Thursday, July 14, 2011

வரிஉயர்வும்! விலை ஏற்றமும்!

வரிஉயர்வும்! விலை ஏற்றமும்!

முந்தின நாள் இரவில் தமிழக அரசு வாட் வரி விதிப்பில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தது. உடனேயே அத்தியாவசியபொருட்கலான சமையல் எண்ணெய் பருப்பு போன்றவை விலை இப்போதே அதிகமாக இருப்பதாகவும் இன்னும் விலை ஏறப்போவதாகவும் சில மீடியாக்கள் செய்தி பரப்பின.
  இந்த வாட் வரி ஏதோ நேற்றுதான் அமலுக்கு வந்தார்ப்போல அரசியல் கட்சிகளும் விலைஉயர்வை கட்டுப்படுத்த வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என அறிக்கை விடுத்து மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல காட்டிக் கொண்டன. உண்மையில் இந்த வரி விதிப்பை கடந்த அரசாங்கமே அமல் படுத்தி இருக்க வேண்டியது. ஆனால் ஓட்டுக்கு பயந்து செய்ய வில்லை.
  இந்த விலை உயர்வுக்கு கூப்பாடு போடும் கட்சிகள் பெட்ரோல் விலை வருடத்திற்குள் ஏழெட்டு முறை உயர்த்தப்பட்ட போது சும்மா இருந்தது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தெளிவாகத்தான் உள்ளார்கள். இது ஒன்றும் பெரிய அளவிலான வரிவிதிப்பு அல்ல. உற்பத்தியாளர்கள் தங்கள் லாபத்தினை சிறிதளவு குறைத்துக் கொண்டால் போதும் பழையவிலைக்கே பொருட்கள் கிடைக்க கூடும்.
  குய்யோ முறையோ இப்படி வரி விதித்து விட்டார்களே என்று அலறும் மக்களும் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் எப்பொருள் யார் இலவசமாக கொடுத்தாலும் வாங்க ரெடியாக உள்ள மனோபாவம் உள்ளவரை இப்படித்தான் இருக்கும்.
  நாம் கட்டும் வரிதான் நமக்கு இலவசமாக திரும்பி வருகிறது. கட்சி அளிக்கும் வாக்குறுதி அவர்கள் பணத்தில் நமக்கு இலவசம் தருவதில்லை ஆட்சி அமைத்தால் தருவதாக கூறி நமது பணத்தில்தான் நமக்கு மொட்டை போடுகின்றனர்.
  எனவே இன்னும் எவ்வளவு இலவசங்கள் வரப்போகிறதோ அந்த அளவுக்கு வரியும் மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்தப்படலாம். மேலும் புகையிலைப்பொருட்கள் ஆடம்பரபொருட்கள் மீதான இந்த வரி விதிப்பு நியாயமானதே.
  உணவுப் பண்டங்கள் மீதான வரியை மட்டும் குறைத்தால் போதுமானது என்று எனக்குத் தோன்றுகிறது. அரசு நடத்த நிதியை தேட வேண்டியது அரசனின் கடமை. கடனில் தள்ளாமல் காக்க வேண்டியதும் அரசனின் கடமை இதே அரசு முன்பும் பல நடவடிக்கைகள் எடுத்து அரசின் வருவாயை கூட்டியது. அதை பாழாக்கிசென்ற முந்தைய அரசு இன்று விலை குறைக்கபட வேண்டும் என்று கூப்பாடு போடுவதில் பயனில்லை.
  நான் சில பேருடன் பேசிப்பார்த்ததில் இது தெளிவாக தெரிகிறது! இலவசங்களை பெரும்பாலோர் விரும்பவில்லை!. இந்த விலைஉயர்வையும் பெரிதாக கருதவில்லை.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...