிலை என்னை அப்படி பண்ணிடுச்சு.நான் கிராதகன் தான் பாவிதான்.ஒத்துக்கறேன்.ஆனா உன் மகளை அதான் நம்ம மகளை இன்னிக்கு நல்லபடியா வளர்த்து இருக்கேன் உன் தம்பியால அது முடியுமா? இவளுக்காக நான் எவ்வளவு கெஞ்சினேன் உன் தம்பிகிட்ட ஆனா தர மறுத்துட்டான் அந்த கோபத்தில அவனை சாகடிக்கணும்னு போனேன் ஆனா நான் எதுவும் பண்ணலை! அவனா பாம்பு கடிச்சு செத்தான்.அந்த சூழ்நிலையை பயன் படுத்திகிட்டு குழந்தையை வாங்கிட்டு வந்துட்டேன் நான் செஞ்ச ஒரே தப்பு உன்னை காதலிச்சு கைவிட்டது தான் அது இன்னும் என் மனசை குத்திகிட்டு இருக்கு இப்பவும் நான் சாகத் தயாரா இருக்கேன் ஆனா அதுக்கு முன்னாடி என் மகளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்கணும்னு ஆசைப்படறேன் அதுக்குதான் இப்படி கெஞ்சறேனே தவிர எனக்கு வேற பயம் ஏதும் இல்லை. என்னை மன்னிச்சிடு பொன்னம்மா என்று கதறினார் தனவேல்.
 நிதிலா நீயும் என்னை மன்னிச்சிடு! என்று கரம் கூப்பி கேட்ட தனவேலை பார்க்க நிதிலாவுக்கு பரிதாபமாக இருந்தது.
   அந்த கோரப் பேய் இதனால் சமாதானம் ஆனது போல தெரியவில்லை! டேய் என்னடா செய்யறது எல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பு மத்தாப்புன்னு கேட்டுகிட்டு உன்னை இன்னிக்கு பலி போட்டுட்டுதான் மறு வேலை என்று ஆக்ரோஷமாய் தன் கோரைப் பற்கள் தெரிய சிரித்து வா தனவேலு வா! என்று அழைத்தபடி நெருங்கி வர ஆரம்பித்தது.
   தனவேல் சற்று தைரியம் அடைந்தார்.இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை எல்லாம் முடிந்து விட்டது. இதுவரை காத்துவந்த ரகசியமும் மகளுக்குத் தெரிந்து விட்டது இனி தன் மகள் கல்யாணம் ஒன்றுதான் பாக்கி ஆனால் அந்த கொடுப்பினை நமக்கு இல்லை போலும் என்று உணர்ந்தவராய் ஓடுவதை நிறுத்தி அப்படியே நின்றார்.
  கோரைப் பற்கள் தெரிய கண்களில் இரத்த வெறியோடு வந்த அந்த உருவம் தனவேலை இழுத்து கீழே போட்டு அவரது மார்பை கிழிக்க முற்பட்ட சமயம் அங்கே மணியோசை கேட்க சாம்பிராணி தூபம் மணக்க நம்பூதிரி உள்ளே நுழைந்தான்.
      டேய் மந்திர வாதி நீ இந்த விஷயத்தில் தலையிடாதே!
 தலையிட்டே ஆகவேண்டும் என்று எனக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதே என்றான் மந்திரவாதி சிரித்தபடி!
  யார் யாராடா அவன் என்னை மீறி உனக்கு உத்தரவு போடுவது அவனையும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்றது பேய்.
  முடிந்தால் பார்த்துக் கொள்!
மந்திரவாதி விலக அவன் பின்னால் ஸ்ரீ வத்ஸன்.
  அப்பா போதும் விட்டுடுங்க! இவர் திருந்திட்டார்! தன்னோட தவறுகளை உணர்ந்திட்டிருக்கார். மேலும் உங்களோட மரணத்துக்கும் அவர் காரணமில்லே! அவர் செஞ்ச ஒரே தப்பு அத்தையை கைவிட்டது தான். அதையும் சரி செய்ய அவர் முயற்சி பண்ணியிருக்கார். போதும் விட்டுடுங்க! ஸ்ரீ வத்ஸன் கூற
  முடியாது மகனே! உன்னை அனாதையா விட்டுட்டு போக காரணம் இந்த பாவி தான் இவனை நான் சும்மா விடமாட்டேன் அந்த உருவம் உறும
  அப்ப இவரை கொன்னு உங்க மருமகளை அனாதையாக்கிட போறிங்களா? ஸ்ரீவத்ஸன் கேட்க
  அந்த உருவம் அப்படியே அடங்கியது . பறவைகளின் கீச்சொலி கேட்க ஆரம்பிக்க பொழுது புலரத் தொடங்கிய அறிகுறி தென்பட இரண்டு பேய்களும் காணாமல் போயின.
   நிதிலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்ரீவத்ஸனின் அப்பா இந்த பேயா? குழப்பத்துடன் அவனை நோக்க  வாங்க் முதல்ல எல்லோரும் வீட்டுக்கு போயி பேசிக்கலாம் என்று அனைவரையும் கிளப்பிக் கொண்டு அந்த பங்களாவை விட்டு வெளியேறினான் ஸ்ரீ வத்ஸன்.
  தனவேலின் இல்லம் ஒரு மயான அமைதி அங்கு நிலவ ஸ்ரீவத்ஸன் பேச ஆரம்பித்தான். நிதிலா உனக்கு ஓரளவு நம்ம விஷயம் தெரிஞ்சு இருக்கும் தெரியாததை நான் சொல்றேன். உங்க அப்பா என்னோட அத்தை பொன்னம்மாவை காதலிச்சு கைவிட்டப்புறம் திரும்பவும் கிராமத்துக்கு வந்தார். அந்த சமயம் கிராம பழிச்சொல் தாளாம எங்க அத்தை உன்னை பெத்து எங்க அப்பாகிட்ட கொடுத்திட்டு போய் சேர்ந்துட்டாங்க மனைவிதான் இல்ல பொண்ணையாவது வளர்க்கலாமுன்னு உன்ன எங்க அப்பாகிட்ட இருந்து கூட்டிப் போக உங்கப்பா முயற்சி பண்ணாறு.
ஆனா எங்கப்பா சம்மதிக்கலை!
   அந்த சமயத்தில வயக்காட்டு வேலைக்கு போன எங்க அப்பாவை பாம்பு கடிக்கவும் இறந்து போனாறு. எங்கம்மா என்னையும் உன்னையும் வச்சு காப்பாத்த திணறின சமயம் உங்கப்பா தானெ முன் வந்து உன்னை தத்தெடுத்துகிட்டாரு உன்னை இத்தனை வருசம நல்லா வளர்க்கவும் செஞ்சாரு இப்ப உனக்கு எல்லாம் புரிஞ்சி இருக்கணும் என்றான்.

நிதிலா தலையசைக்க தனவேல் அம்மா நிதிலா என்னை மன்னிச்சிடும்மா! இந்த பாவியை மன்னிச்சிடும்மா என்று குரல் தழு தழுக்க கேட்க
அப்பா! அப்படின்னு உங்களை கூப்பிடவே கூசுது! இனி என் முகத்திலேயே முழிக்காதீங்க! என்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள் நிதிலா.
   தனவேல் விக்கித்து நின்றார்.
       அழைக்கும் (15)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!